அறிவுக்கு விருந்து – 29.10.2019 (செவ்வாய்)


அறிவுக்கு விருந்து – 29.10.2019 (செவ்வாய்)

வரலாற்றில் இன்று - அக்டோபர் 29 (October 29)
கிரிகோரியன் ஆண்டின் 302 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 303 ஆம் நாள்.
நிகழ்வுகள்
·  கிமு 539பாரசீகப் பேரரசை நிறுவிய சைரசு பாபிலோனின் தலைநகரை அடைந்து, யூதர்கள் அனைவரையும் அவர்களது நாட்டுக்குத் திரும்ப அனுமதித்தார்.
·  312முதலாம் கான்ஸ்டன்டைன் மில்வியன் சமரில் பெரும் வெற்றி பெற்று உரோம் திரும்பினான். அங்கு அவனுக்குப் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது.
·  969பைசாந்தியப் படையினர் சிரியாவின் அந்தியோக்கியா நகரைக் கைப்பற்றினர்.
·  1390மந்திரவாதிகளுக்கு எதிரான முதலாவது வழக்கு பாரிசில் இடம்பெற்றது. வழக்கின் இறுதியில் மூவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
·  1591ஒன்பதாம் இனொசெண்ட் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
·  1618ஆங்கிலேயக் கவிஞரும் நாடுகாண் பயணியுமான சேர் வால்ட்டர் ரேலி இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னருக்கு எதிராக சூழ்ச்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனக்குள்ளாக்கப்பட்டார்.
·  1665போர்த்துக்கீசப் படையினர் கொங்கோ பேரரசைத் தோற்கடித்து அதன் மன்னன் முதலாம் அந்தோனியோவைக் கொன்றனர்.
·  1675லைப்னித்சு முதற்தடவையாகஎன்ற குறியீட்டை நுண்கணிதத்தில் தொகையீட்டைக் குறிக்கப் பயன்படுத்தினார்.
பிறப்புகள்
·  1270நாம்தேவ், மகாராட்டிரத் துறவி (. 1350)
·  1808காத்தரினா சுகார்பெல்லினி, இத்தாலிய வானியலாளர் (. 1873)
·  1897ஜோசப் கோயபெல்ஸ், செருமனியின் அரசுத்தலைவர் (. 1945)
·  1909மு. அருணாசலம், தமிழகத் தமிழறிஞர், நூலாசிரியர் (. 1992)
·  1921பாலகுமாரன் மகாதேவா, இலங்கைக் கல்வியாளர் (. 2013)
·  1923காரல் ஜெராசி, ஆத்திரிய-அமெரிக்க வேதியியலாளர் (. 2015)
·  1931வாலி, திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் (. 2013)
இறப்புகள்
·  1618வால்ட்டர் ரேலி, ஆங்கிலேய இராணுவ அதிகாரி, நாடுகாண் பயணி, அரசியல்வாதி
·  1783ழான் லி ராண்ட் டெ'ஆலம்பர்ட், பிரான்சியக் கணிதவியலாலர், இயற்பியலாளர்
·  1897ஹென்றி ஜார்ஜ், அமெரிக்க ஊடகவியலாளர், மெய்யியலாளர், பொருளியலாளர்
·  1911ஜோசேப் புலிட்சர், அங்கேரிய-அமெரிக்கப் பதிப்பாளர், அரசியல்வாதி ·  1949ஜார்ஜ் குர்ச்சீயெவ், ஆர்மேனிய-பிரெஞ்சு மதகுரு, மெய்யியலாளர் (பி. 1872)
·  1951இராபர்ட் கிராண்ட் ஐத்கென், அமெரிக்க வானியலாளர் (பி. 1864)

·  1959அலெக்சாந்தர் துபியாகோ, சோவியத் வானியலாளர் (பி. 1903)

