அறிவுக்கு விருந்து
27.02.2020 (வியாழன்)
பெப்ரவரி 27 (February 27) கிரிகோரியன் ஆண்டின்
58 ஆம்
நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 307 (நெட்டாண்டுகளில்
308) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
·
380 – அனைத்து உரோமைக் குடிமக்களும்
திரித்துவக் கிறித்தவத்தைத்
தழுவ வேண்டும் என பேரரசர் முதலாம் தியோடோசியசு
கேட்டுக் கொண்டார்.
·
907 – கித்தான் இனத் தலைவர் ஆபோஜி வடக்கு சீனாவில்
பேரரசர் தைசூ என்ற பெயரில் லியாவோ அரசமரபைத்
தோற்றுவித்தார்.
·
1782 – அமெரிக்கப் புரட்சிப் போர்:
அமெரிக்காவில் போரைத் தொடர்வதற்கு எதிராக பிரித்தானிய நாடாளுமன்றம் வாக்களித்தது.
பிறப்புகள்
இறப்புகள்
சிறப்பு நாள்
- தேசிய மருத்துவர்கள் நாள் (வியட்நாம்)
- மராட்டி மொழி நாள் (மகாராட்டிரம்)
- விடுதலை நாள் (டொமினிக்கன் குடியரசு, எயிட்டியிடம் இருந்து 1844)
- பன்னாட்டு அரசு சார்பற்ற அமைப்புகளின் நாள்
குறளறிவோம்- 169. அழுக்காறாமை
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
கேடும் நினைக்கப் படும்.
கலைஞர்
மு.கருணாநிதி உரை: பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும்.
மு.வரதராசனார் உரை:பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை.
Translation:
To men of envious heart, when
comes increase of joy,
Or loss to blameless men, the 'why' will thoughtful hearts employ.
Or loss to blameless men, the 'why' will thoughtful hearts employ.
Explanation:
The
wealth of a man of envious mind and the poverty of the righteous will be
pondered.
சிந்தனைக்கு:
வியர்வை துளிகளும் கண்ணீர் துளிகளும் உப்பாக
இருக்கலாம்
ஆனால் அவை
தான்
வாழ்வை
இனிமையாக மாற்றும்
தமிழ் அறிவோம்:
|
|
விடுகதை விடையுடன்
அரசன் ஆளாத
கோட்டைக்கு பகல் காவல்காரன் ஒருவன், இரவுக் காவல்காரன் ஒருவன் அவர்கள் யார்? சூரியன், சந்திரன்
பழமொழி-
பட்டுப்புடவை இரவல்கொடுத்து, மணை
தூக்கிகொண்டு
அலைய
வேண்டியதாச்சு.
பொருள்: ஒரு பட்டுப்புடவையை அவள்
உடுத்த இரவல் கொடுத்தேன். கூடவே நான் ஒரு மணை
ஆசனத்தை எடுத்துக்கொண்டு அவள் பின்னாலேயே போகவேண்டி
வந்தது!
விளக்கம்: என் பட்டுப்படவை அழுக்காகிவிடுமே
என்ற கவலைதான்!
Enrich your vocabulary
Enrich your vocabulary
Cavity.....பொந்து
Emerge....
வெளியேவருதல்
Proverb A bird in hand is worth two in the bush.
Things we
already have are more valuable than what we hope to get.
Example:
X: Why did you turn down that job offer when you don’t have anything concrete
in hand at the moment? Y: Well, I’m confident I’ll land one of the two jobs I
interviewed for last week. And they’re better than this one. X: In my opinion,
you should’ve taken it. A bird in hand is worth two in the bush.
Opposite Words
Put on
X Take off
- He took off his uniform and put on a sweater and trousers.
- Charlie was taking off his shirt when the phone rang.
Rapid X
Slow
- The patient made a rapid recovery.
- The car was travelling at a very slow speed.
