அறிவுக்கு விருந்து
17.02.2020 (திங்கள்)
பெப்ரவரி
17 (February 17) கிரிகோரியன்
ஆண்டின் 48 ஆம் நாளாகும். ஆண்டு
முடிவிற்கு மேலும் 317 (நெட்டாண்டுகளில்
318) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
· 364 – உரோமைப்
பேரரசர் யோவியன் எட்டு மாத கால ஆட்சியின்
பின்னர் அனத்தோலியாவில்
மர்மமான முறையில் இறந்தார்.
· 1600 – மெய்யியலாளர்
கியோர்டானோ
புரூணோ உரோம்
நகரில் சமய மறுப்புக்காக உயிருடன்
எரித்துக் கொல்லப்பட்டார்.
· 1739 – மராட்டியர்
போர்த்துக்கீசரின் பிடியில் இருந்த வாசை நகர் (மகாராட்டிரத்தில்)
மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.
· 1788 – லெப்டினண்ட்
போல் என்பவன் சிட்னியில்
இருந்து நோர்போக்
தீவுக்கு கைதிகளைக் குடியேற்றச் சென்ற போது மனிதர்களற்ற லோர்ட்
ஹோவ் தீவைக் கண்டுபிடித்தான்.
· 1838 – தென்னாப்பிரிக்காவில்
நத்தாலில்
நூற்றுக்கணக்கான இடச்சுக் குடியேறிகளை சூலு
இனத்தோர் கொன்றனர்.
· 1864 – அமெரிக்க
உள்நாட்டுப் போர்: எச்.எல். ஹன்லி
என்ற நீர்மூழ்கிக்
கப்பல் யூஎஸ்எஸ் ஹவுசட்டோனிக் என்ற போர்க்கப்பலைத் தாக்கி
மூழ்கடித்தது.
பிறப்புகள்
இறப்புகள்
சிறப்பு நாள்
குறளறிவோம்- 161. அழுக்காறாமை
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.
அழுக்காறு இலாத இயல்பு.
கலைஞர்
மு.கருணாநிதி உரை: மனத்தில்
பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்.
மு.வரதராசனார் உரை: ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை
இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக்
கொண்டு போற்ற வேண்டும்.
Translation:
As 'strict decorum's' laws, that
all men bind,
Let each regard unenvying grace of mind.
Let each regard unenvying grace of mind.
Explanation: Let
a man esteem that disposition which is free from envy in the same manner as
propriety of conduct.
சிந்தனைக்கு:
"மற்றவரை ஏய்ப்போர்க்கு மானிடராய் வாழவும் தகுதியில்லை,
இப்படி
இருக்கையிலே இவர்க்கெலாம் இப்படி
சிந்தனைகளை தொடவும் அருகதை
இல்லை."
தமிழ் அறிவோம்:
அணி = பூண், அழகு
|
அந்தம் = ஈறு, அழகு
|
அந்தில் = அவ்விடம், அசைநிலைக் கிளவி
|
விடுகதை
விடையுடன்
அதட்டுவான், அலறுவான் ஆனால் கோட்டையை
விட்டு வரமாட்டான் அவன் யார்? நாக்கு
பழமொழி-ஏறப்படாத மரத்திலே எண்ணாயிரம் காய்.
பொருள்: ஒருவன் ஏறமுடியாத மரத்தில் எண்ணமுடியாத அளவுக்கு காய்களாம்.
விளக்கம்: இந்தப் பழமொழி ஒரு விடுகதையாக, இராகி (கேழ்வரகு) கதிர்கள்பற்றிக் கேட்கப்படுகிறது.
பொருள்: ஒருவன் ஏறமுடியாத மரத்தில் எண்ணமுடியாத அளவுக்கு காய்களாம்.
விளக்கம்: இந்தப் பழமொழி ஒரு விடுகதையாக, இராகி (கேழ்வரகு) கதிர்கள்பற்றிக் கேட்கப்படுகிறது.
Enrich your vocabulary
Proverb Discretion is the better part of valor.
It is wise to be
careful and not show unnecessary bravery.
Example:
Son: Can I go hand gliding with my friends? Father: No. Son: But they’ll say
I’m a chicken if I don’t go! Father: Discretion is the better part of valor,
and I’d rather have them call you chicken than risk your life.
Opposite Words
Possible
X Impossible
- Computer technology makes it possible for many people to work from home.
- Members with young children often found it impossible to attend evening meetings.
Poverty
X Wealth
- We need an effective strategy to fight poverty.
- The purpose of industry is to create wealth.
