அறிவுக்கு விருந்து
28.02.2020 (வெள்ளி)
பெப்ரவரி
28 (February 28) கிரிகோரியன்
ஆண்டின் 59 ஆம் நாளாகும். ஆண்டு
முடிவிற்கு மேலும் 306 (நெட்டாண்டுகளில்
307) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
· கிமு
202 – லியூ பாங் சீனாவின்
பேரரசராக முடிசூடினார். இவருடன் அடுத்த நான்கு நூற்றாண்டுகால ஆன்
அரசமரபு ஆட்சி ஆரம்பமானது.
· 628 – சாசானியப்
பேரரசசின் கடைசி மன்னர் இரண்டாம் கொசுரோ அவரது மகன் இரண்டாம் கவாத்தின்
உத்தரவின் பேரில் தூக்கிலிடப்பட்டார்.
· 1525 – அசுட்டெக்
மன்னர் குவாவுத்தேமொக் எசுப்பானியத் தேடல் வீரர் எர்னான்
கோட்டெசின் உத்தரவின் பேரில் தூக்கிலிடப்பட்டார்.
· 1710 – சுவீடனில்
ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்ட டென்மார்க்
படையினர் எல்சின்போர்க் என்ற இடத்தில் வைத்து
சுவீடன் படைகளால் தோற்கடிக்கப்பட்டனர்.
· 1844 – பொட்டாமக்
ஆற்றில் பிரின்ஸ்டன் என்ற படகில் பொருத்தப்பட்ட
துப்பாக்கி வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த இரண்டு அமெரிக்க
அமைச்சர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
· 1867 – வத்திக்கானுக்கான
தூதர்களுக்கான
நிதிகளை அமெரிக்க
காங்கிரசு நிறுத்தியதைத் தொடர்ந்து எழுபது ஆண்டு கால திரு
ஆட்சிப்பீட–அமெரிக்க உறவுகள் முறிவடைந்தன. 1984 ஆம் ஆண்டிலேயே உறவு
புதுப்பிக்கப்பட்டது.
· 1897 – மடகஸ்காரின்
கடைசி அரசியான மூன்றாம் ரனவலோனா பிரான்சியப்
படைகளினால் பதவியில் இருந்து அகற்றப்ப்பட்டார்.
பிறப்புகள்
இறப்புகள்
சிறப்பு நாள்
- அமைதி நினைவு நாள் (சீனக் குடியரசு)
- கலேவலா நாள், (பின்லாந்து)
- தேசிய அறிவியல் நாள்
- ஆசிரியர் நாள் (அரபு நாடுகள்)
குறளறிவோம்- 170. அழுக்காறாமை
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
கலைஞர்
மு.கருணாநிதி உரை: பொறாமை
கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோரும் இல்லை; பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை.
மு.வரதராசனார் உரை: பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை.
Translation: No
envious men to large and full felicity attain;
No men from envy free have failed a sure increase to gain.
No men from envy free have failed a sure increase to gain.
Explanation: Never
have the envious become great; never have those who are free from envy been
without greatness.
சிந்தனைக்கு:
எல்லாத் துன்பங்களுக்கும் இரு
மருந்துகள் உள்ளன.
ஒன்று
காலம்,
இன்னொன்று மெளனம்.
தமிழ் அறிவோம்:
|
|
விடுகதை விடையுடன்
பேச்சுக்
கேட்குது பேசுபவர் தெரியவில்லை. அது என்ன? வானொலிப் பெட்டி
பழமொழி-
அண்டை வீட்டுக் கடனும் பிட்டத்துச் சிரங்கும் ஆகாது.
பொருள்: பக்கத்து வீட்டில் கடன் வாங்குவது, பிருஷ்டபாகத்தில் வந்த சிரங்குபோல.
விளக்கம்: அண்டை வீட்டில் கடன் வாங்கினால் அவனைப் பார்க்கும்போதெல்லாம் மனம் தவிக்கும். உட்காரும் இடத்தில் புண் வந்தால் உட்காரும்போதெல்லாம் வலிக்கும்.
பொருள்: பக்கத்து வீட்டில் கடன் வாங்குவது, பிருஷ்டபாகத்தில் வந்த சிரங்குபோல.
விளக்கம்: அண்டை வீட்டில் கடன் வாங்கினால் அவனைப் பார்க்கும்போதெல்லாம் மனம் தவிக்கும். உட்காரும் இடத்தில் புண் வந்தால் உட்காரும்போதெல்லாம் வலிக்கும்.
