அறிவுக்கு விருந்து – 19.08.2019 (திங்கள்)


அறிவுக்கு விருந்து – 19.08.2019 (திங்கள்)
வரலாற்றில் இன்று

ஆகத்து 19 (August 19) கிரிகோரியன் ஆண்டின் 231 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 232 ஆம் நாள்.

நிகழ்வுகள் 

· 14உரோமைப் பேரரசர் அகஸ்டசு 44 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் இறந்தார். அவரது வளர்ப்பு மகன் திபேரியசு பேரரசரானார்.

·1153மூன்றாம் பால்ட்வின் எருசலேமின் ஆட்சியை அவரது தாயார் மெலிசென்டியிடம் இருந்து பெற்றார்.
பிறப்புகள்
·  1646ஜான் பிளேம்சுடீடு, ஆங்கிலேய வானியலாளர் (. 1719)
·  1745யோகான் கோட்லீப் கான், சுவீடன் வேதியியலாளர் (. 1818)
·  1869ஐசாக் தம்பையா, இலங்கைத் தமிழ்க் கல்விமான், இறையியலாளர் (. 1941)
·  1871ஓர்வில் ரைட், எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர்
·  1878மானுவல் எல். குவிசோன், பிலிப்பீன்சின் 2வது அரசுத்தலைவர் (. 1944)
இறப்புகள்
·  14அகஸ்ட்டஸ், உரோமைப் பேரரசர் (பி. கிமு 63)
·  1580ஆன்ட்ரே பல்லாடியோ, இத்தாலியக் கட்டிடக் கலைஞர் (பி. 1508)
·  1662பிலைசு பாஸ்கல், பிரான்சியக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1623)

·  1905வில்லியம்-அடோல்ஃப் பூகுவேரோ, பிரான்சிய ஓவியர் (பி. 1825)

சிறப்பு நாள்

·         ஆகத்து புரட்சி நாள் (வியட்நாம்)

·         விடுதலை நாள் (ஆப்கானித்தான், பிரித்தானியாவிடம் இருந்து 1919)

·         உலகப் புகைப்பட நாள்

·         உலக மனிதநேய நாள்

 குறளறிவோம்-  50 - இல்வாழ்க்கை

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்.
மு.வரதராசனார் உரை: உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.
Translation: Who shares domestic life, by household virtues graced, Shall, mid the Gods, in heaven who dwell, be placed.
Explanation: He who on earth has lived in the conjugal state as he should live, will be placed among the Gods who dwell in heaven.
சிந்தனைக்கு
நாம் மாறும்போது தானும் மாறி, நாம் தலையசைக்குபோது தானும் தலையசைக்கும் நண்பன் நமக்குத் தேவையில்லை. அதற்கு நம் நிழலே போதும்.
தமிழ் அறிவோம்   ஒத்தச் சொற்கள்                                                       
·         அவா      -          மிக்க ஆசை
·         அவா      -          பேராசை
விடுகதை விடையுடன்
எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல் அது என்ன ?  விக்கல்

பழமொழி  
ஏரி பெருகினால் எல்லாம் பெருகும்.
ஏரியில் நீர் நிறைந்து காணப்பட்டால் அந்த ஊரில் பயிர்வளம் பெருகும்.  தானியம் மட்டும் புகழும் பெருகும்.  அது போல, ஒருவன் மனதினிலே கருணை, இரக்கம், தர்ம சிந்தனை பெருகினால் அவன் வாழ்வில் எல்லா வளமும் பெட்ட்ரு சீரும் சிறப்புமாக வாழ்வான்.
Enrich your   vocabulary
·         Cow                பசு
·         Crane               கொக்கு
·         Crow               காகம்
Opposite Words 
Big x  Little
  • They belong to the rich man who lives in the big white house there among the trees.
  • He was quite an old little man and his head was long and entirely bald.
Birth x  Death
  • What’s your date of birth?
  • Cancer is the leading cause of death in women.
மொழிபெயர்ப்பு
Peanut, Groundnut
நிலக்கடலை, வேர்க்கடலை
Peas
பட்டாணி
Proverb
Take time by the fore lock
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

இனிக்கும் கணிதம்

37 என்னும் எண்ணை மூன்று மற்றும் அதன் மடங்கால் பெருக்குங்கள்.  விடைகளின் வரிசை உங்களை ஆச்சரியப்படுத்தும்.
37  x  3  =  111
37  x  6  =  222
37  x  9  =  333
37  x  12 = 444
37  x  15 =  555

அறிவியல் துறையில் தமிழர்கள்   அறிவியல் அறிவோம் -ராக்கெட் ஏன் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்படுகிறது?

ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு தீவு ஸ்ரீஹரிகோட்டா. பொதுவாக ராக்கெட்கள் கிழக்கு நோக்கிதான் ஏவப்படுகின்றன. ஸ்ரீஹரிகோட்டா பூமத்தியரேகைக்கு அருகில் இருக்கிறது. இங்கிருந்து ராக்கெட் அனுப்புவதற்கான திசைக்கோணமும் பூமியின் சுழற்சியும் சாதகமாக இருப்பதால், அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்துக்கு அடுத்ததாக ஸ்ரீஹரிகோட்டா கருதப்படுகிறது. அதனால் இங்கிருந்து ராக்கெட் ஏவப்படுகிறது.
அறிவியல் துளிகள்
ஹெலிகாஃப்டர்பிராக்கெட்

தினம் ஒரு மூலிகை – ஜாதிக்காய்
ஜாதிக்காய் (சாதிக்காய்) துவர்ப்பு மற்றும் காரச் சுவைகள் கொண்டது, வெப்பத் தன்மையானது. சிறு அளவில் ஜாதிக்காய் தினமும் உண்டுவர, உடல் வெப்பத்தை அகற்றும்; இரைப்பை, ஈரல் ஆகியவை பலமாகும்; மனமகிழ்ச்சியை அளிக்கும்; ஆண்மைத் தன்மையைப் பெருக்கும், நடுக்கம், பக்கவாதம் ஆகியவை தீரும். செரிமானத்திறன் மிகுந்து உடல் சுறுசுறுப்பாக இருக்கும். அதிகமாகச் சாப்பிட்டால் மயக்கத்தை ஏற்படுத்தும்.
ஜாதிக்காய் பிரதானமாகக் குழந்தைகளுக்கான மருத்துவத்தில் பயன்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, சீதபேதி ஆகியவற்றிற்கு ஜாதிக்காய் முக்கியம். ஜாதிக்காய் எண்ணெயை மேல் பூச்சாகத் தடவ, புண்கள், காயங்கள், பாரிசவாயு முதலியவற்றைக் கட்டுப்படுத்தும். மேலும், 2 சொட்டு அளவில் உள்ளுக்குள்; கொடுக்க, சீதபேதி, கழிச்சல் போன்றவையும் கட்டுப்படும்.
ஜாதிக்காய் இலைகள் மாற்றடுக்கில் அமைந்தவை, பெரியவை. ஆண், பெண் பூக்கள் தனித்தனியானவை. காய், சதைப்பற்றுள்ளது. மெல்லிய ஓட்டால் மூடப்பட்டிருக்கும் ஜாதிக்காய் பழங்கள், மிகவும் மணமுள்ளவை. மேலே பழுப்பு நிறமாகவும், உட்புறம் சதைப்பகுதி நிறைந்ததாகவும் இருக்கும்.

பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும்  பப்பாளிப்பழம்

நாள்தோறும் 1 துண்டு பப்பாளிப் பழம் சாப்பிட்டு வர கல்லீரல், மண்ணீரல் வீக்கம் குறையும். செரிபாற்றல் பெருகும். குன்மம், ரணம், அழற்சி, வயிற்றுப் பூச்சிமலச்சிக்கல், சிறுநீர்பாதை அழற்சி ஆகியவை தீரும்.
பப்பாளி மிகச்சிறந்த மலமிளக்கி. மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள், அடிக்கடி பப்பாளி சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளி மிகச்சிறந்த மருந்தாகிறது. வயிற்றுக்கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்றவற்றுக்கும் பப்பாளி நிவாரணம் தரும்.
நன்கு பழுத்த பழத்தைக் கூழாகப் பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும். இளமைப்  பொலிவைக்கூட்டி வயோதிகத்தை கட்டுப்படுத்தும் பப்பாளி, உடம்பிலுள்ள நச்சுக்கள் முழுவதையும் சுத்திகரிக்கக் கூடியது.
பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வரக் கல்லீரல் வீக்கம்  குறையும். உடல் எடை குறைக்க விரும்புவோர், அதற்கான டயட்டுடன், தினமும் காலை உணவாக பப்பாளிப்பழத்தை எடுத்துக்கொண்டால் நல்ல பலன்  கிடைக்கும்.
உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள், ஒரு மாதம் தொடர்ந்து பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து  விடுபடலாம். பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாளி பாலை விளக்கெண்ணையில் கலந்து கொடுக்க வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்பப்பாளியில் உள்ள பாப்பைன் மற்றும் சைமோபாப்பைன், செரிமானம் சிறப்பாக நடக்க உதவி புரியும். மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனை உள்ளவர்கள், பப்பாளியை உட்கொண்டால், அதில் உள்ள நார்ச்சத்து நல்ல நிவாரணத்தை வழங்கும்.

