அறிவுக்கு விருந்து – 20.08.2019 (செவ்வாய்)


அறிவுக்கு விருந்து – 20.08.2019 (செவ்வாய்)
வரலாற்றில் இன்று

ஆகத்து 20 (August 20) கிரிகோரியன் ஆண்டின் 232 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 233 ஆம் நாள்.

நிகழ்வுகள்

·14உரோமைப் பேரரசர் அகஸ்டசின் பேரனும், முடிக்குரியவனுமான அக்ரிப்பா பொசுதூமசு அவனது காவலர்களால் கொலை செய்யப்பட்டான்.
·917பல்காரியாவின் முதலாம் சிமியோன் மன்னர் பைசாந்திய இராணுவத்தை அச்செலோசு சமரில் தோற்கடித்தார்.
· 1000அங்கேரி நாடு முதலாம் இசுடீவனால் உருவாக்கப்பட்டது.
·1083அங்கேரியின் முதலாவது மன்னர் முதலாம் இசுடீவனும், அவரது மகன் எமெரிக்கும் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர்.
பிறப்புகள்
· 1685பரூக்சியார், முகலாயப் பேரரசர் (. 1719)
· 1719கிறித்தியன் மேயர், செக் நாட்டு வானியலாளர் (. 1783)
· 1890எச். பி. லவ்கிராஃப்ட், அமெரிக்க எழுத்தாளர், கவிஞர் (. 1937)
இறப்புகள்
· 1572மிகுவெல் உலோபசு டி லெகாசுபி, எசுப்பானிய அரசியல்வாதி, பிலிப்பீன்சின் 1வது ஆளுநர் (பி. 1502)
· 1854பிரீடரிக் ஷெல்லிங், செருமானிய மெய்யியலாளர் (பி. 1775)
· 1912வில்லியம் பூத், இரட்சணிய சேனையை உருவாக்கிய ஆங்கிலேயர் (பி. 1829)

· 1914பத்தாம் பயஸ் (திருத்தந்தை) (பி. 1835)

சிறப்பு நாள்

·         விடுதலை நாள் (எசுத்தோனியா, சோவியத்திடம் இருந்து 1991)

·         உலகக் கொசு நாள்

 குறளறிவோம்-  51 - வாழ்க்கைத் துணைநலம்

மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
கலைஞர் மு.கருணாநிதி உரை: இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள்.
மு.வரதராசனார் உரை: இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள்.
Translation: As doth the house beseem, she shows her wifely dignity; As doth her husband's wealth befit, she spends: help - meet is she.
Explanation: She who has the excellence of home virtues, and can expend within the means of her husband, is a help in the domestic state.
சிந்தனைக்கு
வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
தமிழ் அறிவோம்   ஒத்தச் சொற்கள்                                                       
·         அவலம்            -          துன்பம்
·         அவலம்            -          அழுகை
விடுகதை விடையுடன்
கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே தெரியும் பூ எது?  உப்பு
பழமொழி  
சாண் குருவிக்கு முழம் வாலாம்
ஒரு சாண் அளவுள்ள குருவிக்கு இரு சாண் அளவுள்ள வால் இருத்தல் கூடாது.  அது அழகாக இருக்காது.  அதே போன்று ஒரு பங்கு வருவாய் வந்தால் இரு மடங்கு செலவு செய்தல் கூடாது.  காரணம், கடனாளியாகி வாழ்வில் நிம்மதியை இழக்க நேரிடும்.  வருவாய்க்குத் தக்க செலவினங்களையே மேற்கொள்ளுதல் வேண்டும் என்பதை விளக்கும் அற்புதமான பழமொழி இது.
Enrich your   vocabulary
·         Deer                மான்
·         Dog                 நாய்
·         Donkey           கழுதை
Opposite Words 
Bitter X  Sweet
  • Black coffee leaves a bitter taste in the mouth.
  • This tea is too sweet.
Black X  White
  • Matthew had thick black hair, but Natalie’s was blonde.
  • His face is white, and he seems very weak.
மொழிபெயர்ப்பு
peppermint leaves
புதினா
Plantain
வாழைக்காய்
Proverb
Cowards die many times before their death
வீரனுக்கு ஒரு முறை சாவு; கோழைக்கு தினந்தோறும் சாவு

இனிக்கும் கணிதம்

பலா பழத்தினை வெட்டாமலேயே, அதிலுள்ள சுளைகளின் எண்ணிக்கையை காண, பழம்பெரும் கணித நூலான, கணக்கதிகாரத்தில் ஒரு பாடல் உள்ளது.

"பலாவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு
சிறுமுள்ளுக் காம்பருக் கெண்ணிவருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தினுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை"

உரை: ஒரு பலாப்பழத்தை அறுப்பதற்கு முன்பு அதிலுள்ள சுளைகள் இவ்வளவென்று கண்டுபிடிக்கலாமோ எனின் அதற்குச் சொல்லுமாறு: காம்பைச் சுற்றிலும் எண்ணிப் பார்க்க, முள்ளுக் கண்டது. இதை ஆல் பெருக்க, X = ௬௱ , இத -க்கீய, X = ௫௱, ௨௰ X = , ஆக ஐயும் ௨௰ ஐயும் கூட்ட ஈவு ௱௨௰ சுளை என்று சொல்வது.

