அறிவுக்கு விருந்து – 05.12.2019 (வியாழன்)


அறிவுக்கு விருந்து – 05.12.2019 (வியாழன்)
வரலாற்றில் இன்று -டிசம்பர் 5 (December 5) கிரிகோரியன் ஆண்டின் 339 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 340 ஆம் நாள்.

நிகழ்வுகள்

·  1082பார்சிலோனா மன்னர் இரண்டாம் ரமோன் பெரெங்கெர் கொல்லப்பட்டார்.
·  1492கிறித்தோபர் கொலம்பசு லா எசுப்பானியோலா தீவில் (இன்றைய எயிட்டி, டொமினிக்கன் குடியரசு) கால் வைத்தார். இத்தீவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் இவரே.
·  1496போர்த்துகல்லின் மன்னன் முதலாம் மனுவேல் யூதர்கள் அனைவரும் கிறித்தவத்துக்கு மதம் மாறுமாறும் அல்லது நாட்டை விட்டு வெளியேறுமாறும் பணித்தான்.
·  1560ஒன்பதாம் சார்லசு பிரான்சின் மன்னராக முடிசூடினார்.
·  1746எசுப்பானியாவின் ஆட்சிக்கெதிராக ஜெனோவாவில் கிளர்ச்சி ஆரம்பமானது.
·  1757ஏழாண்டுப் போர்: இரண்டாம் பிரெடெரிக் புருசியப் படைகளுக்குத் தலைமை தாங்கி ஆஸ்திரியப் படைகளை லெயூத்தன் சமரில் வென்றார்.
·  1848கலிபோர்னியா தங்க வேட்டை: கலிபோர்னியாவில் பெருமளவு தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் போக் அறிவித்தார்.

பிறப்புகள்

·  1782மார்ட்டின் வான் பியூரன், அமெரிக்காவின் 8வது அரசுத்தலைவர் (. 1862)
·  1879பாகாஜதீன், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், போராளி (. 1915)
·  1890பிரிட்ஸ் லாங், ஆத்திரிய-அமெரிக்க இயக்குநர் (. 1976)
·  1896கார்ல் பெர்டினான்ட் கோரி, நோபல் பரிசு பெற்ற செக்-அமெரிக்க மருத்துவர்
·  1901வால்ட் டிஸ்னி, அமெரிக்க இயக்குநர் (. 1966)
·  1901வெர்னர் ஐசன்பர்க், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (. 1976)

இறப்புகள்

·  1784பில்லிஸ் வீட்லி, செனிகலில் பிறந்த அடிமை, அமெரிக்கக் கவிஞர் (பி. 1753)
·  1791வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்சார்ட், ஆத்திரிய செவ்விசையமைப்பாளர்
·  1870அலெக்சாண்டர் டூமா, பிரான்சிய எழுத்தாளர் (பி. 1802)
·  1879ஆறுமுக நாவலர், ஈழத்தின் சைவ ஆன்மீகவாதி (பி. 1822)
·  1926கிளாடு மோனெ, பிரான்சிய ஓவியர் (பி. 1840)
·  1930ஆல்பிரட் பார்னார்டு பாசெட், பிரித்தானியக் கணிதவியலாளர் (பி. 1854)
·  1941அம்ரிதா சேர்கில், அங்கேரி-பாக்கித்தானிய ஓவியர் (பி. 1913)
·  1950அரவிந்தர், இந்திய ஆன்மீகத் துறவி (பி. 1872)

