அறிவுக்கு விருந்து
11.02.2020 ( செவ்வாய்)
பெப்ரவரி
11 (February 11) கிரிகோரியன்
ஆண்டின் 42 ஆம் நாளாகும். ஆண்டு
முடிவிற்கு மேலும் 323 (நெட்டாண்டுகளில்
324) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
·55 – உரோம்
நகரில் உரோமைப்
பேரரசின் முடிக்குரிய பிரித்தானிக்கசு இளவரசர் மர்மமான முறையில் இறந்தமை, நீரோ பேரரசராக வருவதற்கு வழிவகுத்தது.
· 244 – சிப்பாய்களின்
கிளர்ச்சியை அடுத்து மெசொப்பொத்தேமியாவில்
பேரரசர் மூன்றாம் கோர்டியன் கொல்லப்பட்டார்.
·1534 – இங்கிலாந்தின்
எட்டாம் என்றி மன்னர் இங்கிலாந்து
திருச்சபையின் உயர் தலைவராக அங்கீகரிக்கப்பட்டார்.
·1626 – எத்தியோப்பியத்
திருச்சபையின் தலைமைப் பீடமாக உரோமைத்
திரு ஆட்சிப்பீடத்தை பேரரசர் முதலாம் செசேனியசு அறிவித்து, கத்தோலிக்கத்தை
எத்தியோப்பியாவின் அரச சமயமாக்கினார்.
· 1802 – சின்ன
மருது மகன் துரைச்சாமி உட்பட
73 பேர் மலாயாவின்
பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவிற்கு
(இன்றைய பினாங்கு)
நாடு கடத்தப்பட்டனர்.
பிறப்புகள்
· 1847 – தாமசு
ஆல்வா எடிசன், ஒளிக்குமிழ், கிராமபோன்
ஆகியவற்றைக் கண்டுபிடித்த அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 1931)
·1865 – எல்.
டி. சாமிக்கண்ணு பிள்ளை, இந்திய அரசியல்வாதி, வரலாற்றாளர், மொழியியலாளர், வானியலாளர் (இ. 1925)
இறப்புகள்
சிறப்பு நாள்
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.
பொன்றுந் துணையும் புகழ்.
கலைஞர்
மு.கருணாநிதி உரை: தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல்
தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள்
மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப்
பிடிப்பபோருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்.
மு.வரதராசனார் உரை:தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.
Translation:
Who wreak their wrath have
pleasure for a day;
Who bear have praise till earth shall pass away.
Who bear have praise till earth shall pass away.
Explanation:
The pleasure of the resentful
continues for a day. The praise of the patient will continue until (the final
destruction of) the world.
சிந்தனைக்கு:
அன்பு காட்டி சிலரும் காயப்படுத்தியே சிலரும் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார்கள்
தமிழ் அறிவோம்:
துனி
|
துன்பம், கோபம், அச்சம்
|
திணை
|
நிலம், ஒழுக்கம்
|
தினை
|
தானிய வகை
|
விடுகதை
விடையுடன்
எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன? விக்கல்
பழமொழி- சந்நியாசி கோவணத்துக்கு இச்சித்துச் சமுசாரம் மேலிட்டதுபோல்.
பொருள்: தன் கோவணத்தப் பாதுகாக்க ஆசைப்பட்ட சந்நியாசி ஒரு குடும்பத்தையே தாங்கவேண்டி வந்தது.
பொருள்: தன் கோவணத்தப் பாதுகாக்க ஆசைப்பட்ட சந்நியாசி ஒரு குடும்பத்தையே தாங்கவேண்டி வந்தது.
விளக்கம்: சந்நியாசி
கல்யாணம் செய்துகொண்டதாகப் பொருள் இல்லை. கதை இதுதான்: ஒரு
சந்நியாசி தன் கோவணத்தை எலி
கடித்துவிடுவது கண்டு அதைத் தடுக்க ஒரு பூனை வளர்த்தானாம்.
பின் அந்தப் பூனையைப் பராமரிக்க ஒரு பசுமாடு வளர்த்தானாம்.
அந்தப் பசுவை மேய்ச்சல் நிலத்துக்கு ஓட்டிச்சென்று அழைத்துவர ஒரு இடையனை அமர்த்தினானாம்.
அந்த இடையன் பின்னர் திருமணம் செய்துகொண்டதால் சந்நியாசி அந்தக் குடும்பத்தையே தாங்க நேரிட்டதாம்.
Enrich your vocabulary
Enrich your vocabulary
Proverb Clothes do not make the man.
A
person’s character can’t be judged by his/ her clothing and outward appearance.
Example: X: I can’t
believe he has been charged for insider trading. He always seemed so
professional
and impeccable. Y:
Well, clothes don’t make the man.
Opposite Words
Optimistic
X Pessimistic
- Bankers are cautiously optimistic about the country’s economic future.
- He remains deeply pessimistic about the peace process.
Over X
Under
- She leaned over the desk to answer the phone.
- Wendy had hidden the box under her bed.
மொழிபெயர்ப்பு
கங்குங் கீரை
|
கணினி ஷார்ட்கட் கீ
Alt+N
|
Insert Tab
|
Alt+G
|
Design tab
|
இனிக்கும் கணிதம் கணிதக் கலைச்சொற்கள்
அமைப்பு ஒத்து Homotopy
அமைப்பு ஒப்பு Homology
அமைவியம், அமைவு Morphism
அறிவியல் அறிவோம்
* விண்வெளி ஆய்வுநிலையங்களில் மின்சாரம் தயாரிக்க உதவுவது - சூரிய மின்கலம்
*தாவரங்களில் ஒளிச் சேர்க்கையின் போது சேமிக்கப்படும் ஆற்றல் - வேதி ஆற்றல்
தினம் ஒரு மூலிகை வில்வம்:
காய்ச்சல், அனீமியா, மஞ்சள்
காமாலை,
சீதபேதி போன்றவற்றிற்குச் சிறந்தது. காலரா
தடுப்பு மருந்தாக வில்வம் செயல்படுகிறது. சிவன்
கோயில்களில் வில்வ
இலை
கிடைக்கும்.
உணவு – வைட்டமின்கள் வைட்டமின்கள் உடல்நல கட்டுபாட்டிற்கும், பாதுகாப்பிற்கும் உதவுவனவாகும்.
வகைபாடு : இதில்
இரண்டு
வகைகள்
உண்டு
1.
நீரில்
கரையக்கூடியவை 2. கொழுப்பில் கரையக்கூடியவை
கொழுப்பில் கரையக்கூடிய விட்டமின்கள்
விட்டமின் A, D, E, K ஆகியன கொழுப்பில் கரையக்கூடியது.
விட்டமின் A
இது
விலங்கு மற்றும் தாவர
உணவுகளில் உள்ளது.
வேலைகள்
1. இது கண்பார்வைக்கு அவசியமானது.
2. இது மாலைக்கண் நோயைத்
தடுக்கிறது.
3. இது சிராஃப்தால் மியாவை
(Xerophalmia) தடுக்கிறது.
4. உடலில் உள்ள
எபிதீலிய திசுக்களைப் பராமரிக்கிறது.
5. இது உடல்
வளர்ச்சிக்கு உதவுகிறது.
6. புரதங்களின் சரியான
பயன்பாட்டிற்கு உதவுகிறது.