மொழிபெயர்ப்பு
ஒருவகை சிறியப் பூசணி
|
|
வெங்காயத்தாள்(பூ
|
கணினி ஷார்ட்கட் கீ
Alt+N and T
|
Tables
|
Alt+N and V
|
Cover page
|
இனிக்கும் கணிதம் கணிதக் கலைச்சொற்கள்
இணை அடிகோள் Parallel Postulate
நேர் இணைவினை (பரஸ்பர
இணைவினை) Correlation
அறிவியல் அறிவோம்
#
விசையின் அலகு என்ன? – நியுட்டன்
#
வேலையின் அலகு என்ன?- ஜுல்
#
பொருளின் அளவு எதனால் குறிக்கப்படுகிறது?
– மோல்
#
ஒளிச்செறிவின் அலகு என்ன? – கேண்டிலா
உணவு – வைட்டமின் குறைபாடு : வைட்டமின் K குறைபாடு :
கர்ப்பக் காலத்தில் தாய்க்கு வைட்டமின் K குறைவாக இருப்பதால் சிசுவிற்கு இரத்தக்கசிவு ஏற்பட
வாய்ப்பு உள்ளது.
தினம் ஒரு மூலிகை -குப்பைமேனி இலையை காயவைத்து பொடியாக்கி மூக்கில் இட தலைவலி நீங்கும். அல்லது குப்பைமேனி இலையுடன் சாம்பிராணி சேர்த்து அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி குணமாகும்.
கொசுக்கடி அல்லது
அலர்ஜி
காரணமாக தோலில்
ஏற்படும் தடிப்புக்கும், குப்பைமேனியின் இலைச்
சாற்றை,
தேங்காய் எண்ணெயில் சேர்த்துக் கொதிக்கவைத்துத் தடவலாம்.குப்பைமேனி இலைச்
சாற்றைக் கொடுக்கும்போது, சில
நேரத்தில் உடனடியாக வாந்தி
எடுக்கவைத்து, அதனுடன் கோழையையும் வெளியேற்றும் இயல்பு
குப்பைமேனிக்கு உண்டு. குப்பைமேனியின் உலர்ந்த பொடியை
ஒரு
கிராம்
வெந்நீரில் அல்லது
தேனில்
கலந்து
கொடுக்க, கோழை
வருவது
மட்டும் அல்லாமல், இருமலும் உடனடியாகக் கட்டுப்படும். மூக்குத்தண்டில், நெற்றியில் கபம்
சேர்ந்து வரும்.
தலைபாரத்துக்கு குப்பைமேனி இலையை
அரைத்து, நெற்றியில் பற்றுபோடலாம். உடல்
முழுவதும் வலி
ஏற்பட்டு அவதிப்படுபவர்களுக்கு குப்பைமேனி இலைச்
சாற்றை,
நல்லெண்ணெய்யுடன் சேர்த்துக் காய்ச்சிப் பயன்படுத்தலாம்.
கால்
அரையிடுக்குகளில் கடும்
அரிப்பைக் கொடுத்து, சில
நாட்களில் அந்த
இடத்தைக் கருமையாக்கி, பின்
அந்தத்
தோல்
தடிப்புற்று, அடுத்த
சில
மாதங்களில் தடித்த இடம்,
அரிப்போடு நீர்ச்சுரப்பாக மாறும்
பூஞ்சைத்தொற்றுக்கு, குப்பைமேனியும் மஞ்சளும் சேர்த்து அரைத்துப் பூசலாம்.
வரலாற்றுச் சிந்தனை தமிழர் வரலாற்றுக் காலக்கோடு
வரலாற்றுக்கு முந்திய காலம்
சுமார் கி.மு. 3000 - 1400 - பையம் பள்ளியில் புதிய கற்காலம்.
சுமார் கி.மு. 2000 - 300 - தமிழகத்தின் இரும்பு காலம்.
முற்சங்க காலம்
சுமார் 1000 - 300 கி.மு. - பெருங்கற்காலம்.
