அறிவுக்கு விருந்து 09.01.2020 ( வியாழன் )









அறிவுக்கு விருந்து  09.01.2020 ( வியாழன் )
 






வரலாற்றில் இன்று -  சனவரி 9 (January 9) கிரிகோரியன் ஆண்டின் ஒன்பதாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 356 (நெட்டாண்டுகளில் 357) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

·475பைசாந்தியப் பேரரசர் சீனோ தலைநகர் கான்ஸ்டண்டினோபிலை விட்டுக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். இராணுவத் தளபதி பசிலிக்கசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.
·1150சின் சீனப் பேரரசர் கிசொங் கொல்லப்பட்டார். வன்யான் லியாங் பேரரசராக முடிசூடினார்.
·  1349கறுப்புச் சாவுக்குக் காரணமென உள்ளூர் மக்களால் நம்பப்பட்டதால், பேசெல் நகர யூதர்கள் சுற்றிவளைக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
·1431ஜோன் ஒஃப் ஆர்க் மீதான முன் விசாரணைகள் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தில் ஆரம்பமானது.
·1707இசுக்காட்லாந்து மற்றும் இங்கிலாந்துப் பேரரசுகளை இணைக்க இங்கிலாந்து நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
·1760அகமது ஷா துரானி தலைமையிலான ஆப்கானியர்கள் மரதர்களை பராரி மலைகளில் நடைபெற்ற சமரில் தோற்கடித்தனர்.
·  1788கனெடிகட் அமெரிக்காவின் 5வது மாநிலமாக இணைந்தது.

பிறப்புகள்

·  1843நடனகோபாலநாயகி சுவாமிகள், சௌராட்டிர மதகுரு (. 1914)
·  1868சோரென்சென், தென்மார்க்கு வேதியியலாளர் (. 1939)
·  1879ஜான் பி வாட்சன், அமெரிக்க மருத்துவர் (. 1958)
·  1902ஓசேமரிய எஸ்கிரிவா, எசுப்பானிய மதகுரு, புனிதர் (. 1975)
·  1908சிமோன் பொவார், பிரான்சிய மெய்யியலாளர், எழுத்தாளர் (. 1986)
·  1913ரிச்சர்ட் நிக்சன், அமெரிக்காவின் 37வது அரசுத்தலைவர் (. 1994)
·  1917டி. ஆர். ராமச்சந்திரன், தமிழ்த் திரைப்பட நடிகர் (. 1990)

இறப்புகள்

·  1848கரோலின் எர்ழ்செல், செருமானிய-ஆங்கிலேய வானியலாளர் (பி. 1750)
·  1924பொன்னம்பலம் அருணாசலம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1853)
·1961எமிலி கிரீன் பால்ச், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1867)
·  1979கு. கோதண்டபாணி, தமிழறிஞர், எழுத்தாளர் (பி. 1896)

சிறப்பு நாள்

குறளறிவோம்-  137. ஒழுக்கமுடைமை
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
கலைஞர் மு.கருணாநிதி உரை: நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும்.
மு.வரதராசனார் உரை:ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.
Translation: 'Tis source of dignity when 'true decorum' is preserved;
Who break 'decorum's' rules endure e'en censures undeserved.
Explanation: From propriety of conduct men obtain greatness; from impropriety comes insufferable disgrace.
சிந்தனைக்கு:
முயற்சி செய்...
உன்னால் முடிந்தவரை அல்ல.
நீ நினைத்தது முடியும்வரை
தமிழ் அறிவோம்: ஒத்தச் சொற்கள்
மதி: அறிவு, நிலவு, மதித்தல்.
வேழம்: யானை, மூங்கில், கரும்பு.
விடுகதை விடையுடன் ஓயாது இரையும் எந்திரமல்ல, உருண்டோடி வரும் பந்துமல்ல, அது என்ன?     கடல் அலை
பழமொழி-  போனதுபோல வந்தானாம் புது மாப்பிள்ளை.
பொருள்/Tamil Meaning பலனை எதிர்பார்த்து ஒரு காரியத்தைத் தொடங்கி ஏமாந்தது போல.
Transliteration  Ponatupola vanthaanam puthu mappillai.
தமிழ் விளக்கம்/Tamil Explanation  புது மாப்பிள்ளை பரிசுகளை எதிர்பார்த்து மாமியார் வீடு சென்று வெறுங்கையோடு திரும்பியது போல.
Enrich your   vocabulary
wash  கழுவு , துணி துவை, அடித்துச் செல், அலம்பு
waste  வீணாக்கு , பாழாக்கு, நலிவுறு

