அறிவுக்கு விருந்து – 02.08.2019 (வெள்ளி)


அறிவுக்கு விருந்து – 02.08.2019 (வெள்ளி)
 

 

 

 

குறளறிவோம்-  41 - இல்வாழ்க்கை

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
கலைஞர் மு.கருணாநிதி உரை:  பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.
மு.வரதராசனார் உரை: இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.
Translation: The men of household virtue, firm in way of good, sustain The other orders three that rule professed maintain.
Explanation:  He will be called a (true) householder, who is a firm support to the virtuous of the three orders in their good path.

சிந்தனைக்கு
அவமானத்தை தாங்கிக்கொள்ளும் திடமனம் இல்லை என்றால்  கடமையை நிறைவேற்ற முடியாது. - வி.எஸ்.காண்டேகர் -
 தமிழ் அறிவோம்   ஒத்தச் சொற்கள்                                                       
·         அயில்          -           கூர்மை
·         அயில்           -           வேல்

விடுகதை விடையுடன்
இலையுண்டு கிளையில்லை, பூ உண்டு மணமில்லை, காய் உண்டு  விதையில்லை,பட்டை உண்டு  கட்டை இல்லை, கன்று உண்டு  பசு இல்லை அது என்ன?   வாழை

பழமொழி  
முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?
மூன்று வேளையும்  காகம் குளித்தாலும் கொக்கைப் போல வெண்மை நிறத்தை அடைய முடியாது என்பது இதன் மேலோட்டமான கருத்தாகும். ஆனால்  அநியாயம்  போன்ற அடாத செயல்களைச் செய்யும் மனிதர்கள் ஆண்டவனுக்காக  யாகங்கள், வேள்விகள்,  பலவிதக் கொடைகள் போன்றவற்றைச் செய்தாலும் கடவுள் அவர்களை மன்னிக்க மாட்டார் என்பதே இதன் உட்கருத்து.
Enrich your   vocabulary
·         Merchant......வியாபாரி 
·         Sailed......நீர்வழிப்பயணம்செய்தல் 
·         Adventurous......தைரியமான 
·         Popular.... புகழ்பெற்ற 
·         Stabby......தடித்த 
Opposite Words 
Arrogant X  Humble
  • He was unbearably arrogant.
  • Taylor’s students describe him as a humble and modest man.
Ascend X Descend
  • The plane ascended rapidly.
  • Our plane started to descend.

மொழிபெயர்ப்பு
Curry Leaf
கறிவேப்பிலை
Drumstick
முருங்கைக்காய்

Proverb
Do not oppose an unequal
ஈடாகாதவனை எதிர்க்காதே

இனிக்கும் கணிதம்

கணிதத்தின் ஆறு முகங்கள்
*கணிதத்தின் ஒரு முக்கியமான அங்கம் ? *கணித்தல் (Evaluation)*
துல்லியமாகவும் தர்க்கரீதியாகவும் அலசி ஆராய்ந்து, வேண்டாத காளான்களை பிரச்சினையிலிருந்து விலக்கி, சின்னங்களைப் பயன் படுத்தி, அடித்தளத்தில் புதைந்து கிடக்கும் உயிர்நாடியைப் பிடித்தவுடன் கண்ணுக்கு முன் எஞ்சி நிற்பது சின்னங்களுக்குள் ஒன்றுக்கொன்று பிணைந்திருக்கும் தொடர்புகள் தான். தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் இத்தொடர்புகளை வெளிக்கொணர்ந்து பிரச்சினையின் சிக்கலை விடுவிப்பதைத்தான் கணித்தல் என்று சொல்கிறார்கள். இந்த ஒரு முகமே பெரிதுபடுத்தப்பட்டு இதுதான் கணிதம் என்று தவறாக எண்ணப்பட்டு விடுகிறது. கணிதம் என்று பேசப்படும் போதெல்லாம், தவறுதலாக கணித்தல் என்ற இவ்வாரே .அங்கத்தைத்தான் சொல்கிறார்கள் பாமரர்கள்.
அறிவோம் அறிவியல் 
                            வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது.
நம் புவியின் மையப்பகுதியில் இருக்கும் காந்தவிசையானது வடக்கு - தெற்காகத்தான் இயங்குகிறது. எனவே, வடதிசையில் தலை வைத்துப் படுக்கும்போது , காந்தவிசையால் நமது மூளையின் செயல்திறன் திறன் குறைய வாய்ப்புள்ளது.

அறிவியல் துளிகள்
ஆக்ஸிஜன், நைட்ரஸ் ஆக்ஸைடு - J.B.பிரீஸ்ட்லி
தினம் ஒரு மூலிகை – தாளிசபத்திரி
தாளிசபத்திரி என்பது காட்டுக் கருவாமரம் (Wild cinnamon, Cinnamomum iners) என்பதன் இலை. இம்மரத்தை இலவங்க மரம் என்றும் அழைப்பர்[1]. இம்மரத்தின் பகுதிகள் சில மருந்துப் பொருளாகப் பயன்படுகின்றன. இருமல்இரைப்பு, பெரும்பாலான நோய்களுக்கு துணை மருந்தாகப் பயன்படுகிறது.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும் தர்பூசணி
இரும்புச் சத்து 7.9 கிராம், கால்ஷியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்கள் பி,சி சிறிதளவு உள்ளன. நீர்ச் சுருக்கைப் போக்கும். கோடையில் தாகம் தணிக்க உதவும்
வரலாற்றுச் சிந்தனை                                                                         
சில்லறை நோட்டு தட்டுப்பாடு ஏற்பட்ட பொழுது ஆதாருடன் இணைந்த கூப்பன்களை வெளியிட்ட மாநில அரசு எது ?
 –  தெலுங்கானா [ IDFC வங்கியுடன் இணைந்து ]
தன்னம்பிக்கை கதை  அட்வைஸ் பண்ணாதே!
ஒரு மலை பிரதேசத்தில் குரங்குகள் கூட்டம் ஒன்று வசித்து வந்தது. கையில் கிடைத்ததை, பிடித்தால் உண்பதும், பிடிக்காவிட்டால் தூக்கி எறிவதும் குரங்குகளின் குணம். ஒரு சமயம் பயங்கர காற்றுடன் லேசான மழை பெய்தது. நடுங்கும் குளிர் மலை பிரதேசத்தை சுற்றி வசித்து வந்த ஜீவராசிகளை வாட்டி வதைத்தது.
குரங்குகள் குளிரால் நடுங்கி, "எங்கே சென்று குளிரை போக்கிக் கொள்வது' என்று யோசித்தன. அப்போது குரங்குகள் கூட்டத்தில் இருந்த ஒரு சிறிய குரங்கு, சற்று தூரத்தில் ஒரு மரத்தடியில் சிவப்பு நிற பூக்களை பார்த்து, அவை நெருப்பு குவியல் என்று நினைத்து தன் கூட்டத்தாரிடம், ""அங்கு சென்றால் குளிரை போக்கிக் கொள்ளலாம்,'' என்று கூறியது.
சிறிய குரங்கு கூறியதை கேட்ட மற்ற குரங்குகளும் மரத்தடிக்கு சென்று அங்கு குவியலாக கிடந்த மின்னும் சிவப்பு பூக்களை சுற்றி அமர்ந்து கொண்டு, தங்கள் இரு கைகளையும் தங்கள் தோள்களில் வைத்துக் கொண்டு நடுநடுங்கியபடி இருந்தன. முட்டாள் குரங்குகள் மின்னும் சிவப்பு பூக்களை நெருப்பு என்று நினைத்தன. மனிதர்கள் சில நேரங்களில், தங்கள் குளிரை போக்கிக்கொள்ள நெருப்பை சுற்றி அமர்ந்திருப்பர். நெருப்பு சிவப்பு நிறத்தில் இருப்பதை போல், மின்னும் பூக்களும் சிவப்பு நிறத்தில் இருந்ததால், பூக்களை நெருப்பு என்று நினைத்தன குரங்குகள்.
குரங்குகள் அமர்ந்திருந்த மரத்துக்கு மேலே ஒரு பறவை கூடு கட்டி தன் குடும்பத்தோடு வசித்து வந்தது. குரங்குகளின் நடவடிக்கைகளை நீண்ட நேரமாக கவனித்துக் கொண்டிருந்த பறவை, குரங்குகளை பார்த்து பரிதாபப்பட்டது. அது குரங்குகளில் மூத்த குரங்கை அழைத்து, ""குரங்கு அண்ணா! நீங்கள் குளிரில் நடுங்கிக் கொண்டிருப்பதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. நீங்கள் எந்தப் பொருளை சுற்றி அமர்ந்திருக்கிறீர்களோ அது நீங்கள் நினைப்பது போல் நெருப்பு அல்ல... அது வெறும் மின்னும் சிவப்பு நிற பூக்கள்,'' என்றது பறவை.