சிறப்பு நாள்

குறளறிவோம்-  92. விருந்தோம்பல்

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்.
மு.வரதராசனார் உரை:முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.
Translation: A pleasant word with beaming smile,s preferred,
Even to gifts with liberal heart conferred.
Explanation: Sweet speech, with a cheerful countenance is better than a gift made with a joyous mind.
சிந்தனைக்கு  
பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம். அது இல்லாத வனுக்குக் கவலை சிலர் பணத்தை வெறுப்பதாகக் கூறுவர். ஆனால், அவர் வெறுப்பது பிறரிடமுள்ள பணத்தை..
தமிழ் அறிவோம்ஒத்தச் சொற்கள்
- பசு        பறவை        இறைச்சி          கணை         - தலைவன்
விடுகதை விடையுடன்
உயரத்தில் இருப்பிடம் .தாகம் தீர்ப்பதில் தனியிடம் அது என்ன? இளநீர்
பழமொழி- காரண குரு, காரிய குரு.
பொருள்/Tamil Meaning காரண குரு ஆத்மனை அறிவுறுத்தி மோக்ஷத்துக்கு வழி சொல்பவர். காரிய குரு நானாவிதக் கர்மங்களையும் தர்மங்களையும் போதித்து வழிநடத்தி சுவர்கத்துக்கு வழிகாட்டுபவர்.
Transliteration Karana guru, kaariya guru.
தமிழ் விளக்கம்/Tamil Explanationகுரு கீதாகுறிப்பிடும் மற்ற குரு வகைகள் இவை: ’சூசக குருவானவர் உலகசாத்திரங்களை நன்கு கற்றறிந்தவர். ’வாசக குருவானவர் வர்ணாசிரம தர்மங்களை எடுத்துச்சொபவர். ’போதக குருவானவர் சீடனுக்கு ஐந்தெழுத்து போன்ற மந்திரங்கள்மூலம் தீட்சையளிப்பவர். ’நிஷித்த குருவானவர் மோகனம், மாரணம், வசியம் போன்ற கீழ்நிலை வித்யைகளைக் கற்றுக்கொடுப்பவர். ’விஹித குருவானவர் வைராக்யம் கைவரப்பெற்று சம்சாரபந்தத்திலிருந்து விடுதலை பெற வழிகாட்டுபவர். ’காரணாக்ய குருவானவர்தத்துவமசி’--ஆத்மனும் பிரமனும் ஒன்றே என்னும் மகாவாக்கியத்தின் உண்மையை உணர்ந்து அனுபவித்துப் பயில்வதன் மூலம் மோக்ஷத்துக்கு வழிகாட்டுபவர். கடைசியாகப்பரம குருவானவர் சீடனின் எல்லாவித சந்தேகங்களையும் நீக்கி, ஜனன-மரண பயத்தைப் போக்கி, பிரமனோடு ஐக்கியமாக வழிகாட்டுபவர்.
Enrich your   vocabulary
vouch உறுதிச் சான்று கூறு
vouchsafe மனமிரங்கி அனுமதி
vow சூள் உரை, சபதம் செய்
Proverb
A little pot is soon hot                       
சிறிய பானை சீக்கிரம் சூடாகும்
Opposite Words 
Exhale X Inhale
  • He sat back and exhaled deeply.
  • She closed her eyes and inhaled deeply.
Expand X Contract
  • The last were razed in 1890, and the town was permitted to expand in this direction.
  • All leeches are very extensile and can contract the body to a plump, pearshaped form, or extend it to a long and wormlike shape.
மொழிபெயர்ப்பு
ஒரு வகை முள்ளங்கி
ஒரு வகை சிறியக்காய்
கணினி ஷார்ட்கட் கீ
 F1
ஹெல்ப் பாக்ஸ் ஓபன் செய்ய
F7
தேர்வு செய்த எழுத்து ( ) லைன்னில் உள்ள க்ராமர் தவறு கண்டுப்பிடிக்க
