அறிவுக்கு விருந்து
21.02.2020 (வெள்ளி)
பெப்ரவரி 21 (February 21) கிரிகோரியன் ஆண்டின் 52 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 313 (நெட்டாண்டுகளில் 314) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
·
1543 – எத்தியோப்பிய, போர்த்துக்கீசக் கூட்டுப் படைகள் அகமது கிரான் தலைமையிலான முசுலிம் படைகளைத் தோற்கடித்தன.
·
1613 –முதலாம் மிக்கையில் உருசியப் பேரரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரொமானொவ் அரச வம்சம் ஆரம்பமானது.
·
1808 – உருசியப் படை பின்லாந்து எல்லையைத் தாண்டி சுவீடனை அடைந்தது. பின்லாந்துப் போர் ஆரம்பமானது. இப்போரில் சுவீடன் பின்லாந்தை உருசியாவுக்கு இழந்தது.
பிறப்புகள்
இறப்புகள்
சிறப்பு நாள்
குறளறிவோம்- 165. அழுக்காறாமை
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது.
வழுக்காயும் கேடீன் பது.
கலைஞர்
மு.கருணாநிதி உரை: பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா.
அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்.
மு.வரதராசனார் உரை:பொறாமை உடையவர்க்கு வேறு
பகை வேண்டா. அஃது ஒன்றே போதும்,
பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.
Translation:Envy they have within! Enough to seat
their fate!
Though foemen fail, envy can ruin consummate.
Though foemen fail, envy can ruin consummate.
Explanation:
To those who cherish envy that is
enough. Though free from enemies that (envy) will bring destruction.
சிந்தனைக்கு:
"
நான் வீழ்ந்து விட்டேன் என்று
எண்ணி
யாரும்
கை
தட்டி
சிரித்து விடாதீர்கள்
நான்
வீழ்ந்ததே முளைப்பதற்கு தான்."
தமிழ் அறிவோம்:
|
|
|
விடுகதை
விடையுடன்
ஒரு குகை, 32 வீரர்கள் , ஒரு நாகம் அந்த குகை எது? வாய்
பழமொழி-
கொல்லைக்காட்டு நரி பல்லைக் காட்டினது போல.
பொருள்: தோப்பில் உள்ள நரி பல்லைக்
காட்டிப் பயமுறுத்தியதுபோல.
விளக்கம்: கொல்லைக்காடு என்பது ஒரு தோப்பைக் குறிக்கிறது. சவுக்குத் தோப்பில் நரி உலாவும் என்பார்கள். ஆனால் இந்தக் கொல்லைக்காட்டு நரிகள் காட்டு நரிகள்போல் கடுமையானவை அல்ல. எனினும் தன் பிறவிக் குணத்தால் அவை எதிர்த்தோரை பயமுறுத்தத் தம் பல்லைக்காட்டும். கோபாலகிருஷ்ண பாரதி தன் ’நந்தன் சரித்திரம்’ படைப்பின் 43-ஆவது பாடலில் ’கொல்லைக்காட்டு நரி’யைக் குறிப்பிடுகிறார். அவர் பிறந்த ஊரின் பெயரிலும் ’நரி’ இருக்கிறது: அது நாகப்பட்டினம் அருகிலுள்ள நரிமணம்.
விளக்கம்: கொல்லைக்காடு என்பது ஒரு தோப்பைக் குறிக்கிறது. சவுக்குத் தோப்பில் நரி உலாவும் என்பார்கள். ஆனால் இந்தக் கொல்லைக்காட்டு நரிகள் காட்டு நரிகள்போல் கடுமையானவை அல்ல. எனினும் தன் பிறவிக் குணத்தால் அவை எதிர்த்தோரை பயமுறுத்தத் தம் பல்லைக்காட்டும். கோபாலகிருஷ்ண பாரதி தன் ’நந்தன் சரித்திரம்’ படைப்பின் 43-ஆவது பாடலில் ’கொல்லைக்காட்டு நரி’யைக் குறிப்பிடுகிறார். அவர் பிறந்த ஊரின் பெயரிலும் ’நரி’ இருக்கிறது: அது நாகப்பட்டினம் அருகிலுள்ள நரிமணம்.
Enrich your vocabulary
Marine.. நீரில் வாழுகின்ற
Proverb Don’t bite off more than you can chew.
Don’t take more responsibility than
you can handle.
Example:
I bit off more than I can chew when I said ‘yes’ to my boss for another
project.
Opposite Words
Poverty
X Riches
- Millions of elderly people live in poverty.
- He was enjoying his newfound riches.
Powerful
X Weak
- He was one of the most powerful men in Bohemia.
- The country is in a weak position economically.
