அறிவுக்கு விருந்து – 09.08.2019 (வெள்ளி)


அறிவுக்கு விருந்து – 09.08.2019 (வெள்ளி)
வரலாற்றில் இன்று
ஆகஸ்ட் 9 (August 9) கிரிகோரியன் ஆண்டின் 221 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 222ஆம் நாள். 
நிகழ்வுகள்
1892 – தாமஸ் ஆல்வா எடிசன் தனது இருவழி  தந்திக்கான காப்புரிமையினை பெற்றார்.
பிறப்புகள்               
1904 – சரளாதேவி, இந்திய விடுதலைப் போராட்ட செயல்பாட்டாளர்.  பெண்ணியலாளர்
1911 வில்லியம் ஆல்பிரெட் பவுலர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வானியலாளர்.
இறப்புகள்               
2016 பஞ்சு அருணாசலம் தமிழ்த் திரைப்பட இயக்குநர்
சிறப்பு நாள்          
o   பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
o   விடுதலை நாள் ( சிங்கப்பூர் மலேசியாவிடம் இருந்து 1965)
o   தென்னாப்பிரிக்கா தேசிய  பெண்கள் நாள்
குறளறிவோம்-  46 - இல்வாழ்க்கை
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட இயலுமோ? இயலாது.
மு.வரதராசனார் உரை: ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?.
Translation: If man in active household life a virtuous soul retain, What fruit from other modes of virtue can he gain?
Explanation: What will he who lives virtuously in the domestic state gain by going into the other, (ascetic) state ?
சிந்தனைக்கு
ஆயிரம் முறை சிந்தியுங்கள்; ஒருமுறை முடிவெடுங்கள்.
தமிழ் அறிவோம்   ஒத்தச் சொற்கள்                                                       
·         அலகு    -          கூறு
·         அலகு             நெல்மணி
விடுகதை விடையுடன்
வெள்ளை ஆடை உடுத்தி மஞ்சள் மகாராணி அவள் யார்?   து
பழமொழி  
அறையில் ஆடியல்லவோ அம்பலத்தில் ஆட வேண்டும்.
இந்த உலகத்தில் நீ எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கிறாயோ அந்த துறையில் நீ தனிமை பெற்ற மனிதனாகத் திகழ வேண்டும் என்றால், உன்னை நீ சரியான முறையிலே தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.  அப்படி நீ ஆகிவிட்டால் மாபெரும் சபைகளில் ஆயிரம் பேர் உட்கார்ந்துகொண்டு உன் மீது கேள்விக் கணைகளைத் தொடுத்தாலும் உன்னால் உடனுக்குடன் பதில் அளிக்க முடியும்.
Enrich your   vocabulary
·         Amphibians                 நீர்நில வாழ்விகள்
·         Ape                             வாலில்லாக் குரங்கு
·         Ass                              கழுதை
·         Bear                             கரடி
Opposite Words 
Bare X Covered
  • The room was completely bare except for a bed against the wall.
  • The walls were covered with pictures.
Beautiful X Ugly
  • The bride looked beautiful in that dress.
  • He was short, nearsighted, ugly and exceptionally awkward.
மொழிபெயர்ப்பு
Jackfruit
பலா
Kohlrabi Turnip
நூக்கோல், நூல் கோல்
Proverb
Count not your chicken before they are hatched
பிள்ளை பெரும் முன் பெயர் வைக்காதே

