அறிவுக்கு விருந்து – 04.12.2019 (புதன்)


அறிவுக்கு விருந்து – 04.12.2019 (புதன்)


வரலாற்றில் இன்று -டிசம்பர் 4 (December 4) கிரிகோரியன் ஆண்டின் 338 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 339 ஆம் நாள்

நிகழ்வுகள்

  1259பிரான்சின் ஒன்பதாம் லூயி, இங்கிலாந்தின் மூன்றாம் என்றி ஆகியோர் பாரிசில் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி, நார்மண்டி உட்பட ஐரோப்பாவில் உள்ள பிரெஞ்சுப் பகுதிகளுக்கு இங்கிலாந்து உரிமை கோருவதில்லை எனவும் ஆங்கிலேயப் புரட்சியாளர்களுக்கு லூயி ஆதரவு வழங்குவதில்லை எனவும் முடிவாகியது.
  1619 – 38 குடியேறிகள் வர்ஜீனியாவின் பெர்க்லியில் தரையிறங்கினர்.
  1639 – ஜெரிமையா ஹொரொக்ஸ் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார்.
  1791 – உலகின் முதலாவது ஞாயிறு இதழ் தி அப்சர்வர் வெளிவந்தது.
  1829 – ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த வங்காளத்தில் உடன்கட்டை ஏறல் முறையை ஒழிக்கும் சட்டத்தை தலைமை ஆளுநர் வில்லியம் பென்டிங்கு பிரபு கொண்டு வந்தார்.
  1865வட கரொலைனா, ஜார்ஜியா ஆகிய அமெரிக்க மாநிலங்கள் இரு வாரங்களில் அடிமைகள் அனைவரும் விடுவிக்கப்படுவர் என அறிவித்தன.
  1918முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அரசுத்தலைவர் ஊட்ரோ வில்சன் பிரான்சு சென்றார். பதவியில் உள்ள அமெரிக்கத் தலைவர் ஒருவர் ஐரோப்பா சென்றது இதுவே முதற் தடவையாகும்.

பிறப்புகள்

  1866வசீலி கண்டீன்ஸ்கி, உருசிய-செருமானிய ஓவியர் (இ. 1944)
  1875ரெய்னர் மரியா ரில்கே, ஆத்திரிய-சுவிட்சர்லாந்து கவிஞர் (இ. 1926)
  1888ரமேஷ் சந்திர மஜும்தார், இந்திய வரலாற்று அறிஞர் (இ. 1980)
  1889நீலகண்ட பிரம்மச்சாரி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1978)
  1892பிரான்சிஸ்கோ பிராங்கோ, எசுப்பானியாவின் பிரதமர் (இ. 1975)
  1893ஹச். பி. அரி கௌடர், இந்திய அரசியல்வாதி (இ. 1971)

இறப்புகள்

  கிமு 530சைரசு, பாரசீக மன்னர் (பி. கிமு 600)
  749தமாஸ்கஸ் நகர யோவான், சிரிய மதகுரு, புனிதர் (பி. 676)
  1131ஓமர் கய்யாம், பாரசீகக் கவிஞர், வானியலாளர் (பி. 1048)
  1576இரேடிக்கசு, ஆத்திரிய-சிலோவாக்கிய கணிதவியலாளர், நிலவைரையாளர்
  1679தாமசு ஆபிசு, ஆங்கிலேய மெய்யியலாளர் (பி. 1588)