மொழிபெயர்ப்பு
CELERY – சிவரிக்கீரை
CILANTRO – கொத்தமல்லி CLUSTER BEANS – கொத்தவரை |
கணினி ஷார்ட்கட் கீ
Alt+N and T
|
Tables
|
Alt+N and V
|
Cover page
|
இனிக்கும் கணிதம் கணிதக் கலைச்சொற்கள்
ஆய்வுக்கட்டுரை Research
Paper
ஆய்வுக்கோட்பாடு Thesis
ஆய்வுநூல் Memoir
அறிவியல் அறிவோம் வைரஸ் நோய்களை தடுக்கும்
Bacteriophages அல்லது phages எனப்படும் இந்த வைரஸ்கள் நமது
உடலுக்கு நோயை தரும் பாக்டீரியாவை
தாக்கி அழிக்கும். இப்படிப்பட்ட வைரஸ்கள் நமது செரிமான, சுவாச
மற்றும் இனப்பெருக்க பாதைகளில் உள்ள Mucus போன்ற திரவங்களில் காணப்படுவதாக பல ஆராய்ச்சி முடிவுகள்
தெரிவித்துள்ளன. பொதுவாக இந்த Mucus அடர்த்தியான திரவமாக உறுப்புகளின் உள் சுவரில் படிந்து
உறுப்பை காக்கும். இதனால் நுண்ணுயிரிகள் இவற்றை தாண்டி உறுப்பின் செல்களை அழிப்பது கடினம். இந்த வைரஸ்கள் வயிற்று
போக்கை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்க வல்லது. இது போன்ற இயற்கையான
நோய் தடுப்பு வைரஸ்கள் நமது தோலிலும் ஏன்
ரத்தத்தில் கூட இருக்கின்றன!
அதே போல சில
வைரஸ்கள் குறிப்பிட்ட சில தீங்கு தரும்
வைரஸ்களிடம் இருந்தும் நம்மை காக்கின்றன. இப்படிப்பட்ட நல்ல வைரஸ்கள் புற்றுநோய் செல்களை அதாவது சில வகை வைரஸால்
பாதிக்கப்பட்ட செல்களை அழிகின்றன. ஏனெனில் இந்த நல்ல வைரஸ்கள்
உயிர் வாழ மனித உடல்
அவசியம் என்பதால் அந்த உடலுக்கு தீங்கு
தரும் வைரஸ்களை அழிக்கின்றன.
தினம் ஒரு மூலிகை புதினா:
நல்ல
டானிக்
சிறுநீர் பிரச்சினை, ஜீரணக்
கோளாறு,
உஷ்ண
நோய்கள் மறையும். சிறந்த
மலமிளக்கி. புதினா
கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக்
ஆசிட்,
ரிபோ
மினேவின், தயாமின் ஆகிய
சத்துக்களும் அடங்கியுள்ளன.
உணவு – வைட்டமின்கள்
வைட்டமின் (B2) (Ribaflarin)
இது கார்போஹைட்ரேட், அமினோ
அமிலங்கள் மற்றும் கொழுப்பின் வளர்சிதை மாற்றத்திற்கு மிக
முக்கியமானது.
மூல ஆதாரங்கள் : பால்,
கீரைகள், இட்லி,
தோசை,
முளைக்கட்டிய தானியங்கள்
வரலாற்றுச் சிந்தனை சுதந்திர தின கொண்டாட்டங்கள்
ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட்
15 ஆம்
தேதி
நாடு
முழுவதும் சுதந்திர தின
விழா
கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்டத்தில், மாவட்ட
ஆட்சித் தலைவர்கள் தேசியக் கொடியேற்றி நலத்
திட்ட
உதவிகளை வழங்குவார்கள். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, மாணவர்களுக்கு இனிப்பு வழங்கிய பின்னர், விடுமுறை அளிக்கப்படும். டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்படும் இத்தினத்தில், நாட்டின் பிரதமர் செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி
வைத்து,
மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து, உரையாற்றுவார். இவ்விழாவில், முப்படை அணிவகுப்பு, நடனம்,
நாட்டியம் எனப்
பல்வேறு வண்ணமயமான நிகழ்ச்சிகளும் இடம்பெறும். ஒவ்வொரு பிரஜைக்கும் முக்கியமான தினம்
என்பதால், அனைவரும் தங்களது வாழ்த்துகளை, இந்நாளில் தங்களது பிரியமானவர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். தேசபக்தியுடன் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி, தேசப்பற்றை வளர்ப்போம்! வாழ்க
இந்தியா!!! வளர்க
பாரதம்!!!
தன்னம்பிக்கை கதை- ஈகைத் திறன் கோதையூர் என்ற ஒரு ஊரை வெகு நாட்களுக்கு முன் கோதண்டராமன் என்ற மன்னர் ஆண்டு வந்தார்.மன்னர் நீதி தவறாமல் ஆட்சி செய்து வந்தார். அதோடு ஏழை மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை எல்லாம் உடனுக்குடன் செய்து கொடுப்பார். கலைஞர்களுக்கும், கவிஞர்களுக்கும் பரிசுகளை வாரி வாரி வழங்குவார். இதனால் மன்னரின் புகழ் எல்லா நாட்டிலும் பரவத் தொடங்கியது.