இனிக்கும் கணிதம்

கணிதத்தின் ஆறு முகங்கள்
*கணிதத்தின் ஒரு முக்கியமான அங்கம் ? *குறியீட்டமர்வு (Symbolism)*
உருவகம் கணிதத்துறையின் வணிக உரிமைக்குறி (Trademark). எந்தப் பிரச்சினையை ஆராய்ந்தாலும் அது பளிச்சென்று தெரியும்படி உருவகப்படுத்துவது, பிர்ச்சினையின் வெவ்வேறு உருப்படிகளை சின்னங்கள் மூலம் எளிமையான தோற்றத்தில் கண்ணுக்கு முன் கொண்டு வந்து நிறுத்துவது, அவைகளுக்குள் இருக்கும் பல்வேறு தொடர்புகளை நாம் மறந்தாலும் அவை மறக்காமல் வெளிக்காட்டச் செய்வதுஇதுதான் கணிதத் துறையின் முதல் வேலை. கணித உலகில் நுழையும் அல்லது நுழைக்கப்படும் எந்தப் பிரச்சினையும் அனாவசியமன பெயர்களையும் சந்தர்ப்பங்களையும் கூடவே கொண்டு வந்து நம்மை கலக்கிவிடாமல் நமக்கு அடித்தளப் பிரச்சினையை எடுத்துக்காட்டுவது இந்த சின்னங்களும் குறியீடுகளும் தான்.

அறிவோம் அறிவியல்   
இடி இடிக்கும்போது, அர்ஜுனா...அர்ஜுனா என்று சத்தமாகச் சொல்லுங்கள்.
இடிச் சத்தம் பலமாக ஒலிக்கும்போது  அது செவிப்பறையைத் தாக்கிக் கிழிக்கும் அபாயம் உண்டு. அர்ஜுனா என்று கத்தும்போது  வாய் அகலமாகத் திறப்பதால், ஒலியானது இரண்டு பக்கமாகவும் சென்று, செவிப்பறை கிழிவது, காது அடைத்துக்கொள்வது போன்ற பிரச்னைகளிலிருந்து நம்மைக் காக்கிறது.

அறிவியல் துளிகள்
சுருக்கெழுத்து - சர் ஐசக் பிட்மேன்
தினம் ஒரு மூலிகை – சிற்றாமுட்டி
சித்தாமுட்டி அல்லது சிற்றாமுட்டி மணல் கலந்த பாறையுள்ள இடங்களில் நன்கு வளரும். காடுகளில் புதர்கள் அதிகமாக உள்ள இடங்களில் அதிகம் காணப்படும். சிற்றாமுட்டிக்கு சிறுந்தொட்டி, சிறுந்தொட்டை, குறுந்தொட்டி, குறுந்தோட்டி ஆகிய வேறுபெயர்கள் உள்ளன. தட்டி என்பதற்கு கேடயம் என்ற பொருளில், ‘நோய்களுக்கான கேடயமாக’ இருப்பதால், குறுந்‘தட்டி’ என்ற பெயரும் உண்டு. மேலும் இது சேங்கன். மம்மட்டி, தெங்கைப் பூண்டு எனும் பெயர்களிலும் அறியப்படுகின்றது.
இது நேராக வளரும் செடி. தரிசு நிலங்களிலும், வேலியோரங்களிலும் சாதாரணமாகக் காணப்படும். இதன் இதய வடிவ இலைகள் ஓரங்களில் பல்லுள்ளவை. எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். பூக்களும் காய்களும் ஆகஸ்ட் மாதம் முதல் திசம்பர் மாதம் வரை அதிகம் காணப்படும். பூக்கள் எல்லா நாட்களிலும் தென்படும். இதன் காய்கள் சிறிதாகவும் உருண்டையாகவும் இருக்கும்.
பயன்கள்
பாரிசவாதம், முகவாதம், போன்ற கடும் வாத நோய்களைத் தீர்பதற்குறிய மருந்தாகும். மது பழக்கத்திலிருந்து விடு பெற உதவுகிறது. கர்பிணிப் பெண்ணுக்கு மருத்துவ உணவாகப் பயன்படுகிது. இதன் தைலம் முடி உதிர்வதைத் தடுக்கிறது. இது மூட்டு வலியைக் குணப்படுத்ததும் மருந்தாகவும் பயன்படுகிறது.
.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும்   நறுவிலிப் பழம்
நறுவிலிப் பழத்தைத் தினசரியோ அல்லது மலச்சிக்கலின்போதோ சப்பிட்டு வர மலச்சிக்கல் அற்றுப் போகும்.

