அறிவுக்கு விருந்து
13.02.2020 (வியாழன்)
பெப்ரவரி 13 (February 13) கிரிகோரியன் ஆண்டின் 44 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 321 (நெட்டாண்டுகளில் 322) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
·
962 – உரோமின் ஆட்சியாளராக ஜோனை
நியமிக்கும் உடன்பாடு புனித உரோமைப் பேரரசர் முதலாம் ஒட்டோவுக்கும், திருத்தந்தை பன்னிரண்டாம் ஜோனுக்கும் இடையில் எட்டப்பட்டது.
·
1542 – முறைபிறழ்புணர்ச்சிக் குற்றச்சாட்டின் பேரில் இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரின் ஐந்தாம் மனைவி கேத்தரின் அவார்டு தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
·
1692 – கிளென்கோ படுகொலைகள்: இசுக்காட்லாந்தில் கிளென் கோ என்ற
இடத்தில் ஏறத்தாழ 80 டொனால்டு வம்சத்தினர் புதிய மன்னர் வில்லியமுக்கு ஆதரவு தெரிவிக்க மறுத்ததால் படுகொலை செய்யப்பட்டனர்.
·
1739 – ஈரானிய ஆட்சியாளர் நாதிர் ஷாவின் படையினர் இந்தியாவின் முகலாயப் பேரரசர் முகம்மது ஷாவின் படைகளைத் தோற்கடித்தனர்.
·
1755 – சாவகத்தின் மடாரம் பேரரசு "யோக்யகர்த்தா சுல்தானகம்" மற்றும் "சுரகர்த்தா சுல்தானகம்" என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
பிறப்புகள்
இறப்புகள்
சிறப்பு நாள்
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.
தகுதியான் வென்று விடல்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக்
குணத்தால் வென்று விடலாம்.
மு.வரதராசனார் உரை:செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப்
பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.
Translation:
With overweening pride when men
with injuries assail,
By thine own righteous dealing shalt thou mightily prevail.
By thine own righteous dealing shalt thou mightily prevail.
Explanation:
Let a man by patience overcome
those who through pride commit excesses.
சிந்தனைக்கு:
உன் கைரேகையை பார்த்து உன்
எதிர்காலத்தை நம்பி
விடாதே
ஏனென்றால் கை
இல்லாதவனுக்கும் எதிர்காலம் உண்டு
தமிழ் அறிவோம்:
தின்மை
|
தீமை
|
வண்மை
|
வளம், வழங்குதல்
|
வன்மை
|
வலிமை
|
விடுகதை
விடையுடன்
பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன? தவளை
பழமொழி-
ஐயா கதிர்போல, அம்மாள் குதிர்போல.
பொருள்: மிராசுதார் ஐயா தன் வயலில்
விளையும் நெற்கதிரைப்போல் ஒல்லியாக இருக்கிறார், அவர் மனைவியோ வீட்டில்
உள்ள நெற்குதிர்போல் இருக்கிறாள்.
விளக்கம்: ஐயா தன் வயல் நிலங்களைத் தினமும் பகல் முழுதும் சுற்றி மேற்பார்வை இட்டு அவர் அமர்த்தியுள்ள ஆட்களை வேலை வாங்குவதால் அவர் உடல் கதிர்போல் இளைத்து இருக்கிறது. அம்மாளோ சொகுசாக விட்டில் சாப்பிட்டு சாப்பிட்டுத் தூங்கியதால் அவள் உடல் குதிர்போல் பருத்தது.
விளக்கம்: ஐயா தன் வயல் நிலங்களைத் தினமும் பகல் முழுதும் சுற்றி மேற்பார்வை இட்டு அவர் அமர்த்தியுள்ள ஆட்களை வேலை வாங்குவதால் அவர் உடல் கதிர்போல் இளைத்து இருக்கிறது. அம்மாளோ சொகுசாக விட்டில் சாப்பிட்டு சாப்பிட்டுத் தூங்கியதால் அவள் உடல் குதிர்போல் பருத்தது.
Enrich your vocabulary
Proverb Cross the stream where it is shallowest.
To do things in
the easiest possible way.
Example:
Let’s just cross the stream where it is shallowest and find a spot that you can
pull right in to—don’t worry about parallel parking.
Opposite Words
Patient
X Impatient
- You’ll just have to be patient and wait till I’m off the phone.
- We are growing impatient with the lack of results.
