வரலாற்றில்
இன்று -டிசம்பர் 9 (December 9) கிரிகோரியன் ஆண்டின்
343 ஆம்
நாளாகும். நெட்டாண்டுகளில்
344 ஆம்
நாள்.
நிகழ்வுகள்
·
536 – பைசாந்தியத்
தளபதி பெலிசாரியசு உரோம்
நகரை ஊடுருவினான். கோத்திக்குப் படைகள் தலைநகரை விட்டு வெளியேறின.
·
1582 – பிரான்சில்
கிரெகொரியின் நாட்காட்டி
அறிமுகப்படுத்தப்பட்டது. டிசம்பர் 9 இற்குப் பின்னர் நேரடியாக டிசம்பர் 20 இற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது.
·
1688 – மாண்புமிகு புரட்சி:
ரெடிங் சமரில் வில்லியமின்
படைகள் யாக்கோபுவின் படைகளைத் தோற்கடித்தன. இரண்டாம் யேம்சு
நாட்டை விட்டு வெளியேறினான்.
·
1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்:
பிரித்தானியப் படைகள் பெரும் பாலத்தில் நடந்த சமரில் தோல்வியடைந்தன. பிரித்தானியா விரைவில் வர்ஜீனியாவில்
இருந்து வெளியேறியது.
·
1793 – நியூயோர்க் நகரின்
முதலாவது நாளிதழ் "தி அமெரிக்கன் மினெர்வா" நோவா வெப்சுடரினால்
வெளியிடப்பட்டது.
பிறப்புகள்
இறப்புகள்
சிறப்பு நாள்
- விடுதலை நாள் (தன்சானியா, பிரித்தானியாவிடம் இருந்து 1961)
- பன்னாட்டு ஊழலுக்கு எதிரான நாள்
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
கலைஞர்
மு.கருணாநிதி உரை: மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும். அடக்கத்தைவிட ஆக்கம் தரக் கூடியது வேறொன்றும்
இல்லை.
மு.வரதராசனார் உரை:அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட
ஆக்கம் உயிர்க்கு இல்லை.
Translation:
Guard thou as wealth the power of
self-control;
Than this no greater gain to living soul!.
Than this no greater gain to living soul!.
Explanation:
Let self-control be guarded as a
treasure; there is no greater source of good for man than that.
சிந்தனைக்கு:
விட்டுக்கொடு விருப்பம் நிறைவேறும்
தட்டிக்கொடு தவறு
குறையும்
மனம்
விட்டு
பேசு
அன்பு
பெருகும்.
தமிழ் அறிவோம்: ஒத்தச் சொற்கள்
ஆடு..மிருகம், நடனம்
அன்னம்...உணவு,பறவை
விடுகதை
விடையுடன்
கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால்
கண்ணீரும் கம்பலையும்தான்?
வெங்காயம்
பழமொழி- போதும் என்ற மனமே பொன்
செய்யும் மருந்து.
பொருள்/Tamil Meaning இருப்பதே போதும்
என்று
திருப்தியுற்ற மனமே
அது
தொட்டதெல்லாம் பொன்னாக்கும் மருந்து ஆகும்.
Transliteration Pothum enra maname pon ceyyum marunthu.
தமிழ் விளக்கம்/Tamil Explanationரஸவாதத்தால் உலோகங்களைப் பொன்னாக்கும் முயற்சி உலகெங்கும் முயற்சிக்கப்பட்ட ஒன்று.
ஆனால்,
அப்படிப் பொன்னாக்க முயல்வது பேராசையின் அறிகுறி. அதைவிட,
இருப்பதே போதும்,
தேவையானது தேவையான நேரங்களில் வந்துசேரும் என்ற
மனம்
இருந்தால் அந்த
ரஸவாதம் மற்ற
உலோக
மனங்களையும் பொன்னாக்க வல்லது.
Enrich your vocabulary
weed களையெடு
|
Proverb All’s well that ends well.
As long as the
outcome is good, problems on the way don’t matter.
Example:
I’m glad you finally got here, even though your car had a flat tire on the way.
Oh well, all’s well that ends well.
Opposite Words
Junior
X Senior
- She started work as a junior reporter on a local newspaper.
- He’s a senior executive at Volkswagen.
Justice
X Injustice
- Children have a strong sense of justice.
- The movie deals with injustices suffered by Native Americans.
மொழிபெயர்ப்பு
ஒரு
வகை
அவரை
|
|
வட்டுக்காய்
|
கணினி ஷார்ட்கட் கீ
Save - Ctrl-S
|
Save - Ctrl-S
|
Print - Ctrl-P
|
Print - Ctrl-P
|
இனிக்கும் கணிதம் .. கால அளவு..
2 கண்ணிமை = 1 நொடி 2
கைநொடி = 1 மாத்திரை
அறிவியல் அறிவோம்
* விழிப்படலத்தில் புண்கள் தோன்றி நோய் தொற்று ஏற்படும் நிலை- கெரட்டோமலேசியா
*ஐஸ்கிரீம் உருகுதல் எத்தகைய மாற்றத்திற்கு உதாரணம் - இயற்பியல் மாற்றம்
தினம் ஒரு மூலிகை செவ்வள்ளி, அல்லது இராசவள்ளி
தினம் ஒரு மூலிகை செவ்வள்ளி, அல்லது இராசவள்ளி
செவ்வள்ளி, அல்லது இராசவள்ளி (DIASCOREA PURPUREA) இது பூக்கும் தாவர வகையைச் சார்ந்த கொடி ஆகும். இதன் வேர்ப் பகுதியில் கிழங்கு உற்பத்தி யாகிறது.
