அறிவுக்கு விருந்து – 12.12.2019 (வியாழன்)
வரலாற்றில் இன்று - டிசம்பர் 12 (December 12) கிரிகோரியன் ஆண்டின் 346 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 347 ஆம் நாள்.
நிகழ்வுகள்
·
884 – மேற்கு பிரான்சிய மன்னர் இரண்டாம் கார்லமோன் வேட்டையாடும்
போது நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார்.
·
1098 – முதலாம் சிலுவைப் போர்:
சிரியாவின்
மாரட்-அல்-நூமன் நகரை திருத்தந்தை
இரண்டாம் ஏர்பனின் படைகள் தாக்கி 20,000 பொதுமக்களைக் கொன்றனர்.
·
1817 – நியூ சவுத் வேல்ஸ்
ஆளுநர் லக்லான் மக்குவாரி
ஆஸ்திரேலியா
என்ற பெயரை காலனித்துவ அரசுக்கு பரிந்துரைத்தார்.
·
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்:
யாசூ ஆற்றில் ஐக்கிய அமெரிக்காவின்
கைரோ என்ற
ஆயுதம் தாங்கிக் கப்பல் கண்ணிவெடியில் சிக்கி மூழ்கியது.
பிறப்புகள்
இறப்புகள்
சிறப்பு நாள்
- விடுதலை நாள் (கென்யா, பிரித்தானியாவிடம் இருந்து 1963)
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
கலைஞர்
மு.கருணாநிதி உரை: பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும். ஏற்கனவே
செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும்.
மு.வரதராசனார் உரை:பணிவுடையவராக ஒழுகுதல்பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும்.
Translation:
To all humility is goodly grace;
but chief to them
With fortune blessed, -'tis fortune's diadem.
With fortune blessed, -'tis fortune's diadem.
Explanation:
Humility is good in all; but
especially in the rich it is (the excellence of) higher riches.
சிந்தனைக்கு:
நல்ல
நேரம்
நல்ல
நேரம்
பார்த்து தான்
வரும்
நீ
பார்க்க தேவையில்லை.
தமிழ் அறிவோம்: ஒத்தச் சொற்கள்
கடை......கடை, கடைசி
பால்.....பால், .இனம்
விடுகதை
விடையுடன்
தண்ணீர் கடல்
மேலே தாம்பாளத் தட்டு
மிதக்குது. அது
என்ன? நிலா
பழமொழி- ஞானமும் கல்வியும் நாழி
அரிசியிலே.
பொருள்/Tamil Meaning
ஞானத்துக்கும் கல்விக்கும் உணவு மிக முக்கியம்.
ஞானத்துக்கும் கல்விக்கும் உணவு மிக முக்கியம்.
Transliteration
nganamum kalviyum naali ariciyile.
nganamum kalviyum naali ariciyile.
தமிழ் விளக்கம்/Tamil Explanation
திருமூலரின்
உடம்பார் அழியின் உயிரார் அழிவார்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே,என்ற பாடல் இதே கருத்தை வலியுறுத்துகிறது.
திருமூலரின்
உடம்பார் அழியின் உயிரார் அழிவார்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே,என்ற பாடல் இதே கருத்தை வலியுறுத்துகிறது.
Enrich your vocabulary
Proverb Always put your best foot forward.
Try as hard as
you can or give your best.
Example:
You need to put your best foot forward in the interview if you want to land
that job.
Opposite Words
Lazy X
Diligent
- He felt too lazy to get out of bed.
- She is a diligent student.
Lazy X
Industrious
- He felt too lazy to get out of bed.
Most of the students I knew at college were serious
and industrious.
மொழிபெயர்ப்பு
மெல்லிய அவரை
|
|
முருக்கங்காய்/ முருங்கைக்காய்
|
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl
+ V
|
பைலை மற்றும் எழுத்தை பேஸ்ட் செய்ய
|
Ctrl
+ W
|
தற்போது ஓபன் செய்துள்ள பைலை-ஐ கிளோஸ் செய்யலாம்.
|
இனிக்கும் கணிதம் .. கால அளவு..
60 விநாடி = 1 விநாடி-நாழிகை
2 1/2 நாழிகை = 1 ஓரை
அறிவியல் அறிவோம்
* மின்தடையை அளக்க உதவும் அலகு - ஓம்
* எல்லா வெப்ப நிலைகளிலும் நடைபெறுவது - ஆவியாதல்
தினம்
ஒரு மூலிகை சாலமிசிரி:சாலமிசிரி (Eulophia) என்பது மருத்துவக் குணம் கொண்ட பூக்கும் தாவரம் ஆகும். இவற்றில் 165 வகையான தாவரங்கள் உலகில் காணப்படுகிறது.
ஆப்பிரிக்கா, இந்தியா, போன்ற நாடுகளின் மழைக்காட்டுப்பகுதிகளில் அதிகளவில் காணப்படும் இவை தொட்டிகளில் அலங்காரத் தாவரமாக வளர்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியிலும்அமெரிக்காவின் பல பகுதிகளிலும் உலர்ந்த நிலங்களிலும் கூட இத்தாவரம் வளருகிறது.
உணவு – இன்றியமையாத
கொழுப்பு அமிலங்கள் :
பாலி
அன்சாச்சுரேட்டட் அமிலங்களாவன லினோலியிக், லினோலினிக் மற்றும் அரக்கிடானிக் அமிலங்கள் போன்றவை இன்றியமையாத கொழுப்பு அமிலங்கள் என
அழைக்கப்படுகின்றன. இது
உடலினால் உருவாக்க முடியாது. எனவே
உணவின்
மூலம்
வழங்கப்பட வேண்டும். இது
வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு முக்கியமானது.
வரலாற்றுச் சிந்தனை
# எந்த நூற்றாண்டில் ஹரியாங்க வம்சத்தவர்கள் ஆட்சி செய்தனர்?
கி.மு. ஆறாம் நூற்றாண்டு
# சீக்கியர்களின் ஒன்பதாவது குருவான “தேஜ்பகதூரை” கொன்ற முகலாயப் பேரரசர் - ஔரங்கசீப்
தன்னம்பிக்கை கதை- புத்திசாலி குரங்குகள்
வணக்கம்
குழந்தைகளே !
இப்பொழுது இந்த கோமாளி குரங்குகள் உங்களுக்கு அவர்களுடைய குறும்புகளை பாட்டாக பாடி ஆடி காண்பிக்க போகினறன! எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும்
வாலு
பெரிசா குரங்கு குட்டிக்கு இந்த வால் பெரிசா…?
அடிக்குது பாரு கரணம்,
ஐசைலக்கடி அம்மா…ஐசைலக்கடி அம்மா..
ஐசைலக்கடி அம்மா…ஐசைலக்கடி அம்மா..
பாருங்கள் குரங்கு போகிறவர்களை எல்லாம் எப்படி வம்புக்கு இழுக்கிறது என்று பாருங்கள்..
அடடா தலையில் வாழை பழத்துடன் நடந்து போகையிலே
அடடா தலையில் வாழை பழத்துடன் நடந்து போகையிலே
கூடையில் உள்ள பழத்தை எடுத்து போகிறதே
அந்த
அம்மா என்ன செய்வார்கள்?
குழந்தைகள் : அச்ச்ச்ச்சோ…. கத்துவார்கள்..
கோமாளி குரங்கு : நாங்கள் என்ன செய்வோம் ?
குழந்தைகள் : பழத்தை பிச்சி பிச்சி தின்னுவீர்கள்.
கோமாளி : கரெக்ட்… இங்க பாருங்க இப்படித்தான் அந்த பழத்தை சாப்பிடும் (கோமாளி குரங்கு பழத்தை சாப்பிடுவது போல செய்து காட்டுகிறார்)
குழந்தைகள்: கை கொட்டி சிரிக்கிறார்கள்.
கோமாளி: ஸ்..ஸ்..சத்தம் போடாதீர்கள் புலியார் வருகிறார் பாருங்கள்
(புலி ஒன்று நடந்து வருகிறது)