சிறப்பு நாள்

 குறளறிவோம்-  120. நடுவு நிலைமை / Impartiality
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:  பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்.
மு.வரதராசனார் உரை: பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரி நல்ல வாணிக முறையாகும்.
Translation: As thriving trader is the trader known,
Who guards another's interests as his own.
Explanation:  The true merchandise of merchants is to guard and do by the things of others as they do by their own.
சிந்தனைக்கு: எந்த செயல் செய்தபோதிலும் திறமை என்ற ஒன்றை மட்டும் வளர்த்து கொள்உன்னிடம் பணம், பொருள் ஒன்றும் இல்லாமல் இருந்தால் கூட இந்த திறமையின் மூலம் ஜெயித்து விடலாம் வாழ்க்கையை ஒரு கை
தமிழ் அறிவோம்: ஒத்தச் சொற்கள்
பிடி: பெண்யானை, பிடித்துக்கொள்                                                   படி: பாடம் படி, படிக்கட்டு
விடுகதை விடையுடன்
பேச்சுக் கேட்குது பேசுபவர் தெரியவில்லை. அது என்ன? வானொலிப் பெட்டி
பழமொழி- நடக்கமாட்டாத லவாடிக்கு நாலுபக்கமும் சவாரி.
பொருள்/Tamil Meaning  நடக்கவே கஷ்டப்படும் குதிரையைப் பலவிதமான சவாரிக்குப் பயன்படுத்தியது போல.
Transliteration Natakkamaattatha lavaatikku nalupakkamum savari.
தமிழ் விளக்கம்/Tamil Explanation லவாடி என்ற சொல் வேசி என்று பொருள்பட்டாலும் இந்கு ஒரு வயதான குதிரையைக் குறிக்கிறது. ஒரு வேலையையே ஒழுங்காக முடிக்கத்தெரியாத முட்டாள் ஒருவன் பல வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு ஒவ்வொன்றையும் அரைகுறையாகச் செய்வது போல என்பது செய்தி.
Enrich your   vocabulary
weaken பலவீனமாக்கு, சக்தி குறை
wean பால்குடிப்பதை மறக்கச் செய்
weapon  ஆயுதத்தால் தாக்கு

Proverb A leopard can’t/ doesn’t change its spots.

A person can’t change its innate character, especially bad.
Example: X: Do you think he’ll stop copying after being caught and penalized? Y: I don’t think so. A leopard can’t change its spots.