தன்னம்பிக்கை கதை- தந்திலனும் கோரபனும் தந்திலன் என்பவன் ஒரு பெரிய வணிகன். பெரிய செல்வந்தன் ஆன போதிலும்மக்களுடன்
அன்போடு பழகி வேண்டிய உதவிகளைச் செய்து வந்தான். எனவேமக்களின் அன்பையும் அரசரின் நன் மதிப்பையும் பெற்றான். எனவே அரசகருவூலத்தின் தலைமை அதிகாரியாக நியமிக்கப் பெற்றான்.தந்திலனுக்கு ஒரு மகள் இருந்தாள். அவளின் திருமணத்தை சிறப்பாக நடத்திமுடித்த தந்திலன் அரசர்
மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் ஒரு விருந்துநடத்தினான். அறுசுவை விருந்து அளித்து ஆடை
அணிகலன்களும் கொடுத்துஅனைவரையும் பெருமைப் படுத்தினான். அங்கே அரண்மனை சிப்பந்திகளும் கூட வந்திருந்தனர். அவர்களில் கோரபன் எனும் சிப்பந்தி வேலைக்காரர்களுக்கு என ஒதுக்கப் பட்டிருந்த ஆசனத்தில்அமராமல் அதிகாரிகள் அமரும் ஆசனத்தில் அமர்ந்து கொண்டான். அது கண்டதந்திலன் அவனை அவனுக்குரிய ஆசனத்தில் சென்று அமருமாறு கேட்டுக்கொண்டான். அதைக் கேட்காதது போல் அமர்ந்திருந்த கோரபன் மேல் கோபம்கொண்டான் தந்திலன். தன் வீட்டு வேலைக் காரர்களை அழைத்த அவனைவீட்டை விட்டு வெளியேற்றுமாறு பணித்தான். சிப்பந்திகளும் கோரபனை வெளியேஅனுப்பினார்கள். இந்த அவமானத்தை எண்ணி
எண்ணி கோரபனுக்குதூக்கமே வரவில்லை. தந்திலனை எப்படியும் பழி வாங்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டான். அதற்க்கான
திட்டத்தையும் வகுத்துக் கொண்டான். காலையில் எழுந்து அரசனின் அறையை பெருக்கி சுத்தம் செய்தான். அப்பொழுது அரசன் எழுந்திருக்க வில்லை,
அரைத் தூக்கத்தில் இருந்தான். அரசன் படுத்திருந்த
கட்டிலின் அருகில் வந்து கோரபன் பின் வருமாறு முணுமுணுத்தான். "தந்திலனுக்கு
என்ன தைரியம் இருந்தால் இந்த மாதிரி செய்வான். பட்டத்து அரசியையே தழுவி சரசம்
செய்கிறானே". இதைக் அரசன்
திடுக்கிட்டு எழுந்து கோரபனை பிடித்துக் கொண்டான். "சொன்னதெல்லாம் உண்மைதானா?
" என்று கோபமாய்க்
கேட்கவும் மிகவும் பயந்து போன கோரபன், " இல்லை மன்னா நான் இரவு அதிக நேரம் சூதாடி விட்டு
விடியும் போதுதான் திரும்பினேன். தூக்க கலக்கத்தில் ஏதேனும் உளறி இருந்தால் என்னை
மன்னித்து விடுங்கள்" என்று கெஞ்சினான்.
