அறிவுக்கு விருந்து 07.01.2020 ( செவ்வாய் )








அறிவுக்கு விருந்து  07.01.2020 ( செவ்வாய் )



வரலாற்றில் இன்று -   சனவரி 7 (January 7) கிரிகோரியன் ஆண்டின் ஏழாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 358 (நெட்டாண்டுகளில் 359) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

·  1325போர்த்துக்கல் மன்னனாக நான்காம் அபொன்சோ முடிசூடினார்.
·  1558கலே நகரத்தை இங்கிலாந்திடம் இருந்து பிரான்சு கைப்பற்றியது.
·  1566ஐந்தாம் பயசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
·  1608அமெரிக்காவில் ஜேம்ஸ்டவுண் நகரம் தீயினால் அழிந்தது.
·  1738போபால் போரில் மராட்டியர்கள் வெற்றி பெற்றதை அடுத்து, பாஜிராவ், இரண்டாம் ஜெய் சிங் ஆகியோருக்கிடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
·  1782அமெரிக்காவின் முதலாவது வர்த்தக வங்கி வட அமெரிக்க வங்கி திறக்கப்பட்டது.
·  1785பிளான்சார்ட் என்ற பிரான்சியர் வளிம ஊதுபை ஒன்றில் இங்கிலாந்து டோவர் துறையில் இருந்து பிரான்சின் கலே வரை பயணம் செய்தார்.
·  1841யாழ்ப்பாணத்தில் உதயதாரகை பத்திரிகை தமிழ், ஆங்கில மொழிகளில் ஆரம்பிக்கப்பட்டது.

பிறப்புகள்

·  1844பெர்னதெத் சுபீரு, பிரான்சியப் புனிதர் (. 1879)
·  1851ஜார்ஜ் ஆபிரகாம் கிரியெர்சன், பிரித்தானிய மொழியியல் அறிஞர் (. 1941)
·  1920அலஸ்ட்டயர் பில்கிங்டன், ஆங்கிலேய இயந்திரத் தொழில்நுட்பவியலாளர் (. 1995)
·  1925தங்கம்மா அப்பாக்குட்டி, யாழ்ப்பாணத்தின் சமய, சமூக செயற்பாட்டாளர்
·  1938பி. சரோஜாதேவி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்

·  1943நிக்கோலா தெஸ்லா, செருபிய-அமெரிக்க இயற்பியலாளர், பொறியியலாளர்
·  1987லட்சுமி, தமிழக எழுத்தாளர் (பி. 1921)
·  1989இறோகித்தோ, சப்பானியப் பேரரசர் (பி. 1901)
·  1995சம்பந்தன், ஈழத்து சிறுகதை எழுத்தாளர் (பி. 1913)
·  1995முரே ரோத்பார்ட், அமெரிக்கப் பொருளியலாளர், வரலாற்றாளர் (பி. 1926)

சிறப்பு நாள்

குறளறிவோம்-  135. ஒழுக்கமுடைமை
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது.
மு.வரதராசனார் உரை:
பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.
Translation:
The envious soul in life no rich increase of blessing gains,
So man of 'due decorum' void no dignity obtains.
Explanation:
Just as the envious man will be without wealth, so will the man of destitute of propriety of conduct be without greatness.
சிந்தனைக்கு:
மூன்று விடயங்கள் நமக்கு வேண்டும்
  • உணர ஒரு அன்பு இதயம்
  • சிந்திக்க சிறந்த மூளை
  • பணிபுரிய வலிய கரங்கள்.
- சுவாமி விவேகானந்தர்

தமிழ் அறிவோம்: ஒத்தச் சொற்கள்
திங்கள்: மாதம், நிலவு, கிழமை.
ஆறு: நதி, எண்ணின் பெயர்.
இசை: சம்மதித்தல், சங்கீதம்.
விடுகதை விடையுடன்
அடித்தாலும், உதைத்தாலும் அவன் அழ மாட்டான், அவன் யார்?   பந்து

பழமொழி-  முப்பது நாளே போ, பூவராகனே வா.
பாப்பாத்தி அம்மா, மாடு வந்தது, பார்த்துக்கொள்.
பொருள்/Tamil Meaning
 