கோமாளி:
புலியார் எப்படி உறுமுவார்
குழந்தைகள்: உர்..உர்..உர்…
கோமாளி குரங்கு: ஆம்..இப்ப பாருங்க புலி எப்படி உறுமுதுன்னு..ர்…ர்…ர்….ர்ர்ர்
கோமாளி குரங்கு : அடடா அங்க ஒரு மான் குட்டி வந்துடுச்சே?
குழந்தைகள்: உர்..உர்..உர்…
கோமாளி குரங்கு: ஆம்..இப்ப பாருங்க புலி எப்படி உறுமுதுன்னு..ர்…ர்…ர்….ர்ர்ர்
கோமாளி குரங்கு : அடடா அங்க ஒரு மான் குட்டி வந்துடுச்சே?
குழந்தைகள் : அய்ய்யோ புலி மான் குட்டியை பிடிச்சிடுமே
கோமாளி குரங்கு: அட ஆமா இப்ப என்ன பண்ணறது தெரியலையே?
குழந்தைகள் “குரங்காரே எப்படியாச்சும் மான் குட்டியை காப்பாத்துங்களேன்
கோமாளி குரங்கு: நீங்கதான் எங்களை குறும்புக்காரங்கன்னு சொல்லுறீங்களே?
குழநதைகள்: நீங்க குறும்பு பண்ணுனாலும், பரவாயில்லை, எப்படியாச்சும் மான் குட்டியை காப்பாத்துங்க?
கோமாளி குரங்கு :அப்படியா அப்ப எங்களுக்கு என்ன கொடுப்பீங்க?
குழந்தைகள் “ ஒரு சீப்பு வாழைப்பழம் கொடுக்கிறோம்.
கோமாளி குரங்கு : சரி..இப்ப பாருங்க.

சட்டென
குரங்கார் முன்னே சென்று புலியாரே வணக்கம் என்றது
வணக்கம் உனக்கு என்ன வேணும்?புலியார் உறுமியது
ஐயா இப்பத்தான் ஒரு புலியார் எங்களை எல்லாம் மிரட்டிட்டு போனார்
என்னையத்தவிர இன்னொரு புலியா?
ஆமாய்யா பயத்துடன் சொன்னது?
எங்க அது?
இப்பத்தான் முன்னாடி போச்சுங்க, இப்ப வேகமா போனா அதை பிடிச்சுடலாம்.
இப்பவே போறேன், புலியார் உறுமிக்கொண்டு பாய்ந்து சென்றது
கோமாளி குரங்கு: அப்பாடி மான் தப்பிச்சுது, சந்தோசத்துடன் சொன்னது.

புத்தி
இருந்தால் எவ்வளவு ஆபத்து இருந்தாலும் பிழைத்துக்கொள்ளலாம்.
புரிந்து கொண்டீர்களா? எங்களை குறும்பு செய்பவர்கள் என்று மட்டும் நினைக்காதீர்கள், நாங்கள் புத்திசாலிகள் கூட, தெரியுமா குழந்தைகளே!!
விஞ்ஞானம் அறிவோம் https://www.youtube.com/watch?v=fLYnXkrpne8
இணையம் அறிவோம் https://picpanzee.com/vaanaviyal.arputhangal
தொகுப்பு