அறிவுக்கு விருந்து
14.02.2020 (வெள்ளி)
பெப்ரவரி 14 (February 14) கிரிகோரியன் ஆண்டின் 45 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 320 (நெட்டாண்டுகளில் 321) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
·
748 – அபாசிதுப் புரட்சி: அபூ குராசானி தலைமையில் அசிமியக் கிளர்ச்சியாளர்கள் உமையாது மாகாணமான குராசானின் தலைநகரைக் கைப்பற்றினர்.
·
1014 – திருத்தந்தை எட்டாம் பெனடிக்டு செருமனி, இத்தாலியின் மன்னர் இரண்டாம் என்றியை புனித உரோமைப் பேரரசராக்கினார்.
·1797 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: ஜிப்ரால்ட்டர் அருகே இடம்பெற்ற கடல்சமரில் ஒரசியோ நெல்சன் தலைமையில் பிரித்தானியக் கடற்படை எசுப்பானியக் கடற்படையை வென்றது.
·
1804 – உதுமானியப் பேரரசுக்கு எதிரான செர்பியர்களின் முதலாவது எழுச்சி கரஜோட்சே என்பவனின் தலைமையில் இடம்பெற்றது.
பிறப்புகள்
இறப்புகள்
சிறப்பு நாள்
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
கலைஞர்
மு.கருணாநிதி உரை: எல்லை
கடந்து நடந்து கொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள்.
மு.வரதராசனார் உரை: வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.
Translation.
They who transgressors'
evil words endure With patience, are as
stern ascetics pure.
Explanation: Those who bear with the uncourteous speech of the
insolent are as pure as the ascetics.
சிந்தனைக்கு:
அவமானத்தை தாங்கிக்கொள்ளும் திடமனம் இல்லை
என்றால்
கடமையை நிறைவேற்ற முடியாது. - வி.எஸ்.காண்டேகர் –
தமிழ் அறிவோம்:
அங்கதம்
= தோளணி, அரவு
|
அசைதல் = ஆடல், தங்கல்
|
அடுதல் = சமைத்தல், கோறல்(கொல்லுதல்)
|
விடுகதை
விடையுடன்
படுத்துத் தூங்கினால் கண்முன் ஆடும், அடுத்து விழித்தால்
மறைந்தே ஓடும் அது என்ன?
கனவு
பழமொழி-
இடுவாள்
இடுவாள்
என்று
ஏக்கமுற்று
இருந்தாளாம்;
நாழி
கொடுத்து
நாலு
ஆசையும்
தீர்த்தாளாம்.
பொருள்: யஜமானி
நிறையக் கொடுப்பாள் என்று வேலைக்காரி ஆசையோடு இருந்தபோது, அவள் யஜமானி அந்த
வேலைக்காரியின் நான்கு ஆசைகளையும் கால்படி அரிசி கொடுத்துத் தீர்த்துவைத்தாளாம்.
விளக்கம்: நாழி
என்பது கால் படி அளவு:
’உண்பது நாழி உடுப்பது நான்கு
முழம். (நல்வழி28).’ ஹிந்து மகளிரின் நான்கு ஆசைகளாவன: ஊண், உடை, பூ,
மஞ்சள். (இன்று அவை ஊண், உறக்கம்,
ஷாப்பிங், டி.வி. என்று
மாறிவிட்டது வேறு விஷயம்.)
Enrich your vocabulary
Enrich your vocabulary
Proverb Curiosity killed the cat.
Enquiring
into others’ work can be dangerous. One should mind own business.
Example: I know
curiosity killed the cat, but I can’t stop the investigation until I know where
the donations are really going.
Opposite Words
Plentiful
X Scarce
- During the summer tomatoes are plentiful and cheap.
- Food was often scarce in the winter.
Plural
X Singular
- ‘Sheep’ remains the same in the plural.
- The singular of ‘bacteria’ is ‘bacterium’.