வரலாற்றுச் சிந்தனை ஆங்கிலேயர்களின்
கிழக்கிந்திய கம்பெனி
ஐரோப்பியர்களை மிகவும் சூழ்ச்சியால் வென்ற
ஆங்கிலேயர்கள், இந்தியாவில் இருந்து வாணிகம் செய்து
வந்ததோடு மட்டுமல்லாமல், அப்போதைய முகலாயப் பேரரசர் ஜெஹாங்கிரின் அனுமதிப் பெற்ற
பின்னர், இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்டு
அவர்களது கிழக்கிந்திய கம்பெனியையும் நிறுவினர். நாளடைவில் அவர்கள் வரி
செலுத்தாமலேயே வாணிகம் செய்ததால், அவர்களை வங்காளத்தின் நவாப்
‘சிராஜ்
உட
துலாத்’
என்பவர் எதிர்த்ததால், 1757 ஆம் ஆண்டில், ‘பிளாசி
யுத்தம்’ தொடங்கியது. இதில்,
நவாப்
ஆங்கிலேயர்களிடம் தோல்வியுற்றதால், அவர்கள் இந்தியாவில் உள்ள
நிலங்களை ஆக்கிரமிக்கத் துவங்கினர். இதையடுத்து, 1764 ஆம் ஆண்டில் பக்சார் போரிலும் வெற்றிப் பெற்று,
வங்காளத்தை ஆட்சி
செய்ய
அப்போதைய முகலாயப் பேரரசரிடம் அனுமதிப்பெற்றதால், இந்தியா முழுவதும் ஆங்கிலேயரின் ஆட்சிக்குள் வர
அதுவே,
முதன்முதல் காரணமாக இருந்தது. இதன்
பின்னர், வரிகள்,
நிலங்கள் கையகப்படுத்துதல், போன்றவற்றால் இந்தியா பஞ்சம்
வரும்
நிலைமைக்குத் தள்ளப்பட்டது. 20 மில்லியன் மக்கள்
‘கிரேட்
பாமின்
ஆஃப்
1876–78’ மற்றும் ‘இந்தியன் பாமின்
ஆப்
1899–1900ல்’
மடிந்ததொடு மட்டுமல்லாமல், ‘மூன்றாம் பிளக்
பாண்டமிக்’ என்ற
கொடிய
நோயால்
மேலும்
10 மில்லியன் மக்கள்
செத்து
மடிந்தனர். கிழக்கிந்திய நிறுவனத்தால், ஏற்பட்ட இத்தகைய மாபெரும் இழப்பைக் கண்டு
வெகுண்டத் துடிப்பான இளைஞர்கள் பலரும்
இணைந்து, ‘1857 இந்திய கலகம்’
என்ற
இயக்கத்தை முகாலாயப் பேரரசர் பகதூர்
ஷா
சபர்
அவர்களை மானசீக
தளபதியாகக் கொண்டு
உருவாக்கினர். இதுவே,
‘முதல்
இந்தியப் போர்’
என்று
அழைக்கப்பட்டது. ஒரு
வருடமாகப் போராடிய பின்னர், இவ்வியக்கத்தைத் தனது
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
வந்து,
அதன்
தளபதியையும் நாடு
கடத்தி,
முகலாய
வம்சத்திற்கு ஒரு
முற்றுப்புள்ளியும் வைத்தனர், ஆங்கிலேயர்கள்.
தன்னம்பிக்கை கதை- புதிய வனம் உருவானது
முன்னொரு காலத்தில் அடர்ந்த கானகத்தை ஒட்டி ஒரு குடியானவன் குடும்பம்
வாழ்ந்து வந்தது. அந்த குடியானவனுக்கு குருவாயூரப்பன்,என்ற பையன் மற்றும்
மனைவியும் இருந்தனர். தினமும் அந்த குடியானவன் அடர்ந்த
கானகத்துக்குள் சென்று காய்ந்த மரங்களை வெட்டி விறகுகளாக்கி கொண்டு வந்து ஊருக்குள் விற்று வாழ்க்கையை நடத்தி வந்தான். திடீரென்று குடியானவனுக்கு உடல் நிலை சரியில்லாமல்
வீட்டிலேயே படுத்து விட்டான். நாலைந்து நாட்கள் எங்கும் செல்லாததால் வீட்டில் வறுமை வந்து விட்டது. அவன் மனைவி என்ன
செய்வது என்று கண் கலங்கினாள். குருவாயூரப்பன்
நான் காட்டுக்கு போகிறேன் என்று அம்மாவிடம் கேட்டான். அம்மாவுக்கு மனசு கேட்கவில்லை. குருவாயூரப்பனுக்கு
வயது பத்துதான் ஆகிறது. சிறுவனை எப்படி காட்டுக்கு அனுப்புவது. காட்டில் வசிக்கும் விலங்குகள் ஏதாவது செய்து விடுமே என்று பயந்தாள்.
