அறிவுக்கு விருந்து – 06.12.2019 (வெள்ளி)



அறிவுக்கு விருந்து – 06.12.2019 (வெள்ளி)
வரலாற்றில் இன்று -டிசம்பர் 6 (December 6) கிரிகோரியன் ஆண்டின் 340 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 341 ஆம் நாள்

நிகழ்வுகள்

·  963எட்டாம் லியோ உரோம் நகரின் எதிர்-திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
·  1060முதலாம் பேலா அங்கேரியின் மன்னனாக முடிசூடினாr.
·  1240உக்ரைனின் கீவ் நகரம் படு கான் தலைமையிலான மங்கோலியரிடம் வீழ்ந்தது.
·  1704முகாலய-சீக்கியப் போரில், சீக்கிய கால்சாக்கள் முகாலய இராணுவத்தினரைத் தோற்கடித்தனர்.
·  1768பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் முதற் பதிப்பு வெளியிடப்பட்டது.
·  1790ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் நியூயோர்க் நகரில் இருந்து பிலடெல்பியாவுக்கு இடம்பெயர்ந்தது.
·  1877தி வாசிங்டன் போஸ்ட் செய்திப்பத்திரிகையின் முதலாவது இதழ் வெளிவந்தது.
·  1884வாசிங்டன் நினவுச்சின்ன அமைப்பு வேலைகள் முடிவடைந்தது.
·1897வாடகை வாகனங்கள் உலகில் முதற்தடவையாக லண்டனில் சேவைக்கு விடப்பட்டன.
·  1907மேற்கு வர்ஜீனியாவில் மொனொங்கா என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 362 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
·  1916முதலாம் உலகப் போர்: மைய சக்தி நாடுகள் புக்கரெஸ்ட் நகரைக் கைப்பற்றின.

பிறப்புகள்

·  1698அந்தனி மூயார்ட், ஒல்லாந்த இலங்கையில் யாழ்ப்பாணத்தின் கட்டளை அதிகாரி
·  1732வாரன் ஹேஸ்டிங்ஸ், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் வங்காளத்தின் முதல் தலைமை ஆளுநர் (. 1818)
·  1792இரண்டாம் வில்லியம், நெதர்லாந்து மன்னர் (. 1849)
·  1823மாக்ஸ் முல்லர், செருமானிய-ஆங்கிலேய மொழியியலாளர் (. 1900)
·  1863சார்லஸ் மார்ட்டின் ஹால், அமெரிக்க வேதியியலாளர், பொறியியலாளர் (. 1914)
·  1892ருக்மிணி லட்சுமிபதி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (. 1951)
·  1918ஆர்வி, தமிழக எழுத்தாளர் (. 2008)

இறப்புகள்

·  343நிக்கலசு, கிரேக்க ஆயர், புனிதர் (பி. 270)
·  1788நிக்கோல்-ரெயின் லெப்பாட், பிரான்சிய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1723)
·  1868ஆகஸ்ட் சிலெய்ச்சர், செருமானிய மொழியியலாளர் (பி. 1821)
· 1889ஜெபர்சன் டேவிஸ், அமெரிக்க அரசியல்வாதி, அமெரிக்கக் கூட்டமைப்பின் தலைவர்
·  1892வெர்னர் வொன் சீமன்சு, செருமானியப் பொறியியலாலர் (பி. 1816)
·  1956அம்பேத்கர், இந்தியப் பொருளியலாலர், அரசியல்வாதி (பி. 1891)
·  1961பிரன்சு ஃபனோன், பிரான்சிய மருத்துவர் (பி. 1925)

சிறப்பு நாள்

  • விடுதலை நாள் (பின்லாந்து, உருசியாவிடம் இருந்து 1917)
 குறளறிவோம்-  120. அடக்கமுடைமை
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்.
மு.வரதராசனார் உரை:அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.
Translation: Control of self does man conduct to bliss th' immortals share;
Indulgence leads to deepest night, and leaves him there.
Explanation: Self-control will place (a man) among the Gods; the want of it will drive (him) into the thickest darkness (of hell).
சிந்தனைக்கு: மனித உறவுகளுக்குள் இடைவெளியை அதிகப்படுத்திய இரண்டு கருவிகள் - டிவியும் செல்போனும் தான்...

தமிழ் அறிவோம்: ஒத்தச் சொற்கள்
திங்கள்: சந்திரன், மாதம்        வலி: வலிமை, நோவுமாலை - பூமாலை, நேரம் அல்லது பொழுது.