மொழிபெயர்ப்பு
சீமை
பரட்டைக்கீரை
|
|
தளிர்பயறு
|
கணினி ஷார்ட்கட் கீ
Alt+G
|
Design tab
|
Alt+F
|
File Page
|
இனிக்கும் கணிதம் கணிதக் கலைச்சொற்கள்
ஆவர்த்தனம் Periodicity
ஆவர்த்தனமுள்ள Periodic
ஆற்றல் Energy
அறிவியல் அறிவோம்
# செல்லைக் கண்டறிந்தவர் யார்?
– ராபர்ட் ஹீக்
# செல்லின் கட்டுப்பாட்டு மையம் எது? – உட்கரு
# உட்கருவை கண்டறிந்தவர் யார்? – ராபர்ட் ப்ரெளன்
# குரோமாடின் வலை காணப்படும் இடம் எது? –
உட்கரு
தினம் ஒரு மூலிகை கற்பூர
வல்லி (ஓமவல்லி):
மிகச்
சிறந்த
இருமல்
மருந்து. 5 இலைகளை
அப்படியே சாப்பிட்டால் உடனே
மூக்கடைப்பு, தொண்டை
வறட்சி,
இருமல் மறையும். புகழ்பெற்ற இருமல் மருந்துகளைப் போல்
விரைவாக செயல்
புரியும்.
வல்லாரை:
நல்ல
டானிக்,
எல்லா
நோய்களையும் நீக்கும். மஞ்சள்
காமாலை,
அல்சர்,
தொழுநோய், யானைக்கால் வியாதி,
பேதி, நரம்புத்தளர்ச்சி,
ஞாபக
சக்தி
முதலியவற்றிற்கு சிறந்தது. ஒரு
நேரத்திற்கு பத்து
இலைகள்
போதும்.
உணவு – வைட்டமின்
B3 நிகோடினிக் அமிலம்)
இது
தையமின் மற்றும் ரிபோபிளேவில் சேர்ந்து கார்போஹைட்ரேட்டை ஆக்ஸிஜனேற்றம் செய்ய
உதவுகிறது.
பணிகள்
புரதத்தின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.
எலும்பில் இரத்த
சிவப்பணுக்கள் உண்டாவதைத் தூண்டுகிறது.
சேமிப்பு
* இது கல்லீரல் மற்றும் உடலிலுள்ள எல்லாத் திசுக்களிலும் காணப்படுகிறது.
• மூல ஆதாரம்
உருளைக்கிழங்கு, கீரைகள் மற்றும் சில
வகை
பழங்கள்.
போலிக்
அமிலம்
(B9) மற்றும் சையனோகோபாலமைன் (B12)
* இவை இரண்டு
இரத்த
சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது.
* B12 நரம்பு செல்களின் செயல்பாட்டிற்கு அவசியம்
மாட்டு
இறைச்சி, கோழி,
கல்லீரல், நண்டு,
கீரைகள், மென்மையான இறைச்சி.
வரலாற்றுச் சிந்தனை
கி.மு. 250-ல் யாரால் புத்த மாநாடு கூட்டப்பட்டதுத? அசோகர்
அக்கெமீனியர் பேரரசை தோற்றுவித்தவர் யார்?
முதலாம் சைரஸ்
தன்னம்பிக்கை கதை- எண்ணுவது உயர்வு
ஒரு ஊரில் ஒரு
மலையடிவாரத்தில் ஒரு பெரிய ஆலமரமொன்றில் ஒரு காகமும், ஒரு புறாவும் நெடுநாட்களாகத் தவம் செய்துக் கொண்டிருந்தன. அவைகளைப்
பார்த்த இறைவன் மனமிரங்கினார். அந்த மலையடிவாரத்தில் அப்பறவைகள் முன்
காட்சியளித்தார். இறைவனைத் தங்கள் கண் முன்னேக் கண்டதும் புறாவும், காகமும் மகிழ்ச்சியடைந்தன.
பறவைகளே! உங்கள் தவத்தைக் கண்டு என் மனமிரங்கிவிட்டது. உங்கள் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறேன். என்று கூறினார். உடனே காகம் இறைவா எனதுக் கருமை நிறம் மாறி என்னுடல் பொன்னிறமாக வேண்டும். என் பொன்னிற இறக்கைகளைப் பார்த்து எல்லோரும் பொறாமைப் படவேண்டும். அதனைப் பார்த்து நான் ரசிக்க வேண்டும். என்று கூறியது.