Permanent
X Temporary
- He gave up a permanent job in order to freelance.
- You might want to consider temporary work until you decide what you want to do.
மொழிபெயர்ப்பு
BEET ROOT – செங்கிழங்கு,
அக்காரக்கிழங்கு
BITTER GOURD – பாகல், பாகற்காய் BLACK-EYED PEAS – தட்டைப்பயறு |
கணினி ஷார்ட்கட் கீ
Alt+P
|
Layout tab
|
Alt+Q
|
Goto tell me box
|
இனிக்கும் கணிதம் கணிதக் கலைச்சொற்கள்
அலகுநிலை அணி Unitary Matrix
அழுத்தம் Pressure
அளவுக்கோட்பாடு
Measure theory
அறிவியல் அறிவோம்
* வீசும் காற்றின் திசை மற்றும் கால அளவைக் காட்டும் வரைப்படம் - Star diagram
தினம் ஒரு மூலிகை கல்யாண
முருங்கை (முள்
முருங்கை):
அதிகமான பித்தத்தை நீக்கும். முடி
நரைக்காமலிருக்க உதவுகிறது. காய்ச்சலைக் குறைக்கும். நீர்
பி¡¢யும், மலமிளக்கி, மாத விடாய்த் தொல்லையை நீக்கும் கிருமிகளை வெளியேற்றும். வீக்கங்களை குறைக்கும். நீ¡¢ழிவு, சீதபேதி, வாதம் குணமடையும், 17 வயது வரை வயதுக்கு வராத
பெண்களுக்கு இதன்
சாறு
நல்ல
பலன்
தருகின்றது.
உணவு – வைட்டமின்கள்
விட்டமின் E
இது
செல்
மற்றும் செல்
அடி
படலங்களைப் பாதுகாப்பதினால் திசு
அமைப்பு பாதுகாக்கப்படுகிறது. தசைகளின் செயல்பாட்டிற்கு இது
இன்றியமையாதது.
மூல ஆதாரங்கள் : தாவரக்கொழுப்புகள், தானிய
வகைகளில் அதிகமாக காணப்படுகிறது.
விட்டமின் Kஇது
இரத்த
உறைதலுக்கு இன்றியமையாதது.
மூல ஆதாரங்கள்இது மனித உடலில்
உற்பத்தியாகிறது. பச்சைக் காய்கறிகள் மற்றும் இறைச்சியில் உள்ளது.
வரலாற்றுச் சிந்தனை
முதல் உலகப் போரும், இந்தியர்களின் துணிவும்
உலகிலுள்ள நாடுகளுக்கிடையே நிலவிய மோதல்கள் மற்றும் விரோத போக்குகளால் 1914ல் ‘முதல் உலகப் போர்’ ஆரம்பமானது. ஆங்கிலேயர்கள் நமது இந்தியாவில் ஆட்சி செய்து கொண்டிருந்ததால், அவர்களது போர் முயற்சிகளுக்கு நமது இந்தியா பெருமளவில் பங்களித்தது. முதல் உலகப்போரின் பின்விளைவுகளாக உயர் உயிரிழப்பு விகிதம், உயர்ந்த பணவீக்கம், பரவிய இன்புளூயன்ஸா கொள்ளைநோய் மற்றும் போரின்போது ஏற்பட்ட வர்த்தகத்தின் பாதிப்பு போன்றவை, இந்திய மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், பிரித்தானிய ஆட்சியைத் தூக்கியெறிய இந்திய வீரர்கள் முற்பட்டனர். அச்சமயம், அதாவது, 1915 ஆம்
ஆண்டில், தென்னாப்பிரிக்காவில் நிறவெறி எதிர்ப்பு இயக்கத்தின் முக்கியத் தலைவராக இருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், மீண்டும் இந்தியாவிற்கு வந்தார். இந்திய மக்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்ததால், 1916ல் கத்தர் கட்சியினரை பிரிட்டிஷார் வேட்டையாடியதோடு மட்டுமல்லாமல், 1918ல் ‘கறுப்புச் சட்டம்’ என்ற ‘ரௌலட் சட்டம்’ ஒன்றை நடைமுறைக்குக் கொண்டுவந்தனர். இதன் மூலம் ‘பத்திரிக்கைகளை மூடுதல், விசாரணையின்றி அரசியல் செயல்பாடுகளை நசுக்குதல், மற்றும் கைதாணை இல்லாமல் கலகம் அல்லது ராஜ துரோகத்தில் ஈடுபட்டதாக கருதப்படும் எந்த ஒரு தனிநபர்களையும் கைது செய்தல்’ போன்ற அக்கிரமங்களை, அதிகாரம் என்ற பெயரில் துஷ்ப்ரயோகம் செய்தனர், வைஸ்ராய்கள். மேலும், 1919ல், அமிர்தசரசில் ஜாலியன் வாலாபாக்கில் கூடியிருந்த நிராயுதபாணியான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற சந்தேகித்திற்கு இடமற்ற கூட்டத்தை நோக்கி சுடமாறு பிரித்தானிய ராணுவத் தளபதியான பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டயர் ஆணையிட்டார். இந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை, இரண்டாக பிளவுற்ற காங்கிரஸ் கட்சி, போராட்டங்கள், கிளர்ச்சிகள் எனப் பிரிந்திருந்த இந்திய மக்கள் அனைவரையும் ஒன்று சேர்த்தது. 1920 ஆம்
ஆண்டில், ‘கிலாபாத்’, ‘ஒத்துழையாமை இயக்கம்’, ‘கம்யூனிஸ்ட் கட்சி’, ‘அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ்’ போன்றவைகள் உதயமானது. தனது நாட்டில் நிலவிய சூழலைத் தடுக்க மகாத்மா காந்தி அவர்கள், முதல் சத்தியாக்ரஹ இயக்கத்தைத் தொடங்கி, ஆங்கிலேயர்களை எதிர்த்தார். இதனால், காந்திக்கு 1922ல் ஆறுவருட சிறைதண்டனை விதிக்கப்பட்டு, இரண்டாண்டுகளிலேயே விடுதலையும் செய்யப்பட்டார். 1929ல், டில்லி பாராளுமன்றத்தில் பகத்சிங் குண்டு வீசினார். இதை மிகவும் கடுமையாக எதிர்த்த காந்தியடிகள், ‘அமைதியால் மட்டும் தான் சுத்தந்திரம் அடைய முடியுமென்று’ எண்ணி, 1930 ஆம்
ஆண்டில் ‘தண்டி யாத்திரை’ எனப்படும் ‘உப்பு சத்தியாக்கிரகம்’ நடத்தினார். அப்போது தான் முதல் வட்ட மேசை மாநாடு நடைபெற்றது. அடுத்த ஆண்டில், ‘காந்தி-இர்வின்’ ஒப்பந்தம் கையெழுத்தானதோடு மட்டுமல்லாமல், அவர் லண்டனில் நடந்த இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்துகொண்டார். இந்த மாநாடு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவர் இந்தியா திரும்பினார். அதே ஆண்டில் தான் ஆங்கிலேயர்களை எதிர்த்த பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகிய மூவரும் தூக்கிலிடப்பட்டார்.
இரண்டாம் உலகப் போரில் இந்தியா கலந்துகொண்டது. மேலும், காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஆங்கிலேயர்கள், இந்தியாவை இரண்டு நாடுகளாகப் பிரித்தனர். 1940ல் ‘தனிநபர் சத்தியாக்கிரகம்’ மற்றும் 1942ல் ‘வெள்ளையனே வெளியேறு தீர்மானம் போன்றவை நிறைவேற்றப்பட்டது. 1943 ஆம்
ஆண்டில், நேதாஜி இந்திய ராணுவத்தை தென்கிழக்காசியாவில் நாடுகடத்தப்பட்ட இந்திய தேசபக்தர்களையும் ஜாப்பான் உதவியுடன் உருவாக்கினார். இதைத் தொடர்ந்து, 1946ல் ‘ஆர்ஐஎன் கழகம்’ எனப்படும் ‘கப்பற்படை எழுச்சி’ எழுப்பப்பட்டது.
தன்னம்பிக்கை கதை- தொடரும்
கதை
சோர்ந்து போய் உட்கார்ந்து இருந்தேன்,
அலுவலகம் பரபரப்பாக இருந்தது. அலுவலகத்தில் வருவோர் போவோர் என சலசலத்துக்கொண்டு இருந்தது.