சிறப்பு நாள்

 குறளறிவோம்-  119. நடுவு நிலைமை / Impartiality
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும். அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை.
மு.வரதராசனார் உரை:உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.
Translation: Inflexibility in word is righteousness,  If men inflexibility of soul possess.
Explanation:  Freedom from obliquity of speech is rectitude,if there be (corresponding) freedom from bias of mind.
சிந்தனைக்கு    உலகில் நடக்கும் அனைத்து சாதனைகளும் பல சமயம் பற்பல சோதனைக்கு உட்பட்டிருக்கும் எனவே எந்த ஒரு தோல்வியும் உன்னுடைய வருங்கால வெற்றிக்கான அறிகுறியே.
தமிழ் அறிவோம்ஒத்தச் சொற்கள்
திரை: அலை, திரைச்சீலை                                                          மறை: வேதம், மறைத்து வை
விடுகதை விடையுடன்
அரசன் ஆளாத கோட்டைக்கு பகல் காவல்காரன் ஒருவன், இரவுக் காவல்காரன் ஒருவன் அவர்கள் யார்? சூரியன், சந்திரன்
பழமொழி- இரிஷி பிண்டம் இராத் தாங்காது.
பொருள்/Tamil Meaning கருவாக நேற்று உருவான குழந்தை இன்று பிறந்ததுபோல.
Transliteration Irishi pintam iraath thaankathu.
தமிழ் விளக்கம்/Tamil Explanation ஒரு ரிஷியானவர் அவர் அன்னை அவரைக் கருத்தரித்த இரவிலிருந்து மறுநாள் விடிவதற்குள் பிறந்துவிடுவாராம்! எதிர்பார்த்தது நடக்கும் என்று தெரிந்தும் அதற்காக அவசரப் படுபவர்களைக் குறித்துச் சொன்னது
Enrich your   vocabulary
wax ஒளிமிகு
weaken பலவீனமாக்கு, சக்தி குறை
waylay ஒளிந்துதாக்கு

Proverb A journey of thousand miles begins with a single step.

Howsoever big a task is, it starts with a small step.
Example: I’m feeling overwhelmed by the prospect of completing 4,000-word paper by next week, but I guess I’ll start by writing 500 words every day. After all, a journey of a thousand miles begins with a single step.

Opposite Words 

Important X Trivial
  • Nothing could be more important to me than my family.
  • We were punished for the most trivial offences.
In X Out
  • He took us for a drive in his new car.
  • Charlotte went to the window and looked out.
மொழிபெயர்ப்பு
கடற்சிப்பிக்கோசு
ஒருவகை தண்டுக்கீரை
கணினி ஷார்ட்கட் கீ
Shift + F3
கேப்பிடல் லெட்டர் இருக்கும் டெக்ஸ்ட்- ஸ்மால் லெட்டராக மாற்றலாம், முதல் எழுத்து கேப்பிடலாக வர
Shift + F12
ஒரு டாக்குமெண்ட் சேமிக்க ctrl + s போல
இனிக்கும் கணிதம்      .. பெய்தல் அளவு..
2 உரி - 1 படி                                   8 படி - 1 மரக்கால்                                    2 குறுணி - 1 பதக்கு
அறிவியல் அறிவோம்
·         அளவுகோலின் அளவீடுகளை செங்குத்தாகப் பார்க்காததால் தோன்றும் குறை – 
இடமாறுதோற்றப்பிழை
·         கன அளவின் அலகு - மீ3
தினம் ஒரு மூலிகை சூர்நகம்
சூர்நகம் அல்லது பேய் நகம் (ஆங்கிலம்: Devil Claw (தாவரவியல் பெயர்: ஹர்பகோப்ஹைடும் (Harpagophytum), மேலும் பற்றிப்பிடி தாவரம் (grapple plant), மற்றும் மரச் சிலந்தி (wood spider) இவ்வாறானப் பெயர்களில் அழைக்கப்படும் இதுஎள் குடும்பத்தைச் சார்ந்த பேரின பூக்கும் தாவரமாகும்தென்னாப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட இத்தாவரம், தூண்டில் போன்ற பழத்தின் விசித்திரமான தோற்றத்தினால், "உம்மை பிசாசின் கூரிய நகம்" (devil's claw) என்னும் பெயராலும் பொதுவாக அழைக்கப்படுகிறது. ஒரு மூலிகைத் தாவரமான "பிசாசு நகச்செடி" கிரேக்கமொழியில் கொக்கிச்செடி (hook plant) எனக் கருதப்படுகிறது
உணவு     மனிதனின் ஆற்றல் சிதைவுறுதலைப் பாதிக்கும் காரணிகள்
டெக்ஸ்டிரின் (Dextrine)
உடலில் உணவு செரிமானத்தின் போது ஸ்டார்ச் மாஸ்டோஸாக மாறும்போது டெக்ஸ்ட்ரின் உருவாகிறது. விதைகள் முளைவிடும் போது மற்றும் சில சமையல் முறைகளிலும் டெக்ஸ்ட்ரின் உருவாகிறது.
 நார்ச்சத்துள்ள உணவுகள்
செல்லுலோஸ், பகுதி செல்லுலோஸ், கோந்து, மியூலேஜஸ், லிக்னின்கள்
வரலாற்றுச் சிந்தனை  நேருவின் முக்கியமான சாதனைகள்:
·         தீன் மூர்த்தி பவன் - நேரு பிரதமராக இருந்த காலத்தில் அவருடைய இல்லமாகவும், தற்போது அவர் நினைவாக அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
·         ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்தியாவின் பெருமை வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றைக செயல்பட்டு வருகிறது.

தன்னம்பிக்கை கதை- ஒரு வேளை

என்ன விளையாடுகிறீர்களா.. நீங்கள் சொல்வது சாத்தியமில்லாத விஷயம்” ”ஏன் கோபப்ப்டுகிறீர்கள்.. மொத்த விஷயமும் உங்கள் கையில் இருக்கிறது. நல்ல பரிசும் தயார். நீங்கள் ஒப்புக் கொள்ள தயங்குவதுதான் ஆச்சரியமாய் இருக்கிறது” “என்ன சொல்கிறீர்கள்.. இன்னும் 4 ரன்கள் அடித்தால் வெற்றி. அதுவும் நாளை போட்டியின் கடைசி தினம் ஐந்தாவது நாள். ஒரு நாள் முழுவது இருக்கிறது..”
ஆனால் உங்கள் ஒரு விக்கெட் தானே கைவசம் இருக்கிறது.. அதனால் தான் சொல்கிறேன்.. மொத்த விஷ்யமும் உங்கள் கையில் இருக்கிறது. தற்செயலாக நடப்பது போலச் செய்யமுடியும். ஒரு ரன் அவுட்.. ஒரு காட்ச் நீங்கள் விரும்பினால் நேரடியாக போல்ட் .. எப்படி வேண்டுமானாலும் .. “ “அது முடியும்.. ஆனால் நன்றாக யோசித்துப் பாருங்கள். நான் எங்கள் அணியின் மிக முக்கிய ஆட்டக்காரன்.. தோற்க இருந்த மேட்சை வெற்றிப் பாதையில் திசை திருப்பியிருக்கிறேன்.. இன்று பகலிலேயே ஆட்டத்தை முடித்திருக்கலாம்.. வெளிச்சம் போதவில்லை. ஜஸ்ட் நான்கு ரன்கள்.. நாளை ஆட்டம் தொடங்குவதும் தெரியாது முடிவதும் தெரியாது
அப்படியானால் உங்களால் முடியாது என்று சொல்கிறீர்களா.. உங்களுக்கு காத்திருக்கும் பரிசைப் பாருங்கள்கையிலிருந்த லாப் டாப்பை திறந்தான் அந்த பூனக்கண்ணன். “இந்த வீட்டைப் பாருங்கள்முழுவதும் பர்னிஷ்ட்.. இது தவிர ரொக்கமாக டாலர்கள் வேறு.. யோசித்துச் சொல்லுங்கள்” “நீங்கள் என்னை தாமதமாக அணுகியிருக்கிறீர்கள் என்று சொல்கிறேன்.. இப்போதைய சூழலில் நான் அவுட் ஆனால்.. மொத்த மைதானமும் என்னை அடித்தே கொன்றுவிடுவார்கள்.. அப்படியே தப்பித்து பெவிலியனுக்கு ஓடினாலும் எனது சொந்த ஊரில் என் வீட்டைக் குடும்பத்தோடு கொளுத்தி விடுவார்கள்.. போர்ட் விசாரணை ,போலீஸ் விசாரண என தொடரும்.. இப்போதே என்னை ஹோட்டலில் காணோம் என தேடுவார்க்ள்.. மீடியாக்களின் கண்கள் வேறு எல்லா பக்கமும்.. என்னை மன்னித்து விடுங்கள்
எனக்கு சிரிப்புதான் வருகிறது.. பேட்டி என்ற பெயரில் ஒன்றை ஜோடித்து உங்களை இந்த படகு வீட்டுக்கு வரவழைத்து .. எவ்வளவு முன் ஜாக்கிரதியாக இருக்கிறோம் பார்த்தீர்களா.. இந்த டீலில் ஒரு மீடியா நிறுவனமும் சம்பந்தப்பட்டிருக்கிறது