வரலாற்றுச் சிந்தனை 
·        இந்திய நாகரிகத்தின் தொடக்க காலம்சிந்து சமவெளி நாகரிகம்
·        சிந்து சமவெளி மக்களுக்கு தெரியாத உலோகம்இரும்பு
·        சிந்துவெளி மக்களின் எழுத்து முறைசித்திர எழுத்து முறை

தன்னம்பிக்கை கதை -  மடி அல்லது நீந்தி வெல்  

ஒரு முறை ஹகுயன் என்கின்ற ஜென் துறவி அவரது சிஷ்யர்களிடம் "ஒருவன் கடினமான செயல்களை சுலபமாக செய்வது எப்படி?" என்பதை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அதனை விளக்குவதற்காக ஒரு கதையை கூறினார். அது என்னவென்றால் "ஒரு திருடனின் மகன் அவன் தந்தையிடம் தனக்கும் திருடுவதில் உள்ள ரகசியங்களை கற்று தர கேட்டான். அவனுடைய தந்தையும் அதற்கு ஒப்புக்கொண்டு அன்று இரவு ஒரு பெரிய மாளிகைக்கு திருடுவதற்காக அவனை அழைத்து சென்றான். அந்த வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் உறங்கி கொண்டிருக்கையில், திருடன் அவன் மகனை துணிகள் நிறைந்த அறைக்குள் அழைத்து சென்றான். மகனிடம் அங்குள்ள துணிகளை திருட சொன்னான். அவனுடைய மகனும் தந்தையின் சொல் படி திருடிக் கொண்டிருந்தான். அப்போது அந்த சிறுவனின் தந்தை மெதுவாக அறையின் வெளியே வந்து, பின் அவனை உள்ளே வைத்து பூட்டினான். பின்பு வீட்டில் உள்ளோரை எழுப்புவதற்காக, அந்த வீட்டின் வெளிப்புறம் வந்து கதவை தட்டிவிட்டு, வேகமாக தப்பி வீட்டிற்கு ஓடிவிட்டான். சிறிது நேரம் கழித்து, அவனது மகனும் வீடு திரும்பினான். பிறகு அழுது கொண்டே அவனுடைய தந்தையிடம் "அப்பா ஏன் அப்படி செய்தீர்கள்? நான் எதையும் திருடவில்லை, தப்பிப்பதற்கு என்ன வழி என்று என் புத்தி கூர்மையை செயல்படுத்துவதிலேயே நேரம் அனைத்தும் போயிற்று" என்று கதறி அழுதான். அவனது தந்தையும் சிரித்து கொண்டே "மகனே, நீ கொள்ளை கலையில் முதல் பாடத்தை கற்று கொண்டாய்" என்று கூறினான் என்று சொல்லி முடித்தார். பிறகு சிஷ்யர்களிடம் இதைத் தான் மடிவது அல்லது நீந்துவது என்ற முறை என்பர். மேலும் "பயம் கொண்ட நிலையில், எவரொருவரும் செய்ய முடியாத காரியங்களையும் அவர்கள் தங்கள் வலிமை கொண்டு செய்து முடிப்பர். ஒருவரின் சொந்த அனுபவத்தினால் மட்டுமே எந்த ஒரு கடினமான செயலையும் எளிதில் செய்ய கற்று கொள்வது என்பது சாத்தியம்" என்று சொல்லி உணர்த்தினார்.

ஓவியம் வரைவோம்    Parakeet Drawing | How to draw a budgie | Watercolor Pencils Painting https://www.youtube.com/watch?v=qhhl0rJFnJo

 

இணையம் அறிவோம்    https://ilearntamil.com/

 

செயலி  MyShake https://play.google.com/store/apps/details?id=edu.berkeley.bsl.myshake&hl=en_US



1 comment: