அறிவுக்கு விருந்து
15.02.2020 (சனி)
பெப்ரவரி
15 (February 15) கிரிகோரியன்
ஆண்டின் 46 ஆம் நாளாகும். ஆண்டு
முடிவிற்கு மேலும் 319 (நெட்டாண்டுகளில்
320) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
· 706 – பைசாந்தியப்
பேரசர் மூன்றாம் யசுட்டீனியன் தனது முன்னைய ஆட்சியாளர்களான
லியோந்தியசு, மூன்றாம் திபேரியோசு ஆகியோரைப் பகிரங்கமாகத் தூக்கிலிட்டார்.
· 1690 – உதுமானியப்
பேரரசுக்கு எதிராக ஆப்சுபர்கு
படைகள் நடத்தும் தாக்குதல்களுக்கு மோல்தாவியா
ஆதரவளிக்கும் இரகசிய ஒப்பந்தத்தில் மோல்தாவிய இளவரசர் கான்சுடன்டைன் கான்டமீருக்கும் புனித
உரோமைப் பேரரசுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது. .
· 1798 – முதலாம்
நெப்போலியனின் தளபதி லூயி-அலெக்சாண்டர் பெர்த்தியர்
உரோம்
நகரை ஐந்து நாட்களுக்கு முன்னர் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து உரோமைக் குடியரசு அறிவிக்கப்பட்டது.
·1898–ஐக்கிய
அமெரிக்காவின் கடற்படைக் கப்பல் மெயின் கியூபாவில்
அவானா
துறைமுகத்தில் வெடித்து மூழ்கியதில் 260 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வையடுத்து
அமெரிக்கா எசுப்பானியா
மீது போரை
அறிவித்தது.
பிறப்புகள்
இறப்புகள்
சிறப்பு நாள்
- விடுதலை நாள் (ஆப்கானித்தான்)
- பரிநிர்வாண நாள் (மகாயான பௌத்தம்)
- முழுமையான பாதுகாப்பு நாள் (சிங்கப்பூர்)
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
கலைஞர்
மு.கருணாநிதி உரை: பசி
பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள் கூடப் பிறர் கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில்தான் வைத்துப் போற்றப்படுவார்கள்.
மு.வரதராசனார் உரை:உணவு உண்ணாமல் நோன்பு
கிடப்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.
Translation:
Though 'great' we deem the men
that fast and suffer pain,
Who others' bitter words endure, the foremost place obtain.
Who others' bitter words endure, the foremost place obtain.
Explanation:
Those who endure abstinence from
food are great, next to those who endure the uncourteous speech of others.
சிந்தனைக்கு:
உன் வேதனை
பலரை
சிரிக்க வைக்கலாம் - ஆனால்
உன் சிரிப்பு ஒருவரை
கூட
வேதனைப்படுத்த கூடாது.-
சார்லி
சப்ளின் –
தமிழ் அறிவோம்:
அண்டர் = தேவர், ஆயர்
|
அண்ணல் = பெருமை, தலைவன், பெருமை
|
அணங்கு = தெய்வம், துவமை(துறக்க)மாதர், மையல், நோய்,
வருத்தம், கொலை,
|
விடுகதை
விடையுடன்
இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன? வாழை
பழமொழி-
இலவு காத்த கிளி போல.
பொருள்: பருத்தி
மரத்தின் காய் பழுத்தடும் என்று
உண்ணக் காத்திருந்த கிளி போல.
விளக்கம்: இலவம் என்றால் பருத்தி மரம். இலவம் பஞ்சு, பஞ்சு வகைகளில் தரமானது. இலவு என்பது இலவம் மரத்தின் காய்களைக் (உண்மையில் அவை pods--விதைப் பைகள்) குறிக்கும். பருத்தி மரக்காய்கள் முற்றி வெடிக்கும்போது உள்ளிருக்கும் பஞ்சு காற்றில் பறந்துவிட, கிளி ஒன்றும் உண்ணக் கிடைக்காது ஏமாறும்.
