அறிவுக்கு விருந்து – 30.08.2019 (வெள்ளி)


அறிவுக்கு விருந்து – 30.08.2019 (வெள்ளி)

வரலாற்றில் இன்று
 ஆகத்து 30 (August 30) கிரிகோரியன் ஆண்டின் 242 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 243 ஆம் நாள்.

நிகழ்வுகள்

·  70உரோமைப் பேரரசர் டைட்டசு எரோடின் கோவிலை அழித்த பின்னர் தனது எருசலேம் முற்றுகையை முடித்துக் கொண்டார்.[1]
·  1363சீனாவில் யுவான் ஆட்சியைக் கவிழ்க்க சென் யூலியாங், கோங்வு பேரரசர் ஆகிய கிளர்ச்சித் தலைவர்களின் தலைமையில் சந்தித்தனர். ஐந்து வார போயாங்கு ஏரி சமர் ஆரம்பமானது.
·  1464இரண்டாம் பவுலுக்குப் பின்னர் இரண்டாம் பயசு 211-வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
·  1574குரு ராம் தாஸ் நான்காவது சீக்கிய குருவானார்.
பிறப்புகள்
·         1748ஜாக்-லூயி டேவிட், பிரான்சிய ஓவியர் (. 1825)
·         1797மேரி செல்லி, ஆங்கிலேய எழுத்தாளர் (. 1851)
·         1850மார்செலோ எச். டெல் பிலார், பிலிப்பீனிய ஊடகவியலாளர், வழக்கறிஞர்
·         1852யாக்கோபசு என்றிக்கசு வான் தோஃப், நோபல் பரிசு பெற்ற இடச்சு வேதியியலாளர் (. 1911)
·         1869ஜோர்ஜ் கெஸ்தே, பிரான்சிய ஓவியர் (. 1910)
இறப்புகள்
·  1329குதுக்து கான், சீனப் பேரரசர் (பி. 1300)
·  1659தாரா சிக்கோ, முகலாய இளவரசன் (பி. 1615)
·  1877தோரு தத், இந்தியக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1856)
·  1928வில்லெம் வீன், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1864)
·  1940ஜெ. ஜெ. தாம்சன், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1856)

