அறிவுக்கு விருந்து – 01.11.2019 (வெள்ளி)


அறிவுக்கு விருந்து – 01.11.2019 (வெள்ளி)

வரலாற்றில் இன்று - நவம்பர் 1 (November 1) கிரிகோரியன் ஆண்டின் 305 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 306 ஆம் நாள்.
நிகழ்வுகள்
·  1009பர்பர் படைகள் சுலைமான் இப்னு அல்-அக்காம் தலைமையில் உமையா கலீபா இராண்டாம் முகம்மதுவை அல்கலேயா சமரில் வென்றன.
·  1179இரண்டாம் பிலிப்பு பிரான்சின் மன்னராக முடிசூடினார்.
·  1503இரண்டாம் யூலியசு திருத்தந்தையாகத் தேர்தெடுக்கப்பட்டார்.
· 1512மைக்கலாஞ்சலோவினால் வரையப்பட்ட சிஸ்டைன் சிற்றாலயத்தின் கூரை பொதுமக்களின் பார்வைக்குத் திறந்து விடப்பட்டது.
·  1570டச்சுக் கரையோரப் பகுதிகளை பெரும் வெள்ளம் தாக்கியதில் 20,000 பேர் வரையில் இறந்தனர்.
·  1604சேக்சுபியரின் ஒத்தெல்லோ நாடகம் முதற்தடவையாக லண்டனில் அரங்கேறியது.
·  1611சேக்சுபியரின் டெம்பெஸ்ட் நாடகம் முதற்தடவையாக லண்டனில் அரங்கேறியது.
· 1612போலந்துப் படைகள் மாஸ்கோ, கித்தாய்-கோரத் நகரில் இருந்து உருசியப் படைகளினால் வெளியேற்றப்பட்டனர்.
பிறப்புகள்
·  1858உலூத்விக் சுத்ரூவ, உருசிய வானியலாளர் (. 1920)
·  1871ஸ்டீபன் கிரேன், அமெரிக்க எழுத்தாளர் (. 1900)
·  1916மோகன் குமாரமங்கலம், தமிழக அரசியல்வாதி (. 1973
·  1919எர்மன் போண்டி, ஆங்கிலோ-ஆத்திரியக் கணிதவியலாளர், அண்டவியலாளர்
·  1927லாயிட் ருடால்ப், அமெரிக்க நூலாசிரியர், கல்வியாளர் அரசியல் ஆய்வாளர்
·  1935எட்வர்டு செயித், பாலத்தீன-அமெரிக்க எழுத்தாளர், கல்வியாளர் (. 2003)
·  1937கி. இராகவசாமி, புதுச்சேரி எழுத்தாளர்
இறப்புகள்
·  1675குரு தேக் பகதூர், 9வது சீக்கிய குரு (பி. 1621)
·  1750கூசுத்தாவ் விலெம் வொன் இமோவ், இலங்கை டச்சு ஆளுநர் (பி. 1705)
·  1955டேல் கார்னெகி, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1888)
·  1959தியாகராஜ பாகவதர், தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர் (பி. 1910)

·  1972எஸ்ரா பவுண்ட், அமெரிக்கக் கவிஞர், திறனாய்வாளர் (பி. 1885)

சிறப்பு நாள்

·         புரட்சி நினைவு நாள் (அல்சீரியா)
·         விடுதலை நாள் (அன்டிகுவா பர்புடா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1981)