Enrich your vocabulary
விளக்கம்: இலவம் என்றால் பருத்தி மரம். இலவம் பஞ்சு, பஞ்சு வகைகளில் தரமானது. இலவு என்பது இலவம் மரத்தின் காய்களைக் (உண்மையில் அவை pods--விதைப் பைகள்) குறிக்கும். பருத்தி மரக்காய்கள் முற்றி வெடிக்கும்போது உள்ளிருக்கும் பஞ்சு காற்றில் பறந்துவிட, கிளி ஒன்றும் உண்ணக் கிடைக்காது ஏமாறும்.
Enrich your vocabulary
Proverb Curses, like chickens, come home to roost.
The consequences of doing wrong
always catch up with the wrongdoer.
Example:
Politicians can fool some people some of the time, but in the end, chickens
come home to roost.
Opposite Words
Polite
X Rude
- We left the party as soon as it was polite to do so.
- I didn’t mean to be rude, but I had to leave early.
Polite
X Impolite
- It’s not polite to talk with your mouth full.
- It is impolite not to eat what you are served at a dinner party.
மொழிபெயர்ப்பு
CABBAGE – முட்டைக்கோசு,
முட்டைக்கோவா
CARROT – மஞ்சள் முள்ளங்கி, குருக்கிழங்கு CAULIFLOWER – பூக்கோசு, பூங்கோசு, பூக்கோவா |
கணினி ஷார்ட்கட் கீ
Alt+S
|
References tab
|
Alt+N and C
|
Chart
|
இனிக்கும் கணிதம் கணிதக் கலைச்சொற்கள்
ஆண்டியக்கம் Annual motion
ஆயத்திசையன் Coordinate
Vector
ஆயம் Coordinate
அறிவியல் அறிவோம் வைரஸ்
பொதுவாக வைரஸ்கள் ஒரு உயிரினத்தை தாக்கும்
போது, அந்த உயிரினத்தின் செல்களை
தாக்கி அவற்றில் புது வைரஸ் துகள்களை
அனுப்பி தானும் வளர்ந்து நோயையும் கூடவே வளர்கின்றன. ஆனால் நல்ல வைரஸ்கள் உடலுக்கு
எந்த தீங்கும் தராமல் தீமை தரும் பிற
நுண்ணுயிரிகளை மட்டும் அழிகின்றன. ஏற்கனவே பாக்டீரியாக்களில், சில நன்மை செய்யும்
பாக்டீரியாக்கள் உள்ளன என்றும் சில வகை பாக்டீரியாக்கள்
உள்ளவர்களுக்கு ப்ளூ வைரஸ் தாக்குதல்
ஏற்படாதும் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அப்படி தான் வைரஸ்களிலும் நன்மை
மட்டும் செய்யும் வகைகளும் உள்ளன.
இயற்கையான
நோய்
தடுப்பு
வைரஸ்கள்
நமது
தோலிலும்
ஏன்
ரத்தத்தில்
கூட
இருக்கின்றன!!
தினம் ஒரு மூலிகை கறிவேப்பிலை:
நல்ல டானிக்,
பேதி,
சீதபேதி, காய்ச்சல், எரிச்சல், ஈரல்
கோளாறுகள் மறையும். பித்தத்தைத் தணித்து உடல்
சூட்டை
ஆற்றும். அதோடு கறிவேப்பிலைக் கீரை
மனதுக்கு உற்சாகத்தையும் கொடுக்க வல்லது.
குமட்டல், சீதபேதியால் உண்டான
வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். பித்த
மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகின்றது.
உணவு – வைட்டமின்கள்
வைட்டமின் B1 Complex (Thiamine)
இது
கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பின் வளர்சிதை மாற்றத்திற்கு இன்றியமையாதது ஆகும்.
இது
நரம்புகளின் தூண்டுதலைக் கடத்துவதற்கு உதவுகிறது.