சிறப்பு நாள்

 குறளறிவோம்-  58 - வாழ்க்கைத் துணைநலம்
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.
கலைஞர் மு.கருணாநிதி உரை: நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்.
மு.வரதராசனார் உரை: கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.
Translation: If wife be wholly true to him who gained her as his bride, Great glory gains she in the world where gods bliss abide.
Explanation: If women shew reverence to their husbands, they will obtain great excellence in the world where the gods flourish.
சிந்தனைக்கு
சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
தமிழ் அறிவோம்   ஒத்தச் சொற்கள்                                                       
·         அகங்காரம்   -          ஆணவம்
·         அகங்காரம்   -          செருக்கு
விடுகதை விடையுடன்
கீழேயும் மேலேயும் மண், நடுவிலே அழகான பெண் அது என்ன? மஞ்சள் செடி
பழமொழி கண்டால் காமாச்சி நாயகர், காணாவிட்டால் காமாட்டி நாயகர்.
பொருள்: ஒருவனைக் கண்டபோது அவன மரியாதைக்கு உரியவனாகவும், காணாதபோது அவன் மடையன் என்றும் சொல்வது.
விளக்கம்: காமாச்சி நாயகர் என்பது அநேகமாக சிவனைக்குறிப்பது; இது புகழ்ச்சியின் எல்லை. காமாட்டி என்பது மண்வெட்டுவோனை, நிலத்தைத் தோண்டுவோனைக் குறிக்கும் சொல், பட்டிக்காட்டான் என்று மறைமுகமாகச் சொல்வது.
Enrich your   vocabulary
·         Sprout...முளைவிடுதல் 
·         Spectacles.....மூக்குக்கண்ணாடி 
·         Spectacular......காண்பதற்கினிய 
Opposite Words 
Brave X  Cowardly
  • It was brave of you to speak in front of all those people.
  • He was very cowardly because he did not tell that truth.
Break X  Repair
  • I had to break a window to get into the house.
  • It was too late to repair the damage done to their relationship.
மொழிபெயர்ப்பு
Turmeric
மஞ்சள்
Yam, Taro
சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு
Proverb
Pride goes before fall
வீழ்ச்சியின் முன் எழுகிறது தற்பெருமை
இனிக்கும் கணிதம்     ஒன்று என்ற எண்ணும், அதன் பல கூறுகளும்.
1/8 - அரைக்கால்
1/10 -
இருமா
1/16 -
மாகாணி(வீசம்)
1/20 -
ஒருமா
3/64 -
முக்கால்வீசம்
3/80 -
முக்காணி
அறிவியல் அறிவோம்  அறிவியல் ஆத்திசூடி
இருப்பதற்கு இல்லை என்பதில்லை
ஈக்களுக்கு ஒரு கடவுள் தேவைப்பட்டால்
ஈயாகத்தான் அக்கடவுள் இருப்பார்
உயிரற்ற உடல் இருக்கலாம்
உடலற்ற உயிர் இருக்க முடியாது
ஊனுடம்பு இல்லாமல் உயிர் இல்லை
உயிரும் உணர்வும் உடம்புடன் அழியும்
அறிவியல் துளிகள்
இட்லி பூவின் தாவரவியல் பெயர்இக்சோரா
தினம் ஒரு மூலிகை  -  புரசு
புரசு (butea monosperma) என்பது பலாச (butea) வகையைச் சேர்ந்த ஒரு மரமாகும். இதற்கு பலாசுபொரசுபுரசை, என்ற வேறு பெயர்கள் உண்டு. இது ஒன்பதாம் நூற்றாண்டுவரை பலாசம் என்றே அழைக்கப்பட்டது. இது பகட்டான செம்மஞ்சள் நிறப் பூங்கொத்தினையும் தட்டையான விதைகளையும் உடையது. இது இலையுதிர் காடுகளில் தானாக வளரும் மரமாகும். அழகுக்காகத் தோட்டங்களிலும் வளர்க்கப்படுகிறது. இதன் பூ, விதை, பட்டை, பிசின் ஆகியவை மருத்துவப்பயன் உடையவை.
பயன்பாடுகள் பலாசத்தின் மற்றொரு முக்கியப் பயன் இதைத் தாக்கும் அரக்குப் பூச்சியான கெர்ரியா லக்காவால் உண்டாகிறது. இந்த பூச்சி மரத்தின் தண்டுப் பகுதியில் வளர்ந்து அரக்கை உண்டாக்குகிறது. ஷெல்லாக் எனப்படும் இந்த அரக்கில் மணமுள்ள பிசின், நிறப் பொருளில் மெழுகு, புரதங்கள், கனிம உப்புகள், மணப் பொருட்கள் போன்றவை காணப்படுகின்றன. இந்த மெழுகை ஆப்பிள்ஆரஞ்சுபழங்களின்மேல் பூசப்படுவதால், அவற்றின் சேமிப்புக் காலம் அதிகரிக்கப்படுகிறது. அரக்கு உற்பத்திக்காகவே இந்தியாவின் மத்திய மாநிலங்களில் இந்தத் தாவரம் அதிகமாக வளர்க்கப்படுகிறது.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும்  - சீதாப்பழம்
கண் பார்வை சீதா பழங்களின் சுவை மற்ற பழங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. சுவை மட்டுமல்ல அவற்றிலுள்ள சத்துக்களும், அவை அளிக்கும் பலன்களும் அபாரமானவை. சாப்பாடு சாப்பிட்ட பிறகு ஒரு ஸ்வீட் சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதா உடல் எடை கூடி விடும், கொழுப்புச் சத்து, சர்க்கரை ஏறி விடும் என்ற பயம் ஸ்வீட் சாப்பிட விடாமல் உங்களைத் தடுக்கிறதா? ஸ்வீட்டிற்குப் பதில் ஒரு சீதாப்பழம் சாப்பிடுங்கள். இனிப்பு சுவையும் கிடைக்கும், நார்ச்சத்து மிகுந்திருப்பதால் சர்க்கரை அளவும் கூடாது, நல்லதைப் பயக்கும் சத்துக்களும் கிடைக்கும்.
சீதாபழங்களில் இருக்கும் சத்துக்கள்:
