அறிவுக்கு விருந்து – 13.08.2019 (செவ்வாய்)


அறிவுக்கு விருந்து – 13.08.2019 (செவ்வாய்)
வரலாற்றில் இன்று
ஆகத்து 13 (August 13) கிரிகோரியன் ஆண்டின் 225 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 226 ஆம் நாள்.
நிகழ்வுகள்
·         1892 – ‘நூலகத் தந்தைஎன போற்றப்படும் எஸ்.ஆர். ரங்கநாதன் சீர்காழியில் பிறந்தார்.
·         1926 – கியூபாவின் நீண்டநாள் அதிபரான ஃபிடல் காஸ்ட்ரோ பிறந்தார்.
·         1960 – மத்திய ஆப்ரிக்கக் குடியரசு சுதந்திரம் பெற்ற தினம்
·         2004 - 28வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஏதென்ஸில் ஆரம்பமாயின.
 பிறப்புகள்             
·         1814ஆண்டர்ஸ் யோனாஸ் ஆங்ஸ்டிராம், சுவீடிய இயற்பியலாளர் (. 1874)
·         1819ஜார்ஜ் கேப்ரியல் ஸ்டோக்ஸ், ஆங்கிலேய-ஐரியக் கணிதவியலாளர், இயற்பியலாளர்
இறப்புகள்               
·         1795அகில்யாபாய் ஓல்கர், ஓல்கர் பேரரசி (பி. 1725)
·         1826ரெனே லென்னக், இதயத்துடிப்பு மானியைக் கண்டுபிடித்த பிரான்சிய மருத்துவர்
·         1907எர்மன் கார்ல் வோகல், செருமானிய வானியற்பியலாளர்
சிறப்பு நாள்          
·         விடுதலை நாள் (மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, பிரான்சிடம் இருந்து 1960)
 குறளறிவோம்-  47 - இல்வாழ்க்கை
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
கலைஞர் மு.கருணாநிதி உரை: நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராகத் திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்.
மு.வரதராசனார் உரை:அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான்.
Translation:In nature's way who spends his calm domestic days, 'Mid all that strive for virtue's crown hath foremost place.
Explanation:Among all those who labour (for future happiness) he is greatest who lives well in the household state.
சிந்தனைக்கு
நல்லவர்களோடு நட்பாயிருங்கள்; நீங்களும் நல்லவனாகலாம்.
தமிழ் அறிவோம்   ஒத்தச் சொற்கள்                                                       
·         அஞ்சிலி          -          கும்பீடு
·         அஞ்சிலி          -          வணக்கம்
·         அஞ்சிலி          -          இறுதி வணக்கம்
விடுகதை விடையுடன்
காதை திருகினால் பாட்டு பாடுவான்  அவள் யார்?  வானொலிப்பெட்டி
பழமொழி  
சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.
நாம் ஒரு விஷயத்தை அல்லது மற்ற விஷயங்களைப் படித்து அல்லது கேட்டு உணர்ந்திருந்தால்தான் நம் செயல்பாட்டில் அல்லது எண்ணத்தில் வரும். 
Enrich your   vocabulary
·         Beaver             முள்ளெலி
·         Bird                 பறவை
·         Bison               காட்டு எருமை
Opposite Words 
Before X After
  • I saw her a few days before she died.
  • I go swimming every day after work.
Begin X  End
  • In the third year, students begin the study of classical Chinese.
  • The speaker ended by suggesting some topics for discussion.
மொழிபெயர்ப்பு
Lady's finger
வெண்டைக்காய்
Lotus stem
தாமரைத் தண்டு
Proverb
A stitch in time saves nine
ஒரு தையல் போட்டால், ஒன்பது தையலை தவிர்க்கும்