மொழிபெயர்ப்பு
BOTTLE GOURD – சுரைக்காய்
BROCCOLI – பச்சைப் பூக்கோசு BRUSSELS SPROUTS – களைக்கோசு |
கணினி ஷார்ட்கட் கீ
Alt+R
|
Review tab
|
Alt+W
|
View tab
|
இனிக்கும் கணிதம் கணிதக் கலைச்சொற்கள்
அளவெண் Scalar
அளாவல் Span
அறிவியல் அறிவோம்
வைரஸ்
என்ற சொல்லை கேட்ட உடனேயே நமக்கு அவை நம் உடலில்
உண்டாக்கும் பாதிப்புகள் தான் நினைவிற்கு வரும்.
(சிலருக்கு கணினி ஞாபகம் கூட வரலாம்) காரணம்,
அவை பெரும்பாலும் மனித உடலுக்கு கெடுதல்களையே
தருகின்றன. சாதாரண சளி முதல் சார்ஸ்
போன்ற கொடிய நோய் வரை வைரஸ்கள்
தான் காரணம். ஆனால் உண்மையில் நமக்கு நன்மை தரும் வைரஸ்களும் நாம் வாழும் இதே
உலகத்தில் மட்டும் அல்ல நம் உடலிலும்
வாழ்கின்றன என்பது பலருக்கு தெரியாது. இன்னும் சொல்ல போனால் ஒரு சில வைரஸ்கள்
நமது நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பகுதியாகவே இருந்து
நம்மை நோய்களில் இருந்து காக்கும் பணியை செய்கின்றன!!!
தினம் ஒரு மூலிகை கொத்தமல்லி:
இதுவும் நல்ல
டானிக்
பசியைத் தூண்டும், பித்தம் குறையும். காய்ச்சல், சளி,
இருமல்,
மூலம்,
வாதம்,
நரம்புத்தளர்ச்சி குணமாகும். இரத்தத்தில் கலந்துள்ள சர்கரையை குறைக்கவும், இரத்த
அழுத்தம், கல்லடைப்பு, வலிப்பு, ஆகியவை
குணமாகும். மன வலிமை
மிகும்.
மன
அமைதி,
தூக்கம் கொடுக்கும். வாய்
நாற்றம், பல்வலி,
ஈறு
வீக்கம் குறையும்.
உணவு – வைட்டமின்கள்
ரில் கரையக்கவடிய விட்டமின்கள்
தயமின் (விட்டமின் B)
ரிபோபிளேவின் (விட்டமின் B)
நிகோடினிக் அமிலம்
(விட்டமின் B)
பைரி டாக்சின் விட்டமின் B)
போலிக் அமிலம்
(விட்டமின் B)
சையனோ கோபாலமைன் (விட்டமின் B)
வரலாற்றுச் சிந்தனை இந்தியா சுதந்திரம் அடைதல்
சுதந்திரத்திற்காகப் பல போராட்டங்களையும், கிளர்ச்சிகளையும் எழுப்பியத் தலைவர்களும், புரட்சியாளர்களும் சிறிதளவு கூட களைப்படையவில்லை. ஆனால், பிரித்தானிய மக்களும், பிரித்தானிய ராணுவமும் இந்தியாவில் மென்மேலும் அடக்குமுறையை ஏற்படுத்துவதற்கு விருப்பமற்றிருந்தது. 1947 ஆம்
ஆண்டில், பிரித்தானிய இந்திய கவர்னர்-ஜெனரலான விஸ்கவுண்ட் லூயி மவுண்ட்பேட்டன் அவர்கள், ஜூன் 3 ஆம் தேதியன்று ‘பிரித்தானிய இந்தியப் பேரரசை மதச்சார்பற்ற இந்தியா’ என்றும், ‘முஸ்லீம் பாகிஸ்தான்’ என்றும் பிரித்தளிப்பதாக அறிவி்த்தார். இந்தத் தேசப் பிரிவினையால், 1947 ஆம்
ஆண்டு
ஆகஸ்டு
14 ஆம்
தேதி
பாகிஸ்தான் தனி தேசமாக பிரிந்துசென்றது. மேலும், இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி நள்ளிரவில், சுதந்திர தேசமானது. சுதந்திர இந்தியாவின் பிரதமராக ஜவஹர்லால் நேருவும், துணைப் பிரதமராக சர்தார் வல்லபாய் படேலும் பதவியேற்றனர். அவர்கள், இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட்பேட்டனை அதே பதவியில் தொடரும்படி அழைத்தனர். அவர்களது அழைப்பை ஏற்ற அவரும், சிறிது காலம் பதவியில் இருந்தார். பின்னர், 1948 ஆம்
ஆண்டு
ஜூனில்
சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி அவருக்கு பதிலாக அமர்த்தப்பட்டார்.