பாப்பாத்தி அம்மா, உன் பசுக்களை இதோ வீட்டில் சேர்த்துவிட்டேன், இனிமேல் உன்பாடு.
Transliteration
Pappatthi amma, maadu vantathu, parttukkol.
தமிழ் விளக்கம்/Tamil Explanation
ஒரு பிராம்மண மாது தன் வீட்டுப் பசுக்களை மேய்ப்பதற்கு இடையன் ஒருவனை அமர்த்தியிருந்தாள். காலையில் பசுக்களைத் தொழுவத்திலிருந்து கட்டவிழ்த்து ஓட்டிச் சென்ற இடையன் மேய்ச்சல் நேரம் முடியும் மாலை ஆனதும் தன் வீடு திரும்பும் அவசரத்தில் பசுக்களை அந்தப் பாப்பாத்தி வீட்டில், தொழுவத்தில் கட்டாமல் விட்டுவிட்டு இவ்வாறு சத்தம்போட்டுக் கூறிவிட்டுத் தன்வழி போனான்வேலையில் முழு ஆர்வமில்லாமல் சம்பளத்தில் குறியாக இருப்பவர்களைக் குறித்துச் சொன்னது.
Enrich your   vocabulary
ward    துரத்து
warm    சூடாக்கு , சுறுசுறுப்படை

Proverb A stitch in time saves nine.

It’s better to deal with problems immediately rather than wait by when they worsen and become much bigger.
Example: Because we anticipated and responded to the possible change in Facebook algorithm, the referral traffic to our website dropped much less than what happened to some of our competitors. A stitch in time saves nine.

Opposite Words 

Melt X Freeze
  • It was warmer now, and the snow was beginning to melt.
  • The lake had frozen overnight.
Merry X Sad
  • He marched off, whistling a merry tune.
  • Lilly felt sad that Christmas was over.
மொழிபெயர்ப்பு
கறி வாழை
உருளைக்கிழங்கு
கணினி ஷார்ட்கட் கீ
Alt+W
Zoom Selected
Ctrl+J
Justify Selected Phrase
இனிக்கும் கணிதம்   நீட்டல் அளவை வாய்ப்பாடு
2 சாண் – 1 முழம்
4 முழம் – 1 கோல்
அறிவியல் அறிவோம்
புவியின் வெளி மையப்பகுதியில் ஐந்தில் ஒரு பகுதியில் அடங்கியுள்ள தனிமம் -சிலிக்கன்
திட்ட அலகு என்பது - SI  முறை
Garcinia indica - fruits, seeds, pulp and rinds.jpgதினம் ஒரு மூலிகை  முருகல்
முருகல் (GARNICIA INDICA) இத்தாவரம் சமையலுக்கும், மருந்து பொருளாகவும், தொழிற்சாலை உபயோகங்களுக்காகவும் பயன்படுத்தப்படும். இது மங்குஸ்தான் குடும்பத்தைச் சார்ந்த மூலிகைத் தாவரம் ஆகும். இவற்றில் 200 வகையான தாவரங்கள் ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் அதிக அளவாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி, மேற்கு கடற்கரையை ஒட்டிய காடுகளில் காணப்படுகிறது.
            இந்தியக் காடுகளில் காணப்படும் 35 வகைத்தாவரத்தில் காடுகளில் மறைவுபிரதேசங்களில் வெளியில் தெரியாமல் இருப்பவை 17 வகையாகும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏழு வகையும்அந்தமான் பகுதியில் ஆறு வகையும், இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் நான்கு வகையும் காணப்படுகிறது. பொதுவாக ஆறுகளின் கழிமுகப்பகுதிகளிலும், சமவெளிப்பகுதிகளிலும் செழித்துவளரும் தன்மை கொண்டதாக உள்ளது. எல்லா இடங்களிலும் குறைந்த அளவு விளைச்சல் கொண்டதாகவே இருக்கிறது.
உணவு 
மூல ஆதாரங்கள் :
முதல் தர புரதம் : பால், தயிர், இறைச்சி, மாட்டு இறைச்சி, கல்லீரல், மீன், முட்டை, கோழி, நிலக்கடலை மற்றும் சோயா ; இரண்டாம் தர புரதம்: கோதுமை, கேழ்வரகு, அரிசி, துவரம் பருப்பு, பருப்பு வகைகள்
வரலாற்றுச் சிந்தனை  
உலக பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியா மொத்தம் 7,517 கிமீ (4,700 மைல்) நீளக் கடல் எல்லைக் கொண்டது. 130 கோடி மக்கள் தொகையைக் கொண்டு உலகின் இரண்டாமிடத்தில் இந்தியா உள்ளது. பொருளாதாரத்தில் பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் நான்காவது இடத்தில் இருக்கின்றது. பண்டைய நாகரிகங்கள் பல இந்தியாவிலேயே தோன்றின.

 தன்னம்பிக்கை கதை-  மனித நேயம்

வேதனையாக இருந்தது எனக்கு சவாரியும் ஒன்றும் கிடைக்கவில்லை. கதை புத்தகங்கள் ஆட்டோவிலேய வைத்திருப்பேன், அதை படிக்க கூட மனம் வரவில்லை, பயம்தான் அதிகமாக இருந்தது. இந்த பிரச்சனை எனக்கு தேவையில்லாதது. ஆனால் நியாயம் என்று ஒன்று இருக்கிறதே, இருந்தாலும் நான் அதிகமாக பேசிவிட்டேனோ என்று தோன்றுகிறது. அந்த இடத்தில் வேறு யாராக இருந்தாலும் அப்படித்தான் பேசியிருப்பார்கள். மேலும் என்னுடைய ஆட்டோவிற்குத்தான் சேதம் அதிகம். எப்படியும் தொட்டால் செலவு 1000 ரூபாயுக்கு மேல் ஆகும், மாத கடைசி வேறு, ஆட்டோ சவாரியும் குறைவாகத்தான் இருக்கும். பத்து நாள் தள்ளி ரிப்பேர் கொள்ளலாம், ஆனால் இந்த பிரச்னையை எப்படி சமாளிப்பது என்றுதான் புரியவில்லை. அடிபட்டவன் நான், ஆனால் அடித்தவன் மிரட்டிவிட்டு போகிறான். “இன்னைக்கு சாயங்காலதுக்குள்ள உன் கையை காலை எடுக்கல என் பேரு மாரி இல்லஎன்று என் சட்டையை பிடித்து உலுக்கிவிட்டு
எதுவும் பேசாமல் ஆட்டோவை எடுத்துக்  கொண்டு சென்றுவிட்டான்.
காலையில் சவாரி ஒன்று ரயில்வே ஸ்டேசனில் நின்று கொண்டிருந்தபொழுது கிடைத்தது, கணவன், மனைவி கைக்குழந்தை என குடும்பமாய் வந்து லட்சுமி மில் வரை சவாரி கேட்டார்கள். நான் கேட்ட தொகைக்கு பேரம் பேசாமல் ஒத்துக்கொண்டதால் சந்தோசத்துடன் வண்டியை ஸ்டார்ட் செய்தேன். வண்டி அரை பர்லாங்கு தூரம் கடந்து இருக்கும், தீடீரென பக்கத்து சந்திலிருந்து வெளிவந்த ஆட்டோ ஒன்று என் ஆட்டோவின் வலது ஓரம் உரசி நின்றது. ஒரு நிமிடம் அதிர்ந்து நின்றுவிட்டேன், பின் சுதாரித்துக்கொண்டு கீழிறங்கி பார்த்தேன். என் ஆட்டோவின் முன்பாகம் சேதமாகி இருந்தது. கோபம் தலைக்கு மேல் வந்தது, என் வண்டியின் மீது மோதி நின்ற ஆட்டோவில் இருந்து இறங்கி வந்தவனை பார்த்து கெட்ட வார்த்தைகளை சரமாரியாக வீசினேன், கூட்டம் வேறு கூட ஆரம்பித்து விட்டது. அவன் தீடீரென்று என் சட்டையை பிடித்துஇன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள உன் கையை காலை எடுக்கலைன்னா என்பேரு மாரி இல்லஎன்று கூறிவிட்டு வேகமாக ஆட்டோவை எடுத்து சென்றுவிட்டான். நான் அதிர்ந்து நின்று விட்டேன்.
என் வண்டியில் வந்த குடும்பம்அபபா வண்டி வருமா இலல இறங்கிக்கவாஎன்று கேட்டவுடன் சுதாரித்துக் கொண்டு வண்டியை எடுத்துக் கொண்டு லட்சுமி மில்லில் அவர்களை இறக்கி விட்டு விட்டு ஸ்டேண்ட் வந்து ஆட்டோவை நிறுத்தினேன். பக்கத்து ஆட்டோக்காரர் என் வண்டியின் சேதத்தை பார்த்துவிட்டு என்ன ஆச்சு என்று கேட்டார். நான் நடந்ததை சொன்னேன், சொல்லும்போதே துக்கம் தொண்டையை அடைத்தது. ‘யார்? மாரியா அவன் பெரிய ரௌடி ஆச்சே, நம்மாளுங்க அவன் கிட்ட சகவாசமே வெச்சுக்கற்தில்லெஎன்றார். இது வேறு என் பயத்தை அதிகப்படுத்தியது. வண்டி அடிபட்ட துயரத்தை விட மாரியை பற்றிய பயமே என்னை பிடித்துக்கொண்டது. ஆட்டோ நண்பர்கள் நீ பயப்படாத நாங்க இருக்கிறோம் என்று சொன்னது வேறு பயத்தைத் தான் அதிகப்படுத்தியது.
பொதுவாகவே சண்டை சச்சரவு எதிலும் ஈடுபடாமல் ஏதோ ஆட்டோ ஓட்டி வாழ்க்கையை ஓட்டி வருகிறேன், வீட்டுக்காரியும் ஏதோ கம்பெனிக்கு வேலைக்கு செல்வதால் எங்கள் இரண்டு குழந்தைகளை நல்ல பள்ளியில் படிக்க வைக்க முடிகிறது. இப்பொழுது மாரியின் பயத்தால் என் குடும்பம் என் கண் முனனால் நின்றது. மதியம் மேல் சவாரி ஒன்று கிடைத்தது, கொண்டு போய் விட்டு வந்தேன், அதன் பின் சவாரி ஒன்றும் கிடைக்கவில்லை, மனது சவாரியை விட மாரியை நினைத்து பயந்து கொண்டிருந்தது, இலேசாக இருட்ட ஆரம்பித்த உடன் பக்கத்து ஆட்டோக்காரரிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பிவிட்டேன். வீட்டுக்கு அருகில் வந்த போது வீடு வழக்கத்துக்கு மாறாக அமைதியாக இருந்தது. மனதுக்குள் கலவரம் பிடித்துக்கொண்டது. “வீட்டுக்கு வந்து ஏதாவது ரகளை செய்து விட்டானோ
வண்டியை வீட்டு சந்தில் கொண்டு போய் நிறுத்தினேன், பையனும், பெண்ணும் வண்டி சத்தம் கேட்டு மெதுவாக வெளியே வந்தார்கள், குழந்தைகள் பயந்தது போல் தென்பட்டார்கள், எங்கடா உங்கம்மா? பயத்தால் என் குரல் எனக்கே கேட்கவில்லை. பையன் அப்பா அம்மாவை இன்னும் காணலேஎன்றான், எனக்கு பகீர் என்றது. எப்பொழுதும் ஆறுமணிக்குள் வீட்டுக்கு வந்துவிடுபவள் இன்று இதுவரை வரவில்லை என்றால் மனது பயத்தின் எல்லைக்கே சென்றுவிட்டது.
எதற்கும் மனைவியின் கம்பெனிக்கு போன் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும்பொழுது ஆட்டோ சத்தம் கேட்டது. திரும்பி பார்த்த எனக்கு கையும் ஓடவில்லை,காலும் ஓடவில்லை ஆட்டோவை நிறுத்தி மாரி இறங்கினான் ஆட்டோவின் பின்னால் இருந்து இற்ங்குவது யார்? என் மனைவியாயிற்றேஇவள் எப்படி இவன் வண்டியில்? எனக்கு குழப்பமாக இருந்தது.இருவரும் வீட்டுவாசல் வரை வந்தனர். என் மனைவி மாரியை பார்த்து இதுதான் எங்க வீடு, இதுதான் எங்க வீட்டுக்காரர், நீங்க உள்ளே வாங்கண்ணேஎன்றாள்.
இல்லம்மா தங்கச்சி, இன்னொரு நாள் வாரேன், உன் உதவியை மறக்க மாட்டேன் என்றவனை என் மனைவி பார்த்து அண்ணே இவர் கூட ஆட்டோதான் ஓட்டுறாரு என்று அறிமுகப்படுத்தினாள். அவன் உடனே என் கையைப் பிடித்துக்கொண்டு தம்பி உன் சம்சாரம் மட்டும் இல்லயின்னா என் சம்சாரத்த உயிரோட பார்த்திருக்க முடியாது, ரோட்டுல அடிபட்டு பேச்சு மூச்சு இல்லாம கிடந்த என் சம்சாரத்த உன் சம்சாரம் எடுத்துட்டு போயி ஆஸ்பிடல்ல சேர்த்து ட்ரிட்மெண்ட் கொடுத்திருக்குது, இப்ப என் சம்சாரம் நல்லா இருக்குது, ரொம்ப நன்றிப்பா என்று என் கைகளை நெகிழ்வுடன் பிடித்துக்கொண்டான். எனக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை, மெல்லிய குரலில் நீங்க என்னை மன்னிக்கனும் காலையில ஆத்தித்துல அப்படி திட்டிட்டேன் என்றேன், அவன் ஒரு நிமிடம் யோசித்து எப்ப திட்டினீங்க? என்றவன் தீடீரென்று ஞாபகம் வந்தவனாக காலையில உங்க வண்டியில தான் மோதினேனா? அடடா என்றவன் நேராக என் வண்டியை சென்று பார்த்தான். சேஅநியாயமா அடிபட்டிருச்சு, என்று வருத்தத்துடன் நேராக என்னிடம் வந்து தன் கைப்பையில் கைவிட்டு நிறைய பணம் எடுத்து என் கையில் திணித்து தம்பி இதுல 750 ரூபாய்க்கு மேல இருக்கும் இத முதல்ல எடுத்து வண்டிய ரிப்பேருக்கு விடு ஆன செலவு பாக்கிய நான் அப்புறம் கொடுக்கிறேன் என்றவன் என்னை மன்னிச்சுரு தம்பி என் சம்சாரத்த ஆஸ்பத்திரியில சேர்த்துருக்காங்க அப்படீன்னதும் எனக்கு என்ன பண்றதுண்னே தெரியல்ல அதனாலதான் வேகமா வந்து உன்னை இடிச்சுட்டேன். நீ மனசுல எதயும் வச்சுக்காதேஎன்று சொல்லிவிட்டு என் பதிலை எதிர்பார்க்காமல் அவன் வண்டியை நோக்கி நடந்தான்.
நான் ஒரு நிமிடம் திகைத்து நின்றவன் பின் சுதாரித்துக் கொண்டு மாரி அண்னே என்று அவனருகில் ஓடி கையிலிருந்த பணத்தை அவன் சட்டைப்பையில் திணித்து அண்ணிய போயி முதல்ல பாருங்க, அவங்க தான் முக்கியம், வண்டிய அப்புறம் பார்த்துக்கலாம், நாளைக்கு நாங்க எல்லோரும் ஆசுபத்திருக்கு வர்றோம் என்று சொல்லிவிட்டு விரு விருவென வீட்டுக்கு வந்தேன், மனது சந்தோசம் கலந்த துக்கப்பட்டது, என் முகம் பார்த்து மனைவி,குழ்ந்தைகள் ஆச்சர்யப்பட்டனர்
தமிழ் அறிவோம் 

  https://www.youtube.com/watch?v=c019ZjECTnY&list=PL41DA461A06758121&index=81&t=0s

இணையம் அறிவோம்  https://thamaraithamil.blogspot.com/2015/05/1.html

செயலி https://play.google.com/store/apps/details?id=com.mtplabs.Agaram

தொகுப்பு   https://kanchidigitalteam.blogspot.com



No comments:

Post a Comment