Enrich your vocabulary
Fertile.....வளமான
Abandoned.....கவனிப்பாரற்ற
Proverb Absence makes the heart grow fonder.
When people we
love are not with us, we love them even more.
Example:
When I was with her she always fought with me but now she cries for me on
phone. I think distance made her heart grow fonder.
Opposite Words
Rare X
Common
- It is very rare for her to miss a day at school.
- Bad dreams are fairly common among children.
Real X
Fake
- She had never seen a real live elephant before.
- He is a fake designer clothing.
மொழிபெயர்ப்பு
|
கணினி ஷார்ட்கட் கீ
|
இனிக்கும் கணிதம் கணிதக் கலைச்சொற்கள்
இணைக்காரணி, துணைக்காரணி Cofactor
இணைப்பு Edge (Graph theory)
அறிவியல் அறிவோம்
# நிறையின் அலகு என்ன? – கி.கிராம்
# காலம் / நேரத்த்தின் அலகு என்ன? – வினாடி
# மின்னோட்டதின் அலகு என்ன? – ஆம்பியர்
உணவு – வைட்டமின் குறைபாடு : வைட்டமின் C குறைபாடுகள் :
சோர்வு,
ஸ்கர்வி (Scurvy), மூச்சு திணறல்,
மூட்டு,
எலும்பு மற்றும் தசைவலி
போன்றவை வைட்டமின் குறைபாட்டால் ஏற்படலாம்.
·
தையமின் குறைபாடு (Vitamin B1)
·
பெரிபெரி
·
நிக்கோடினிக் குறைபாடு
·
பெல்லாகரா, வயிற்றுபோக்கு, தோல்
அழற்சி,
வாய்ப்புண் போன்றவை நிக்கோடினிக் குறைபாட்டால் தோன்றும்.
·
போலிக்
அமிலக்
குறைபாடு
·
இரத்த
சோகை
தினம் ஒரு மூலிகை -குப்பைமேனி இலையை காயவைத்து பொடியாக்கி மூக்கில் இட தலைவலி நீங்கும். அல்லது குப்பைமேனி இலையுடன் சாம்பிராணி சேர்த்து அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி குணமாகும்.
கொசுக்கடி அல்லது
அலர்ஜி
காரணமாக தோலில்
ஏற்படும் தடிப்புக்கும், குப்பைமேனியின் இலைச்
சாற்றை,
தேங்காய் எண்ணெயில் சேர்த்துக் கொதிக்கவைத்துத் தடவலாம்.குப்பைமேனி இலைச்
சாற்றைக் கொடுக்கும்போது, சில
நேரத்தில் உடனடியாக வாந்தி
எடுக்கவைத்து, அதனுடன் கோழையையும் வெளியேற்றும் இயல்பு
குப்பைமேனிக்கு உண்டு. குப்பைமேனியின் உலர்ந்த பொடியை
ஒரு
கிராம்
வெந்நீரில் அல்லது
தேனில்
கலந்து
கொடுக்க, கோழை
வருவது
மட்டும் அல்லாமல், இருமலும் உடனடியாகக் கட்டுப்படும். மூக்குத்தண்டில், நெற்றியில் கபம்
சேர்ந்து வரும்.
தலைபாரத்துக்கு குப்பைமேனி இலையை
அரைத்து, நெற்றியில் பற்றுபோடலாம். உடல்
முழுவதும் வலி
ஏற்பட்டு அவதிப்படுபவர்களுக்கு குப்பைமேனி இலைச்
சாற்றை,
நல்லெண்ணெய்யுடன் சேர்த்துக் காய்ச்சிப் பயன்படுத்தலாம்.
கால்
அரையிடுக்குகளில் கடும்
அரிப்பைக் கொடுத்து, சில
நாட்களில் அந்த
இடத்தைக் கருமையாக்கி, பின்
அந்தத்
தோல்
தடிப்புற்று, அடுத்த
சில
மாதங்களில் தடித்த இடம்,
அரிப்போடு நீர்ச்சுரப்பாக மாறும்
பூஞ்சைத்தொற்றுக்கு, குப்பைமேனியும் மஞ்சளும் சேர்த்து அரைத்துப் பூசலாம்.
வரலாற்றுச் சிந்தனை தமிழர் வரலாற்றுக் காலக்கோடு
·
சுமார் 600 கி.மு. - தமிழ்ப் பிராமி நடைமுறைத் தமிழ் எழுத்தாகியது.
·
சுமார் 500 கி.மு. - தமிழ் இலக்கண நூல் தொல்காப்பியம் தொல்காப்பியரால் எழுதப் படுகிறது.