இக்கொடியில் கிடைக்கும் கிழங்கு சீனிக்கிழங்கைப் போல் உணவுப் பொருளாகப்பயன்படுகிறது. இதன் கிழங்கு இளம் சிவப்பு நீல வண்ணம் (Lavender (color)) கொண்டதாக உள்ளது. ஒரு சில இடங்களில் மதில் சுவரில் தோரணம் போல் வளர்க்கப்படுகிறது.
உணவு – மாவுச்சத்தின்
வேலைகள்
1 கிராம் மாவுச்சத்து 4 கலோரிகளைக் கொடுக்கிறது.
மாவுச்சத்து தினசரி
தேவைகளில் 50% அல்லது
அதற்கு
அதிகமான அளவு
பூர்த்தி செய்கிறது.
சாதாரணமான உணவில்
10% புரதத்தினாலும், 20 - 25% கொழுப்பினாலும் மீதமுள்ள 65-75% கார்போ ஹைட்ரேட்டினாலும் ஆக்கப்பட்டுள்ளது. கொழுப்பு சிதைவுறுவதற்கு கார்போஹைட்ரேட்டுகள் பயன்படுகின்றன. இவை
கொழுப்பு அதிகமாக சிதைவுறுவதைத் தடுத்து கீட்டோஸிஸ் (Ketosis) உருவாவதைத் தடுக்கிறது. இவை
புரதங்கள் சிதைவுறுவதைத் தடுக்கிறது. கார்போஹைட்ரேட் இல்லாத
நிலையில் புரதம்
ஆற்றல்
மூலமாகப் பயன்படுத்தப்படுகிறது.
செல்லுலோஸ் என்ற
வடிவில் கார்போஹைட்ரேட்டுகள் குடலிலிருந்து கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.
வரலாற்றுச் சிந்தனை
# உலகிலேயே
வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).
# உலகிலேயே
குளிந்த இடம் சைபீரியா (ரஷ்யா).
தன்னம்பிக்கை கதை- நல்ல சம்பளம்!
ஏண்டா!… வயசு இருபதாகுது!…… படிப்பு
தான் ஏறலை…எட்டாவதோடு நின்று
விட்டாய்….. ஏதாவது ஒரு கடையில் ஒரு
வேலை தேடிக் கொள்ள துப்பு இல்லே? …காலங்காத்தாலே தோட்டத்திற்கு வந்து வக்கணையா இளநீர் சீவி குடித்துக் கொண்டிருக்கிறாய்?….”
“அப்பா!…இன்னையோட இந்த பேச்சை வுட்டு
விடு!… நானும் மெட்ராஸில் வேலை தேடிக் கொண்டேன்
…புதன் கிழமை நான் அங்கு போய்
வேலையை ஏத்துக்கப் போறேன்!..”
“இவரு பெரிய ஐ.ஏ. எஸ். படிச்சிருக்கிறாரு…
இவருக்கு மெட்ராஸில் கூப்பிட்டு வேலை தருகிறாங்களாம்!..”
“அப்பா! என் படிப்பை பற்றியே
அடிக்கடி பேசாதீங்க!..நீங்க என்ன படிச்சிருக்கீறீங்க?….என்ன சர்வீஸ்…என்ன சம்பளம் வாங்கறீங்க?…”
“நான் பி.காம்
படிச்சிருக்கிறேன்..பதினைந்து வருஷ சர்வீஸ்… இப்ப
சம்பளம் இருபத்தி ஜந்தாயிரம் ரூபாயாக்கும்!..”
“இதை பெருமையா சொல்லாதீங்க!.
நான் எட்டாவது தான்…என் ஆரம்ப
சம்பளம் எவ்வளவு தெரியுமா?… முப்பதாயிரம் ரூபாய்!…”
“சும்மா உளறாதே!..”
“நான் காலையில் தான்
மெட்ராஸில் பேசி என் வேலையையும்
சம்பளத்தையும் உறுதி செய்து கொண்டேன்..புதன் கிழமை நல்ல நாள் வந்து
வேலையை ஏற்றுக் கொள்ளச் சொல்லியிருக்காங்க!…. இந்த விளம்பரத்தை ஒழுங்காகப்
படிச்சு பாருங்க!… அவங்க கிட்டத்தான் காலையில் போனில் என் வேலை சம்பளம்
எல்லாம் பேசி முடிவு செய்தேன்!..”
என்று அலட்சியமாக மகன் நீட்டிய அந்த
தமிழ் பேப்பரை வாங்கி படித்தான் பரமசிவம்!
வரி விளம்பரத்தில் இப்படி
போட்டிருந்தது!
‘இளநீர் சீவ சம்பளம் ரூ
20,000 to 30,000 .61|31 பீமன்னா
1st St ஆழ்வார்பேட்டை என்றுதொலை பேசி எண் கொடுத்திருந்தார்கள்!’
“அவங்க கிட்ட என்ன பேசினே?”
“நான் நிமிஷத்திற்கு ஒரு
இளநீர் சீவுவேன்.. சம்பளம் 20,000 கட்டாது.. 30,000 தருவதாக இருந்தால் வந்து இளநீர் சீவித் தருவேன்! என்று சொன்னேன்! உடனே புறப்படு வரச்
சொல்லிட்டாங்க!…படிச்ச உங்களால் தான் ஒரு ஆயிரம்
ரூபாய் சம்பளம் சேர்த்து கேட்க துப்பு இல்லே!…நான் வேலைக்குப் போகும்
முன் பத்தாயிரம் சேர்த்து கேட்டு வாங்கப் போறேன்!…” என்றான் அடுத்த இளநீரை சீவிக் கொண்டே!
விஞ்ஞானம் அறிவோம் / செய்துபார்த்து அறிவோம்
தொகுப்பு
No comments:
Post a Comment