தன்னம்பிக்கை கதை- காடுகளை பாதுகாப்போம்
அது ஒரு அடர்ந்த காடு, அந்த காட்டிலே எல்லா மிருகங்களும் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தன. புலி, சிங்கம் போன்றவைகள் கூட அதனதன் இடங்களில் வாழ்ந்து வந்து கொண்டிருந்தன. கொஞ்ச நாட்களாக மனிதர்கள் கூட்டம் கூட்டமாக காட்டுக்குள் வருவதும் போவதுமாக இருந்து கொண்டிருந்தனர். இதனால் அமைதியாக இருந்த காடு இவர்களின் வருகையால் நிம்மதி இழந்து தவித்துக்கொண்டிருந்தது. இது இப்படி இருக்க ஒவ்வொரு விலங்குகள் கூட்டத்திலும், நிறைய விலங்குகள் காணாமல் போகத்தொடங்கின. மான் கூட்டத்திலும்,வரிக்குதிரை கூட்டத்திலும்,ஏன் யானைகள் கூட சத்தமில்லாமல் காணாமல் போயின. இந்த விலங்குகளின் எலும்புகள் கூட அந்த காட்டில் காணப்படவில்லை.
அங்குள்ள சாதுவான விலங்குகள், அனைத்தும் சிங்கத்தின் மீது சந்தேகம் கொண்டன.. சிங்கம்தான் அத்தனை விலங்குகளையும் தன்னுடைய குகைக்குள் கொண்டு போய் அடித்து சாபிட்டு விடுகின்றது என முடிவு செய்தன. இதனால் எப்படியாவது சிங்கத்தை விலங்குகளை கொல்வதை கை விட வேண்டும் என்று கேட்பதற்கு முடிவு செய்தன.ஆனால் எப்படி கேட்பது? புலியாரை பார்க்க சென்றன. புலியார் சிங்கத்தின் அளவுக்கு பலசாலிதான் என்றாலும் இரண்டும் ஒன்றை ஒன்று சந்தித்து கொள்வதோ,மோதிக்கொள்வதோ இல்லை, அவைகள் தனித்தனியாக தங்கள் பாதையில் சென்று கொண்டிருந்தன.
இப்படி பட்ட சூழ் நிலையில் புலியாரிடம் சென்ற மான் கூட்டங்கள் சிங்கம்
தங்கள் இனத்தவரை கொன்று குவித்துக்கொண்டுள்ளது, அதை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று கேட்டன. புலியார் அவர்களை பார்த்து இப்படி சொன்னது. சிங்கமும், சரி நானும் சரி, எங்கள் பசிக்கும் போது தவிர பிற உயிர்களை மறந்தும் கொல்ல மாட்டோம், இது வேறு யாரோ செய்யும் சதி, அநாவசியமாய் சிங்கத்தின் மீது சந்தேகம் கொள்ளாதீர்கள் என்று அறிவுரை சொன்னது. ஆனால் மான்களோ, மற்றவைகளோ அதை கேட்கும் மன நிலையில் இல்லை. ஆகவே சிங்கத்தை ஒழிக்க வேறு உபாயம் செய்யலாம் என்று முடிவு செய்து அங்கிருந்து சென்றன.
இது இப்படி இருக்க நரியார் சிங்கத்திடம் சென்று சாது விலங்குகள் யாவும் உம்மை ஒழிப்பதற்கு முயற்சிகள் செய்து கொண்டுள்ளன என்று கூறியது. சிங்கத்திற்கு ஒன்றும் புரியவில்லை, நான் என்ன தவறு செய்தேன்? என்று கேட்க நரியார் அவைகளின் இனங்கள், காட்டில் குறைந்து வருவதால் அவைகள் உங்களை சந்தேகப்படுகின்றன.
சொன்னவுடன் சிங்கம் சற்று யோசித்து, இதற்கு நான் சீக்கிரம் தீர்வு காண்கிறேன் என்று மனதுக்குள் முடிவு செய்தது.