விளக்கம்: பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணிக்கையை 6 ஆல் பெருக்கி வரும் விடையை 5 ஆல் வகுக்க கிடைக்கும் ஈவானது பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையாகும். அதாவது,பலா பழத்திலுள்ள முற்களின் எண்ணிக்கை : 100     இதை 100 X 6 = 600, பின்பு இந்த 600 5 ஆல் வகுக்க, 100 X 5 = 500 , 20 X 5 = 100, ஆக 100 ஐயும் 20 ஐயும் கூட்ட 120 ஈவாக வருகிறது, இதுவே சுளையின் எண்ணிக்கையாகும்.
அறிவியல் அறிவோம் -DayZero என்றால் என்ன?
DAYZERO இப்படியான ஒரு வார்த்தையை நீங்கள் அறிந்துள்ளீர்களா? நாம் அறிந்து கொள்ளக் கூடிய தருணம் இது.
நம் வீட்டில் ஒரு நாள் தண்ணீர் இல்லையென்றால் நாம் படும் அவஸ்தையை சொல்ல வார்த்தை இல்லை. அதே 10 நாட்களுக்குத் தண்ணீர் இல்லையென்றால் நம் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. ஒருவேளை அனைத்து நீர் ஆதாரங்களும் வற்றிப் போய் விட்ட வாழ்வாதாரம் என்றால் அது தான் Dayzero. 
Dayzero என்பது தண்ணீர்ப் பஞ்சத்தின் உச்சக்கட்ட நிலை.DayZero-வை சந்தித்த முதல் நாடு: இதைச் சந்தித்த முதல் நாடு தென்ஆப்பிரிக்காவில் உள்ள (capetown) என்ற நகரம் தான். நாட்டின் கட்டமைப்பு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் குடிக்கத் தண்ணீர் இல்லையெனில் நாடு மிக மோசமான நிலையை சந்திக்கும்.
அறிவியல் துளிகள்
ஹெலிகாஃப்டர்பிராக்கெட்
தினம் ஒரு மூலிகை – செம்பருத்தி
          செம்பருத்தி அல்லது செவ்வரத்தை (Hibiscus rosa-sinensis) என்பது இந்தியா,இலங்கை போன்ற இடங்களில் வளரும் தாவர இனம் ஆகும். இது செடி இனத்தை சார்ந்தது. இதன் பூமருத்துவ குணங்களை கொண்டதாகும். இது கிழக்கு ஆசியாவில் தோன்றிய ஒரு தாவரமாகும். இது சீன ரோஜா எனவும் அழைக்கப்படுகிறது. இது மலேசியாவின் தேசிய மலராகும். இது பொதுவாக அழகுத்தாவரமாக வளர்க்கப்படுகிறது.
இது சப்பாத்துச் செடிஜபம்செம்பரத்தை போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. செம்மை நிறத்தில் இதன் மலர்கள் காணப்படுவதால், ‘செம்’பரத்தை என்று பெயர் பெற்றது.[ ஆயுர்வேதத்தில் இது ஜபா புஸ்பா, ருத்ர புஷ்ப, ரக்த கார்பாச என்றும் அழைக்கப்படுகிறது

பயன்கள்

·         இதனை பசிபிக் தீவுகளில் உணவாகவும் மக்கள் உட்கொள்கின்றனர்.
·         சீன மருத்துவ முறைகளிலும் இந்தப் பூ பயன்படுகிறது.
·         காலணிகளை பொலிவூட்டவும் இந்த பூவின் இதழ்களை பயன்படுத்தலாம்.
·         செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை..
·         வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைக் குணமாக்கும்.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும்  - டிராகன் பழம்
டிராகன் பழத்தின் நன்மைகள் தெரியுமா. சிவப்பு நிற தோல்களையும், உட்புறத்தில் வெண்மை நிற சதை பற்றையும் கொண்ட இந்த பழத்தில் இருந்து நமக்கு கிடைக்கும் ஆரோக்கியம் தெரிந்து கொள்ளுங்கள்.
நன்மைகள் :
புற்று நோய்க்கான செல்கள் உருவாவத தடுத்து நம்மை பராமரிக்கிறது டிராகன் அடிக்கடி இடம் மாற்றம் செய்பவர்களுக்கு உடலில் ஏற்படும் உடல் நல கோளாறுகள், இதர பிரச்சனைகளுக்கும் இந்த பழம் மிகவும் பயன் உள்ளது.
உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்றி நன்மை தரும். வைட்டமின் சி, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி3 போன்றவை காண படுவதால் ரத்தத்தை சுத்திகரித்து, ரத்த ஊட்டத்தையும் சீராக செயல் பட செய்து மற்றும் மாரடைப்பு வராமல் பாதுகாக்கும். நோய் எதிர்ப்பு திறனை கொடுத்து நச்சு தன்மையை அழித்து ரத்தத்தில் இருக்கும் கிருமிகளினை நீக்கி ஆரோக்கியத்தை கொடுக்கும் வல்லமை கொண்டது.
இதயத்தில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்து இதய நோய்களை தடுக்கும் தன்மை கொண்டது மற்றும் செரிமான உறுப்புகளை வலு பெற செய்து செரிமானத்தை சீராக நடத்தும்.

