அறிவுக்கு விருந்து 20.02.2020 (வியாழன்)


அறிவுக்கு  விருந்து  20.02.2020 (வியாழன்)
பெப்ரவரி 20 (February 20கிரிகோரியன் ஆண்டின் 51 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 314 (நெட்டாண்டுகளில் 315) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

·         1472 – இசுக்கொட்லாந்தின் அரசியும்டென்மார்க்கின் இளவரசியுமான மார்கரெட்டுக்காக ஓர்க்னி, செட்லாந்து ஆகிய பகுதிகளை நோர்வேஇசுக்கொட்லாந்துக்கு வரதட்சணையாக வழங்கியது.
·         1547 – ஆறாம் எட்வர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினார்.
·         1627 – யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சூறாவளியில் சிக்கி பலர் இறந்தனர்.[1]
·         1798 – திருத்தந்தை ஆறாம் பயஸ் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
·         1818 – இலங்கையின் கண்டிப் பிரதேசத்தில் இராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.[2]
·         1835 – சிலியின் கன்செப்சியான் நகரம் நிலநடுக்கத்தில் அழிந்தது.
·         1865 – உருகுவைப் போர் முடிவுக்கு வந்தது. அரசுத்தலைவர் தொமாசு விலால்பாவுக்கும் கிளர்ச்சித் தலைவர் வெனான்சியோ புளோரெசிற்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.

பிறப்புகள்

·         1844 – லுட்விக் போல்ட்ஸ்மான், ஆத்திரிய இயற்பியலாளர், மெய்யியலாளர் (1906)
·         1876 – கா. நமச்சிவாயம், தமிழகத் தமிழறிஞர் (1936)
·         1901 – பொபிலி அரசர், சென்னை மாகாணத்தின் 6வது முதலமைச்சர் (1978)
·         1925 – கிரிஜா பிரசாத் கொய்ராலா, நேபாளப் பிரதமர் (2010)
·         1941 – லிம் கிட் சியாங், மலேசிய அரசியல்வாதி
·         1944 – விஜய நிர்மலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை, இயக்குநர் (2019)
·         1945 – ஜியார்ஜ் ஸ்மூட், அமெரிக்க விண்ணியல் அறிஞர்
·         1967 – கர்ட் கோபேன், அமெரிக்கப் பாடகர் (1994)

இறப்புகள்

·         1762 – டோபியாஸ் மேயர், செருமானிய வானியலாளர் (பி1723)
·         1778 – லாரா மரியா, இத்தாலிய இயற்பியலாளர் (பி1711)
·         1862 – பிரான்சிஸ்கோ பலக்டாஸ், பிலிப்பீனிய எழுத்தாளர் (பி1788)
·         1896 – ஆணல்ட் சதாசிவம்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர், புலவர் (பி1820)
·         1907 – ஆன்றி முவாசான்நோபல் பரிசு பெற்ற பிரான்சிய வேதியியலாளர் (பி1852)
·         1920 – ஜெசிந்தா மார்த்தோ, போர்த்துக்கீசப் புனிதர் (பி1910)
·         1960 – வை. மு. கோதைநாயகி, தமிழகப் புதின எழுத்தாளர் (பி1901)
·         1987 – ஜோசப் பாறேக்காட்டில், கத்தோலிக்கத் திருச்சபை கர்தினால் (பி1912)

சிறப்பு நாள்

குறளறிவோம்-  164. அழுக்காறாமை

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
கலைஞர் மு.கருணாநிதி உரை: தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் தீச்செயல்களில் .டுபடமாட்டார்கள்.
மு.வரதராசனார் உரை:பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுத அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.
Translation: The wise through envy break not virtue's laws,
Knowing ill-deeds of foul disgrace the cause.
Explanation:  (The wise) knowing the misery that comes from transgression will not through envy commit unrighteous deeds.
சிந்தனைக்கு:
நாம் சொன்ன ஒரு பொய் உலகத்திற்கு தெரியும் போது
நாம் சொன்ன அத்தனை உண்மைகளும் சந்தேகத்திற்கு இடமாகின்றன.

தமிழ் அறிவோம்:
  1. அரணம் = மதில், கவசம்
  1. அரலை = கழலை(உடலில் தோன்றும் கட்டி), கனியின் காழ் (பழத்திலுள்ள கொட்டை) அரி = கண்வரி, கடல், பொன், கிண்கிணிப்பரல்,

விடுகதை விடையுடன்   விரல் இல்லாமலே ஒரு கை அது என்ன?  உலக்கை
பழமொழி- போனதுபோல வந்தானாம் புது மாப்பிள்ளை.
பொருள்: பலனை எதிர்பார்த்து ஒரு காரியத்தைத் தொடங்கி ஏமாந்தது போல.
விளக்கம்: புது மாப்பிள்ளை பரிசுகளை எதிர்பார்த்து மாமியார் வீடு சென்று வெறுங்கையோடு திரும்பியது போல.
Enrich your   vocabulary
Species.......இனம் 
Coastal.     கடற்கரை 

Proverb   Don’t bite the hand that feeds you.

Don’t act badly toward the person who has helped you or from whom you derive some benefits, for you may lose those benefits in future.
Example: Don’t bite the hand that feeds you by talking ill of your mentor for such a small thing. If he distances himself from you or talk bad about you, it can hurt you bad.

Opposite Words 

Praise X Criticism
  • Her teacher was full of praise for her work.
  • My main criticism of the scheme is that it does nothing to help families on low incomes.
Pre X Post
  • As usual, the government seems to have forgotten most of its preelection promises.
  • Its share price rocketed from its postcrash low.
மொழிபெயர்ப்பு
Cucumber
வெள்ளிரிக்காய்
வெண் முள்ளங்கி
கணினி ஷார்ட்கட் கீ
Alt+M
Mailing tab
Alt+P
Layout tab

இனிக்கும் கணிதம் கணிதக் கலைச்சொற்கள்

இசைத்தொடர் Harmonic Series
இசைத்தொடர்ச்சி Harmonic Progression
இடமாற்றல், (அணித்)திருப்பம் Transposition
அறிவியல் அறிவோம்   
செல் கொள்கையை முன் மொழிந்தவர்கள் யார்? – தியோடர் ஸ்ச்வான் மற்றும் ஜேக்கப் ஸீலீடன்
உயிரனங்களின் அடிப்படை அலகு எது? – செல்
செல் பற்றிய படிப்பிற்க்கு_______என்று பெயர்செல் அமைப்பியல் (Cytology) அல்லது செல் உயிரியல்
தினம் ஒரு மூலிகை மணத்தக்காளி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றுப் புண் மற்றும் அல்சர் விரைவில் குணமாகும். மணத்தக்காளி கீரை வயிறு மற்றும் வாய் அல்சருக்கு மிகவும் நல்லது. எனவே அந்த கீரையை சூப் செய்தோ அல்லது பொரியல் செய்தோ வாரத்திற்கு 3 முறை உட்கொண்டு வர விரைவில் அல்சர் குணமாகும்.
உணவு   குறைபாட்டு நோய்கள் (Deficiency Disorder)
கொழுப்பு அதிகமாவதால், உடல் பருமனாதல் (obesity), இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரித்தல், அத்திரோஸ்கிலிரோஸிஸ் (Atherosclerosis), இரத்தத்திலுள்ள கொலஸ்டிராலின் அளவு அதிகரித்தல் போன்ற பாதிப்புகள் உண்டாகிறது.
புரதக் குறைபாடு : (குவாஷியாக்கர், மராஸ்மஸ்)
வரலாற்றுச் சிந்தனை   கல்வெட்டாய்வு

அக்காலத்தில் கோயில் என்பது கடவுளின் இல்லம் (கோ - தலைவனுக்கெல்லாம் தலைவன், இல் - இல்லம்) என்றளவிலேயே இருந்தது. கடவுள், தலைவன் என்ற பொழுதும் பக்தி இருந்ததே தவிர அங்கே பயம் இல்லை. அதனால் கோயில்கள் மக்கள் கூடும், கூடிக் கொண்டாடும் இடமாக இருந்தது. கலையாற்றலுடன் இருந்தவர்கள் தங்கள் கலைகளை வளர்த்துக் கொள்ள, கலைகளை மக்கள் அனைவரும் கண்டு, கேட்டு களிக்கும் வகையில் பறைசாற்ற, ஒரு பொது இடமாகவும் கோயில்கள் திகழ்ந்தன. அதனாலேயே நமது பாரம்பரியக் கலைகளான நடனம், இசை, சிற்பம், ஓவியம் முதலியன இன்றும் அழியாமல் இருக்கின்றன. இப்படி பொது இடமாகக் கோயில்கள் இருந்தமையால் எந்த ஒரு செயல், கொடை, ஆட்சிமுறை, வரி விஷயங்கள், மற்றும் மக்களுக்குப் போய் சேர வேண்டிய முக்கியமான விஷயங்களையெல்லாம் கோயில்களில் கல்லிலே வெட்டி வைத்தார்கள் நமது முன்னோர்கள்

தன்னம்பிக்கை கதை-  சிங்க வேஷம் போட்ட கழுதை

ஒரு ஊருல ஒரு பெரிய்ய காடு இருந்தது. பக்கத்துக் கிராமத்திலிருந்து அந்தக் காட்டுக்குள்ள ஒரு கழுதை வழி மாறி வந்திருச்சாம். காட்டுக்குள்ள ஒருத்தர் மட்டுமே நடக்கக் கூடிய ஒரு மண் சாலை வழியா நடந்து நடந்து களைச்சுப் போச்சு. தண்ணீர் குடிக்கலாம்முன்னு ஒரு ஓடைப் பக்கம் போனது. அந்த ஓடைக்கு பக்கத்துல சில வேட்டைக்காரர்கள் வசித்து வந்தாங்க. அவங்க தான் வேட்டையாடிய சிங்கம், புலி, மான் போன்ற சில மிருகங்களின் தோலை எல்லாம் அங்கிருந்தப் பாறைகள் மேலக் காய வைத்திருந்தாங்க.
       இதைப் பார்த்ததும் கழுதைக்கு ஒரு ஆசை வந்தது. உடனே ஒரு சிங்கத்தோட தோலை எடுத்துத் தன் உடம்பு மேல போத்திக்கிச்சாம். பார்க்க சிங்கம் போலவே இருந்ததுனால, மற்ற மிருகங்கள் எல்லாம் இதைப் பார்த்துப் பயந்து ஒதுங்கிப் போனதாம். மிருகங்கள் எல்லாம் தன்னைப் பார்த்துப் பயந்து மரியாதையாக வழிக் கொடுத்து ஒதுங்கிப் போனதைப் பார்த்துக் கழுதைக்கு, கர்வம் தலைக்கேறியது. மனிசங்களையும் பயமுறுத்தலாம் என்று நினைத்து கிராமத்துக்குள்ள போயி சிங்கம் போல கர்ஜிக்கணும்னு நினைச்சு "ங்கெ ங்கெ"ன்னு கத்திச்சாம். அதோட குரல் அது கழுதைன்னு காட்டிக் கொடுத்திருச்சு. அதுக்குப் பிறகு கழுதைய யாருமே மதிக்கவேயில்லை. யாரும் அதைப் பார்த்துப் பயப்படவேயில்லை.

நாம் நாமாக இருக்கும் போதுதான் மதிப்படைகிறோம்அடுத்தவர் போல வேடம்போட்டாலோ அல்லது அவரைப் போல நடந்து கொள்வதாலோ அவமானம்தான் மிஞ்சும்.

தமிழ் அறிவோம்  https://www.youtube.com/watch?v=Upp47r0ve6U

இணையம் அறிவோம்
தொகுப்பு   https://kanchidigitalteam.blogspot.com

No comments:

Post a Comment