பறவைகளே! உங்கள் தவத்தைக் கண்டு என் மனமிரங்கிவிட்டது. உங்கள் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறேன். என்று கூறினார். உடனே காகம் இறைவா எனதுக் கருமை நிறம் மாறி என்னுடல் பொன்னிறமாக வேண்டும். என் பொன்னிற இறக்கைகளைப் பார்த்து எல்லோரும் பொறாமைப் படவேண்டும். அதனைப் பார்த்து நான் ரசிக்க வேண்டும். என்று கூறியது.
காகமே உனக்கு உனது எண்ணப்படியே வரம் தந்தேன் என்று கூறியவாறு இறைவன் உடனே புறாவைப் பார்த்தார். புறாவும் இறைவா இந்த உலகில் இப்போது
எல்லா உயிர்களுக்குமே கருணையுள்ளம் குறைந்து வருகிறது. அன்பும் இல்லாமல், இரக்கமும் இல்லாமல் பலக் கொடிய வழிகளில் ஈடுபடுகின்றார்கள். இவ்வாறான
மனப்போக்கெல்லாம் அவர்களை விட்டு மறையவேண்டும். எல்லா நாடுகளும் செழித்து எல்லா
மக்களும் நலமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றது.
இறைவன் புறாவை
வியப்போடு பார்த்தார். புறாவே உனது
நல்லெண்ணத்தைப் பாராட்டுகிறேன். ஆனால் உன்னுடைய வேண்டுகோளை அப்படியே என்னால்
நிறைவேற்ற முடியாது. இந்த உலகில் எல்லா உயிரினங்களுக்கும் அவரவர்கள் எண்ணப்படியே
வாழ்க்கையமைகிறது. நல்ல எண்ணத்தை உடையவர்கள் நலமடைவார்கள். தீய எண்ணத்தை
உடையவர்கள் துன்பமடைவார்கள். அவர்களின் வாழ்க்கை அவர்கள் கையில்தான் உள்ளது. நீ
நல்லெண்ணம் உடையதாக இருக்கின்றாய். எனவே நீ கூறும் நல்ல வார்த்தைகளைக் கேட்கும்
அனைவரும் அதை மதித்து நடப்பார்கள். உனக்கு எந்த துன்பமும் ஏற்படாதவாறு நலமாக வாழ
வரமளிக்கிறேன். இருவரும் மகிழ்ச்சியாகச் செல்லுங்கள் என்று கூறி மறைந்தார்.
காகத்தின் இறக்கைகள்
எல்லாம் உடனே பொன்னிறமாக மாறிவிட்டது. அதனைப் பார்த்து காகம் மட்டற்ற
மகிழ்சியடைந்து அந்த இடத்தை விட்டுப் பறந்து சென்றது. புறாவும் உற்சாகமடைந்து, மகிழ்ச்சியோடு அந்த இடத்தைவிட்டு பறந்து சென்றது.
புறாவைக் கண்ட மற்ற
பறவைகள் எல்லாம் அதனிடம் ஏதோ ஓர் சக்தி இருப்பதாக உணர்ந்தன. புறாவைக் கண்டு
வணங்குகின்றன. புறாவும் அந்தப் பறவைகளுக்கெல்லாம் நல்லறிவுரைகளை எடுத்துக்
கூறியது. புறா சென்ற இடமெல்லாம் அதற்கு மதிப்புக் கிடைத்தது. புறாவும் மிகவும்
மகிழ்ச்சியோடு தமக்குக் கிடைத்த உணவு வகைகளை மற்ற பறவைகளுக்கும் பகிர்ந்துக்
கொடுத்தது. ஒரு நாள் பொன்னிறமான இறக்கைகள் கொண்டக் காகத்தை வேடன் பார்த்தான். உடனே
அந்த காகத்தைப் பிடித்துச் சென்று கூண்டிலடைத்து வேடிக்கைப் பொருளாக்கினான்.
வேடன் பிடியில் சிக்கிய காகம் அப்போதுதான்
தன் தவறை உணர்ந்தது. எனது பேராசை பிடித்து கீழ் தரமான எண்ணத்தால் இறைவனின் வரத்தை வீணாக்கிவிட்டேனே.
நானும் புறாவைப் போன்று நல்லெண்ணத்தோடு வரம் கேட்டிருந்தால் இந்தத் துன்பம்
நேர்ந்திருக்காதே. இறைவன் சொன்னது உண்மைதான். ஒருவரின் எண்ணப்படியே வாழ்க்கை
அமைகிறது. உயர்வான எண்ணம் உடையோர் உயர்ந்த வாழ்க்கையை அடையலாம். தாழ்வான எண்ணம்
உடையோர் தாழ்ந்த வாழ்க்கையை அடைவார்கள் என்பதை இப்போது புரிந்து கொண்டேன் என்று தனக்குள் கூறியபடி மனம் வருந்தியது.
தமிழ் அறிவோம்
No comments:
Post a Comment