அறிவுக்கு விருந்து 24.02.2020 (திங்கள்)


அறிவுக்கு  விருந்து  24.02.2020 (திங்கள்)
பெப்ரவரி 24 (February 24) கிரிகோரியன் ஆண்டின் 55 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 310 (நெட்டாண்டுகளில் 311) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

·  1386நேப்பில்சு மற்றும் அங்கேரி மன்னன் மூன்றாம் சார்லசு கொல்லப்பட்டான்.
·  1525எசுப்பானிய-ஆசுத்திரிய இராணுவம் பாவியா நகர சமரில் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தது.
·  1739கர்னால் சமரில், ஈரானிய ஆட்சியாளர் நாதிர் ஷா இந்திய முகலாயப் பேரசர் முகம்மது ஷாவின் படைகளைத் தோற்கடித்தார்.
·  1809இலண்டன் ரோயல் நாடக அரங்கு தீக்கிரையானது.
·  1822உலகின் முதலாவது சுவாமிநாராயண் கோயில் அகமதாபாத்தில் திறக்கப்பட்டது.
·  1848பிரான்சின் லூயி-பிலிப் மன்னர் முடிதுறந்தார்.

பிறப்புகள்

·  1886ஆர். முத்தையா, தமிழ் தட்டச்சுப் பொறியை உருவாக்கிய இலங்கை-சிங்கப்பூர்த் தமிழர்
·  1920நானம்மாள், இந்திய யோகக்கலைப் பயிற்சியாளர் (. 2019)
·  1928. பி. நாகராசன், தமிழகத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் (
·  1942காயத்ரி சக்ரவர்த்தி ஸ்பிவாக், இந்திய மெய்யியலாளர்
·  1944டேவிட். ஜே. வைன்லேண்டு, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்

இறப்புகள்

·  1810என்றி கேவண்டிசு, பிரான்சிய-ஆங்கிலேய இயற்பியலாளர், வேதியியலாளர்
·  1815ராபர்ட் ஃபுல்டன், அமெரிக்கப் பொறியாளர், கண்டுபிடிப்பாளர் (பி. 1765)
·  1969பா. தாவூத்ஷா, தமிழகப் பத்திரிகையாளர், எழுத்தாளர், சொற்பொழிவாளர்
·  1983. வெள்ளைச்சாமி, தமிழக சமூக ஆர்வலர், கொடை வள்ளல் (பி. 1897)
·  1986ருக்மிணி தேவி அருண்டேல், தமிழக நடனக் கலைஞர், கலாசேத்திரா நடனப் பள்ளியினை நிறுவியவர். (பி. 1904)
·  1990மால்கம் போர்ப்ஸ், அமெரிக்கப் பதிப்பாளர் (பி. 1917)

சிறப்பு நாள்

 குறளறிவோம்-  166. அழுக்காறாமை

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும்.
மு.வரதராசனார் உரை:பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும்.
Translation: Who scans good gifts to others given with envious eye,
His kin, with none to clothe or feed them, surely die.
Explanation: He who is envious at a gift (made to another) will with his relations utterly perish destitute of food and rainment.
சிந்தனைக்கு:
கல் மீது விழும் ஒவ்வொரு அடியும் கல்லை சிற்பமாக்குகிறது.
சில நிமிடங்கள் மௌனமாய் இருங்கள்.   கோபம் தணிந்து விடும்.


