அறிவுக்கு விருந்து
26.02.2020 (புதன்)
பெப்ரவரி 26 (February 26) கிரிகோரியன் ஆண்டின் 57 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 308 (நெட்டாண்டுகளில் 309) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
·
1233 – மங்கோலிய-சின் போர்: மங்கோலியர்கள் சீனாவின் சின் வம்சத்தின் தலைநகரான கைஃபெங் நகரைக் கைப்பற்றினர்.
·
1606 – இடச்சு கப்பலோட்டி வில்லியம் யான்சூன் ஆத்திரேலியாவை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர் ஆவார். ஆனாலும் அவர் இதனை நியூ
கினியின் ஒரு பகுதியாகவே கருதியிருந்தார்.
·
1616 – பூமி சூரியனைச் சுற்றுகிறது என்ற தனது கொள்கையைப் பரப்புவதைத் தடுப்பதற்காக கலீலியோ கலிலி உரோமைக் கத்தோலிக்க திருச்சபையினால் தடை செய்யப்பட்டார்.
·
1658 – வடக்குப் போர்களில் (1655-1661) ஏற்பட்ட பெரும் தோல்வியைத் தொடர்ந்து டென்மார்க்-நோர்வே அரசன் கிட்டத்தட்ட அரைபகுதி நிலத்தை சுவீடனுக்கு வழங்கினான்.
·
1815 – இத்தாலியின் எல்பாத் தீவில் நாடுகடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்த நெப்போலியன் பொனபார்ட் அங்கிருந்து தப்பினார்.
·
1841 – இலங்கையின் முதலாவது இசுக்கொட்லாந்து பிரெசுபிட்டேரியத் தேவாலயத்திற்கான அடிக்கல் கொழும்பு புறக்கோட்டையில் நாட்டப்பட்டது.[2]
பிறப்புகள்
இறப்புகள்
சிறப்பு நாள்
- விடுதலை நாள் (குவைத்)
குறளறிவோம்- 168. அழுக்காறாமை
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.
தீயுழி உய்த்து விடும்.
கலைஞர்
மு.கருணாநிதி உரை: பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும்
சிதைத்துத் தீய வழியிலும் அவனை
விட்டுவிடும்.
மு.வரதராசனார் உரை:பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச்
செலுத்தி விடும்.
Translation:
Envy, embodied ill, incomparable
bane,
Good fortune slays, and soul consigns to fiery pain.
Good fortune slays, and soul consigns to fiery pain.
Explanation:
Envy will destroy (a man's) wealth
(in his world) and drive him into the pit of fire (in the world to come).
சிந்தனைக்கு:
வாழ்வில் தோல்வி
அதிகம்,
வெற்றி
குறைவு
என
வருந்தாதே
செடியில் இலைகள்
அதிகம்
என்றாலும் அதில்
பூக்கும் மலருக்கே மதிப்பு அதிகம்.
தமிழ் அறிவோம்:
|
|
விடுகதை விடையுடன்
முத்தான
முத்துகள் முற்றத்திலே காயுது, படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை அது என்ன? நட்சத்திரங்கள்
பழமொழி-
முப்பது நாளே போ, பூவராகனே வா.
பொருள்: வேலையில் ஆர்வமில்லாது எப்போது மாதம் முடிந்து சம்பளம் வரும் என்று எதிர்பார்த்து இருந்தவனைக் குறித்துச் சொன்னது.
விளக்கம்: வராகன் என்பது மூன்று ரூபாய் மதிப்புள்ளதும் பன்றிமுத்திரை கொண்டதுமான ஒருவகைப் பொன் நாணையம் (அரும்பொருள்
விளக்க நிகண்டு). பூவராகன் என்பதில் உள்ள வராகம் திருமாலின்
வராக அவதாரத்தைக் குறிக்கிறது.
Enrich your vocabulary
Enrich your vocabulary
Labourios.....கடின உழைப்பாளர்
Snout....நீண்ட மூக்கு
Proverb A bad workman always blames his tools.
This
proverb is used when someone blames the quality of their equipment or other
external factors when they perform a task poorly.
Example:
X: The turkey isn’t cooked well because the oven is not functioning well. Y:
Well, it’s the case of a bad workman blaming his tools.
Opposite Words
Pure X
Impure
- Our beef patties are 100% pure.
- Some of these drugs are highly impure.
Push X
Pull
- I promised to push him on the swings for as long as he wanted.
- She pulled open the door and hurried inside.
மொழிபெயர்ப்பு
(மலர்ப்போன்ற) கோசு
|
|
பிரஞ்சு அவரை
(போஞ்சுக்காய்)
|
கணினி ஷார்ட்கட் கீ
Alt+N and C
|
Chart
|
Alt+N and P
|
Pictures
|
இனிக்கும் கணிதம் கணிதக் கலைச்சொற்கள்
இடவியற்கூறு Topology
(Mathematical Structure)
இடவியற்சமானம் Topological
Equivalence
அறிவியல் அறிவோம்
# தளக்கோணத்தின் அலகு
என்ன?- ரேடியன் (ஓர் ஆரம் நீளமுள்ள
வில் வட்ட மையத்தில்
தாங்கும் கோணம்)
#
திண்மக் கோணத்தின் அலகு என்ன? – ஸ்டிரேடியன்
உணவு – வைட்டமின் குறைபாடு : வைட்டமின் D குறைபாடு
எலும்பில் ஏற்படும் குறைபாடுகள்
ரிக்கட்ஸ் (Rickets)
ஆஸ்டியோ மலேசியா (Osteomalacia)
ஆஸ்டியோ ஃபோரோஸிஸ் (Osteoporosis)
தினம் ஒரு மூலிகை - உலர்திராட்சையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது என்பதால், கர்ப்பிணி பெண்கள் உலர்திராட்சையுடன் பால் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து தினமும், ஒரு கிளாஸ் அருந்தினால் தங்களுக்கு பிறக்கும் குழந்தை மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.
வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றப்பழம் உலர்
திராட்சை. எலும்புகள் உறுதியாக வளரவும், பற்கள்
வலுப்பெறவும் மற்றும் உடல்
வளர்ச்சிக்கு தேவையான சத்து கால்சியம் தான்.
இந்த
கால்சியம் சத்து
உலர்திராட்சை பழத்தில் அதிகமாக உள்ளது. தினமும் உடல் வலியால் அவதிப்படுபவர்கள் சிறிதளவு பெருங்காயத்துடன், உலர்
திராட்சை பழத்தை
சேர்த்து கஷாயம்
செய்து
அருந்திவர உடல்
வலி
குணமாகும்.
No comments:
Post a Comment