விடுகதை விடையுடன்
நான் பார்த்தால் அவன் பார்ப்பான், நான் சிரித்தால் அவன் சிரிப்பான் அவன் யார்? முகம் பார்க்கும் கண்ணாடி

பழமொழி- அரிவாள் சூட்டைப்போல காய்ச்சல் மாற்றவோ?
பொருள்/Tamil Meaning வெய்யிலில் சூடான அரிவாள் தண்ணீர் பட்டால் குளிரும். உடல் ஜுரம் அதுபோல ஆறுமா?
Transliteration Arival soottaippola kaayccal marravo?
தமிழ் விளக்கம்/Tamil Explanationஇது ஒரு முட்டாளைக்குறித்துச் சொன்னது. ஒரு முட்டாள் வெய்யிலில் சூடான ஒரு அரிவாளைப் பார்த்தானாம். அதற்கு ஜுரம் என்று எண்ணி அவன் அதைக் குளிர்ந்த நீரில் நனைக்கவே, அந்தஜுரம்போய் அது மீண்டும் குளிர்ச்சியானதாம். வீட்டில் ஒருநாள் அவன் தாயாருக்கு ஜுரம் வந்தபோது அவன் அவளைக் குளிர்விப்பதற்காக ஒரு குளத்தில்போட, தாயார் குளத்தில் மூழ்கி இறந்தாளாம்.

Enrich your   vocabulary
wear  அணி , உடு , தாங்கு , உபயோகி
weave  நெசவு நெய் , வலை பின்னு
wed  மணந்து கொள், மணம் புரி

Proverb All good things come to an end.

Good experiences eventually come to an end.
Example: I was so sad to graduate from college and separate from my friends, but I’ve to realize that all good things come to an end.

Opposite Words 

Instructor X Pupil
  • I managed to find a very good driving instructor.
  • The new law reduces the number off pupils per class in the first four years of schooling.
Joy X Grief
  • I leaped into the air with joy.
  • Charles was overcome with grief.
  •  
மொழிபெயர்ப்பு
Snake bean/ Long bean
பயத்தங்காய்
Snake Gourd
புடலங்காய்

கணினி ஷார்ட்கட் கீ
Shift + Alt + T
தற்போதைய நேரத்தைச் சேமிக்கும்.
Alt + mouse
இரட்டை சொடுக்கம் தேர்ந்தெடுத்த உருப்படிகளின் பண்புகளை காணவும். உதாரணமாக, ஒரு அட்டவணையில் இதைச் செய்வதன் மூலம் செல் அந்த பண்புகளை காண்பிக்கும்.
இனிக்கும் கணிதம்      .. பெய்தல் அளவு..
48 96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி

அறிவியல் அறிவோம்
அதிக நீர் அருந்தும் நிலையின் பெயர் - பாலிடிப்சியா
கண் லென்சின் ஒளிபுகும் தன்மை குறைபாட்டினால் உண்டாகும் நோய் – கண்புரை

தினம் ஒரு மூலிகை ஞாழல் மரம் ( அ ) புலிநகக் கொன்றை :
ஞாழல்மரம்பொன்னாவரசு அல்லது புலிநகக்கொன்றை (ஆங்கிலத்தில் tigerclaw treeCassia Sophera / Senna sophera) என்னும் பெயர் கொண்டு விளங்குகிறது. இதன் பூக்கள் ஐயவி என்னும் வெண்சிறு கடுகு போல் இருக்கும். எல்லா நிலங்களிலும் பூக்கும் என்றாலும் நெய்தல் நிலத்தில் மிகுதி. இது இரு நிறங்களில் பூக்கும். பொன்னிறத்தில் மற்றும் செந்நிறத்திலும் இது பூக்கும்.  செந்நிற ஞாழலின் கிளைகள் கருநிறம் கொண்டவை. ஞாழல் ஏனோன்(சாமன்) நிறத்தில் (செந்நிறத்தில்) பூக்கும்,

உணவு     மனிதனின் ஆற்றல் சிதைவுறுதலைப் பாதிக்கும் காரணிகள்
பெக்டின் : இது சிட்ரஸ் பழங்களிலும், பச்சைப் பட்டாணியிலும், கேரட்டிலும் காணப்படுகிறது. இது வயிற்றுப்போக்கினை குணப்படுத்த பயன்படுகிறது.
கோந்து (Gum) : இது முழு கோதுமை, கம்பு, பீச், பேரிக்காய், பிளம்ஸ் மற்றும் முதிர்ந்த காய்கறிகளில் காணப்படுகிறது.