நீங்கள் ஒன்றை மறந்துவிட்டு பேசுகிறீர்கள்.. இன்னொரு பேட்ஸ்மென் வேறு இருக்கிறார்.. அவரை எப்படி சரிகட்டுவது “ “அதையும் யோசித்தாகிவிட்டது.. இன்று மாலை ஆட்டம் முடியும் போது அதே ஒவரில் இன்னும் 4 பந்துகள் போடவேண்டும். நீங்கள் தான் ஸ்டிரைகிங் பேட்ஸ்மேன்.. காலையில் மேட்ச் ஆரம்பித்ததும் நேரத்தை விரயம் செய்யாமல் அவுட் ஆனீர்களானால் போதும்” “உங்களைப் போன்ற ஆசாமிகள் முன்பெல்லாம் ஒரு நாள் போட்டியில் தான் தலையிட்டீர்கள்..”
வியாபாரம்.. உங்களை தேடி ஒரு நல்ல சான்ஸ் வந்திருக்கிறது.. பயன்படுதிக்கொள்ளுங்கள்.. நீங்கள் சரியெனச் சொன்னால் இன்னொரு விருந்து.. நீங்கள் ஒரு பேட்டியில் எனக்கு இந்த நடிகையை பிடிக்கும் என்று சொன்னீர்களல்லவா .. அவர் இதே படகு வீட்டில் இன்னொரு அறையில்…”பிரம்மாஸ்த்திரம் வேலை செய்ததுஎனக்கு தருவதாக சொன்ன தொகை எனக்கு எப்போது கிடைக்கும்..” “சபாஷ்.. இப்போதுதான் சரியாகவே பேச ஆரம்பித்திருக்கிறீர்கள்.. இதோ.. பேசியதில் முக்கால் பங்கு உங்களின் ரகசிய வங்கிக் கணக்குக்கு மாற்றச் சொல்கிறேன்
எனது ரகசிய கணக்கு உங்களுக்கு எப்படித் தெரியும்” “ என்ன இவ்வளவு அப்பாவியாய் இருக்கிறீர்கள்ம்ம்ம் .. முடிந்தது.. இப்போது நீங்கள் உங்கள் கணக்கை செக் செய்து கொள்ளலாம்மைதானம் நிரம்பிவழிந்தது.. நேற்று வரை அடித்தது.. ரிசல்ட் நிச்சயம் என்று தெரிந்ததால் கூட்டம் வேறு ஜாஸ்தி ஆகிவிட்டது. “எப்படி அவுட் ஆவதுபேசாமால் பேட்டை சுழற்றும் போது ஸ்டம்பில் இடித்துவிடலாமா.. அய்யோ அவ்வளவுதான்.. பட்டவர்த்தனமாய்த்தெரியும்.. காசை வேறு வாங்கியாகிவிட்டது
கார்ட் எடுத்து நின்றான்.. எதிரே அந்த பவுலர்.. அவனும் நெர்வசாக இருகிறானோ.. இதோ ஒடி வருகிறானே.. அந்த நடிகை அவ்வளவு ஒன்றும் விஷேஷமில்லை.. “ யோசித்துக் கொண்டிருக்கும் போதே பந்து OFF STUMP க்கு கொஞ்சம் வெளியே நல்ல வேகத்தில் விழுந்து மட்டையை விசிறுவதற்குள் விக்கெட் கீப்பருக்கு பெப்பே காட்டி விட்டு தேர்ட் மேனிலிருந்து மூச்சிறைக்க ஓடி வந்தவனுக்கும் டேக்கா காட்டிவிட்டு பவுண்டிரியைத் தொட்டது.
ஏன் பவுலரும் கீப்பரும் சங்கேதாமாய் பார்த்து சிரித்துக் கொள்கிறார்கள்.. ஒரு வேளை..

 

விஞ்ஞானம் அறிவோம் / செய்துபார்த்து அறிவோம்

இணையம் அறிவோம்
செயலி https://play.google.com/store/apps/details?id=com.gameship.science_experiment.lab_star

No comments:

Post a Comment