வைட்டமின் சிகஸ்டர்ட்என்ற ஐஸ்கிரீம் போன்ற சுவை இந்தப் பழத்திற்கு இருப்பதால் இதற்கு இப்பெயர் வந்தது.வைட்டமின்கள், புரதம், தாதுப் பொருட்கள், சக்தி தரும் இனிப்பு, கொழுப்புச் சத்து, நார்ச்சத்து என அனைத்தையும் கொண்டது சீதாப்பழம். நம் உடலில் உள்ள திசுக்களுக்கு பாதிப்பு தரக்கூடிய நச்சுப் பொருட்களை உடலிலிருந்து வெளியேற்ற ஆன்டிஆக்ஸிடென்ட் தேவை. இதை உடலுக்குத் தருவது வைட்டமின் சி தான். ஆனால் இந்த வைட்டமின் உடலில் அதிக நேரம் தங்குவதில்லை. அதனால் ஒருவர் தினமும் வைட்டமின் சி அடங்கிய உணவைக் கட்டாயம் சாப்பிட வேண்டும்.
சமைத்த உணவில் இந்த வைட்டமின் விரயமாகிவிடுவதால் பழங்களைச் சாப்பிடுவதன் மூலமே நாம் இந்த வைட்டமினை அன்றாடம் பெற முடியும். மன அழுத்தத்தை சரி செய்யும் சீதாப்பழம் இரவில் ஒரு சீதாப்பழம் சாப்பிட்டுப் பாருங்கள், நல்ல ஆழ்ந்த தூக்கம் வரும். இதற்குக் காரணம் இப்பழத்தில் உள்ள கால்சியம் மற்றும் மக்னீசியம் தாதுப் பொருட்கள்தான். இவை இரண்டிற்குமே மன அழுத்தத்தை சரிப்படுத்தும் குணம் உண்டு. அதோடு இந்த தாதுப் பொருட்கள், நம் உடலிலுள்ள எலும்புகளுக்கும், தசைகளுக்கும், இருதயத்திற்கும் வலுவளிக்கக் கூடியவை. சிலர் நிறைய பதப்படுத்தப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவார்கள். சிலருக்கு புகை பிடிக்கும் பழக்கமிருக்கும். அதிக அளவு டீ, காபி சாப்பிடுவர் சிலர். இன்னும் சிலருக்கு மது அருந்தும் பழக்கம் இருக்கும். இவர்கள் அனைவருக்குமே, இவற்றின் பாதிப்பு உடலில் ஏற்படாமலிருக்க பொட்டாசியம் சத்து அன்றாடம் தேவைப்படுகிறது. ஏனெனில் இந்த சத்தினையும் உடலில் தேக்கி வைக்க முடியாது.
எனவே தினமும் சாப்பிட வேண்டியுள்ள போது, இந்த சத்தினை நிறைய கொண்டிருக்கும் சீதாப்பழத்தை சாப்பிடலாமே!
வரலாற்றுச் சிந்தனை ..சிதம்பரனார் 
1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். (அதன் தலைவர் மதுரை தமிழ்ச்சங்கத் தலைவர், வள்ளல் பாண்டித்துரைதேவர்; சட்ட ஆலோசகர் சேலம் சி.விஜயராகவாச்சாரியார்). நிறுவனத்தின் மூலதனம் ரூ.10,00,000. 
சுதேசி கப்பல் நிறுவனத்தின் வெற்றியுடன் ..சி. திருப்தியடையவில்லை. அவர் மக்களிடையே விடுதலைப் போராட்ட உணர்வைத் தூண்ட நினைத்தார். இந்திய தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக செயல்பட ..சி.க்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டதுலார்டு. ராய் இந்தியாவில் இருந்த ஆங்கில அரசு அதிகாரி. அவர் 1905-ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஆங்கிலேய வணிகப் பெருமக்களின் கூட்டத்தில்,"இந்தியாவில் முதலீடு செய்யலாம். ஏனெனில் அங்கே தொழிற்சங்கம் இல்லை. அதனால் தொழிலாளர்களின் கூலி மிகக் குறைவு" என்று பேசினார். இந்த வகையான பேச்சிலிருந்து இந்தியாவில் அந்த கால கட்டத்தில் தொழிலாளர்களின் நிலையை நாம் அறியலாம். தூத்துக்குடியில் கோரல் நூற்பாலை என்று ஒரு தொழிற்சாலை இருந்தது. அங்கே தொழிலாளர்களுக்குக் கூலி மிகக் குறைவு.
ஆனால் அவர்கள் நாள் முழுவதும் இடைவேளை இல்லாமல் பன்னிரண்டு மணி நேரத்திற்கு அதிகமாக கடினமாக உழைக்கவேண்டும். அவர்களுக்கு விடுமுறை கிடையாது. தொழிலாளர்கள் ஏதேனும் தவறு செய்தால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்தொழிலாளர்களின் அவல நிலையைப் பார்த்து ..சி. மிகவும் வருந்தினார். நூற்பாலை தொழிலாளர்களை வேலை நிறுத்தம் செய்யும்படி தூண்டினார். ..சி.யும் சுப்ரமணிய சிவாவும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளித்தனர்பால கங்காதர திலகரின் சீடரான ..சிதம்பரனார் தென்னாட்டுத் திலகர் என்று போற்றப்படுபவர்
தன்னம்பிக்கை கதை -  நாயின் வால்
ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்­கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது? இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது... நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருவர் ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது. அடுத்தவன் பார்த்தான். நமக்கு ஒருவால்கிடைக்காதா என்று எதிர்பார்த்தான்.
இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான். இந்த மனிதனை இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை, திணறியது. ஒரு கட்டத்தில் நாய், ‘வாள்... வாள்என்று கத்த ஆரம்பித்து விட்டது. விளைவு...! இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க் கொண்டிருக்கிறார். அவர்கள் போக வேண்டிய திசை வேறு. போய்க் கொண்டிருக்கிற திசை வேறு. கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது. சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள். சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள்.
ஓவியம் வரைவோம்  10 GREAT IDEAS FOR KIDS https://www.youtube.com/watch?v=qJNSOte9h4I
இணையம் அறிவோம்  https://wonderville.org/

செயலி Math Tricks Competitive Exam