இனிக்கும் கணிதம்

கணிதத்தின் ஆறு முகங்கள்
*கணிதத்தின் ஒரு முக்கியமான அங்கம் ? *கணித்தல் (Evaluation)*
துல்லியமாகவும் தர்க்கரீதியாகவும் அலசி ஆராய்ந்து, வேண்டாத காளான்களை பிரச்சினையிலிருந்து விலக்கி, சின்னங்களைப் பயன் படுத்தி, அடித்தளத்தில் புதைந்து கிடக்கும் உயிர்நாடியைப் பிடித்தவுடன் கண்ணுக்கு முன் எஞ்சி நிற்பது சின்னங்களுக்குள் ஒன்றுக்கொன்று பிணைந்திருக்கும் தொடர்புகள் தான். தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் இத்தொடர்புகளை வெளிக்கொணர்ந்து பிரச்சினையின் சிக்கலை விடுவிப்பதைத்தான் கணித்தல் என்று சொல்கிறார்கள். இந்த ஒரு முகமே பெரிதுபடுத்தப்பட்டு இதுதான் கணிதம் என்று தவறாக எண்ணப்பட்டு விடுகிறது. கணிதம் என்று பேசப்படும் போதெல்லாம், தவறுதலாக கணித்தல் என்ற இவ்வொரே அங்கத்தைத்தான் சொல்கிறார்கள் பாமரர்கள்.
ஆக இந்த ஆறு முகங்களும் சேர்ந்து உருவாக்கப்பட்டது தான் கணிதம். கணிதப் பாடங்கள் கற்கும் மாணவர்களும் சரி, அவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களும் சரி, கணிதத்தின் இந்த ஆறு முகங்களையும் நினைவுகொண்டு செயல்பட்டால் கணிதம் உருப்போடும் ஒரு பளுவாக இல்லாமல் வேண்டத்தக்க நண்பனாகிவிடும்.

அறிவியல் துறையில் தமிழர்கள்
அறிவியல் துளிகள்
கதிரியக்கம் - ஹென்றி பெக்குரல்

தினம் ஒரு மூலிகை – எலிக்காதிலை

எலிக்காதிலை ஒரு சிறு கொடி இனம். அனைத்து மண் வகைகளிலும் நன்கு வளரக்கூடியது. இது பார்ப்பதற்கு வல்லாரை இலையை ஒத்து காணப்பட்டாலும்  குத்துச் செடியாக இல்லாமல் பெருங் கொடியாக ஓடும். இதனை கால் நடைகளுக்கு வழங்குவது நடைமுறை வழக்கம். இதன் குணம் நீரைச் சுண்டச் செய்வது. ஆரைக்கீரையின் தன்மையும் இதன் தன்மையும் ஒத்துக் காணப்படுகிறது.


பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும்   கிவி:                                                இந்த பழம் (Fruit Benefits In Tamil) மிகவும் சுவையாக இருக்கும். இந்த பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது.
 கிவி பழத்தை நாம் அதிகமாக சாப்பிட்டால் நம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க பயன்படுகிறது.

வரலாற்றுச் சிந்தனை 
·        சிந்து சமவெளி எழுத்துக்களுக்கு pictograph என்று பெயர்.
·        எழுதும் முறைவலமிருந்து இடமாகவும், இரண்டாவது வரியை இடமிருந்து வலமாகவும் எழுதினர்.
·        உலகத்திலேயே சிந்து சமவெளியில் தான் பருத்தி முதன் முதலாகப் பயிரிடப்பட்டது.பருத்திக்குக் கிரேக்க மொழியில் சிந்தோன் என்று பெயர்.

தன்னம்பிக்கை கதை -  இன்று என்பதே நிஜம்!

ஒரு முறை ஜென் மாஸ்டர் தனது சீடர்களுக்கு "இன்று என்பது மட்டுமே நிஜம், நாளை என்பது மாயை. அதனால் எந்த ஒரு காரியத்தையும் நாளை செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடாமல், இப்பொழுதே செய்துவிட வேண்டும்" என்று அறிவுறுத்திக் கொண்டிருந்தார். 

அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஜப்பானீஸ் போர்வீரன், அந்த துறவியின் கூற்றை ஆழ்ந்து கேட்டுக் கொண்டிருந்தான். பின்பு ஒரு நாள் அந்த ஜப்பானீஸ் போர்வீரன் தனது எதிரிகளால் கைப்பற்றப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

அன்றிரவு முழுவதும் அவனால் தூங்க முடியவில்லை. ஏனெனில், அடுத்த நாள் அவனுடைய எதிரிகள், அவனை எவ்வளவு துன்பம், சித்திரவதை மற்றும் விசாரணை செய்யப் போகிறார்களோ என்பது பற்றி யோசித்ததில் அவன் தூக்கம் கலைந்தது. பின் ஜென் மாஸ்டர் "நாளை என்பது மாயை, இன்று என்பது மட்டுமே நிஜம்" என்று கூறியதை நினைவில் கொண்டு, அவன் தன் மனதை திடப்படுத்திக் கொண்டு நிம்மதியான உறக்கம் கொண்டான்

ஓவியம் வரைவோம்    How to draw Spot billed duck with nature scenery | Watercolor Pencils Painting https://www.youtube.com/watch?v=lVEpLeKO7No

இணையம் அறிவோம்    http://www.tamilvu.org/ta/library-libcontnt-273141

செயலி  Periodic Table Quiz https://play.google.com/store/apps/details?id=pl.paridae.app.android.timequiz.periodictable&hl=en_US

No comments:

Post a Comment