அம்மா கவலைப்படாதே, அங்கு காய்ந்து கிடக்கும் விறகுகளை மட்டுமாவது பொறுக்கி எடுத்து வருகிறேன். அதை ஊருக்குள் சென்று
விற்று வரலாம்.இப்படி அம்மாவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அந்த காட்டுக்குள் புகுந்தான்.
அடர்ந்த காடாயிருந்தது. குருவாயூரப்பன் அம்மாவிடம் சொல்லிவிட்டானே தவிர காட்டுக்குள் தனியாக
நுழைவது அச்சத்தை கொடுத்தது. இதுவரை அப்பாவுடன் வந்திருக்கிறான், அப்பொழுதெல்லாம் அப்பா கூட இருந்ததால் பயமில்லாமல்
இருந்தது. இப்பொழுது தனியாக இருந்ததால் பயம் வந்தது.
பயந்து பயந்து நடுக்காட்டுக்குள் வந்து விட்டான். நல்ல காய்ந்த விறகுகளை
பொறுக்க ஆரம்பித்தான். அவனால் எவ்வளவு தூக்க முடியும்.? சேர்த்து வைத்த விறகுகளை அங்கிருக்கும் ஒரு கொடியை பறித்து
கட்டினான்.அதை தூக்குவதற்கு முயற்சி
செய்த பொழுது அவனால் அசைக்கவே முடியவில்லை. அழுகை அழுகையாய் வந்தது. அந்த விறகு கட்டின்
மேலேயே உட்கார்ந்து கொண்டான்.
அப்பொழுது வான் வழியாக ஒரு
தேவதை பறந்து சென்று கொண்டிருந்தவள்
நடுக்காட்டில் ஒரு சிறுவன் விறகு
கட்டின் மேல் அழுது கொண்டு
உட்கார்ந்து இருப்பதை பார்த்தவுடன் மெல்ல இறங்கினாள்.
தம்பி ஏன் அழுகிறாய்? என்று
கேட்டாள். திடீரென்று ஒரு அழகான பெண்
தன்னிடம் வந்து பேசியதை கேட்டவுடன் குருவாயூரப்பனுக்கு அச்சம் வந்து விட்டது.
உடனே தேவதை பயப்படாதே,
நான் ஒரு வன தேவதை.
இந்த காட்டு வழியாக பறந்து சென்று கொண்டிருந்தேன். நீ அழுது கொண்டு
உட்கார்ந்திருப்பதை பார்த்து இறங்கி வந்திருக்கிறேன். நீ எதற்காக அழுது
கொண்டிருக்கிறாய்?
கொஞ்சம் பயம் தெளிந்த குருவாயூரப்பன்,
தேவதையிடம் தன் தகப்பன் உடல்
நலம் இல்லாமல் வீட்டில் இருப்பதையும், அதனால் தான் விறகு பொறுக்க
வந்ததையும் சொன்னான். ஆனால் விறகு கட்டை தூக்க முடியாமல் சிரமமாய் இருப்பதாக கூறினான். அவன் மேல் பரிதாபப்பட்ட
தேவதை கவலைப்படாதே நீ வீட்டுக்கு போ,
இந்த விறகு கட்டை உன் வீட்டிற்கு நான்
கொண்டு வந்து தருகிறேன் என்றது. குருவாயூரப்பன் சிறுவனாய் இருந்தாலும் நல்ல உள்ளம் படைத்தவன்,
வேண்டாம் நீங்கள் ஏன் எங்களுக்காக சிரமப்பட்டு
தூக்கி வரவேண்டும். என்றான்.