பயன்குடல் எரிச்சல் மற்றும் கடும் வயிற்று வலியை குணப்படுத்தும். பெண்களுக்கான சீரற்ற மாதவிடாய் பிரச்சினைகளை தீர்க்கும்.


வரலாற்றுச் சிந்தனை 
·         சிந்து சமவெளி முத்திரைகள் 10 வகையான வடிவங்களில் கிடைத்துள்ளன.
·         அகழ்வாராய்ச்சியில் கிடைத்த மிகவும் பெரிதாக எழுதப்பட்டுள்ள எழுத்தின் நீளம் 37 செ.மீ.
·         ஹரப்பாவிற்கும் மொகஞ்சதாரோவிற்கும் இடைத்தூரம் – 400 மைல்
தன்னம்பிக்கை கதை -  எல்லா உயிர்களுக்கும் உதவி செய்
ஒரு நாட்டு ராஜாவிடம் முத்தன் வேலை செய்து வந்தான். அந்த ராஜாவுக்கு மிருகங்கள் பறவைகள் பேசும் பாஷை தெரியும். முத்தனுக்கு ஒரேய ஆச்சரியம், எப்படி ராஜா விலங்குகள் பேசுவதை அறிந்து கொள்கிறார் என்பது அவனுக்கு வியப்பாக இருந்தது, முத்தன் தான் அந்த ராஜாவுக்கு தினமும் உணவு கொண்டு கொடுப்பான். ராஜாவின் உணவில் ஒரு பகுதி மட்டும் தனியாக தனிப் பெட்டியில் ராணியே சமைத்துத் தருவாள். ஒரு நாள் முத்தன் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தான். அந்த பெட்டிக்குள் ஏதோ துண்டு தூண்களாக சமைத்து வைக்கப்பட்டிருந்தன. இது என்னவாக இருக்கும் என்று ஒரு துண்டை எடுத்து சாப்பிட்டுப் பார்க்கிறான். அதைச் சாப்பிட்டதும் முத்தனுக்கு பறவை மிருகங்களின் பேசும் பாஷை புரிய ஆரம்பிக்கிறது. புதிய சக்தி கிடைத்ததும் அவன் அரண்மனையில் இருந்து அப்படியே புறப்பட்டு கிளம்பி விடுகிறான்.
அவன் குதிரையில் கிளம்பிச் செல்லும் வழியில் எறும்புகள் சாரை சாரையாக போவதை பார்த்தான், எறும்பின் தலைவன் இவனிடம் குதிரையை எறும்புகளை மிதிக்காத வண்ணம் செலுத்தும் படி வேண்டிக் கொண்டது. அவனும் அப்படியே செய்தான். எறும்புகள் நன்றி தெரிவித்து, என்றேனும் உங்களுக்கு உதவுவேன் என்று கூறியது. அடுத்து, அவன் செல்லும் வழியில் குளம் இருந்தது அங்கு மூன்று மீன்கள் அழும் குரல் கேட்டது. அவை புதருக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. குளத்தில் தாவிக் குதிக்கும் போது அவை தவறிப் புதரில் விழுந்திருந்தன. அத்தனையும் காப்பாற்றி தண்ணீருக்குள் மீண்டும் எடுத்துவிட்டு கிளம்பினான். மீன்களும் நன்றி தெரிவித்தது. அவன் கொஞ்ச தூரம் ஒரு காட்டைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தான். சின்னஞ்சிறு காகங்களின் குரல் கேட்டது. தாய் காக்கை அவைகளிடம்நீங்களே உங்கள் உணவைத் தேடிக் கொள்ளுங்கள்என்று கூறி மரத்தில் இருந்து கீழே தள்ளி விட்டிருந்தது.