தமிழ் அறிவோம்:
  1. அரி = கண்வரி, கடல், பொன், கிண்கிணிப்பரல், (கிண்கிணிப்)பொன், நிறம், குதிரை, தவளை, குரங்கு, பகை, வாள், சயனம், வலி, வண்டு, வெம்புகை, (என்னும் 15 பொருளுடன்) சிங்கம், திருமால், திகரி, இரவி, இந்திரன், காற்று, யமன், அங்கி, (ஆகிய வடமொழிச் சிதைவும் பொருளாம்)
  1. அரில் = பிணக்கு, சிறு-துறும்பு, குற்றம்

விடுகதை விடையுடன்   நான்கு கால்கள் உள்ளவன், இரண்டு கைகள் உள்ளவன், உட்கார்ந்து கொண்டிருப்பான், உட்கார இடம் கொடுப்பான் அவன் யார்?  நாற்காலி
பழமொழி- கூத்தாடி கிழக்கே பார்த்தான், கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.
பொருள்: அரங்கில் ஆடியவன் கிழக்கில் எப்போது சூரியன் உதிக்கும் என்று பார்த்திருந்தான். கூலி வேலை செய்தவன் மேற்கில் எப்போது சூரியன் மறையும் என்று பார்த்திருந்தான்.
விளக்கம்: கூத்து என்றால் நடனம். பரமசிவனுக்குக் கூத்தன் என்றொரு பெயருண்டு. கூத்தாடுதல் இரவில் ஊரின் பொது அரங்கத்தில் விடிய விடிய நடைபெறும். எனவே கூத்தாடி களைத்து சூரியன் கிழக்கில் உதிப்பதை எதிர்நோக்கியிருப்பான். அதுபோல நாள் முழுதும் உழைத்த கூலிக்காரன் தன் வேலைநேரம் முடியும் காலமாகிய மேற்கில் சூரியன் மறைவதை எதிர்நோக்கியிருப்பான். ஆசிரியர்கல்கிதன்பொன்னியின் செல்வன்புதினத்தின் ஐந்தாம் அத்தியாயத்தில் இரவில் நடைபெறும் ஒரு குரவைக் கூத்து பற்றி எழுதியுள்ளார்.
Enrich your   vocabulary
Flippers.. . துடுப்பு 
Predators....ஊன்  உண்ணிகள் 
Proverb    Don’t bite off more than you can chew.
meaning : If you take a bite of food that’s too big, you won’t be able to chew! Plus you could choke on all of that extra food. It’s the same if you take on more work or responsibility than you can handle—you will have a difficult time. So it’s best not to get involved in too many projects, because you won’t be able to focus and get them all done well.

Opposite Words 

Predator X Prey
  • Some animals have no natural predators.
  • The lion will often stalk its prey for hours.
Pretty X Ugly
  • She still looks pretty miserable.
  • Nick’s dog is as ugly as sin.
மொழிபெயர்ப்பு
ஒரு வகை கோசு (சலாது)
அவரை (போஞ்சி)
கணினி ஷார்ட்கட் கீ
Alt+Q
Goto tell me box
Alt+R
Review tab