வேங்கை நாட்டு மன்னர் வேழவேந்தன் கோதண்டராமனைக் கண்டு பொறாமையடைந்தார். அவரும் என்னைப் போன்ற மன்னர்தானே. அவருக்கு மட்டும் எப்படி இந்தப் பேரும்புகழும் கிடைத்தது?என்று வியப்போடு தனது மந்திரியாரான காளதீபனிடம் அடிக்கடி கேட்டுக் கொள்வார். மந்திரியார் காளதீபன் வேழவேந்தரின் கஞ்சத்தனத்தையும், கொடூர குணத்தையும் நன்கு அறிவார்.
நம் மன்னரைத் திருத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்பதை உணர்ந்து கொண்ட அவர். மன்னரை வணங்கி அரசே! மன்னர் கோதண்டராமனுக்கு தாங்களும் இணையானவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் உங்களுக்கு ஏற்படாத பேரும், புகழும் அவருக்கு எப்படி ஏற்பட்டது என்பதை விளக்க நீங்களும், நானும் மாறுவேடம் அணிந்து அவர் அரண்மனைக்குச் செல்ல வேண்டும். நான் சொன்னபடி நீங்களும் அங்கே நடிக்க வேண்டும். அதற்கு சம்மதமானால் நாம் இன்றே கோதையூருக்குப் புறப்படலாம் என்று கூறினார். மன்னர் வேழவேந்தனும் ஆர்வத்துடன் அதற்கு ஒப்புக்கொண்டார். இருவரும் ஏழை விவசாயியைப்போன்று மாறுவேடம் அணிந்து கொண்டு கோதையூருக்குப் புறப்பட்டார்கள்.
அரண்மனையில் நுழையும் நேரம் காவலர்கள் அவர்களை இன்முகத்தோடு வரவேற்று, என்ன காரணத்திற்காக வந்திருக்கிறீர்கள்? என்று விசாரித்தார்கள்.
"ஐயா! நாங்கள் இருவரும் மிகவும் வறுமையால் வாடிக் கொண்டிருக்கின்றோம். மன்னரிடம் உதவி பெற்று எங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம் என்று வந்துள்ளோம்" என்று கூறினார் மாறுவேடத்தில் இருந்த காளதீபன்.காவலர்கள் இருவரையும் தர்பாருக்கு அழைத்துச் சென்றார்கள்.அந்த நேரத்தில் தர்பாரில் மன்னர் இல்லை. மன்னர் அவசர வேலை காரணமாக தன் அறையைவிட்டு வெளியே கிளம்பிக் கொண்டிருந்தார்.காவலர்கள் மன்னரை வணங்கி அவர் காதருகே ஏதோ கூறினார்கள்.மன்னர் புன்னகைத்தபடி "நண்பர்களே! நீங்கள் இருவரும் என்னிடம் உதவிபெற வந்திருப்பததைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். இதோ எனது முத்துமாலை இரண்டை உங்கள் இருவருக்கும் பரிசளிக்கிறேன்" என்று கூறியவாறு தன் கழுத்தில் கிடந்த இரண்டு முத்து மாலைகளையும் மாறுவேடத்தில் இருந்த மன்னர் வேழவேந்தனிடமும், மந்திரியார் காளதீபனிடமும் கொடுத்து விட்டுச் சென்றார்.நினைத்த மாத்திரத்தில் தர்மம் செய்கின்ற மன்னரின் கொடைத் தன்மையைக் கண்டு மன்னர் வேழவேந்தன் வியப்புற்றார்.
இருவரும் அரண்மனையை விட்டு வெளியே வந்தனர். மந்திரியார் காளதீபன் அரசே இப்போது கவனித்தீர்களா மன்னர் கோதண்டராமனின் தர்மம் செய்யும் முறையே, அவரை புகழ் உச்சியில் கொண்டு சென்றுள்ளது. ஒரு நாட்டை ஆளுகின்ற மன்னருக்கு ஈகை திறன் மிகவும் முக்கியம் என்றார். மன்னர் வேழவேந்தன் அன்றுமுதல் தன்னுடைய பொறாமை எண்ணத்தையும் கஞ்சத்தனத்தையும் விட்டுவிட்டார். தன் நாட்டு மக்களுக்கு பல உதவிகளையும் செய்யலானார். மன்னர் வேழவேந்தனின் செயல்களை கண்ட மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்.
தர்மம் செய்து வாழ்பவர்கள் எல்லா நன்மைகளையும் கிடைக்கப் பெறுவார்கள்.
தமிழ் அறிவோம்
No comments:
Post a Comment