தேவதை சிரித்தாள். நான் தூக்க மாட்டேன்,
என் மந்திர சக்திதான் அந்த கட்டை தூக்கி
வந்து உன் வீட்டில் போட்டு
விடும். உன்னுடைய நல்ல உள்ளத்துக்காக நான்
ஒன்று செய்கிறேன். தினமும் நல்ல விறகு கட்டை
உன் வீட்டில் கொண்டு வந்து போட்டு விடுகிறேன். நீங்கள் அதை விற்று பிழைத்துக்கொள்ளுங்கள்
என்றது.
குருவாயூரப்பன் தேவதையிடம் அதெப்படி உழைக்காமல் நீ கொண்டு வரும்
விறகை நாங்கள் விற்று அனுபவிப்பது. இந்த கேள்வியை கேட்டவுடன்
தேவதைக்கு அவன் மேல் பாசம்
ஏற்பட்டு விட்டது. உன்னுடைய எண்ணம் நல்லது. வேண்டுமென்றால் நான் செய்த உதவிக்கு
பதிலாக நீ ஒன்று செய்ய
வேண்டும். இது போல் இன்னும்
புதிய வனங்களை உருவாக்க வேண்டும். அதற்காக வாரம் ஒரு விதை நட
வேண்டும்.எங்கெங்கு காலி இடம் இருந்தாலும்
அங்கெல்லாம் விதை நட்டு தண்ணீர்
ஊற்றி பாதுகாக்க வேண்டும்.
குருவாயூரப்பன் வீட்டிற்கு வந்தான். எதுவும் கொண்டு வராமல் சும்மா வருவதை பார்த்த அவன் அம்மாவும், அப்பாவும்
பையனுக்கு ஏதாவது ஆகி விட்டதோ என்று
பயந்தனர். குருவாயூரப்பன் அம்மாவிடம் எல்லா விசயங்களை சொல்லி முடிக்கவும் அங்கு விறகுக்கட்டு வந்து சேரவும் சரியாக இருந்தது. அது மட்டுமல்ல அந்த
கட்டுக்குள் புதிதாய் நிறைய விறகுகள் சேர்த்து கட்டப்பட்டு இருந்தது. அவன் அம்மாவிற்கும் அப்பாவிற்கும்
மிகுந்த மகிழ்ச்சி. அவர்கள் கட்டை பிரித்து தூக்க முடிந்த அளவு அம்மாவும், மகனும்
தூக்கிக்கொண்டு ஊருக்குள் கொண்டு சென்றனர். விறகு சீக்கிரம் விற்று தீர்ந்து விட்டது. மகிழ்ச்சியுடன் அங்கேயே வீட்டுக்கு தேவையான சாமான்கள் வாங்கி வந்தனர்.
தேவைதையிடம் சொல்லி இருந்தபடி குருவாயூரப்பனோ, இல்லை அவன் குடும்பத்தாரோ வாரம்
ஒரு விதை நட்டு பராமரித்து
வந்தனர். தேவதையும் தினம் அவர்கள் வீட்டில் ஒரு கட்டு விறகு
கொண்டு வந்து போட்டது இதனால் அவர்கள்
ஊரிலேயே ஒரு விறகுக்கடையும் வைத்து
அதன் மூலம் வாழ்க்கையை வளப்படுத்திக்கொண்டனர்.வசதிகள் வந்தபோதும் மறக்காமல் இவர்கள் வாரம் ஒரு விதை நட்டு
அதை பராமரித்து வந்ததால், புதிய வனங்கள் ஊரை சுற்றி உருவாகின.
தமிழ் அறிவோம்
No comments:
Post a Comment