முதலில் நம் காட்டின் எல்லையை சுற்றி வர வேண்டும் என்று முடிவு செய்த சிங்கம் காட்டு எல்லை முழுவதும் சுற்றி வர ஆரம்பித்தது. சுற்றி வரும்பொழுது ஒரு சில இடங்களில் பெரிய பெரிய குழிகள் வெட்டப்பட்டிருப்பதையும்,அந்த குழிகளின் அருகில் வரி வரியாய் வண்டித்தடங்களும்இருந்தன. மனித வாடைகளும் தென்பட்டன.
சிங்கத்திற்கு உண்மை புரிய தொடங்கியது.இது மனிதர்களின் வேலை, இது தெரியாமல் என் மீது சந்தேகம் கொண்ட விலங்குகளை நினைத்து சிரித்து கொண்டது. மறு நாள் அனைத்து விலங்குகளையும் வர சொல்லி அவைகளை கூட்டிச்சென்று, அந்த இடங்களை கண்பித்தது.
இப்பொழுது என்ன செய்யலாம், மனிதர்களை இப்படியே விட்டால் எல்லா விலங்குகளையும் வேட்டையாடிக்கொண்டே இருப்பார்கள், அதே நேரத்தில் மனிதர்களை நாம் ஒன்றும் செய்ய முடியாது.அவர்கள் நம்மை விட பலசாலிகள், இவ்வாறு பல யோசனைகளுடன் கலந்தாலோசித்துக்கொண்டிருந்தன.
நரியார் மெல்ல முன் வந்து நான் ஒரு யோசனை சொல்கிறேன் என்றது. அனைத்து விலங்குகளும் நரியை பார்க்க, நம்முடைய சிங்கம், புலி, கரடி, இவைகள், காட்டு எல்லையை விட்டு ஊர் எல்லைக்குள் நுழைய வேண்டும். சாதாரண விலங்குகள் நாம் சென்றோமென்றால், மக்கள் நம்மை அடித்து கொன்று விடுவார்கள், சிங்கம்,புலி, கரடி போன்றவைகளுக்கு மனிதன் பயப்படுவான். மக்கள் காட்டுக்கு வேலி போட வேண்டும் என்று அரசாங்கத்தை வற்புறுத்த ஆரம்பிப்பார்கள், அரசாங்கம் அப்படி செய்ய வரும்போது இந்த கூட்டம் ஓடிப்போகலாம்.
அனைத்து விலங்குகளும் ஆமோதிக்க, மறு நாள் காலையில் ஊர் தெற்கு எல்லையில், நடந்து கொண்டிருந்த பலர் சிங்கத்தை பார்த்து விழுந்தடித்து ஓடினர். அது போல, வடக்கு ஊர் எல்லையில் புலி ஒன்று நின்று கொண்டிருப்பதை பார்த்த மக்கள் பயந்தடித்து ஓட ஆரம்பித்தனர்.கிழக்கு எல்லையில் கரடியும், மேற்கு எல்லையில் யானைக்கூட்டமும் மக்களை பயமுறுத்த, மக்கள் அரசாங்கத்தை நோக்கி எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என்று கேட்க ஆரம்பித்து விட்டனர்.வன பாதுகாவலர்களும்,
விலங்குகள் நல ஆர்வலர்களும், மனிதன் காட்டுக்குள் சென்று விலங்குகளை கொல்வதால்தான் இந்த பிரச்சினை வருகிறது என்று அரசாங்கத்திற்கு கடிதம் எழுதினர்.
அரசாங்கம் காட்டு எல்லைகளை வரையறை செய்ய ஆரம்பித்தது. அப்பொழுதுதான் தெரிந்தது, இந்த வேட்டைக்கார்ர்கள்
கூட்டம் பெரிய பெரிய குழிகள் வெட்டி விலங்குகளை பிடிப்பதை கண்டு பிடித்த்து. உடனே அவர்களை கைது செய்து எல்லைகளுக்கு பாதுகாப்பு போட்டு பலப்படுத்தியது.இப்பொழுதெல்லாம் மனிதர்களும்,விலங்குகளும், அவரவர் எல்லைக்குள் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
தமிழ் அறிவோம்
No comments:
Post a Comment