அறிவுக்கு விருந்து 25.02.2020 (செவ்வாய்)


அறிவுக்கு  விருந்து  25.02.2020 (செவ்வாய்)
பெப்ரவரி 25 (February 25) கிரிகோரியன் ஆண்டின் 56 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 309 (நெட்டாண்டுகளில் 310) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

·  138உரோமைப் பேரரசர் ஏட்ரியான் தனது வாரிசாக அந்தோனியசு பயசு என்பவனை அறிவித்தார்.
·  628சாசானியப் பேரரசசின் கடைசி மன்னர் இரண்டாம் கொசுரோவை அவரது மகன் இரண்டாம் கவாத் பதவியில் இருந்து அகற்றினான்.
·  1797வில்லியம் டேட் தலைமையிலான 1000-1500 போர்வீரர்களைக் கொண்ட படைகள் தமது பிரித்தானியா மீதான கடைசிப் படையெடுப்பை அடுத்து சரணடைந்தனர்.
·  1831உருசியப் பேரரசுக்கு எதிரான போலந்து மக்களின் நவம்பர் எழுச்சியின் ஒரு பகுதியாக ஓல்சின்கா கிரச்சோவ்சுக்கா சமர் இடம்பெற்ரது.
·  1843 – [[பெரிய பிரித்தானியா][]வின் பேரில் சியார்ச் பவுலெட் பிரபு அவாய் இராச்சியத்தை ஆக்கிரமித்தார்.
·  1848பிரான்சின் இடைக்கால அரசு தொழிலாளர்களுக்கான உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்தது.
·  1856கிரிமியப் போரை அடுத்து பாரிசு நகரில் அமைதி மாநாடு நடைபெற்றது.
·  1918முதலாம் உலகப் போர்: செருமனியப் படைகள் தாலின் நகரைக் கைப்பற்றின.
·  1919அமெரிக்காவின் முதல் மாநிலமாக ஓரிகன் பெட்ரோலுக்கு வரி (கலனுக்கு ஒரு சதம்) அறவிட்டது.

பிறப்புகள்

·  1304இப்னு பதூதா, மொரோக்கோ கல்வியாளர், நாடுகாண் பயணி
·  1670மரியா மார்கரெதா கிர்ச்சு, செருமனிய வானியலாளர், கணிதவியலாளர் (. 1720)
·  1778ஜோஸ் டெ சான் மார்ட்டின், பெருவின் 1வது அரசுத்தலைவர் (. 1850)
·  1866பெனிடெட்டோ குரோசே, இத்தாலிய இலக்கியவாதி, வரலாற்றாசிரியர், அரசியல்வாதி (. 1952)
·  1869போபஸ் ஆரன் தியோடர் லெவினி, உருசிய-அமெரிக்க உயிரிவேதியியலாளர், மருத்துவர் (. 1940)
·  1894மெகர் பாபா, இந்திய ஆன்மிகவாதி (. 1969)

இறப்புகள்

·  1723கிறிஸ்டோபர் ரென், புனித பவுல் தேவாலயத்தை வடிவமைத்த ஆங்கிலேயக் கட்டிடக் கலைஞர் (பி. 1632)
·  1877ஜங் பகதூர் ராணா, நேபாள ஆட்சியாளர் (பி. 1816)
·  1932யூலியெத்தா லாந்தேரி, இத்தாலிய அர்கெந்தீன மருத்துவர், கட்டற்ற சிந்தனையாளர் (பி. 1873)
·  1936அன்னா பொச், பெல்சிய ஓவியர் (பி. 1848)
·  1942அலெக்சாண்டர் சவீனொவ், உருசிய சோவியத் ஓவியர் (பி. 1881)
·  1950ஜார்ஜ் மினாட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (பி. 1885)
·  1965விராலிமலை சண்முகம், இந்தி எதிர்ப்புப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1943)
·  2001டான் பிராட்மன், ஆத்திரேலியத் துடுப்பாளர் (பி. 1908)

சிறப்பு நாள்

 குறளறிவோம்-  167. அழுக்காறாமை

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்.
மு.வரதராசனார் உரை:
பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.
Translation:
From envious man good fortune's goddess turns away,
Grudging him good, and points him out misfortune's prey.
Explanation:
Lakshmi envying (the prosperity) of the envious man will depart and introduce him to her sister.
சிந்தனைக்கு:
குற்றங்களில் பெரிய குற்றம்
அவற்றை உணராமல் இருப்பது தான்.


தமிழ் அறிவோம்:
  1. அருகல் = சுருங்குதல், காதல்
  1. அருணம் = சிவப்பு, ஆடு

விடுகதை விடையுடன்   மரத்தின் மேலே தொங்குது மலைப் பாம்பல்ல. அது என்ன?
விழுது
பழமொழி- பாப்பாத்தி அம்மா, மாடு வந்தது, பார்த்துக்கொள்.
பொருள்: பாப்பாத்தி அம்மா, உன் பசுக்களை இதோ வீட்டில் சேர்த்துவிட்டேன், இனிமேல் உன்பாடு.