இனிக்கும் கணிதம்      நீட்டல் அளவை வாய்ப்பாடு
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
அறிவியல் அறிவோம் - நாம் பருகும் சோடா நீரில் உள்ள வாயு - கார்பன் -டை -ஆக்சைடு
அறிவியல் துளிகள் - ரேடியம், பொலோனியம் - மேரி கியூரி
தினம் ஒரு மூலிகை கால் வாழை
கொல்லிமலையில் உள்ள அடர் வனங்களில் இயற்கையில் விளையும் ஒரு வாழைதான் கால் வாழை, இதன் பழத்தை இரண்டு மண்டலம் (90 நாட்கள்) சாப்பிட்டு வர, பெருத்த தேகம் கொண்டோர் இளைத்து சராசரியான தேகத்தை பெறுவர்
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும்
பழங்களிலும் காய்கறிகளிலும் காணப்படும் நிறமிகள்
மேங்கிபெரின் (MANGIFERIN)
சான்தோன் பிரிவை சேர்ந்த மஞ்சள் நிறம் கொண்ட நிறமிகளாகும். மாம்பழங்களில் இந்நிறமிகள் காணப்படுகிறது.
வரலாற்றுச் சிந்தனை 
எந்த நூற்றாண்டில் ஹரியாங்க வம்சத்தவர்கள் ஆட்சி செய்தனர்?
கி.மு. ஆறாம் நூற்றாண்டு
தன்னம்பிக்கை கதை-புத்திசாலி கிளி|ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு
ஆப்பிரிக்கக் கிளி ஒன்றை கூண்டினுள் வைத்து ஒருவர் வளர்த்து வந்தார். ஒரு முறை அவர் ஆப்பிரிக்கா செல்லும் போது கிளி சொல்லிற்றாம், ''என் ஜோடிக் கிளி அங்கிருக்கும். அதனிடம் நான் இங்கு கூண்டில் இருப்பதாகச் சொல்லுங்கள்.'' அவரும் தன வேலை முடிந்த பின் சிரமப்பட்டு காட்டில் தனியாக இருந்த அந்தக் கிளியைக் கண்டு விபரம் சொல்ல, அது உடனே கண்ணீர் உகுத்துக் கீழே சுருண்டு விழுந்து விட்டது. 'அடடா, இந்தக் கிளி இறந்ததற்கு நாம் காரணமாகிவிட்டோமே,' என்று வருத்தப்பட்டு ஊருக்கு வந்து கூண்டுக் கிளியிடம் விபரம் சொல்ல, அக்கிளியும் கண்ணீர் உகுத்து கூண்டினுள்ளேயே விழுந்து விட்டது. நம்மால் இந்தக் கிளியும் அநியாயமாய் இறந்து விட்டதே என்ற வருத்தத்துடன் கூண்டைத் திறந்தார். உடனே அந்தக் கிளி ஜிவ்வென்று பறந்து போய் பக்கத்திலிருந்த மரக்கிளையில் அமர்ந்தது. உடனே அவர், ''உன் ஜோடிக் கிளி இறந்தது தெரிந்தும் நீ என்னிடம் நடித்துத் தப்பி விட்டாயே! ''என்றார். அதற்கு அக்கிளியும், 'என் ஜோடிக் கிளியும் இறக்க வில்லை.கூண்டில் அடைபட்ட நான் தப்பிக்கும் வழியை உங்களிடமே அது சொல்லி அனுப்பியிருக்கிறது.' என்று கூறி விட்டுத் தன ஜோடிக் கிளியைத் தேடி பறந்து விட்டது. ஜோடிகளை பிரிப்பது பாவம்மல்லவா...! | பறவைகளை கூண்டுக்குள் அடைக்காதீர்கள் | சுதந்திரம் நமக்குமட்டுமல்ல அவைகளுக்கும்தான்...! ஆப்பிரிக்கா போயிட்டு வர கால தாமதமாகாதான்னு கேட்குறது புரியுது | இது கதைதான் | ரீலு சுத்துறான்னு சொல்லுவாங்கல்ல அது போல வச்சுக்கோங்க நன்றி

செய்துபார்ப்போம் - Paper Crafts - https://www.youtube.com/watch?v=ZMIs73_v-u இணையம் அறிவோம்   http://epathshala.nic.in/

செயலி ePathshala  https://play.google.com/store/apps/details?id=in.gov.epathshala&hl=en_IN

No comments:

Post a Comment