காலை வெயில் கொடுமை வேறு அதிகமாக இருந்ததால்
நடந்து வந்த களைப்பு அதிகமாக
சோர்வு அடைய வைத்தது. நான்
பார்க்க வேண்டிய கிளார்க் மட்டும் இன்னும் வரவில்லை, அவர் உட்கார்ந்து இருக்கும்
டேபிளையே பார்த்து பார்த்து எனக்கு போரடித்து விட்டது, இதோடு நான்கைந்து முறை வந்துவிட்டேன்.ஒரு
விண்ணப்பம் பெறுவதற்கு இழுத்தடிக்கிறார்கள்.
சின்ன வேலைதான் என்னுடைய பென்சன் புத்தகத்தை சேலத்திலிருந்து கோவைக்கு மாற்ற வேண்டும், சேலத்தில் கொடுத்து ஆறுமாதமாகிறது, இன்னும் கோவைக்கு வந்து சேரவில்லை, பென்சன் புத்தகம் கொடுக்கும்பொழுது ஒரு மாதத்தில் ஆகி
விடும் என்றார்கள், ஆறு மாதமாகிறது. இது
வரை தகவலே இல்லை அதற்குத்தான் ஒரு விண்ணப்பம் கொடுக்கலாம்
என்றால் அதை இப்படி எழுதிக்கொடு,அப்படி எழுதிக்கொடு
என்று இழுத்தடிக்கிறார்கள், இன்று என்ன ஆனாலும் சரி வேலையை முடிக்காமல் போவதில்லை என்று அந்த சோர்விலும் மனதில் உறுதி எடுத்து கொண்டேன்.
என்று இழுத்தடிக்கிறார்கள், இன்று என்ன ஆனாலும் சரி வேலையை முடிக்காமல் போவதில்லை என்று அந்த சோர்விலும் மனதில் உறுதி எடுத்து கொண்டேன்.
ஒரு வழியாக அந்த
கிளார்க் யாருடனோ சிரித்துக்கொண்டு வந்தவர் டேபிள் அருகில் வலது கையால் மெல்ல
நாற்காலியை துடைத்துவிட்டு உட்கார்ந்தார்.தள்ளி உட்கார்ந்து அவரையே பார்த்துக்கொண்டிருந்த நான் மிக வேகமாக
அவர் அருகில் சென்று வணக்கம் சொன்னேன், என்னுடைய வணக்கத்தை கண்டுகொண்டதாக காட்டிக்கொள்ள்வேயில்லை, ம்…. என்ன வேணும்
உங்களுக்கு? சார் நேத்து கூட
வந்தேனே என்னுடைய பென்சன் புத்தகம் விசயமா..இழுத்தேன். ஓ. அதான் அப்ளிகேசன்
கொடுத்திட்டீங்கள்ள ஒரு வாரத்துல வந்துடும்
என்றார்.காலையில் சாப்பிடாமல் வந்ததில் பசி வேறு என்
கோபத்தை தூண்டியது, சார் நேத்து நான்
அப்ளிகேசனே கொடுக்கல. நீங்கதான் அதைய மாத்திட்டு வா
இதய மாத்திட்டு வா அப்படீன்னு திருப்பி
அனுப்பிட்டீங்க, என்று சொல்லி என் விண்ணப்பத்தை நீட்டினேன்.
கொண்டாங்க என்று வாங்கியவர் அதைப் படித்து பார்க்காமலேயே டேபிள் ட்ராயரில் போட்டுக்கொண்டு இன்னும் ஒரு வாரத்துல வந்திடும்
என்று அதே பதிலை இயந்திரமாக
சொன்னார். எனக்கு அதற்குமேல் என்ன செய்வதன்றே தொ¢யவில்லை சார் கொஞ்சம் சீக்கிரமா
செய்துகொடுத்தால் நல்லா இருக்கும்’ என்று மென்று விழுங்கினேன்.
பார்க்கலாம் என்றவாறு ஏதோ பைல் பார்ப்பதுபோல்
தலையை குனிந்துகொண்டார்.
ஒரு ஆயாசப்பெருமூச்சுடன் என் தலைவிதியை
நொந்தவாறு வெளியே வந்தேன், இந்த ஆறு மாத
பென்சன் நின்று போனதில் கையிருப்பு கரைந்து போயிற்று வீட்டில் நானும் மனைவியும்தான் என்றாலும், பெண்கள்
இருவரையும் உள்ளுரிலேயே கட்டிக்கொடுத்துள்ளதால் ஒவ்வொரு ஞாயிறும் குழந்தைகளுடன் வருவார்கள், அவர்களை கவனிப்பதில் செலவுகள் அதிகமாகிவிடும்.
இருவரையும் உள்ளுரிலேயே கட்டிக்கொடுத்துள்ளதால் ஒவ்வொரு ஞாயிறும் குழந்தைகளுடன் வருவார்கள், அவர்களை கவனிப்பதில் செலவுகள் அதிகமாகிவிடும்.
அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது எதிரில்
என் நண்பர் வேணுகோபால் வந்து கொண்டிருந்தார். என்னுடன் சேலத்தில் ஒன்றாக பணியாற்றியவர், என்னை விட 12 வயது இளையவர், நான்
ஓய்வு பெற்று ஏழு வருடங்கள் ஆகிவிட்டன,
அப்படியானால் வேணுகோபாலுக்கு இன்னும் 5 வருடம் சர்வீஸ் உண்டு.ஆனால் அவர் எப்படி இங்கு?
யோசித்துக்கொண்டிருக்கும் போதே அவர் சார்
என்று என் கையை பிடித்துக்கொண்டு
எப்படி இருக்கிங்க உங்கள பார்த்து எத்தனை வருசம் ஆச்சு என்றார் வாஞ்சயுடன்’ பின் நான் கோயமுத்தூருக்கு
வந்து மூணு வருசமாச்சு நீங்க
எங்க சார் இந்த பக்கம்?
என்று மூச்சு விடாமல் பேசினார்.
நான் ரிட்டையர்டு ஆன
பின்னால பொண்ணுங்களை கோயமுத்தூருல கட்டிக் கொடுத்துட்டேன், பின் நான் மட்டும்
அங்க என்ன பண்றேன்?அதான்
இங்க வந்துட்டேன், என்றவன் என் பென்சன் பிரச்சினை
பற்றி வேணுகோபாலிடம் மெதுவாக சொன்னேன்.அந்த விசயமெல்லாம் ரங்கசாமிதான்
பார்ப்பார் அவரை பார்த்திங்களா? என்று
கேட்டார். பார்த்தேன்! ஆனா ரொம்ப இழுக்கறாரு
எனக்கு அவரை அறிமுகமுமில்லை என்றேன்.
நீங்க என் கூட வாங்க!
என்று என்னை விரு விரு வென
அலுவலகத்துக்குள் அழைத்து சென்று நான் விண்ணப்பம் கொடுத்த
அதே கிளார்க்கிடம் சென்று ரங்கசாமி இவர் எனக்கு ரொம்ப
வேண்டப்பட்டவர், அதுவுமில்லாம நம்ம டிபார்ட்மெண்ட் வொர்க்கர்,
பாவம் அவரை ஏன் இழுத்தடிக்கிறாய்!
அவருக்கு சீக்கிரம் முடிச்சு கொடு என்றார், ரங்கசாமி
சீட்டை விட்டு எழுந்து சார் உங்களுக்கு தெரிஞ்சவரா
என்று முதன் முறையாக சிநேகமாக சிரித்து நீங்க ஒண்ணும் கவலைப்படாதிங்க இன்னும் ஒரு வாரத்துல உங்களுக்கு
ஏற்பாடு பண்ணிடலாம் கவலைப்படாமல் போங்க சார் என்றார்.
நான் மகிழ்ச்சியுடன் தலை
அசைத்து வேணுகோபாலுடன் வெளியே வந்து வேணுகோபாலை வா “காப்பி சாப்பிடலாம்
என அழைத்தேன்,வேணுகோபால் வேண்டாம் என்று சொல்லி பிறகு பார்ப்பதாக சொல்லி என் தோளை தட்டி
விடைபெற்றார். நானும் நிம்மதியுடன் கிளம்பும்போது அருகில் இருந்து பேச்சுக்குரல் என் காதில் விழுந்தது.
“இதோ போறானே இந்த
ஆளுகிட்ட சேலத்துல இருக்கும்போது ஒரு சாதாரண சர்ட்டிபிகேட்
வேணும்னா கூட நாயா அலைய
விட்டு கடைசியில காசு வாங்கிட்டுத்தான் செய்வான்”
இப்ப இவன் அனுபவிக்கிறான்.
இவ் வார்த்தைகள் எனக்குத்தான்!
ஆனால் உறைக்கவில்லை, எல்லாம் பழக்கம்தான்.
தமிழ் அறிவோம்
No comments:
Post a Comment