விளக்கம்: ஒரு பிராம்மண மாது தன் வீட்டுப் பசுக்களை மேய்ப்பதற்கு இடையன் ஒருவனை அமர்த்தியிருந்தாள். காலையில் பசுக்களைத் தொழுவத்திலிருந்து கட்டவிழ்த்து ஓட்டிச் சென்ற இடையன் மேய்ச்சல் நேரம் முடியும் மாலை ஆனதும் தன் வீடு திரும்பும் அவசரத்தில் பசுக்களை அந்தப் பாப்பாத்தி வீட்டில், தொழுவத்தில் கட்டாமல் விட்டுவிட்டு இவ்வாறு சத்தம்போட்டுக் கூறிவிட்டுத் தன்வழி போனான்.

வேலையில் முழு ஆர்வமில்லாமல் சம்பளத்தில் குறியாக இருப்பவர்களைக் குறித்துச் சொன்னது.
Enrich your   vocabulary
Haul....இழுத்தல் 
Slash....வெட்டு 
Proverb    Learn to walk before you run.
Do things in the right order, from simple to more complicated. For example, do not try to read a difficult English novel when you’re just starting to learn English. If you try to jump ahead, you will most likely fail—just like a child who tries to run before learning to walk will fall. All things will come in time, but you must be patient and go through the proper process.
Opposite Words 
Private X Public
  • There is private ownership of property in a market economy.
  • We do not believe he is fit for public office.
Prudent X Imprudent
  • It might be prudent to get a virus detector for the network.
  • The banks made hundreds of imprudent loans in the 1970s.
மொழிபெயர்ப்பு
மீனாக்கொழுந்து
ஒரு வகைச் சீமைக்கீரை
கணினி ஷார்ட்கட் கீ
Alt+W
View tab
Alt+S
References tab

இனிக்கும் கணிதம் கணிதக் கலைச்சொற்கள்

இடவியல் உருமாற்றம் Topological Transformation
இடவியல் வெளி Topological Space
இடவியற்குலம் Topological Group
அறிவியல் அறிவோம்   
ஒரு பொருளின் நிறையை ஒரு மி.கிராம் அளவிற்க்கு துள்ளியமாக அளவிட பயன்படும் தராசு எது?- இயற்பியல் தராசு
இயற்பியல் தராசில் மிக குறைந்த எடை கல் எவ்வளவு? – 10 மி. கிராம்
இயற்பியல் தராசில் குறிமுள், அலைவுக்குப்பின் அளவுகோல் வந்து நிற்கும் புள்ளி______எனப்படும்நிலைப்புள்ளி எனப்படும்
உணவு  வைட்டமின் குறைபாடு :
வாயின் ஓரத்தில் புண் (angular stomatistis), நாக்கில் புண் (glossitis) போன்றவை ரைபோபிளேவின் (B2) குறைபாட்டால் ஏற்படுகிறது.
வைட்டமின் A குறைபாடு
1, மாலைக்கண் நோய் (mightblindness)
2, ஸ்ரோஸிஸ் கன்சைன் டைவிட்டிஸ் (Xerosis conjunctivities)
3. ஸ்ரோஸிஸ் கார்னியா (Xerosis cornia)
4. பைடாட் ஸ்பாட் (Bitot's spot)
5. கேரட்டோ மலேசியா (Keratomalacia).
தினம் ஒரு மூலிகை - வெங்காயத்தை பாதத்தில் வைத்து தூங்குவதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள்...!!
நாம் அன்றாடம் பயன்படுத்தும் வெங்காயத்தில் பல அற்புத மருத்துவகுணங்கள் அடங்கியுள்ளன. இரவில் படுக்கும்போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்து சாக்ஸ் அணிந்து தூங்குவதால் உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு நல்லது. இதற்கு வெங்காயத்தில் உள்ள பாஸ்பாரிக்
ஆசிட் தான் காரணம்.

வெங்காயத்தில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட்டானது சருமத்தின் வழியே ஊடுருவி இரத்த நாளங்களில் நுழைந்து, இரத்தத்தை
சுத்தப்படுத்துவதோடு பாக்டீரியாக்களை அழிக்கும்.

வெங்காயத்தில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரஸ் அதிகம் உள்ளது. எனவே இவை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடும்.