இனிக்கும் கணிதம் கணிதக் கலைச்சொற்கள்

இடமாற்றுத்துணை அணி Transposed conjugate (of matrix)/Tranjugate matrix
இடவியல் Topology (Division of Mathematics)
அறிவியல் அறிவோம்   
திருகு அளவியின் மீச்சிற்றளவு எவ்வளவு? – 0.01 மி.மீ
ஒரு பொருளில் அடங்கியுள்ள பருப்பொருள்களின் கன அளவு அதன்______எனப்படும்நிறை எனப்படும்
ஊசல் கடிகாரத்தின் தத்துவத்தை கண்டறிந்தவர் யார்? – கலிலியோ
தினம் ஒரு மூலிகை மணத்தக்காளி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றுப் புண் மற்றும் அல்சர் விரைவில் குணமாகும். மணத்தக்காளி கீரை வயிறு மற்றும் வாய் அல்சருக்கு மிகவும் நல்லது. எனவே அந்த கீரையை சூப் செய்தோ அல்லது பொரியல் செய்தோ வாரத்திற்கு 3 முறை உட்கொண்டு வர விரைவில் அல்சர் குணமாகும்.
உணவு   புரதக் குறைபாடு : (குவாஷியாக்கர், மராஸ்மஸ்)
குவாஷியாக்கர் (Kwashiorkar)வளர்ச்சி குறைவு, மனவளர்ச்சியில் மாற்றம், உடல் வீக்கம், தசை இழப்பு, நிலா போன்ற முகம், கல்லீரல் குறைபாடுகள், இரத்த சோதனை, இரைப்பை மற்றும் குடல் சார்ந்த பாதிப்புகள் மற்றும் தோல், முடி நிறம் மாறுதல் போன்றவைகள் இந்நோயில் காணப்படும்.
மராஸ்மஸ் (Marasmus) : வளர்ச்சி குறைபாடு, தசை இழப்பு, அடிப்போஸ் திசு இழப்பு, உலர்ந்த தோல் போன்றவை இந்நோயின் அறிகுறியாகும். இரத்த சோகையும் இந்நோயில் இருக்கலாம்
தினம் ஒரு மூலிகை - வெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்..
வெந்தயம் உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி ஏற்படுத்தும் குணம் கொண்டது. வெந்தயத்தை தொடர்ந்து உணவில் எடுத்துக்கொண்டு வந்தால் தேவையற்ற ஊளைசதை என சொல்லப்படும் கொழுப்புகள் முற்றிலுமாக குறைகின்றது. வெந்தயத்தில் உள்ள காலக்டோமேனன் என்ற கரையும் நார்ச்சத்தானது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நீரழிவு நோயை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.வெந்தயத்திலுள்ள சயோனின் என்ற வேதிப்பொருள் ஆண் ஹார்மோன் உற்பத்தியில் பெரும் பங்கு வகித்து ஆண்கள் பிரச்சனைகளை போக்குகிறது.
தொடர்ந்து காலையில் வெந்தயம் சாப்பிட்டு வருவதால் நாள்பட்ட மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றது.தொண்டையில் ஏற்படும் அல்சர், புண், வலி மற்றும் கொப்பலங்கள் ஆகியவற்றை வெந்தயம் முற்றிலுமாக நீக்குகின்றது. இருமல் மற்றும்தொண்டை கரகரப்பிலிருந்து நல்ல நிவாரணம் தருகின்றது.வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் நெஞ்சு எரிச்சல் மற்றும் ஒவ்வாமை குணமாக்குகின்றது.ஸ்டார்ச் இல்லாத பாலிசாக்கரைடு வகை நார்ச்சத்து வெந்தயத்தில் இருப்பதால் குடலில் உள்ள உணவு செரித்தலுக்கு துணைபுரிகிறது.வெந்தயத்தை நீரில் ஊறவைத்து ஒரு ஜாரில் போட்டு ஒரு சுத்தமான துணியால் மூடி வைக்கவும். ஓரிரு நாட்களில் முளைகட்டிவிடும். இந்த முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால் அருமையான பலன்கள் கிடைக்கும்.
வரலாற்றுச் சிந்தனை  
தெற்காசிய வரலாற்றுக் காலக்கோடு
ரிவாத் மக்கள் (கி மு 1,900,000)