Opposite Words 

Increase X Decrease
  • The population increased dramatically in the first half of the century.
  • The number of people who have the disease has decreased significantly in recent years.
Inside X Outside
  • The jewels were locked away inside the safe.
  • I’ll meet you outside the theatre at two o’clock.
மொழிபெயர்ப்பு
சாவோய் பூக்கோசு
சிறிய வெங்காயம்
கணினி ஷார்ட்கட் கீ
Shift + Enter
ஒரு பேரகிராஃப் கிரேட் செய்ய
Shift + Alt + D
தற்போதைய தேதியை சேமிக்கும்
இனிக்கும் கணிதம்      .. பெய்தல் அளவு..
2 பதக்கு - 1 தூணி                       5 மரக்கால் - 1 பறை                   80 பறை - 1 கரிசை
அறிவியல் அறிவோம்
திரவங்களின் கன அளவை காணப்பயன்படும் அலகு - லிட்டர்
காஸ்ட்ரோஸ்கோப்பி செயலாற்றும் இடம் - இரைப்பை
தினம் ஒரு மூலிகை அருகம்புல்:
எல்லா நோய்களுக்கும் ஏற்ற சிறந்த மருந்து. காலையில் 9.00 மணிக்கு பசி ஆரம்பித்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். பசிப்பதற்கு முந்தியே சாப்பிடுவது தவறு. அருகம்புல் சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து ஒரு பழம் சாப்பிட்டால் போதும். அடுத்து மதியச் சாப்பாடுதான். இந்த மாதிரி செய்தால் எல்லா நோய்களும் குணமடையும்
உடல் எடை குறைய, கொலாஸ்டிரல் குறைய, நரம்புத்தளர்ச்சி நீங்க, இரத்தப்புற்று குணமடைய அருகம்புல் ஒரு உலகப் புகழ்வாய்ந்த டானிக். இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கச் செய்வதில் சிறந்தது அருகம் புல்தான். தோல் வியாதிகள் அனைத்தும் அருகம்புல்லில் நீங்கும். இரத்தத்தில் உள்ள விஷத்தன்மைகளை வெளியேற்றுவதில் திறமையானது. விநாயகர் கோயில்களில் அருகம்புல் கிடைக்கும்.
உணவு     மனிதனின் ஆற்றல் சிதைவுறுதலைப் பாதிக்கும் காரணிகள்
செல்லுலோஸ் : நிலையான, கரையாத பொருட்கள், இது ஊட்டச்சத்தில் பயன்படும் தாவர உணவின் பெரும்பான்மையான பகுதியை உள்ளடக்குகிறது.
(.கா) தானியங்கள், பருப்புகள், பழங்கள், காய்கறிகள், செல்லுலோஸ் எந்த விதமான ஆற்றலையும் உருவாக்குவதில்லை. ஏனெனில் இவை உடலினால் செரிக்கப்படுவதில்லை. இது பெரிஸ்டாசிலிஸ் இயக்கத்தைத் தூண்டுகிறது.
பகுதி செல்லுலோஸ் : இது முழு தானியங்களிலும், காய்கறிகளிலும் மற்றும் லெகியூம்களின் (legumes) மேற்தோலிலும் (.மி) காணப்படுகிறது.
வரலாற்றுச் சிந்தனை 
·         உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் முதலை. இவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன.
·          
·          
·         # இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு சான்மரீனோ.
·         # உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து.
தன்னம்பிக்கை கதை- கிளி என்ன சொல்லுச்சு
KiliEnnaஒரு தென்னை மரத்தில் காகம் ஒன்று அமர்ந்து, “கா, கா…’ என்று உற்சாகமாகக் கத்திக் கொண்டிருந்தது. காகத்தின் அருகே ஒரு பஞ்சவர்ணக்கிளி சென்று அமர்ந்தது. “”என்ன காக்கையாரே! உமது இறக்கையைப் பார்க்கும்போது எனக்குச் சிரிப்புதான் வருகிறது. இவ்வளவு அழகில்லாத அருவருப்பைத் தரக்கூடிய இறக்கையை நீர் பெற்றிருக்கிறீரே, உமக்கு வெட்கமாக இல்லை?” என்று கிளி ஏளனமாகக் கேட்டது. “”நான் ஏன் வெட்கப்பட வேண்டும்? கருப்பு நிறம் சிறப்பானதுதான். மற்ற நிறங்கள் எவ்வளவு உயர்ந்தவை என்பதை ஒப்பு நோக்கிப் பார்ப்பதற்காகத்தான் கருப்பு நிறத்தைக் கடவுள் உண்டாக்கியிருக்க வேண்டும். இப்போது எனது இறக்கையால் உமது இறக்கையின் அழகு சிறப்பு பளிச்சென்று தெரிகிறது அல்லவா?” என்று தன் இறகின் அழகைத் தானே பாராட்டிக் கொண்டது காகம்.
அந்தச் சமயத்தில், ஒரு புறா அந்தப் பக்கமாக வந்து அவர்கள் அருகே அமர்ந்தது. “”என்னநீங்கள் இரண்டு பேரும் ஏதோ சர்ச்சையில் ஈடுபட்டு இருக்கிறீர்கள் போலிருக்கிறதே!” என்று புறா கேட்டது.  “”நல்ல நேரத்தில் நீங்கள் வந்து சேர்ந்திருக்கிறீர்கள். எங்கள் இருவருடைய இறக்கையின் அழகைப் பாருங்கள். எங்கள் இருவரில் யாருடைய இறக்கை அழகாக இருக்கிறது? நீங்களே தீர்ப்பளியுங்கள்!” என்று புறாவைக் கேட்டுக் கொண்டது பஞ்சவர்ணக்கிளி.
“”உண்மையில் கொஞ்சம்கூட அறிவுக்குப் பொருத்தமில்லாத சர்ச்சை இது. கடவுள் உலகத்தில் உயிரினங்களுக்கான எந்த உறுப்பையும் பயன் இல்லாமல் சிருஷ்டிப்பதில்லை. ஒவ்வொருவருடைய உடல் உறுப்புக்களும் ஒவ்வொரு வகையில் சிறந்தனவாக, அழகானவைகளாகவே இருக்கும். பஞ்சவர்ணக்கிளியே! உனது இறக்கை பார்க்க அழகாக இருக்கலாம். ஆனால், காகம் போன்று அவ்வளவு விரைவாகவும், ஒரே சமயத்தில் நீண்ட தூரம் பறக்கவும் உன்னால் முடியாது.
“”கோடை நாளில் உன் இறக்கைகள் உனக்கு அதிகப் பயன் தருவதாக இருக்கக்கூடும். குளிர், மழைக் காலத்திலோ, காக்கையின் இறக்கைகள் தாம் மிகவும் பயனுடையதாக இருக்கும். உயிரினங்களின் உறுப்பு அழகைப் பற்றி மட்டுமே பேசக்கூடாது. அவற்றின் பயன்பற்றித் தான் பேச வேண்டும். பயன் இல்லாதவை என்று உலகத்தில் எதுவுமே இல்லை. அவ்வாறு பயன் உள்ள உறுப்புகளை நமக்கு அளித்தமைக்காக நாம் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்!” என்று புறா கூறிற்று. அதைக் கேட்டதும் புத்தி தெளிந்து தன் ஆணவத்தை விட்டொழித்தது பஞ்சவர்ணக்கிளி.

விஞ்ஞானம் அறிவோம் / செய்துபார்த்து அறிவோம்

இணையம் அறிவோம்

No comments:

Post a Comment