வரலாற்றில்
இன்று - அக்டோபர் 19 (October 19) கிரிகோரியன் ஆண்டின்
292 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில்
293 ஆம் நாள்.
நிகழ்வுகள்
· கிமு 202 – சாமா நகரப் போரில், உரோமைப்
படையினர் கார்த்திச்
நகரக் காவலர்களின் தலைவர் அனிபாலை
வென்றனர்.
· 1469
– அரகொன்
நாட்டு இளவரசன் இரண்டாம் பேர்டினண்டுக்கும் காஸ்டில் நாட்டின் இளவரசி முதலாம் இசபெல்லாவுக்கும்
திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வு பின்னர் 1516 இல் எசுப்பானியா
நாடு ஒருங்கிணைக்கப்பட வழிகோலியது.
· 1781
– வர்ஜீனியா,
யோர்க்டவுன் நகரில் பிரித்தானியத் தளபதி கார்ன்வாலிசு பிரபுவின்
பிரதிநிதிகள் சியார்ச் வாசிங்டனிடம்
சரணடைந்தனர்.
· 1805
– நெப்போலியப் போர்கள்:
ஊல்ம் நகர சமரில் ஆஸ்திரியாவின்
தளபதி மாக்கின் இராணுவம் நெப்போலியன் பொனபார்ட்டிடம்
சரணடைந்தது. 30,000 கைதிகள் கைப்பற்றப்பட்டனர், 10,000 இறந்தனர்.
பிறப்புகள்
இறப்புகள்
சிறப்பு நாள்
அன்னை தெரேசா நாள் (அல்பேனியா)
குறளறிவோம்- 86. விருந்தோம்பல்
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு.
நல்வருந்து வானத் தவர்க்கு.
கலைஞர் மு.கருணாநிதி உரை: வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்.
மு.வரதராசனார் உரை:வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.
Translation: The
guest arrived he tends, the coming guest expects to see;
To those in heavenly homes that dwell a welcome guest is he.
To those in heavenly homes that dwell a welcome guest is he.
Explanation: He
who, having entertained the guests that have come, looks out for others who may
yet come, will be a welcome guest to the inhabitants of heaven.
சிந்தனைக்கு
அழகைப் பற்றி கனவு காணாதீர்கள். அது உங்கள் கடமையைப் பாழாக்கி விடும்.
தமிழ்
அறிவோம்ஒத்தச் சொற்கள்
நூ
|
யானை, ஆபரணம், அணி
|
நே
|
அன்பு, அருள், நேயம்
|
நை
|
வருந்து
|
நோ
|
துன்ப்பபடுதல், நோவு, வருத்தம்
|
நௌ
|
மரக்கலம்
|
நூ
|
யானை, ஆபரணம், அணி
|
விடுகதை
விடையுடன்
கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால்
கண்ணீரும் கம்பலையும்தான்?
வெங்காயம்
பழமொழி- சித்திரத்துக் கொக்கே, ரத்தினத்தைக் கக்கு!
பொருள்/Tamil Meaning எவ்வளவுதான் தத்ரூபமாக இருந்தாலும் சித்திரமாக வரையப்பட்ட கொக்கினைத் திருடுபோன ரத்தினத்துக்காகக் குற்றம்சாட்ட முடியுமா?
Transliteration Ceeththiratthuk kokke, ratthinattaik kakku!
தமிழ் விளக்கம்/Tamil Explanation
ஒரு
வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிரபராதியைக் குறித்துச்சொன்னது.
Enrich your vocabulary
Proverb
A honey tongue and a heart of gall
அடி
நாக்கில் நஞ்சும், நுனி
நாக்கில் தேனும்
Opposite Words
Early X
Late
- The bus was ten minutes early.
- You’re half an hour late.
Earth X
Sky
- They watched the kite fall back to earth.
- There wasn’t a cloud in the sky.
மொழிபெயர்ப்பு
கோகிலத்தண்டு
|
|
Lady's Finger/ Okra
|
வெண்டைக்காய்/ வெண்டிக்காய்
|
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl
+ 1
|
சிங்கிள் ஸ்பெஸ் லைன் கொடுக்க
|
Ctrl
+ 2
|
டபுள் லைன் கொடுக்க.
|
இனிக்கும் கணிதம்
கால அளவு..
2 அயனம் -12 மாதம் = 1 ஆண்டு
60 ஆண்டு = 1 வட்டம்
அறிவியல் அறிவோம்
இயற்கையில் தனித்துக் கிடைக்கும் தனிமங்களில் மென்மையானது - கிராபைட்
அறிவியல் துளிகள் - மின்மோட்டார் DC - ஸெனோப் கிராப்
அறிவியல் துளிகள் - மின்மோட்டார் DC - ஸெனோப் கிராப்
1) மூலிகையின் பெயர் -: கண்வலிக்கிழங்கு.
2) தாவரப்பெயர்
-: GLORIOSA SUPERBA.
3) தாவரக்குடும்பம்
-: LLIACEAE.
4) வேறு பெயர்கள் -: கலப்பைக்கிழங்கு,
செங்காந்தள்மலர்,வெண்தோன்றிக் கிழங்கு,கார்த்திகைக் கிழங்கு, காந்தள்மலர்ச்செடி, நாபிக்கொடி, போன்றவை.