வரலாற்றுச் சிந்தனை 
# முதல் டிரக்டர் 1900 ஹால்ட் என்பவரால் செய்யப்பட்டது.
# முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா.
# ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.
தன்னம்பிக்கை கதை-  குரங்கு அறிஞர் !
ஒரு அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் அறியாமல், அரக்கர்கள் இருந்த பள்ளத்தாக்கை தன் இடமாகத் தேர்ந்தெடுத்தார். கோபமடைந்த ஒரு அரக்கன் அவரைப் பார்த்துக் கேட்டான்.
“”யார் நீ? இந்த அமைதியான பள்ளத்தாக்கை கெடுக்க வந்தாயா?” என்றான். “”தயவு செய்து என்னை மன்னித்து விடு. நான் ஒரு அறிஞன். அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். அதனால், இங்கு வந்தேன்!” என்றார்.
“”இதற்கு ஒரு விலை நீ கொடுக்க வேண்டும். நான் உன்னைக் குரங்காக மாற்றி விடுவேன். அதுதான் உனக்குத் தண்டனை!” என்று அந்த அரக்கன் கூறினான். அடுத்த கணம், அந்தக் அறிஞர் குரங்காக மாறிவிட்டார். அவர் விம்மி விம்மி அழுதார். ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவிக் கொண்டிருந்தார். குரங்குகளைப் போல் பழங்களைத் தின்று வந்தார்.
அவர் நகரத்தை அடைந்தார். அங்கு ஒரு கப்பல் பாக்தாத் பட்டணத்திற்குப் புறப்பட இருந்தது. அவர் அதில் தாவி ஏறினார். அதிலிருந்த பயணிகள் கூச்சலிட ஆரம்பித்தனர். “”குரங்கை வெளியே அனுப்புங்கள்; கொன்றுவிடுங்கள்!” என்று கத்தினர்.
கப்பலின் தலைவன் அந்த விலங்கிற்காக வருத்தப்பட்டுச் சொன்னார். “”வேண்டாம். அதுவும் நம்முடன் வரட்டும். யாருக்கும் அது தொந்தரவு தராதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன்!” அந்தக் குரங்கு கப்பல் தலைவனுக்கு நன்றி உடையவனாய் இருந்தது. பாக்தாத்தில் ஒரு செய்தி பரவி இருந்தது. அரசருக்கு ஆலோசனை கூறுபவர் இறந்துவிட்டதாகவும், அரசர் அந்த இடத்திற்குத் தகுந்த ஆளைத் தேர்ந்தெடுக்க விரும்புவதாகவும் அறிவித்திருந்தார். இப்பதவியை விரும்புவோர் ஏதேனும் ஒரு செய்தியைத் தகுந்த முறையில் எழுதி அனுப்பலாம். அவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளதோ, அதை எழுதியவர் ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
அந்தக் குரங்கு அறிஞரும் செய்தியை எழுதினார். அரசருடைய சேவகர்களும், மற்றவர்களும் நகைத்தனர். “”இங்கே வேடிக்கையைப் பார். இந்தக் குரங்கு அரசருக்கு ஆலோசகராகப் போகிறதாம்!” என்று கேலி செய்தனர். ஆனால், எல்லாச் செய்திகளும் அரசரிடம் எடுத்துச் செல்லப்பட்டன. அரசர் எல்லாவற்றையும் படித்தார். அந்தக் குரங்கின் செய்தி மிகவும் நன்றாக இருந்தது.
அந்தக் குரங்கை நேர்முகத் தேர்விற்காக அரசர் வரச் சொன்னார். அக்குரங்கு நல்ல கம்பீரமாக உடையணிந்து குதிரைமேல் ஏறி, பாக்தாத் தெருக்களில் ஊர்வலமாக வந்து அரசரைச் சந்தித்தது. அரசவையில் அதனிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அது எல்லாக் கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான சரியான விடைகளைக் கூறியது. அரசருக்கு அதை மிகவும் பிடித்து விட்டது. ஆனால், மந்திரிகள் தடுத்தனர். “”எப்போதும் அதனால் பேச முடியாது. எப்படி ஒரு குரங்கு தலைமை ஆலோசகர் ஆகமுடியும்?” என்றனர்.
அரசர் தீர்மானமாக இருந்ததால் அவர் குரங்கையே தலைமை ஆலோசகராக நியமித்தார். அவருடைய புதல்வி, இளவரசி இந்தக் குரங்கு உண்மையில் குரங்கு அன்று. ஏதோ அரக்கர்களின் மாயத்தால் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தாள். அரக்கர்கள், அவர்களின் மந்திர வித்தைகள் போன்றவற்றை அவள் படித்துள்ளாள். அந்த மந்திரத்தால் குரங்குத்தன்மை மாறும்படி செய்தாள். அறிஞர் தன் பழைய நிலையை அடைந்தார். அவர் இளவரசிக்கு நன்றி கூறினார். பல ஆண்டுகள் அங்குத் தங்கி நன்றியறிதலோடு அரசருக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.
நீதி: அறிவுடையோர் எவ்வுருவில் இருந்தாலும் மதிக்கப்படுவர்.

விஞ்ஞானம் அறிவோம் / செய்துபார்த்து அறிவோம்
https://www.youtube.com/watch?v=6gAkpgk6_0s&t=6s
இணையம் அறிவோம் https://owlcation.com/stem/top-10-science-experiments-to-try-at-home  
செயலி  https://play.google.com/store/books/details/DR_C_L_GARG_71_10_New_Science_Projects_Tamil?id=8dIoDwAAQBAJ   
தொகுப்பு
https://kanchidigitalteam.blogspot.com/2019/12/05122019.html



No comments:

Post a Comment