அறிவுக்கு விருந்து – 30.10.2019 (புதன்)


அறிவுக்கு விருந்து – 30.10.2019 (புதன்)

வரலாற்றில் இன்று - அக்டோபர் 30 (October 30) கிரிகோரியன் ஆண்டின் 303 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 304 ஆம் நாள்.
நிகழ்வுகள்
·  637அந்தியோக்கியா ராசிதீன் கலீபாக்கள் தலைமையிலான முசுலிம் படையினரிடம் வீழ்ந்தது.
·  758குவாங்சோவை அரபு, பாரசீக கடற்கொள்ளையர் கைப்பற்றினர்.
· 1270சிசிலியின் முதலாம் சார்லசிற்கும் தூனிசின் சுல்தானுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் எற்பட்டதை அடுத்து 8-வது சிலுவைப் போரும் தூனிசு மீதான முற்றுகையும் முடிவுக்கு வந்தன.
· 1485ஏழாம் என்றி இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.
· 1502வாஸ்கோ காமா இரண்டாவது தடவையாக கோழிக்கோடு வந்தார்.
·1817வெனிசுவேலாவில் சுதந்திர அரசொன்றை சிமோன் பொலிவார் அமைத்தார்.
·1831ஐக்கிய அமெரிக்காவில் அடிமை முறைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த நாட் டர்னர் வர்ஜீனியாவில் கைது செய்யப்பட்டார்.
பிறப்புகள்
·  1735ஜான் ஆடம்ஸ், அமெரிக்காவின் 2வது அரசுத் தலைவர் (. 1826)
·  1885எஸ்ரா பவுண்ட், அமெரிக்கக் கவிஞர் (. 1972)
·  1896ஹேரி ஆர். ட்ரூமன், அமெரிக்கப் போர் வீரர் (. 1980)
·  1898இராய. சொக்கலிங்கம், தமிழறிஞர் (. 1974)
·  1908முத்துராமலிங்கத் தேவர், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர்
·  1909ஓமி பாபா, இந்திய-பிரெஞ்சு இயற்பியலாளர் (. 1966)
·  1932பருண் டே, இந்திய வரலாற்றாளர் (. 2013)
இறப்புகள்
·  1883தயானந்த சரசுவதி, இந்திய மெய்யியலாளர் (பி. 1824)
·  1963முத்துராமலிங்கத் தேவர், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர்
·  1969அனந்தராம தீட்சிதர், தமிழக சமய சொற்பொழிவாளர் (பி. 1903)
·  1972பதே சிங், சீக்கிய சமய, அரசியல் தலைவர் (பி. 1911)
·  1973ரா. கிருஷ்ணசாமி நாயுடு, தமிழக அரசியல்வாதி (பி. 1902)
·  1974பேகம் அக்தர், இந்தியப் பாடகி, நடிகை (பி. 1914)

·  1979சுபத்திரன், இலங்கையின் முற்போக்கு இலக்கிய கவிஞர் (பி. 1935)

சிறப்பு நாள்

குறளறிவோம்-  93. விருந்தோம்பல்

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.
மு.வரதராசனார் உரை:முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.
Translation: With brightly beaming smile, and kindly light of loving eye,
And heart sincere, to utter pleasant words is charity.
Explanation: Sweet speech, flowing from the heart (uttered) with a cheerful countenance and a sweet look, is true virtue.
சிந்தனைக்கு  
பணக்காரன் ஆக வேண்டுமா? அதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியது இல்லை. தேவைகளைக் குறைத்துக் கொள்
தமிழ் அறிவோம்ஒத்தச் சொற்கள்
வியப்பு மாபெரிய மீமேல் மூ-மூப்பு
விடுகதை விடையுடன்
வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ அது என்ன? சிரிப்பு
பழமொழி- தன்வினை தன்னைச்சுடும், ஓட்டப்பம் வீட்டைச்சுடும்.
பொருள்/Tamil Meaning ஒவ்வொருவருடைய வினைகளும் அவரை நிச்சயம் பாதிக்கும், ஓடுமேல் உள்ள அப்பத்தால் வீடு பற்றி எறிவதுபோல.
Transliteration Tanvinai tannaiccutum, ottappam veettaiccutum.
தமிழ் விளக்கம்/Tamil Explanationபட்டினத்தார் தன் செல்வச் செழிப்பான வாழ்க்கையை விட்டுத் துறவு பூண்டு தங்கள் எதிரிலேயே வீடுவீடாகப் பிச்சை எடுப்பது அவருடைய உறவினர்களுக்குப் பிடிக்காமல் அவரது சகோதரி மூலமக அவருக்கு நஞ்சுகலந்த அப்பம் ஒன்றை அனுப்பினர். கணபதி அருளால் இதனை அறிந்த பட்டினத்தார் அவர்களுக்குப் பாடம் புகட்ட எண்ணி, தன் சகோதரி வீட்டின் முன்நின்று அப்பத்தை வீட்டின் கூரையில் எறிந்துவிட்டுப் பாடிய பாடல்தான் இந்தப் பழமொழி. வீடு உடனே பற்றி எரிய, அவர்கள் தம் தவறுணர்ந்து வருந்தியபோது, அவர் வேறொரு பாடல்பாட, நெருப்பு அணைந்தது.
Enrich your   vocabulary
vaccinate    அம்மை குத்து
vacillate      ஊசலாடு
vail              தாழ்த்து
Proverb
A little stream will run a light mill
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
Opposite Words 
Expand X Shrink
  • The hotel wants to expand its business by adding a swimming pool.
  • The firm’s staff had shrunk to only four people.
Export X Import
  • Italian food has been exported all over the world.
  • We import coffee from Colombia.
மொழிபெயர்ப்பு
கறி வாழை
உருளைக்கிழங்கு
கணினி ஷார்ட்கட் கீ
Shift + F3
கேப்பிடல் லெட்டர் இருக்கும் டெக்ஸ்ட்- ஸ்மால் லெட்டராக மாற்றலாம், முதல் எழுத்து கேப்பிடலாக வர
Shift + F12
ஒரு டாக்குமெண்ட் சேமிக்க ctrl + s போல
இனிக்கும் கணிதம்      நீட்டல் அளவை வாய்ப்பாடு
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை
அறிவியல் அறிவோம் - நீரில் கரையாத வாயு எது - நைட்ரஜன்
அறிவியல் துளிகள் - தொலைபேசி - கிரகாம் பெல்
தினம் ஒரு மூலிகை ஆளை மறைக்கும் ஆதள மூலிகை
இந்த மூலிகை செடியின் இலையை கிள்ளினால் அதில் ஒருவித பால் கசியும், அந்தப்பாலுடன் கரும் பூனையின் முடி, இவைகளுடன் கலந்து செம்பு பாத்திரத்தில் ஊற்றி, சூடு செய்து சுண்டவைத்து, அதை மலைத்தேன் கொண்டு பிசைந்து, சிறு உருண்டையாக்கி, அதை செப்பு தகடு எந்திரத்தினுள் இட்டு மூடி, அதை வாயினுள் போட்டு அதக்கி, மறைய நினைக்க யார் கண்ணுக்கும் தெரியாமல் மனிதர்களை மாயமாக மறையச்செய்யும் அபூர்வ மூலிகைதான் ஆதளம். இந்த ஆபூர்வ மூலிகையின் சக்தியினால்தான் இன்றளவும் பல சித்தர்கள் யார் கண்ணுக்கும் புலப்படாமல் வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும்
பழங்களிலும் காய்கறிகளிலும் காணப்படும் நிறமிகள்  டானின்கள் (TANNINS)
இவை பாலிமரிக் பாலிபீனால்கள் போன்ற நிறமிகளின் கலவையாகும். டானின் நிறம் நிறமற்ற தன்மையிலிருந்து, மஞ்சள் மற்றும் பழுப்பு நிறம் கொண்டதாக இருக்கும். டானின்கள் உணவுப்பொருள்களுக்கு விறுவிறுப்புத்தன்மையும் மற்றும் நொதிகளின் கிரியையினால் ஏற்படும் பழுப்பாதலுக்கும் காரணமாகிறது.
வரலாற்றுச் சிந்தனை 
சீக்கியர்களின் ஒன்பதாவது குருவான தேஜ்பகதூரை கொன்ற முகலாயப் பேரரசர்  -  ஔரங்கசீப்
தன்னம்பிக்கை கதை- அறிவுத்திறனும், உடல் பலமும்
ஒரு முதலாளி, தனக்குச் சொந்தமான பரந்த இடம் முழுதிலும் தென்னங்கன்றுகளை நட வேண்டும் என்று முடிவு செய்தார். மரக் கன்றுகள் நடுவதற்குப் பள்ளம் வெட்ட வேண்டிய வேலையை ரங்கன் என்பவனிடம் ஒப்படைத்தார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, நன்றாக உழைத்து நிறையச் சம்பாதித்துவிட வேண்டும் என்று நினைத்தான் ரங்கன். ஏனென்றால், அவன் தன் மகளின் திருமணத்திற்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் காசு சேர்த்து வருகிறான். இன்னும் போதுமான அளவு பணம் சேரவில்லை. ரங்கன், முதல் நாளில் இருபது மரக் கன்றுகளை நடுவதற்குப் பள்ளம் தோண்டினான். அவன் உழைப்பைக் கண்டு முதலாளி அவனை மிகவும் பாராட்டினார். பிறகு, ஒவ்வொரு நாளும் அவன் தோண்டுகிற பள்ளத்தின் எண்ணிக்கை குறைந்து வரத் தொடங்கியது. நாற்பதாம் நாளில் அவன், காலையிலிருந்து மாலை வரை எவ்வளவோ முயன்றும் இரண்டு பள்ளங்கள்தான் தோண்ட முடிந்தது. ரங்கன் மிகவும் ஏமாற்றமடைந்தான். "முதல் நாளின்போது இருபது பள்ளங்கள் தோண்டியவன் நாற்பதாம் நாளில் இரண்டு பள்ளம் தோண்டுகிறானே, இவனுக்கு என்ன ஆயிற்று?" என்று முதலாளியும் குழம்பினார். அவர் ரங்கனின் மண்வெட்டியை வாங்கிப் பரிசோதித்துப் பார்த்தார். மண்வெட்டியின் முனை கூர் மழுங்கியிருந்தது.
அவர் ரங்கனிடம் கேட்டார்: "நீ உன் பணி ஆயுதத்தைக் கூர்தீட்டி நன்றாக வைத்துக் கொண்டால் என்ன?'' ரங்கன் சொன்னான்: "இதற்கெல்லாம் எனக்குக் கொஞ்சம்கூட நேரமே இல்லை அய்யா! நான், நாள் முழுதும் சிறிதும் ஓய்வெடுக்காமல் உழைத்துக் கொண்டிருக்கிறேன். நிறைய வேலை செய்து நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டுமே!'' முதலாளி சொன்னார்: "ரங்கா, இந்த மண்வெட்டியைப் போலத்தான் நாமும். நம் அறிவுத்திறனும், உடல் பலமும் மழுங்கிவிட்டால் நம்மால் எதுவுமே செய்யமுடியாது. நமக்கு எவ்வளவோ கடமைகள் இருக்கலாம். நிறைய உழைக்க வேண்டி வரலாம். ஆயினும் நம் உடலையும், மனதையும், அறிவையும் எப்போதும் பேணிக் கூர்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம்மால் நிறையச் சாதிக்க முடியும். நம் இலக்கை விரைவில் அடைய முடியும்!''
செய்துபார்ப்போம் - Mice Corner Bookmarks!

இணையம் அறிவோம்   https://diksha.gov.in/

செயலி NROER Videos

https://play.google.com/store/apps/details?id=com.cdac.nroer_ver&hl=en_IN

No comments:

Post a Comment