Proverb A thing begun is half done.

A good beginning makes it easier to accomplish the rest of the project.
Example: He has already won first set in the match. I think he is on course to take this match. Well begun is half done, after all.

Opposite Words 

Nadir X Zenith
  • By 1932, the depression had reached its nadir.
  • The Roman Empire reached its zenith around the year 100.
Narrow X Broad
  • The stairs were very narrow.
  • The room is three meter long and two meter broad.
மொழிபெயர்ப்பு
செம்முள்ளங்கி
முள்ளங்கி
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl+H
Replace particular text
Ctrl+Z
Undo changes in presentation
இனிக்கும் கணிதம் 
இரண்டிலிருந்து ஆறு வரை எந்த எண்ணால் வகுத்தாலும் மீதி ஒன்று வரும். ஆனால் ஏழால் வகுத்தால் மீதி ஒன்று வராது. அந்த எண் என்ன
இதற்கு இரு விடைகள் உண்டு. 1) 301 2) 721
அறிவியல் அறிவோம்
கோள் ஒன்றினைச் சுற்றி வரும் சிறியபொருளின் பெயர் - நிலவு
பில்லயன் விண்மீன்கதிர்களின் தொகுப்பு - அண்டம்
தினம் ஒரு மூலிகை கேழ்வரகு பெயர்க்காரணம்/ வரகு என்ற தானியத்தின் நினைவாக கேழ் என்ற முன்னொட்டு சேர்த்து "கேழ்வரகு" என்றும் அழைக்கப்பட்டது. தமிழில் ழகரம் இரண்டாம் இடத்தில் வரும் சொற்கள் அனைத்தும் "கீழ் , தாழ்வு , காழ்வு, Down , Low , Below, Flowing down" என்றே பொருள் தருகின்றன. வரகைப்போன்ற கீழ் நோக்கி அல்லது வளைந்து கதிர் விடும் தானியம் என்ற காரணம்கொண்டு கேழ்வரகு என்று பெயர்பெற்றிக்கலாம்.
உணவு   மிக தேவையான தாது உப்புக்கள்
* சுண்ணாம்பு                  * பாஸ்பரஸ்                       * மெக்னீசியம்
* சோடியம்                         * பொட்டாசியம்              * குளோரைடு
* சல்பர்                                * அரிதான தாது உப்புக்கள்
இரும்பு, அயோடின், துத்தநாகம், காப்பர், மெங்கனீசு, குரோமியம், கோபால்ட், சிலினியம், புளோரின்
வரலாற்றுச் சிந்தனை குடியரசு தினம் மலர்ந்த காரணம்
இந்தியாவில் சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவுக்கூரும் நாள், ‘குடியரசு தினம்ஆகும். ஆரம்ப காலத்தில் நமது மன்னர்கள் ஒற்றுமையாக இல்லாமல், இந்தியாவை சிறு சிறு மாநிலங்களாகப் பிரித்து ஆட்சி செய்து கொண்டிருந்ததால், வணிகம் செய்வதற்காக இந்தியாவில் நுழைந்த பிரிட்டிஷ்காரர்கள், படிப்படியாகத் தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்தி, இந்தியா