சேமிப்பு இது
நமது
உடலிலுள்ள அனைத்து திசுக்களிலும் காணப்படுகிறது. முக்கியமாக வளர்சிதை மாற்றத்தில் துரிதமாக செயல்படும் உறுப்புகளான இதயம்,
மூளை,
சிறுநீரகம் மற்றும் கல்லீரலிலும் சேமித்து வைக்கப்படுகிறது. ஆனால்
இது
நீண்ட
நாள்களுக்கு சேமித்து வைக்க
முடியாது.
வரலாற்றுச் சிந்தனை இந்தியா சுதந்திரம் அடைதல்
சுதந்திரத்திற்காகப் பல
போராட்டங்களையும், கிளர்ச்சிகளையும் எழுப்பியத் தலைவர்களும், புரட்சியாளர்களும் சிறிதளவு கூட
களைப்படையவில்லை. ஆனால்,
பிரித்தானிய மக்களும், பிரித்தானிய ராணுவமும் இந்தியாவில் மென்மேலும் அடக்குமுறையை ஏற்படுத்துவதற்கு விருப்பமற்றிருந்தது. 1947 ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்திய
கவர்னர்-ஜெனரலான விஸ்கவுண்ட் லூயி
மவுண்ட்பேட்டன் அவர்கள், ஜூன்
3 ஆம்
தேதியன்று ‘பிரித்தானிய இந்தியப் பேரரசை
மதச்சார்பற்ற இந்தியா’ என்றும், ‘முஸ்லீம் பாகிஸ்தான்’ என்றும் பிரித்தளிப்பதாக அறிவி்த்தார். இந்தத்
தேசப்
பிரிவினையால், 1947 ஆம் ஆண்டு
ஆகஸ்டு
14 ஆம்
தேதி
பாகிஸ்தான் தனி
தேசமாக
பிரிந்துசென்றது. மேலும்,
இந்தியா 1947 ஆம்
ஆண்டு
ஆகஸ்டு
15 ஆம்
தேதி
நள்ளிரவில், சுதந்திர தேசமானது. சுதந்திர இந்தியாவின் பிரதமராக ஜவஹர்லால் நேருவும், துணைப்
பிரதமராக சர்தார் வல்லபாய் படேலும் பதவியேற்றனர். அவர்கள், இந்தியாவின் கடைசி
கவர்னர் ஜெனரலாக இருந்த
மவுண்ட்பேட்டனை அதே
பதவியில் தொடரும்படி அழைத்தனர். அவர்களது அழைப்பை ஏற்ற
அவரும்,
சிறிது
காலம்
பதவியில் இருந்தார். பின்னர், 1948 ஆம் ஆண்டு
ஜூனில்
சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி அவருக்கு பதிலாக
அமர்த்தப்பட்டார்.
மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும்
அளவுக்கு மழை.
அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது.கிணற்று நீர் வெது வெதுப்பாக இபஞ்சிழைருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது. அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த தவளைகளில் ஒரு தவளை இந்தப் புதிய தவளையை வரவேற்றது. ‘நான் வெகு நாட்களாகப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். உன்னைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி’ எனக் கூறிப் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது. இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருந்தன. கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை வந்தது பிடிக்கவில்லை. இங்கே கிடைக்கும் உணவு நமக்கே போதவில்லை. இதில் புதிய விருந்தாளி வேறு’ எனக் கவலைப்பட்டன.
அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது.கிணற்று நீர் வெது வெதுப்பாக இபஞ்சிழைருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது. அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த தவளைகளில் ஒரு தவளை இந்தப் புதிய தவளையை வரவேற்றது. ‘நான் வெகு நாட்களாகப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். உன்னைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி’ எனக் கூறிப் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது. இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருந்தன. கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை வந்தது பிடிக்கவில்லை. இங்கே கிடைக்கும் உணவு நமக்கே போதவில்லை. இதில் புதிய விருந்தாளி வேறு’ எனக் கவலைப்பட்டன.
No comments:
Post a Comment