அவைகளுக்கு தானியங்களை உணவாக கொடுத்துவிட்டு கிளம்பினான். அவை மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றி கூறின. அதன் பின் காட்டைக் கடந்து அவன் வேறு ஒரு நாட்டுக்குள் நுழைந்தான். ஊரே கோலாகலமாக இருந்தது. அந்த நாட்டு இளவரசி தன் கணவனைத் தேர்ந்தெடுக்கும் சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தாள். வேலைக்காரனுக்கு ஆசை, எப்படியும் இந்தப்போட்டியில் கலந்துகொண்டு நாம் இந்த நாட்டின் அரசனாக வேண்டும் என ஆசைப்பட்டான். போட்டியில் கலந்து கொண்டான். போட்டியில் வெற்றி பெறவில்லை என்றால் சிறையில் தள்ளிவிடுவார்கள். போட்டி ஆரம்பம் ஆனது, அவனை ஒரு குளத்திற்குக் கூட்டிப் போனார்கள். குளத்திற்குள் ஒரு மோதிரத்தை போட்டு அதனை எடுக்க வேண்டும் என கட்டளையிட்டார்கள் .
அவன் பயந்து மலைத்து நின்றான். குளத்திற்குள் நீந்த ஆரம்பித்த அவனுக்கு ஆச்சரியம்....! “இதோ உங்கள் மோதிரம்என்று ஒரு குரல் கேட்டது.  ஒரு மீன் தன் வாயில் மோதிரத்தைக் கவ்விக்கொண்டு வந்திருந்தது. அது அவன் புதலிருந்து காப்பாற்றிய மீன். இளவரசி அடுத்த போட்டி வைத்தாள். ஒரு மூட்டை அரிசி முழுவதும் தோட்டத்தில் கொட்டப்பட்டு விடிவதற்குள் ஒரு அரிசி விடாமல் சேகரிக்க வேண்டும். ஆகா இது நடக்கவே நடக்காது நமக்கு சிறை தான் என்று முடிவு செய்து அவன் தூங்கி விட்டான். அவன் உதவி இருந்த எறும்புகள் ஒவொன்றாக பொருக்கி ஒரு மூட்டையில் வைத்திருந்தது. அதனால் அதிலும் ஜெயித்து விட்டான். இறுதியான போட்டி ஒரு தங்க ஆப்பிள் காய்க்கும் மரம் காட்டில் இருக்கிறது- அதைக் கண்டுபிடித்து ஆப்பிளை எடுத்து வர வேண்டும். அவன் இருட்டும் வரை தேடினான் பசுமை மரங்கள் மட்டுமே இருந்தன. தங்க மரத்தைக் காணவே இல்லை. கவலையுடன் இருட்டியபிறகு தூங்கிவிட்டான். காலையில் எழுந்து பார்க்கிறான் அவன் அருகில் தங்க ஆப்பிள் இருந்தது. அவனிடம் உதவி பெற்ற காகங்கள் அந்த ஆப்பிளைத் தேடிக் கொண்டு வந்து அவனிடம் போட்டிருந்தன. அவன் அவைகளுக்கு நன்றி தெரிவித்தான்.
எல்லா போட்டியிலும் ஜெயித்ததால் அவனை இளவரசி மணந்து கொண்டாள். அவன் ராஜாவாக அவளுடன் அந்த நாட்டை மகிழ்ச்சியுடன் வெகு நாள் ஆட்சி செய்தான். நாம் செய்த உதவி வீணாகாது. அது நமக்கு ஏதாவதொரு வகையில் எப்போதாவது பயன்தரும். நாம் யாரேனும் ஒருவருக்கு உதவி செய்துவிட்டு மறந்து விட்டாலும்கூட அது பின்னொருநாளில் நமக்கு யார் வாயிலாகவாவது கிடைக்கும். ‘‘செஞ்ச உதவியும் இட்டுவைத்த விதையும் வீணாகப்போகாது’’ மிக மிக அவசியமான நேரத்தில் செய்யப் படும் உதவி இந்த உலகை விட மிகப் பெரியது.

ஓவியம் வரைவோம்     Very Easy!! How To Drawing 3D Floating Letter "A" #2 - Anamorphic Illusion - 3D Trick Art on paper     https://www.youtube.com/watch?v=jr-zAzxfTVU

இணையம் அறிவோம்     http://www.tamilvu.org/ta/library-libcontnt-273141

செயலி Complete Biology https://play.google.com/store/apps/details?id=hsdeveloper.biologymcqs&hl=en_US



No comments:

Post a Comment