·
சங்க காலம்சுமார் கி.மு. 500 - சங்க
காலப் பாண்டியர்களால் தமிழக முத்திரைக் காசுகள் வெளியிடப்பட்டன.
தன்னம்பிக்கை கதை- குறை கூறாதீர்கள் அது பல படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனை. . அவற்றில் ஒரு அறையில் இரு தீவிர நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை. இருவருக்குமிடையே ஒரு தடுப்புச் சுவர். ஒருவர் படுக்கை சன்னல் அருகில். இன்னொருவருக்கு சன்னல் கிடையாது. எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர� தனிமை.. தனிமை.. தனிமை..! சன்னல் படுக்கை நோயாளிக்குப் புற்றுநோய். இன்னொருவர் கடும் எலும்பு முறிவு நோயாளி. நாளடைவில் நட்பாகிவிட்டனர். ஒருமுறை எலும்பு நோயாளி சன்னல் நோயாளியிடம் சொன்னார்.. "உனக்காவது பொழுது போக்க, ஒரு சன்னல் இருக்கிறது.. எனக்கு அதுகூட இல்லை..!" கவலைப்படாதே நண்பா.. நான் சன்னலூடே என்னென்ன காண்கிறேனோ, அவ்வளவையும் உன்னிடம் விவரிக்கிறேன். இதை ஒரு ஒப்பந்தமாகவே கடைப்பிடிப்பேன்..! அன்று முதல் சன்னல் நோயாளி, தான் கண்ட காட்சிகளை சுவைபட தன் நண்பனுக்குக் கூறலானார்.. " நண்பா.. சன்னலுக்கு வெளியே ஒரு பெரிய ஏரி.. நடுவில் சிறு தீவு.. ஏரியில் படகுகள் மிதக்கின்றன.. ஏரிக்கரையில் அழகான பூங்கா..! காதலர்கள் தன்னை மறந்து கதைகள் பேசுகின்றனர்..!" எலும்பு நோயாளிக்கு அப்படியே காட்சிகள் மனக்கண்ணில் விரியும்.. சன்னல் நோயாளி இன்னொரு நாள் சொல்வார்.. "ஏரிக்கரை ஓரமாக ஒரு சாலை.. அதில் மணப்பெண் அழைப்பு ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது.. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஓடித் திரிகின்றன. மணப்பெண்ணிடம் தோழி ஏதோ சொல்கிறாள்.. மணப்பெண் முகத்தில் அப்படி ஒரு வெட்கம்..!" ஊர்வல அரவங்கள் எதுவும் எலும்பு நோயாளிக்கு கேட்கவில்லையாயினும் நாதசுரமும், தவிலும் ஒலிக்க ஊர்வலம் போகும் காட்சியை நன்கு அனுபவிப்பார்.. ஒருநாள் சன்னல் நோயாளி செத்துப்போனார்.. மீண்டும் எலும்பு நோயாளிக்கு வெறுமை� ஒருநாள் செவிலி வந்தபோது, தன் படுக்கையை சன்னல் ஓரமாக மாற்றித்தரும்படி கேட்டுக்கொள்ள, அவ்வாறே செய்யப்பட்டது. இனி எனக்கு நன்கு பொழுது போகும் என்று எண்ணியவாறே.. தன் எலும்பு முறிவு வலியையும் பொருட்படுத்தாமல் மெல்ல தன் உடலை உயர்த்தி சன்னல் வழியே நோக்க�. அங்கே பெரிய சுவர்..! வேறு எதுவுமே இல்லை..!அப்படியானால் சன்னல் நோயாளி சொன்ன கதைகள்�?மறுநாள் செவிலி வந்தவுடன், நடந்தவற்றை எலும்பு நோயாளி கூறினார்..செவிலி, எலும்பு நோயாளிக்கு ஊசி மூலம் மருந்தை ஏற்றியபடியே சொன்னாள்.."நீங்கள் பார்க்கும் சுவர் கூட அவருக்கு தெரிந்திருக்காது.. புற்றுநோயின் தாக்கத்தால் அவர் பார்வையை எப்போதோ இழந்துவிட்டிருந்தார்..!"நீதி : தன் துன்பங்களை மறைத்துக் கொண்டு மற்றவர்களை உற்சாகப்படுத்தும் மிகச்சில மனிதர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அவர்களைப் போற்றாவிட்டாலும் பரவாயில்லை.. குறை கூறாதீர்கள்..! .