சோவனிகம் (கி மு 500,000)
கற்காலம் (50,000–3000 BCE)
வெண்கலம் (கி மு 30001300
இரும்பு (கி மு 1200 கிமு 230)
பாரம்பரியம் (230BCE–1279CE)
தன்னம்பிக்கை கதை-   உடலினை உறுதிசெய்
ஒரு ஊருல ஒரு பெரிய்ய காடு இருந்தது. அந்தக் காட்டுக்குள்ள ஒரு குகை. குகையின் உள்ளே சுருண்டபடி படுத்திருந்தது அந்த நரி.
குகைக்கு வெளியே வந்து நின்ற கரடி "நரியாரேஉமக்கு என்னநேர்ந்ததுஏன் குகையை விட்டு இரண்டு நாளாகவெளியேவரவில்லை" என்று சப்தமாக கேட்டது.
கரடி காட்டுக் கத்தலாக கத்தியும் குகையின் உள்ளே எந்த சப்தமும் இல்லாமல் இருக்கவே கரடி குகையின் உள்ளே சென்றது.
சுருண்டு படுத்திருந்த நரியைக் கண்டதும் நரியாரே உமக்குஎன்னாயிற்று.. இப்போதும் உமக்கு உடல் நிலை சரியில்லையா?
அடிக்கடி இப்படி சுருண்டு படுத்துக் கொள்கிறீரே என்று அன்போடு கேட்டது.
"கரடியாரே! நான் என்ன செய்வதுஎனக்கு அடிக்கடி உடல்நிலைசரியில்லாமல் ஆகிவிடுகிறதுஅதன் காரணமாக உடலும்சோர்வடைகிறதுநாட்பட நாட்பட என் உடலும் மெலிந்து கொண்டேபோகிறது" என கவலையுடன் கூறியது.
அதனைக்கேட்ட கரடி நரியாரே நீர் இரை சாப்பிட்டு முடித்ததும்அப்படியே படுத்துக் தூங்கி விடுகிறீர் உமது உடலை
வலுப்படுத்த நீர்துளியளவு மனதால் நினைக்க மாட்டீர் சாப்பிடுவதும் தூங்குவதுமாகவாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றீர்அதனால்தான் உமக்குஅடிக்கடி உடல் நிலை சரியில்லாத சூழ்நிலை 
ஏற்படுகிறது என்றது.
கரடியாரே என் உடல்நிலை இப்படியே இருந்தால் என்னால் எழுந்து நடக்க முடியாத சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டு உடல் பருமன் அதிகாரித்து படுத்த படுக்கையாகி விடுவேன்என் உடல் நிலை சீராக நீஎனக்கு உதவி செய்வாயா 
என்று கேட்டது நரி.
நரியாரே மெல்ல எழுந்து என்னோடு வாரும்நாம் இருவரும் சிறிதுநேரம் உற்பயிற்சி செய்யலாம். 
என்றது கரடி.
நரியும்கரடியும் ஒரு மரக்கிளையின் அருகே வந்தன. கரடி உடனே மரக்கிளையைப் பிடித்து ஊஞ்சலாடத் தொடங்கியது. அதனைப் பார்த்து நரியும் சிறிது நேரம் ஆடியது. 
கரடி வேகமாக ஓட ஆரம்பித்தது. நரியும் பின்தொடர்ந்து வேகமாக ஓடியது. சிறிது தூரம் சென்றது கரடி. வேகமாக நடக்கத் தொடங்கியது அதனைத் தொடர்ந்து நரியும் வேகமாக நடக்கத் தொடங்கியது.
தன் உடலில் மெல்ல மெல்ல சிறுசிறு மாற்றம் ஏற்படுவதை நரிஉணர்ந்தது.
அதே நேரம் கரடி நரியாரே உமது உடல்நிலை இப்போது எப்படிஇருக்கிறதுஏதோ உற்சாகம் நிரம்பியவர் 
போன்று காணப்படுகின்றீரேஎன்று கேட்டது.
ஆமாம் கரடியாரே எனக்கு உற்சாகமாகத்தான் இருக்கிறதுஇதனைப்போன்று தினமும் உடற்பயிற்சி செய்தால் என் சோம்பல் எல்லாம்மறைந்துவிடும்என் உடலும் உறுதியாகிவிடும் என்றது நரி.
அன்று முதல் நரி தினமும் கரடியோடு சேர்த்து கொண்டு தன் உடலை உறுதியாக்கிக் கொண்டது.
நம் உடல் உறுதியாக இருந்தால்தான் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்.

 

தமிழ் அறிவோம்  https://www.youtube.com/watch?v=NzwSYeLIjWQ

இணையம் அறிவோம்
தொகுப்பு   https://kanchidigitalteam.blogspot.com

No comments:

Post a Comment