பறவை சொல்வதை தன் காதில் வாங்காத குரங்குகளின் தலைவன், நடுங்கும் உடலோடு பேசாமல், மின்னும் சிவப்பு பூக்கள் முன்னால் உட்கார்ந்து விட்டது. நேரம் ஆக, ஆக குளிர் அதிகமாகி குரங்குகளுக்கு நடுக்கமும், உடலில் ஆட்டமும் கண்டது. குரங்குகள் குளிரில் நடுங்குவதை கவனித்துக் கொண்டிருந்த பறவை மரத்தில் இருந்தபடியே மீண்டும் குரங்குகளை பார்த்து, ""சகோதரர்களே! உங்களுக்கு முன்னால் இருப்பது வெறும் மின்னும் சிவப்பு நிற பூக்கள், நெருப்பு அல்ல... பூக்களிடம் இருந்து உங்கள் குளிரை போக்க சூடு கிடைக்காது வெறும் வாசனைத்தான் கிடைக்கும். வானத்தில் கருமேக கூட்டம் அதிகமாகிக் கொண்டிருக் கிறது. எந்த நேரத்திலும் மழை பெய்ய நிறைய வாய்ப்புள்ளது. நேரத்தை வீணாக்காமல் நீங்கள் தற்போது வசித்து வரும் மலைக்கு அருகில் குகை ஏதாவது தென்பட்டால், அங்கே போய் தங்கிக் கொள்ளுங்கள்,'' என்றது பறவை.
பறவை தொடர்ந்து தங்களுக்கு அறிவுரை கூறுவதை கேட்ட குரங்குகள் கூட்டம் கோபம் கொண்டு பறவையை பார்த்து, ""பறவையே! எங்களுக்கு அறிவுரை கூறுவதை இத்துடன் நிறுத்திக்கொள். உனக்கு இரண்டு கால்கள் மட்டுமே தான் உள்ளது. ஆனால், எங்களுக்கோ இரண்டு கால்களும், இரண்டு கைகளும் உள்ளன. எங்களை காப்பாற்றிக் கொள்ள எங்களுக்கு தெரியும்,'' என்று கூட்டத்தில் இருந்த அத்தனை குரங்குகளும் போட்டி போட்டுக் கொண்டு, மாறி, மாறி பறவையை ஏளன பார்வையால் அவமானப்படுத்தின. குரங்குகளால் எவ்வளவு அவமானப்பட்டாலும் பறவைக்கு குரங்குகள் மேல் இருந்த அனுதாபம் குறையவில்லை.
அது குரங்குகளை பார்த்து, வருத்தப்பட்டுக் கொண்டிருந்தது. ""இந்த நிமிடமே நிறுத்திக் கொள்... நாங்கள் குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கிறோம். நீ தொடர்ந்து உபதேசம் செய்துக்கொண்டிருக் கிறாய். எங்கள் வேதனை உனக்கு புரியவில்லை,'' என்று கோபத்தோடு திட்டியது குரங்குகளின் மூத்த குரங்கு.
குரங்குகளின் மூத்த குரங்கு திட்டியதைப் பற்றி சற்றும் கவலைப்படாத பறவை, குரங்குகளை சீக்கிரமாக மரத்தடியை விட்டு விரைவில் ஏதாவது ஒரு பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு நயமாக கூறியது. குரங்குகளின் தலைவனும் பறவையும் பேசிக் கொண்டிருக்கும்போதே, வயதில் சிறிய குரங்கு ஒன்று, பறவை வசித்து வந்த மரத்தின் மீது மளமளவென ஏறி பறவையை பிடித்து, அதன் இறகுகளை பிய்த்து எறிந்து, பறவையை தூக்கி வீசியது.
பறவையின் அறிவுரையை சற்றும் பொருட்படுத்தாத குரங்குகள், மின்னும் சிவப்பு பூக்கள் முன்னால் அமர்ந்தபடியே குளிரில் நடுங்கி, சில குரங்குகள் மாண்டன. சில குரங்குகள் நோய் வாய்ப்பட்டன. சில குரங்குகள் பறவை சொல்லை கேட்டு, மலைக்கு அருகில் இருந்த குகையில் தங்கி உயிர் பிழைத்தன.
இறகுகளை இழந்த பறவையும் தன் அறிவுரையை கேட்டு, சில குரங்குகளாவது உயிர் பிழைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்தது. ஆனாலும் முட்டாள்களுக்கு அறிவுரை கூறினால் அது தனக்கே ஆபத்தாக முடியும் என்ற உண்மையை புரிந்து கொண்டது.***

செயலி -Kids Learn English Reading
இணையம் அறிவோம் https://www.scholastic.com/teachers/daily-starters/

ஓவியம் வரைவோம் - Tree drawing for kids | How to draw a tree   

 https://www.youtube.com/watch?v=6hRUgmS-NuA

1 comment: