அறிவுக்கு விருந்து 06.01.2020 ( திங்கள் )

வரலாற்றில் இன்று -   சனவரி 6 (January 6) கிரிகோரியன் ஆண்டின் ஆறாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 359 (நெட்டாண்டுகளில் 360) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

·  1066இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் அரால்டு முடிசூடினார்.
·  1449பதினோராம் கான்ஸ்டன்டைன் பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார்.
·  1540இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர் கிளீவ்சின் இளவரசி ஆன் என்பவரைத் திருமணம் புரிந்தார்.
·  1690முதலாம் லெப்பல்ட் மன்னரின் மகன் யோசப் புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார்.
·  1809நெப்போலியப் போர்கள்: பிரித்தானிய, போர்த்துக்கீச, பிரேசில் படைகள் இணைந்து கயேன் மீது தாக்குதலைத் தொடுத்தன.
·  1838ஆல்பிரட் வால் என்பவர் மோர்சுடன் இணைந்து தொலைத்தந்தியை முதன் முறையாக வெற்றிகரமாக சோதித்தார். இது மோர்ஸ் தந்திக்குறிப்பு உருவாக்கத்திற்கு வழிவகுத்தது.
·  1839அயர்லாந்தைத் தாக்கிய கடும் புயலினால் டப்லின் நகரின் 20% வீடுகள் சேதமடைந்தன.

பிறப்புகள்

·  1412ஜோன் ஆஃப் ஆர்க், பிரான்சிய வீராங்கனை, புனிதர் (. 1431)
·  1500அவிலா நகரின் யோவான், எசுப்பானியப் புனிதர் (. 1569)
·  1878கார்ல் சாண்ட்பர்க், அமெரிக்கக் கவிஞர், வரலாற்றாளர் (. 1967)
·  1883கலீல் ஜிப்ரான், லெபனான்-அமெரிக்க கவிஞர், ஓவியர் (. 1931)
·  1899சிற்றம்பலம் கார்டினர், இலங்கைத் தொழிலதிபர், திரைப்படத் தயாரிப்பாளர்

இறப்புகள்

·  1731எடியென்னே பிரான்கோயிஸ் ஜெப்ராய், பிரான்சிய மருத்துவர், வேதியியலாளர்
·  1852லூயி பிரெயில், பார்வையற்றவர்களுக்கான பிரெயில் எழுத்தை உருவாக்கிய பிரான்சியர் (பி. 1809)
·  1884கிரிகோர் மெண்டல், செக் நாட்டு தாவரவியலாளர் (பி. 1822)
·  1918கியார்கு கேன்ட்டர், செருமானியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (பி. 1845)
·  1919தியொடோர் ரோசவெல்ட், அமெரிக்காவின் 26வது குடியரசுத் தலைவர் (பி. 1858)
·  1937ஆந்திரே பெசெத், கனடியப் புனிதர் (பி. 1845)
·  1943அரங்கசாமி நாயக்கர், புதுவை விடுதலைக்காகப் போராடியவர், தமிழறிஞர்

சிறப்பு நாள்

குறளறிவோம்-  134. ஒழுக்கமுடைமை
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:  பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்.
மு.வரதராசனார் உரை: கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.
Translation: Though he forgets, the Brahman may regain his Vedic lore; Failing in 'decorum due,' birthright's gone for evermore.
Explanation:  A Brahman though he should forget the Vedas may recover it by reading; but, if he fail in propriety of conduct even his high birth will be destroyed.

சிந்தனைக்கு:
மிகவும் அருமையாக இருக்கிறது.கற்றதையும்'பெற்றதையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் தன்மை சிலரிடம் மட்டும் தான் உண்டு.நன்றியும் வாழ்த்துகளும்.
தமிழ் அறிவோம்: ஒத்தச் சொற்கள்
பெண் - நங்கை, வனிதை, மங்கை
வயல் - கழனி, பழனம், செய்
விடுகதை விடையுடன்
தலையில் கீரீடம் வைத்த தங்கப்பழம் அது என்ன?   அன்னாசிப்பழம்
பழமொழி-  முப்பது நாளே போ, பூவராகனே வா.
பொருள்/Tamil Meaning வேலையில் ஆர்வமில்லாது எப்போது மாதம் முடிந்து சம்பளம் வரும் என்று எதிர்பார்த்து இருந்தவனைக் குறித்துச் சொன்னது.
Transliteration Muppatu nale po, poovaraakane vaa.
தமிழ் விளக்கம்/Tamil Explanation வராகன் என்பது மூன்று ரூபாய் மதிப்புள்ளதும் பன்றிமுத்திரை கொண்டதுமான ஒருவகைப் பொன் நாணையம் (அரும்பொருள் விளக்க நிகண்டு). பூவராகன் என்பதில் உள்ள வராகம் திருமாலின் வராக அவதாரத்தைக் குறிக்கிறது.
Enrich your   vocabulary
war போரிடு , யுத்தம் நடத்து
warble  இனிமையாகப் பழகு

Proverb A ship in the harbor is safe, but that is not what a ship is for.

Get out of your comfort zone to grow and fulfill your potential.
Example: I think your fears are unfounded. You should travel to Italy for the Model UN. I’m sure you’ll learn a lot. Remember, a ship in the harbor is safe, but that is not what a ship is for.

Opposite Words 

Mature X Immature
·         Laura is very mature for her age.
·         He forgave his son’s immature behavior.
Maximum X Minimum
·         The car has a maximum speed of 120 mph.
·         The minimum number of students we need to run the course is fifteen.
மொழிபெயர்ப்பு
ஒரு வகை முள்ளங்கி
ஒரு வகை சிறியக்காய்
கணினி ஷார்ட்கட் கீ
F5
Slideshow of presentation
Ctrl+E
Align Center Selected Phrase
இனிக்கும் கணிதம்      .. நீட்டல் அளவை வாய்ப்பாடு
8 நெல் 1 பெருவிரல்
12 பெருவிரல் – 1 சாண்
அறிவியல் அறிவோம்
எரிதலை கட்டுப்படுத்தும் வளி மண்டல பகுதிப் பொருள் - நைட்ரஜன்
புவியின் உள்மையப் பகுதியில் நிலவும் வெப்பநிலை - 1770
தினம் ஒரு மூலிகை  மஞ்சாடி அல்லது ஆனைக் குன்றிமணி (Adenanthera pavonina)  எனப்படுவது ஆசியாஆஸ்திரேலியாதென்னமெரிக்காவட அமெரிக்கா என உலகின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும் ஒரு தாவர இனம் ஆகும். வெட்டுமரத் தேவைக்காகவே இது பெரிதும் பயன்படுகிறது எனினும் இது வலிமை குறைந்தது.
             மஞ்சாடி மரம் மண்ணின் நைட்ரஜனன் அளவைச் சமப்படுத்துவதற்காகவே முதன்மையாக வளர்க்கப்படுகிறது. அத்துடன் விலங்குளின் உணவுக்காகவும் மருந்து மூலிகையாகவும் வீட்டுத் தோட்டங்களிலும் நகர்ப்புறங்களிலும் அழகுத் தாவரமாகவும் இது வளர்க்கப்படுகிறது. இத்தாவரத்தின் தரமான, அழகிய விதைகள் அவற்றின் அழகு காரணமாகவும் உணவுக்காகப் பயன்படுத்தப்படுவதாலும் இதன் பரவல் எளிதாகின்றது. மஞ்சாடியின் இளம் காய்களைக் குரங்குகள் போன்ற விலங்குகள் விரும்பி உ ண்கின்றன.
பச்சையாக உள்ள மஞ்சாடி விதைகள் ஓரளவு நச்சுத் தன்மையுள்ளனவாக இருந்த போதிலும் அவற்றைச் சமைக்கும் போது அவற்றின் நச்சுத் தன்மை குறைந்து உண்ணத் தக்கனவாக மாறுகின்றன. மஞ்சாடி விதைகளே பழங்கால இந்தியாவில் தங்கம் போன்ற பெறுமதிப்பு மிக்க மாலைகளை நிறு ப்பதற்குப் பயன்பட்டன. மஞ்சாடி விதைகள் கழுத்தணிகள், கை மாலைகள் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றன.
உணவு 
தினசரி புரதத் தேவைப்பாடுகள் : ICMR பரிந்துரையின்படி ஒரு இளம் வயதுள்ள மனிதனுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 1 கிலோ உடல் எடைக்கு 1 கிராம் புரதம் தேவைப்படுகிறது. பாலூட்டும், கர்ப்பிணி பெண்களுக்கும் ஒரு நாளைக்கு சராசரியாக 14 - 25 கிராம் புரதம் அதிகமாக தேவைப்படுகிறது.
வரலாற்றுச் சிந்தனை   - தியாக உணர்வு.
மகன் இரவில் படித்துக்கொண்டு இருந்தான். வயதான தாய் படுக்கையில் இருந்தவாறு நீர் கேட்டார். பாத்திரத்தில் நீர் இல்லை.கிணற்றில் இருந்து நீர் கொண்டு வருவதற்குள் தாய் உறங்கிவிட்டாள்.தாய் கண் விழித்தபோது விடிந்திருந்தது. தாய்"மகனே இரவு முழுவதும் இப்படியே நின்று கொண்டு இருந்தாயா " எனக்கேட்டார்
ஆம். அம்மா உங்களுக்கு தாகம் எடுக்கும் போது நீர் தர காத்திருந்தேன் என்றார் மகன். அச்சிறுவன் தான் ஈரான் நாட்டின் தலை சிறந்த சமயச் சான்றோரில் ஒருவர் "பாயசீத்புஸ்தாமி
 தன்னம்பிக்கை கதை-  வானம் எங்களுக்கும் வசப்படும்
ஒச்சாயி கண்களை சுருக்கி கண்களுக்கு மேல் கை வைத்துக்கொண்டு தெருவையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கணவன் சடையாண்டியை இன்னும் காணவில்லை. காலையில் ஒரு வாய் கஞ்சித்தண்ணியை வாயில் ஊற்றிக்கொண்டு போசியில் கொஞ்சம் பழையதயும் போட்டுக்கொண்டு தன்னுடைய ஆடுகளை மேய்ச்சலுக்கு விட கிளம்பியவந்தான் பசுமைகள் மறைந்து காண்கிரீட் மரங்களால் வளர்ந்து கொண்டிருக்கும் இந்த பிரதேசத்தில் புல் பூண்டுகளுக்கு வழியில்லாமல் தூர..தூர இடத்துக்கு நடக்க ஆரம்பித்துவிடுவான்.
மதியம் கொண்டு போன பழையதை சாப்பிட்டுவிட்டு ஏதாவது ஒரு மர நிழலில் படுத்து தூக்கம் கண்களைச்சுழற்ற அவ்வப்போது ட்ரா..ட்ரா.. என்று சத்தம் கொடுத்துக்கொண்ட இருப்பான் ஆடுகள் மேச்சல் உற்சாகத்தில் தன்னை விட்டு போய்விடாமல் இருக்க.
சடையாண்டிக்கு ஒச்சாயி வாழ்க்கை படும்போது அவனுக்கு இரண்டு ஏக்கரா வானம் பார்த்த பூமி பரம்பரை சொத்தாக இருந்தது. அதில் ஏதோ பயிர் செய்ததோடு மட்டுமல்லாமல், ஒச்சாயி நான்கைந்து ஆடுகளையும்,கோழிகளையும் வளர்த்து உருப்படியாக்கி விற்றுத்தான் இவர்களின் மக்கமார்களான ராசுவையும், மயிலாத்தாளையும் வளர்த்து,அசலூரில் பெண்ணயும் பையனை பொள்ளாச்சியில் ஒரு ஆட்டோ ஓட்டுனராக்கி அங்கேயே குடித்தனத்தையும் வைக்க உதவியது. அந்த வாயில்லா ஜீவன்களும், வானம் பார்த்த பூமியும், இவர்கள் வாழ்க்கையை ஓட்டுவதற்கு உதவிக்கொண்டே இருந்த்து. பொள்ளாச்சிக்கு குடிபோனவனிடம் இவன் உறவுக்காரர்கள் என்ன சொன்னார்களோ தெரியாது, ஊருக்கு வந்து நிலத்தை விற்றால்தான் ஆச்சு என்று பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்துவிட்டான். இவன் நிலத்தை விற்க அடி போட ஆரம்பித்துவிட்டான் என்பதை இவன் அக்கா வீட்டுக்காரன் அவள் காதில் ஓத அவளும் கையிலொன்றும், இடுப்பில் ஒன்றையும் இழுத்துக்கொண்டு வீட்டுக்குள் வந்து உட்கார்ந்துகொண்டாள்.அக்காக்காரி அம்மாவிடம் ஏதாவது பேசி கெடுத்துவிடுவாள் என்று தம்பிக்காரனும் உடனே வந்து உட்கார்ந்து கொண்டு இருவரும் வாக்குவாதத்தில் இறங்கினர். இவர்கள் வாக்குவாதத்தை கேட்கப்பிடிக்காமல் தான் ஒச்சாயி தன் கணவனின் வருகைக்காக கண்களின் மேல் கைவைத்துக்கொண்டு உற்று நோக்கிக்கொண்டிருந்தாள்.
தன் கணவன் வந்துவிட்டாலும் இந்த பிரச்னைக்கு என்ன பதில் வைத்திருக்கப்போகிறான். அவனை பொறுத்தவரை ஒச்சாயி என்ன சொல்கிறாளோ அதை செய்வான். நல்ல உடல் பலம் இருந்தபொழுது இருவரும் பக்கத்து தோட்டத்தில் வேலை செய்ய செல்வார்கள். அதில் அவனுக்கு எவ்வளவு வரும்படி வந்தாலும் ஒச்சாயிடம் கொடுத்துவிட்டு பீடிக்கும் அவ்வப்பொழுது ஊற்றிக்கொள்ள சிறிது பணமும் பெற்றுக்கொள்வான். அப்படி ஒன்றும் சடையாண்டி பெரிய குடிகாரனும் அல்ல, சில நேரங்களில் காட்டில் வேலை அதிகமாக இருந்தபொழுதோ, அல்லது விளைந்த காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைத்தபொழுதோ ஒச்சாயிடம் வந்து தலையை சொறிவான்.அவளும் புரிந்துகொண்டு இந்தா..போய் கம்முனு ஊத்திக்கிட்டு வீடு வந்து சேரு, அங்க இங்க நின்னுகிட்டு திரியாத ! கண்டிப்புடன் சொல்லுவது போல் இருந்தாலும் உள்ளில் பாசம் இருக்கும், அதே போல் அவன் வீடு வரும்போது கோழி அடித்து குழம்பு வைத்திருப்பாள்.
தூரத்தில் அவன் நடந்து வருவது தெரிந்தது, தளர்ந்து போன நடை, ஆடுகள் அவன் முன்னால் வர இவன் குரல் கொடுத்துக்கொண்டே வருவது தெரிந்தது.எப்பொழுதும் ஆடுகள் வந்தவுடன் ஒச்சாயிடம் உரசிக்கொண்டே நிற்கும், இவள் தனித்தனியே இவைகளை தடவிக்கொடுத்து கொஞ்சுவாள், அதன் பின் மரத்தில் கட்டி தொங்க விட்டிருக்கும் தலைக்கொத்தை எடுத்து வாயில் ஊட்டுவாள், அவைகளும் வாயில் வாங்கிக்கொண்டு பட்டிக்குள் நுழையும். சடையாண்டி வந்துவிட்டான், வழக்கம்போல ஆடுகள் அவளை உரச அவள் இருந்த மனநிலையில் அவைகளைக்கொஞ்ச மனமில்லாமல் வெறுமனே தடவிக்கொடுத்து நான்கைந்து தலைக்கொத்துக்களை மட்டும் வாயில் ஊட்டிவிட்டாள், அவைகளும் அவள் மன நிலை புரிந்துகொண்டனவோ என்னவோ தெரியாது வேகமாக பட்டிக்குள் சென்றுவிட்டன.
கை கால்களை கழுவிகிட்டு வா என்று இவள் உள்ளே போக சடையாண்டி அங்கே தொட்டியில் இருந்த தண்ணீரில் கை கால்களை கழுவிக்கொண்டு உள்ளே வந்தான்.
இறுகிய முகத்துடன் பெண்ணும், பையனும், உட்கார்ந்திருப்பதை பார்த்த சடையாண்டி கேள்விக்கணையுடன் இவளை பார்க்க நீ முதல்ல உட்காரு என்று உட்காரவைத்து பழைய சாப்பாட்டுடன் சுண்டைக்காய் குழம்பை ஊற்றினாள். இவங்க இரண்டு பேரும் சாப்பிட்டாச்சா என்று கேட்டவனிடம் எல்லாம் சாப்பிட்டாச்சு நீ சாப்பிடு, அதற்கு மேல் எதுவும் பேசாமல் சாப்பிட ஆரம்பித்தான்.
பெண் ஆரம்பித்தாள், அம்மா நீ என் குழந்தைகளுக்கு ஆளுக்கு ஒரு பவுன் போடறேன்னு சொன்ன, இது வா¢க்கும் போடல, எங்க ஊட்ல இதுக்கு பதில் சொல்லியே நான் ஓஞ்சு போயிட்டேன். இப்ப இவன் காட்டை விக்கறங்கறான், கடைசியிலே என் குடும்பத்தை அம்போன்னு விட்டுடவேண்டாம்னு சொல்லு.
நீ என்ன மனசுல நினைச்சுகிட்டிருக்க, உன கல்யாணத்தப்பவே எல்லா செலவும் பண்ணியாச்சு, அது போக உன் குழந்தைகளுக்கு மாமன் சீரும் நல்லாத்தானே செஞ்சேன்,அப்புறம் என்ன மல்லுகட்டிகிட்டு நிக்க்றே !.
ராசு கொஞ்சம் கம்முனு இரு! இந்தா மயிலாத்தா நீயும் கொஞ்சம் வாயை மூடிகிட்டு இரு, ஒச்சாயி உரத்த குரலில் சொல்லவும் அங்கு மெளனம் நிலவியது. சூழ்நிலைகள் சடையாண்டிக்கு புரிந்தாலும் தனது மனைவி சமாளித்துக்கொள்வாள் என முடிவு செய்தவன் போல் நிதானமாக சாப்பிட்டு எழுந்து வந்து திண்ணையில்  சாய்ந்து கொண்டான். ராசு நீ என்னதான் சொல்லுற! மகனிடம் கூடிய வரையில் கோபத்தை காட்டாமல் கேட்டாள்.அந்த நிலத்துல நாம இப்ப பயிர் பண்ணல்ல, சும்மா வச்சு இப்ப என்ன பண்ணுது, இப்ப நிலத்துக்கு நல்ல மார்க்கெட், பேசாம வித்துட்டு காசை பாங்கியில போட்டா என் குடும்பத்துக்கோசரமாவது பிரயோசனமாயிருக்கும்.
அப்ப நாங்க எல்லாம் காவடி தூக்கிட்டு போறதா? மயிலாத்தாள் எழுந்து கத்தினாள். இந்தா மயிலாத்தா பேசாம இரு நாந்தான் பேசிக்கிட்டிருக்கேன்ல, அடக்கினாள் ஒச்சாயி. ஏண்டா ராசு அந்த நிலம் இப்ப உன்னைய என்ன பண்ணுது? உங்க பிற்காலத்துக்கு அது ஒண்ணுதாண்டா உதவியாயிருக்கும், அம்மா இப்ப கிடைக்கற விலை அப்ப உனக்கு கிடைக்குமா? நானே ஆட்டோ ஓட்டித்தான் எங்குடும்பத்தை காப்பாத்திகிட்டு இருக்கேன், இந்த நிலத்தை வித்து ஏதாவது வந்தாத்தான் நான் சொந்தமா ஒரு ஆட்டோ வாங்கவாவது முடியும், நான் நல்லா இருக்கனும்னு உனக்கு தோணாதா?
அவன் முடிவிலிருந்து மாறப்போவதுமில்லை, அதுபோல மயிலாத்தாளும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை, இவர்கள் இருவருக்குமே ஒச்சாயியைப்பற்றியும், சடையாண்டியைப்பற்றியும் கவலையில்லை என்பதை உணர்ந்துகொண்டாள் ஒச்சாயி. நிலத்தை வித்தா உங்க அக்காவுக்கு என்ன செய்யப்போற்? கேட்டவுடன் சீறினான் எதுக்கு கொடுக்கணும்? அவளுக்குத்தான் எல்லாம் செஞ்சாச்சே, உடனே மயிலாத்தாள், ராசு சட்டமே சொல்லுது எங்களுக்கு பங்கு கொடுக்கணும்னு புரியுதா?
சட்டம் என்ன சட்டம் ! வேகமாக சொன்னாலும் மனதுக்குள் கண்டிப்பாக சிக்கல் வரும் என புரிந்து கொண்டான், சா¢ உனக்கும் கொஞ்சம் தர்றேன், இந்த பதிலில் ஓரளவு சமாதானமானாள் மயிலாத்தாள். அப்ப உங்கப்பனுக்கும் ஆத்தாளுக்கும் என்ன கொடுப்பே? கேட்ட ஒச்சாயிடம் அக்காளும் தம்பியும் ஒரு சேர பாய்ந்தனர், உனக்கெதுக்கு பணம்? பணம், பங்கு என்றவுடன் அக்காளும், தம்பியும் ஒன்று சேர்ந்துகொண்டதை கவனித்த ஒச்சாயி நிலம் பரம்பரை சொத்தாயிருந்தாலும் அதுல உங்களை பெத்தவங்களுக்கும் பங்கு கொடுக்கணும்னு தெரியுமா?
அக்காளும் தம்பியும் தங்களுக்குள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வர்ற பணத்துல கொஞ்சம் கொடுத்துடறோம், அப்புறம் இந்த வீட்டுல கடைசிவரைக்கும் இருங்க, உங்களுக்கு பின்னாடி யாருக்கு கொடுக்கனும்னு நினைக்கிறீங்களோ அவங்களுக்கு கொடுத்துடுங்க. அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம், எப்ப சொத்தை விக்கறதுண்ணு முடிவு பண்ணிட்டீங்களோ அப்பவே உங்க சம்பந்தப்பட்டது எல்லாத்தயும் வித்துடுங்க, உங்க தயவுல நாங்க இருக்ககூடாது, இந்த வீட்டையும் சேர்த்து வித்துட்டு எங்களுக்கும் ஒரு பங்கு கொடுத்துடு, அதுக்கப்புறம் உங்க பாடு வேற எங்க பாடு வேற இந்த பேச்சு அக்காளையும், தம்பியையும் சிறிது உலுக்கியது, இருந்தாலும் பணம் என்னும் மந்திரம் அவர்களின் சலனத்தை ஒதுக்கித்தள்ளியது. நான் கிளம்பறேன் அக்காவையும் அவ வீட்டுல விட்டுட்டு நான் பொள்ளாச்சி கிளம்பறேன், விடைபெற்றனர்.
அவர்கள் சென்று அரை மணி நேரம் கழிந்து தன் கணவணை பார்க்க, அவன் எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தான். இவள் மெல்ல அருகில் சென்று கவலைப்படாதேயா ஊருக்குள்ள ஒரு வீட்டை ஒத்திக்கு பேசி வச்சிட்டேன், இவன் எப்ப இடத்தை விக்கறதுன்னு ஆரம்பிச்சுட்டான்னோ அப்புறம் இந்த வீட்டுல இருந்தா ஏதோ இவங்க தயவுலதான் நாம இருக்கோம்னு நினைச்சுக்குவாங்க, கவனிச்சியில்ல காசுன்ன உடனே அக்காளும், தம்பியும் ஒண்ணாயிட்டாங்க, எங்கிட்ட கொஞ்சம் சிறுவாடு காசு வச்சிருக்கன், இன்னும் இரண்டு மூணு ஆட்டுக்குட்டி வாங்கிப்போடுவோம், அவங்க பங்கு பணம் கொடுத்தாக்கா குத்தகைக்கு தோப்பை எடுப்போம், நம்மால முடியறவரைக்கும் பாடுபடுவம்யா!. 

தமிழ் அறிவோம் https://www.youtube.com/watch?v=0QpOS7wDtbM

இணையம் அறிவோம்  https://www.tamilkaru.com/post/tamil-arivom-aiyya

செயலி https://play.google.com/store/apps/details?id=nithra.tamilkarka

தொகுப்பு   https://kanchidigitalteam.blogspot.com


No comments:

Post a Comment