வெங்காயத்தை தினமும் பாதங்களில் வைத்துக் கொண்டு தூங்கினால், இதய ஆரோக்கியம் மேம்படும். முக்கியமாக இந்த பழக்கத்தை
அன்றாடம் மேற்கொண்டு வந்தால், இதய நோயில் இருந்து விடுபடலாம். மேலும் கழுத்து வலி, காது வலி போன்றவை நீங்கும்.

முக்கியமாக வயிற்றுப் பிரச்சனைகள், சிறுநீரக பிரச்சனைகள், குடல் மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சனைகள் இருந்தாலும் குணமாகும்.
சளி, காய்ச்சல் போன்றவற்றால் அவஸ்தைப்படுவராயின், வெங்காயத்தை இரவில் படுக்கும்போது உள்ளங்கால்களில் வைத்து சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்கினால், சளி, காய்ச்சல் போன்றவை குணமாகும்.

வரலாற்றுச் சிந்தனை  
தெற்காசிய வரலாற்றுக் காலக்கோடு
குடிமை (1510–1961)
மற்ற அரசுகள் (1102–1947)
இலங்கை இராச்சியங்கள்
குடிமைப்பட்ட கால பர்மா (1824 - 1948)
நாட்டு வரலாறுகள்
பிராந்திய வரலாறு

தன்னம்பிக்கை கதை-  பேசும் மாய விளக்கு


ஒரு ஊர்ல ஒரு வயசான பாட்டி தனியா வசித்து வந்தாங்க.
அந்த ஊர்ல கொஞ்ச நாளா திருடங்க நடமாட்டம் அதிகமிருந்தது.
ஒரு நாள் பாட்டி வெளியே போய்விட்டு வந்து பார்த்த போது வீட்டுக் கதவு திறந்திருந்தது.
உள்ளே போன பாட்டிக்கு வீட்டுக்குள் ஒரு திருடன் திரைச்சீலைக்குப் பின்னால் மறைந்து இருப்பது தெரிந்து விட்டது.
அவனை எப்படியும் தப்பிக்க விடாமல் புத்திசாலித் தனமாக பிடிக்கனும்னு நெனச்ச பாட்டி உடனே ஒரு தந்திரம் செய்தாள்.
அங்கிருந்த விளக்கு ஸ்டேண்டின் முன் நின்று கொண்டு ,’மாய விளக்கே என் மீது கோபமா?நான் வெளியே போய் வந்ததும் என்ன நடந்தது என்று கேட்பாயே இன்று ஏன் கேட்கவில்லைஎன்றாள்.
இதைக் கேட்டதும் திருடனுக்கு ஆச்சரியம்.பேசும் விளக்கா என்று எட்டிப் பார்த்தான்.
விளக்கு திரைச்சீலையின் அசைவில் லேசாக ஆட பாட்டி,’ கோபமில்லையா?அப்படியானால் என்ன நடந்தது சொல்கிறேன் கேள்.பக்கத்து வீட்டு ஜூலி இன்று கடைத் தெருவுக்குப் போகும் போது ஒரு நாய் அவளைத் துரத்தியது.அவள் சத்தம் போட்டுக் கத்தினாள்.
மீண்டும் விளக்கு காற்றில் அசைய ,’ஓ எப்படிக் கத்தினாள் என்று கேட்கிறாயாஎன பாட்டி கேட்டாள்.
திருடனுக்கோ ஒன்றும் புரியவில்லை.நமக்கு மட்டும் ஒன்னும் கேட்கலை.விளக்கு ஆடுவது தெரியுது.ஆனால் கிழவி பேசுகிறாளே என்று குழம்பினான்.
மாய விளக்கே ஜூலி எப்படிக் கத்தினாள் என்று சொல்கிறேன்என்றபடி பாட்டி ஹெல்ப் ஹெல்ப் என்று உரக்கக் கத்த அக்கம் பக்கம் வீட்டுக்காரர்கள் பாட்டிக்கு ஏதோ ஆபத்து என்று ஓடி வந்தவர்கள் திருடனைப் பிடித்து போலிஸில் ஒப்படைத்தனர்.
பாட்டியிடம் உங்களுக்கு துணைக்கு ஆள் வேண்டுமா என்று கேட்டபோது,’வேண்டாம் எனக்குத்தான் மாய விளக்குத் துணை இருக்கே என்று சிரித்தாள்.
பாட்டியின் சமோயோசித புத்தியைப் பாராட்டிச் சென்றனர்.
நீதி:ஆபத்துக் காலத்தில் சிந்தித்து செயல் பட்டால் அதிலிருந்து நல்லபடியாக நம்மைக் காத்துக் கொள்ளலாம்

தமிழ் அறிவோம்  https://www.youtube.com/watch?v=_PM4uK2R9Bo

இணையம் அறிவோம்  https://eluthu.com/kavithai/386173.html

தொகுப்பு   https://kanchidigitalteam.blogspot.com

No comments:

Post a Comment