முழுவதும் கொடுங்கோல் ஆட்சியை அரங்கேற்றினர். அத்தகைய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலைப் பெற்றது. இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையலாம் எனக் கருதி, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், அத்திருநாளில் தமது தாய் நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, பாரத மண்ணில் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவுக்கூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.
தன்னம்பிக்கை கதை-  சாமான்யனின் சரித்திரம்
(நாம் இரு நூற்றாண்டுகள் பின்னோக்கி கி.பி.1774 க்கு போவோம்)
லண்டன் மாநகரில் பிரபல மருத்துவ மனை ஒன்றில் !. “கிளைவ்நீங்கள் இப்பொழுது குணமாகிவிட்டீர்கள், உங்கள் மனதை போட்டு அலட்டிக்கொள்ளாதீர்கள், தயவு செய்து அமைதியாக இருங்கள், நீங்கள் அமைதியாகிவிட்டால் இன்றே கூட உங்களை வீட்டுக்கு அனுப்பிவிடுவேன், “டேக் ரெஸ்ட்தட்டிக்கொடுத்துவிட்டு டாக்டர் அருகில் இருந்த அவர் மனைவி மார்கரெட் மஸ்கலீனிடமிருந்து விடைபெற்று அடுத்த நோயாளியை பார்க்க சென்றார்.
கிளைவ் விரக்தியாய் புன்னகைத்தார். அமைதியாம் அமைதி! எங்கு கிடைக்கும் இங்கே அமைதி, என்னைப்பற்றித்தான் இந்த மக்கள் கொள்ளையடித்தவன் என்று பேசிக்கொள்கிறார்களே! நான் ஏதோ இவர்கள் சொத்தை கொள்ளை அடித்தது போல் பேசிக்கொள்கிறார்கள், இந்த பாராளுமன்றவாதிகளுக்கு வேறு வேலை என்ன? வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் என்னைப்பற்றி குறை கூறுவது, மக்களிடம் என்னைப்பற்றி தப்பும் தவறுமாக சொல்லி என் பேரை கெடுப்பது இதுதானே இவர்கள் வேலை! இவர்கள் இந்தியாவிற்கு போயிருக்கிறார்களா? இங்கே உட்கார்ந்து இந்தியாவைப்பற்றி பேசுவார்கள் காட்டுவாசிகள், அங்கே பாம்பும் பல்லியும்தான் இருக்கும், சாமியார்கள்தான் இருப்பர், என்று, போய் பார்க்கவேண்டியதுதானே, அங்கே உங்கள் சாம்ராஜ்யத்தையே நிறுவிய என்னைப்பார்த்து கண்டபடி பேசுவது, சே..என்ன வாழ்க்கை, புலம்பியவாறு புரண்டு படுத்தார்.
அந்த மிகப்பெரிய பண்ணை வீட்டின்முன் நின்ற காரிலிருந்து கிளைவ் மெல்ல இறங்க, பின்னால் அவரை தாங்கிப்பிடித்தவாறு மனைவி மார்கரெட்டும் இறங்கினாள், பின்னால் எட்வர்ட்டும், ராபர்ட்டும் கூட வந்தவர்கள் கிளைவ் அறைக்கு முனபாக வெளியே நின்றுகொண்டனர், கிளைவ் வை மெல்ல கட்டிலில் படுக்கவைத்துவிட்டுரிலாக்ஸ்என்று சொல்லிவிட்டு திரும்பிய அவர் மனைவியைப்ளீஸ்என்னை விட்டு போய்விடாதே அவள் கையை பிடித்துக்கொண்டார். .கே.,நான் அருகிலேயே இருக்கிறேன், நீங்கள் தூங்குங்கள், கட்டிலின் ஓரத்திலேயே அமர்ந்து கொண்டார். எட்வர்ட்டும், ராபர்ட்டும் அதைப்பார்த்து மெல்ல கிளம்பினர். மனைவியின் அருகாமையில் மெல்ல தூக்கத்துக்கு போன கிளைவின் நினைவுகள் மெல்ல கனவு படலமாக விரிய அரம்பிக்க….அவர் தந்தையின் குரல் நம்மை கி.பி 1743க்குள் அழைத்து வருகிறது
ராபர்ட்உன்னைப்பற்றி ஏகப்பட்ட புகார்கள் வந்து விட்டது, என்னால் உன்னை வைத்து சமாளிக்க முடியவில்லை, இதுவரை இருமுறை போலீஸ் வரைக்கும் கொண்டுபோய் விட்டுவிட்டாய், பதினேழு வயதில் இவ்வளவு தொல்லைகள் செய்பவனை நான் பார்த்ததேயில்லை, உனக்கு ஈஸ்ட் இந்தியா கம்பெனியில் வேலைக்கு சொல்லியிருக்கிறேன், அவர்கள் இங்கு வேலை காலி
இல்லை வேண்டுமானால் இந்தியாவில் வேலை போட்டு கொடுப்பதாக சொல்லியிருக்கிறாரகள், அதற்கான் கடிதத்தையும் என்னிடம் கொடுத்துவிட்டார்கள், நீ என்ன செய்கிறாய் நாளைமெட்வேயிலிருந்துவிஞ்செஸ்டர்கப்பல் கிளம்புகிறது அதில் கிளம்பிச்சென்று இந்த கடிதத்தை கொடுத்து வேலைக்கு சேர் அதன் பின் எனக்கு தகவல் அனுப்பு. மெல்ல தலையாட்டினான் ராபர்ட்.  ராபர்ட்டுக்கு வெயில் கண்ணை கூசிற்று !. தான் இதுவரை பார்க்காத ஆட்கள், நிறங்கள் கருப்பாய்..அட அவர்கள் மொழி கூட வித்தியாசமாய் உள்ளதே !, கும்பல் குமபலாய் வருபவர்கள் நம்மை கண்டதும் ஏன் ஒதுங்கிப்போகின்றனர்? பயப்படுகிறார்களா? ஒருவன் போல் ஒருவன் இல்லியே, வியப்பில் மெதுவாக அன்றைய சென்னைபட்டணத்தில் நடந்துகொண்டிருந்தான் ராபர்ட்
ஆனாலும் இந்த இடத்துக்கு வருவதற்குள் ஒரு வருடத்தையே கடல் விழுங்கிவிட்டது. யோசனையாய் நடந்தவன் தோளில் யாரோ தட்ட திரும்பி பார்த்தான் ஒரு பிரிட்டிஷ் சோல்ஜர் நின்று கொண்டு எங்கு போகிறாய் என்று கேட்க இவன் ஈஸ்ட் இந்தியா கம்பெனிக்கு போகிறேன் என்றான், அவன் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை காட்டி அங்கு செல் என்றான். இவன் கொடுத்த கடிதத்தை வாங்கி பார்த்தவன் இவனையே சிறிது நேரம் பார்த்துவிட்டு பிறகு புன் சிரிப்புடன் இவன் கையைப்பிடித்து குலுக்கி என் பெயர் வில்லியம்ஸ், நீ இனிமேல் எனக்கு உதவியாளனாக இரு. ராபர்ட் அதுக்கு மறுமொழி எதுவும் சொல்லாமல் ஒரு புன்சிரிப்பு மட்டும் சிரித்து வைத்தான்.
வில்லியம்ஸ் ஒரு பெரிய பொறுப்பில் இருந்தான், அவனுக்கு கீழ் ஏராளமான இந்தியர்கள் சுமை கூலியாக இருந்தனர். அங்கிருந்துதான் யுத்த களங்களுக்கு உணவு வெடிபொருட்கள் போன்றவை சப்ளை ஆகிக்கொண்டிருந்தன.பொருட்களை கைமாற்றி விட்டு நிறைய வரும்படி பார்த்தான், ராபர்ட் அவனுக்கு உதவியாக இருந்ததில் இருந்து அவனுடைய நெளிவு சுளிவுகளை இவனும் கற்றுக்கொண்டான். மிக விரைவில் காசு பணம் அவனிடம் புழங்க ஆரம்பித்தது ஆனாலும் அவன் உள் மனம் இந்த வேலையை விட உயர்ந்த வேலையை எதிர்பார்க்க ஆரம்பித்தது.
வில்லியம்ஸ் ஒரு வாரம் உடல் நிலை சரியல்லாமல் போக முழுப்பொறுப்பும் இவன் பார்க்க வேண்டியதாகிவிட்டது. அதற்கு பின்னும் வேலைக்கு வந்தவனைப் பற்றி பல்வேறு புகார்கள் வர அவனை இங்கிலாந்துக்கு கம்பெனி விசாரணைக்கு வரச்சொல்லிவிட்டது,விசாரணையின் முடிவில் இனிமேல் ராபர்ட்டே முழுப்பொறுப்பையும் கவனிப்பான் என கம்பெனி சொல்லும்போது அவன் சுமார் வெறும் இருபது வயதையே தாண்டி இருந்தான்.அவன் பொறுப்புக்கு வந்த சிறிது நாட்களிலே எதிர்பாராமல் ஆஸ்திரிய வாரிசுரிமைப்போரில் பிரிட்டனிடம் அங்கி¢ருந்த கோட்டையை பறி கொடுத்த பிரெஞ்சுப்படைகள் இவன் இருந்த கோட்டையை பதிலுக்கு கைப்பற்றிக்கொண்டன. இவன் பல்வேறு உத்திகள் கையாண்டு எப்படியோ தப்பித்து பக்கத்திலுள்ள இவர்களுக்கு சொந்தமான மற்றொரு கோட்டைக்கு சென்று பிரெஞ்சுப்படைகள் சுற்றி வளைத்துக்கொண்டதயும், தான் எப்படியோ தப்பித்துக்கொண்டதையும், சிறு படைஒன்றை கொடுத்தால் தானே அந்தக்கோட்டையை மீட்டு விடுவதாக கூறி அதன்படி அந்தக்கோட்டையை மீட்டான். இந்த செயல் இவனை கிழக்கிந்த்தியக்கம்பெனியில் உயர்ந்த இடத்தை அடையவைத்தது
இப்பொழுது யுத்த களத்தில் போரிடும் குழுவுக்கு இவன் தளபதியாக்கப்பட்டான். அவனுடைய புத்தி கூர்மையும் சமயோசிய புத்தியும், தைரியமும் கூடவே அதிர்ஷ்டமும் அவனை அதற்குப்பின் நடந்த பல போர்களை வெற்றி பெற் வைத்தது வெகு சீக்கிரத்தில் தலைமை தளபதியாக உயர்த்த உதவியது. அது மட்டுமல்ல அவன் நண்பனாக இருந்த எட்மெண்ட்மஸ்கில்னே தன்தங்கை மார்க்கரெட்டை அவனுக்கு மணமுடித்து கொடுத்தான்.
ராபர்ட் கிளைவ்என்ற பட்டத்துடன் தலைமைத்தளபதியாக உயர்த்தப்பட்ட ராபர்ட் (நாமும் அவரை இனிமேல் மரியாதையுடனே அழைப்போம்) குடும்ப வாழ்க்கையில் உயர்ந்தவராய் இருந்தாலும் இளமையில் அவர் பட்ட கஷ்டங்கள் காரணமாக பணத்தேவைகளை உணர்ந்து கொண்டு அதை வெகு சீக்கிரம் எப்படி சம்பாதிப்பது என்பதை காண்பிக்க ஆரம்பித்தார். இதனால் இங்கிலாந்தில் இவரைப் பற்றி பல்வேறு புகார்கள் போக ஆரம்பித்தன. சிறிது காலம் பம்பாய் வாழ்க்கைக்கு மாறினார் பின் கம்பெனியின் வங்காள கவர்னராக நியமிக்கப்பட்டார்.
இதுவரை ஏறுமுகமாக இருந்த கிளைவின் வாழ்க்கை இங்கிலாந்தில் இவர் மீது கூறப்பட்ட ஊழல் புகார்களால் ஆட்டம் காண ஆரம்பித்தது. தான் சம்பாதித்த பணத்தை எப்படி எடுத்துச்செல்வது என யோசித்தார், அனைத்தையும் தங்கமாக்கி பாளமாக கப்பலில் கொண்டு செல்ல முடிவு செய்தார், ஆனால் அந்த முடிவு தவறாகிப்போனது, இங்கிருந்து கிளம்பிச்சென்ற கப்பல் வழியில் புயலிலும் மழையிலும் கடலுக்குள் முழுகிப்போனது.இதனால் துவண்டு விடவில்லை கிளைவ், தான் குடும்பத்துடன் இங்கிருந்து கிளம்ப முடிவு எடுத்தார்.
லண்டன் வந்திறங்கிய ரபர்ட் கிளைவ் தான் இப்பொழுது நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவனல்ல என்பதையும் அன்னிய நாட்டில் மிகப்பெரிய பொறுப்பில் இருந்தவன் என்பதையும், இதனால் இங்கிருக்கும் பிரபுக்களுக்கு இணயாக நாமும் இருக்க வேண்டும் என நினைத்தார், கொண்டு வந்த பணத்தில் ஒரு பெரிய பண்ணை வீட்டை லண்டன் மாநகரிலே வாங்கி அதில் குடும்பத்துடன் குடி புகுந்தார். தினம் தினம் தன்னை பற்றி குற்றம் சொல்லும் பாராளுமன்றவாதிகள், தன்னை காப்பாற்றிக்கொள்ள இந்த பத்துக்கு மேற்பட்ட வருடங்களில் சமுதாயத்தில் போராடி உடல் நலம், மன நலம் கெட்டதுதான் மிச்சம், மனதில் பயம் குடிகொள்ள ஆரம்பித்தது, மருத்துவரை நாட ஆரம்பித்தார்.இப்பொழுது கூடதிடீரென விழிப்பு வர பக்கத்தில் மனைவியை தேடினார் கிளைவ் கணவர் தூங்கிவிட்டார் என்று எழுந்து சென்றுவிட்ட மார்கரெட்டை உடனே காண வேண்டும் என்று வேகமாக எழுந்தவர் உடல் பலகீனத்தால் தள்ளாடி விழப்போக தன்னை யாரோ தள்ளி விட்டதாக கருதி தள்ளிவிட்ட எதிராளியை எதேனும் செய்யவேண்டும் என்று ஆயுதங்கள் ஏதேனும் கிடைக்குமா என தேட ஆப்பிள் வெட்டும் கத்தி ஒன்று அங்கிருக்க அதை கையில் எடுத்து தன் கழுத்தின் மீது வைத்துக்கொண்டு எதிரில் இல்லாத எதிராளியை சண்டைக்கு கூப்பிட ஆரம்பித்தார்.
வரலாறு இராபர்ட் கிளைவை பற்றி இப்படி சொல்கிறது : “இராபர்ட் கிளைவின்ஆரம்ப கால வாழ்க்கை போராட்டமானதாக இருந்தாலும் அது உடல் அளவில் இருந்ததால் விரைவில் வெற்றி காண முடிந்தது, இறுதிக்காலத்தில் சட்ட ரீதியான போராட்டமாக இருந்ததால் அவர் உடல் நலமும் மன நலமும் பாதித்தது. இதனால் அவரின் முடிவு வருந்ததக்கதாய் இருந்தது.

தமிழ் அறிவோம்

 https://www.youtube.com/watch?v=RJHKTDA39lM&list=PL41DA461A06758121&index=78

இணையம் அறிவோம்  https://www.kuruvirotti.com/kids-section/learn-tamil/learn-shapes/

 

 

தொகுப்பு   https://kanchidigitalteam.blogspot.com




No comments:

Post a Comment