குறளறிவோம்-  95. விருந்தோம்பல்

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
கலைஞர் மு.கருணாநிதி உரை: அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது.
மு.வரதராசனார் உரை:வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல.
Translation: Humility with pleasant speech to man on earth,
Is choice adornment; all besides is nothing worth.
Explanation: Humility and sweetness of speech are the ornaments of man; all others are not (ornaments).
சிந்தனைக்கு     
வேலை செய்யாமல் பிறரிடம் பணம் பெறுவது பிச்சை எடுப்பதற்கு சமம். எவ்விதமான வேலையும் இல்லாமல் இருப்பவனைப் பார்ப்பது கூட, நமக்குத் தீமையை உண்டாக்கும்.
தமிழ் அறிவோம்ஒத்தச் சொற்கள்
யா
 ஒரு வகை மரம்யாவைஇல்லை
 நாலில் ஒரு பங்கு "கால்என்பதன் தமிழ் வடிவம்
வா
 வருகஏவல்
வி
 அறிவுநிச்சயம்ஆகாயம்
விடுகதை விடையுடன்
ஏரியில் இல்லாத நீர்,தாகத்திற்கு உதவாத நீர், தண்ணீர் அல்ல அது என்ன?
கண்ணீர்
பழமொழி- தெய்வம் காட்டும், ஊட்டுமா?
பொருள்/Tamil Meaning தெய்வம் வழிகாட்டும், ஆனால் அந்த வழியில் நாம் தானே போகவேண்டும்? தெய்வமே என்கையைப் பிடித்துக்கூட்டிச் செல்லவேண்டுமென்றால் எப்படி?
Transliteration Teyvam kaattum, uuttumaa?
தமிழ் விளக்கம்/Tamil Explanation இதனால்தான் தெய்வத்தைத் தாய் என்பதைவிட தந்தை என்னும் வழக்கம் அதிகம் உள்ளதோ? இதனை ஒத்த ஆங்கிலப் பழமொழிகளும் உண்டு:
Enrich your   vocabulary
vanish மறைந்து விடு
vanquish தோல்வியுறச் செய்
vary வேறாகு, வேறுபடுத்து
Proverb
A low hedge is easily leaped over
ஏழை என்றால் மொழையும் பாயும்
Opposite Words 
Fact X Fiction
  • Much of the novel is based on fact.
  • Anthony’s first books were historical fiction.
Fake X Real
  • The defense said the photos were fake.
  • She had never seen a real live elephant before.
மொழிபெயர்ப்பு
செம்முள்ளங்கி
முள்ளங்கி
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl + 0
ஒரு பத்திக்கு இடைவெளி 6 துண்டுகளாக மாற பயன்படும் .
Ctrl + A                              
அனைத்து உள்ளடக்கத்தையும் தேர்ந்தெடுக்கவும்.
இனிக்கும் கணிதம்      பொன்நிறுத்தல்..
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
அறிவியல் அறிவோம் - நீரில் சிறிதளவே கரையும் பொருள் - ஸ்டார்ச் மாவு அறிவியல் துளிகள் - இயற்கை கதிரியக்கம் -  ஹென்றி பெக்காரல்
தினம் ஒரு மூலிகை ஆகாயக் கருடன்
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5d/%C4%8Certoryje%2C_sve%C5%99ep_vzp%C5%99%C3%ADmen%C3%BD.jpg/240px-%C4%8Certoryje%2C_sve%C5%99ep_vzp%C5%99%C3%ADmen%C3%BD.jpgஆகாயக் கருடன் (அறிவியல் பெயர் : COROLLO CARTUS), (ஆங்கில பெயர் : BRYOMS) இது கோவைக்காய் போன்று வளர்ந்து படரும் கொடி ஆகும். இது பூக்கும் தாவரம் ஆகும். காடுகளில் தானாக வளரும் தன்மை கொண்டது. இதன் கிழங்கு ஒரு மூலிகை மருந்தாகப் பயன்படுகிறது. நீர் ஆதாரம் ஏதும் இல்லையென்றாலும் தானாக வளரும். இக்கிழங்கை வீட்டில் கட்டித் தொங்கவிட்டால் விஷ பூச்சிகள் வராது, மேலும் வி முறிவிற்கு இக்கிழங்கு பயன்படுகிறது.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும்  பழுப்பாதல் (BROWNING)
பழுப்பாதலை தடுக்கும் முறைகள் - பாலிஃபீனால்களை வெப்பப்படுத்துவதன் மூலம் வினை புரியாமல் இருக்கச் செய்தல்.
வரலாற்றுச் சிந்தனை 
மௌரிய வம்சத்தின் கடைசி மன்னன் யார்?     பிருகத்ரதன்
தன்னம்பிக்கை கதை- ஓட்டை பானையும் ஒளிரும் பூவும்
            ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான். இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும். குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும். இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது. "ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்" அதற்கு விவசாயி, "பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன்.
அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்" இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால், நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.!!
பார்ப்போம் பாடுவோம் -பாரதியார் பாடல்கள் https://www.youtube.com/watch?v=2CXAp09ldVU
இணையம் அறிவோம் http://www.ubuntu.com/download

செயலி பாரதியார் கவிதைகள்  https://play.google.com/store/apps/details?id=com.bharathiyar.padalgal   

No comments:

Post a Comment