வரலாற்றுச் சிந்தனை

·        மக்கள் ஓய்வு நேரத்தில் சதுரங்கம் விளையாடினர்.
·        இசை, நடனம், கோழிச் சண்டை, காளைச் சண்டை போன்றவை நடைபெற்றது.
·        சிந்து சமவெளி கிணறுகள் 65 அடி ஆழத்துடன் இருந்துள்ளன.
தன்னம்பிக்கை கதை -  பெற்றோர் சொல் கேளீர்
புதுத்தெரு என்றொரு கிராமம், சின்னசாமி ஆடு மேய்ப்பவர், வழக்கமாக ஒரு புல்வெளியில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. சின்னசாமிக்கு புல்லாங்குழல் வாசிப்பது என்றால் அவ்வளவு பிரியம், ஆடுகள் மேயத்தவாறு மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசிக்க ஆரம்பித்தான். அந்த புல்வெளியைச்சுற்றி முள்வேலி போடப்பட்டிருற்தது. வேலியின் அருகே ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்தது.
வேலியின் மறுபுறம் ஒரு ஓநாய் ஒன்று வேட்டைக்கு காத்திருந்தது. ஓநாய் ஆட்டுக்குட்டியை பார்த்ததும், எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, சற்று ஆச்சரியமாக பார்த்தது, ஓநாயை முதல் முறையாக பார்த்ததினால் அதன் நோக்கம் ஆட்டுக்குட்டிக்கு தெரியாமல்உனக்கு என்னவேண்டும்?” என்று பாசமாக கேட்டது. ஓநாயோநண்பா, நண்பாநீ பார்க்க ரொம்ப அழகா இருக்கீங்க, இங்கே இளம் புல் எங்கே கிடைக்கும் என்று கேட்டது, இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிரியம். அதைத் தின்று, தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் தெரியுமா?! உங்களுக்கெல்லாம் அந்த யோகம் கிடைத்திருக்கிறது! எனக்கு அது கிடைக்கவில்லை…..” என்றது பாவமாக.
 ...! அப்படியா! நீ புல் சாப்பிடுவாயா? நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே?” என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக் குட்டி. “சேச்சேஅதெலாம் சுத்தப் பொய்!” என்றது ஓநாய். அப்படியாசரி அங்கேயே இருங்கள். நான் வெளியே வந்து, மலையின் அந்தப் பக்கம் இளம்புல் இருக்குமிடத்தைக் காட்டுகிறேன். நாம் இரண்டு பேரும் போய் ஜாலியா அதைச் சாப்பிட்டுவிட்டு, நன்பர்களாக சுற்றலாம்!” என்று சொல்லிவிட்டு ஆட்டுக்குட்டி வேலி இடுக்கின் வழியாக நுழைந்து, ஓநாயின் பக்கம் போயிற்று. ஓநாயின் திட்டம் தெரியாமலும், ஆடு சிநேகத்துடன் செற்றது,
ஓநாயின் பக்கம் சென்றதும் அது சட்டென அதன் காலை பிடித்து கொண்டது. ஆடு சத்தமாக கத்த தொடங்கியது, சின்னசாமியும், தாய் ஆடும் சத்தம் வந்த இடத்தை நோக்கி ஓடியது. ஓநாய் அதற்குள் ஆட்டுக்குட்டியின் கழுத்தை பிடிக்கும் நேரத்தில் அவர்கள் ஓநாயை அடித்து விரட்டிவிட்டார்கள். அந்த ஆட்டுக் குட்டிக்குத் தானாகத் தெரியவில்லை. அனுபவம் நிறைந்த அம்மா, அப்பா பேச்சை கேட்டிருந்தால், இந்த மாதிரி ஆபத்தில் மாட்டி கொள்ளாமல் இருந்திருக்கலாம், மதிப்பு வாய்ந்த தன் உயிரை காப்பாற்றிய சின்னசாமிக்கும் பெற்றோர்க்கும் நன்றியோடு நடந்து கொண்டது அந்த ஆட்டுக்குட்டி.
ஓவியம் வரைவோம்     How to Draw Peacock with Beautiful Feather Design | Pencil Art

https://www.youtube.com/watch?v=utVQX-PBmO8

இணையம் அறிவோம்   https://languageavenue.com/

செயலி Complete Physics https://play.google.com/store/apps/details?id=completephysics.mobi.com.completephysics&hl=en_US

No comments:

Post a Comment