அரசன் மிகவும் யோசித்தவாறே அவனை போகச் சொன்னான். அரசனின் சிந்தனை தாறுமாறாக சென்றது. "நம்மைத் தவிர அந்தபுரத்தில் சகஜமாக
புழங்குவதுதந்திலன் ஒருவன்தான். தவறு நடந்து இருக்கலாம். அதை கோரபன் பார்த்து விட்டு நம்மிடம் சொல்ல
அச்சப்படுகிறானோ" என்று பலவாறான சினதனையால் மனம் அலை
பாய்ந்தது. கடைசியில் ஒருவாறாக தந்திலனை
அரண்மனை உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று முடிவெடுத்து கட்டளையை எல்லா
சிப்பந்திகளுக்கும் அனுப்பினான் அரசன். எப்போதும் போல
அரண்மனைக்கு வந்த தந்திலனை அரண்மனைக் காவலன் உள்ளே அனுமதிக்க வில்லை. தான் ஒரு
அரண்மனை உயர் அதிகாரியாய் இருந்தும் தன்னை உள்ளே அனுமதிக்காதது மிகுந்த குழப்பத்தை
ஏற்படுத்தியது. காரணம் கேட்ட போதும் ஒன்றும் சொவில்லை. காவல்
காரனிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்த போது, அங்கு வந்த
கோரபன் ஏளனமாக சிரித்தபடி, " இவனை உள்ளே
அனுமதித்தால் அரசனின் மனதை மாற்றி உன்னை பழி
வாங்கி விடுவான். என்னை இப்படித்தான் ஒரு முறை கழுத்தை பிடித்து வெளியே அனுப்பி
விட்டான். எனவே எந்தக் காரணம் கொண்டும் இவனை உள்ளே அனுமதிக்காதே! "என்றான்.
அப்போதுதான் தந்திலனுக்கு உரைத்தது. " முட்டாளாய் இருந்தாலும், பேடியாய் இருந்தாலும் அரண்மனையில் சேவகம் செய்பவனை
மதிக்க வேண்டும். இது தெரியாமல் நான் தவறு செய்து விட்டேனே" என்று மனம் நொந்தவாறு வீடு திரும்பினான். இந்த
பிரச்சினையில் இருந்து மீள வேண்டுமானால் அது மீண்டும் கோரபன் உதவியால்
மட்டுமே முடியும் என்பதை உணர்ந்துக் கொண்டான்.அன்று இரவே கோரபனை அழைத்து வீட்டில் நன்கு உபசரித்து வேண்டிய மட்டும்
பொருட்களை அளித்து அவனை பலவாறாக சமாதானப்படுத்தினான். இதனால் மகிழ்ச்சி அடைந்த
கோரபன் நிலைமையை மாற்றுவதாக உறுதி அளித்தான்.
அடுத்த நாள் மீண்டும் அதிகாலையில் அரசன் தூக்கக்
கலக்கத்தில் இருக்கும் போது " இப்படி எல்லாம்
நாட்டில் நடக்குமா? நம் அரசர் மலம் கழித்துக்
கொண்டே மாம்பழம் தின்கிறாரே. அவரது தகுதிக்கு
இது அடுக்குமா?" என்று உரக்க
முணுமுணுத்தான். கோபத்துடன் எழுந்த அரசன் "என்ன சொன்னாய்? " என்று விரட்டவும், மிகவும் பயந்து
போனவனாக நடித்துக் கொண்டே, "அரசே! என்னை மன்னித்து விடுங்கள். நேற்றும் இரவு
தாமதமாகத்தான் வீடு திரும்பினேன். தூக்க கலக்கத்தில் ஏதுனும் உளறி இருப்பேன்" என்றான். அரசன் கோரபனை எச்சரித்து அனுப்பிவிட்டு
ஆழ்ந்து யோசித்தான். "சே! இவன் அன்றும் இப்படித்தான் உளறி இருக்க வேண்டும்.
அதைக் கேட்டு வீணாக தந்திலன் மேல் சந்தேகம் கொண்டு அவனை அனுப்பி விட்டோமே" என்று வருத்தப்பட்டான். தந்திலனை
வரச்செய்து, " சும்மா உன்னை சோதிப்பதற்காக
அவ்வாறு செய்தேன். இனி நீ எப்போதும் போல இந்த அரண்மனைக்கு வந்து போகலாம்"
என்றான். தந்திலனுக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது.
நீதி- நமக்கு
கீழ் வேலை செய்யும் ஆட்களை பகைத்துக் கொண்டால் விபரீதமே விளையும்.
No comments:
Post a Comment