5) வகை
-: க்ளோரியோசா சிற்றினங்கள், சிங்களேரி என்பன.
6) மூலப்பொருட்கள்
-: கோல்ச்சிசின் (Colchicines) மற்றும் சுப்பர்பின் (Superbine)
7) தாவர அமைப்பு -:
இதற்கு வடிகால் வசதியுடைய மண்ஏற்றது. செம்மண், பொறை மண் ஏற்றது. மண்ணின் அமிலத்தன்மை 6.0 - 7.0 ஆக இருத்தல் நல்லது. கடினமான மண்உகந்தது அன்று. சிறிது வறட்சியைத் தாங்கும். வேலி ஓரங்களில்நன்றாக வளரும். பொதுவாக இதைக் கலப்பைக் கிழங்கு என அழைப்பர்கள்.இதன் கிழங்கு 'V' வடிவில் காணப்படும். இது கொடிவகையைச் சார்ந்தது ஆகும். இது பற்றி வளர்வதற்கு ஊன்றுகோல் தேவை.
8) பயன் படும் பாகம் - விதைகள் கிழங்குகள் ஆகியவை.
9) மருத்துவப் பயன்கள் - வாதம், மூட்டுவலி, தொழுநோய்குணமாக்கப் பயன்படுவதுடன் பேதி, பால்வினை நோய் வெண்குஷ்டம், ஆகியவற்றிற்கும் நல்லதோர் மருந்து.பிரசவ வலியைத் தூண்டும் மருந்தாகவும், சக்தி தரும் டானிக்காகவும் இருப்பதுடன், தலையில் வரும் பேன்களை ஒழிக்கவும் பயன் படுகிறது.
8) பயன் படும் பாகம் - விதைகள் கிழங்குகள் ஆகியவை.
9) மருத்துவப் பயன்கள் - வாதம், மூட்டுவலி, தொழுநோய்குணமாக்கப் பயன்படுவதுடன் பேதி, பால்வினை நோய் வெண்குஷ்டம், ஆகியவற்றிற்கும் நல்லதோர் மருந்து.பிரசவ வலியைத் தூண்டும் மருந்தாகவும், சக்தி தரும் டானிக்காகவும் இருப்பதுடன், தலையில் வரும் பேன்களை ஒழிக்கவும் பயன் படுகிறது.
சுபர்பின் மற்றும் கோல்சிசின் ஆகிய மருந்துப் பொருட்கள் இதில்கிடைக்கின்றன. குடற்புழுக்கள், வயிற்று உபாதைகள் மற்றும் தேள், பாம்புக்கடிகளுக்கு நல்லதொரு மருந்து. இக்கொடியினைக் காட்டிலும் விதைகளில் தான் அதிகஅளவு கோல்சிசின் மருந்து காணப்படுவதால் விதைகள்மிகுதியான ஏற்றுமதி மதிப்பைப் பெற்றுள்ளன. அண்மை காலத்தில் 'கோல்சிசின்' மூலப் பொருளைக்காட்டிலும் இரண்டு மடங்கு வீரியமான 'கோல்ச்சிகோஸைடு' கண்டுபிடிக்கப்பட்டு மூட்டு வலி மருத்துவத்தில் மிகவும் பயன்படுத்துப் படுகிறது. இது ஐரோப்பிய நாடுகளில் கௌட் எனும் மூட்டுவலி நிவாரணத்திற்குப் பெரிதும் பயன்படுகிறது. மிக நுண்ணிய கிரிஸ்டல்களாக யூரிக் அமிலம் மூட்டுக்களில் தங்குவதால் இந்த 'கௌட்' வருவதாகவும், இந்த மருந்து அவ்வாறு யூரிக் அமிலம் மிக நுண்ணிய கிரிஸ்டல்களாக தங்காவண்ணம் பாதுகாக்கிறது. இதனால்தொடர்ந்து மூட்டுவலி உண்டாகும் வட்டத்தினை இதுமுறித்து விடுவதாகச் சொல்லப்படுகிறது.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும் – பழங்களிலும் காய்கறிகளிலும் காணப்படும் நிறமிகள்
ஆன்தோசையானின் (ANTHOCYANIN):
சிவப்பு நிறப்பிரிவை சேர்ந்த நீரில் கரையக்கூடிய நிறமிகள். பலவகையான பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படுகின்றது. (எ.கா) செர்ரிபழம்,
சிவப்பு ஆப்பிள்கள், மாதுளை போன்றவற்றிலுள்ள கண்ணைக்கவரும் நிறமிகள் ஆன்தோசையானின் பிரிவை சேர்ந்ததாகும்.
வரலாற்றுச் சிந்தனை உலகிலேயே
குளிந்த இடம் சைபீரியா (ரஷ்யா).
தன்னம்பிக்கை கதை - நல்லவரும் கெட்டவரும்
ஒருவர் தனது இரு மாணாக்கரை அழைத்து இந்த உலகிலேயே
மிகமிக நல்லவனை அழைத்து வரும் படி கூறினார். மற்றவரிடம் மிக மிக கெட்டவனை அழைத்து வரக்கூறினார்.
இரண்டுபேரும் நன்றாக தேடிவிட்டு திரும்பி வந்தனர்.
நல்லவனை தேடச்சென்றவன் திரும்பி வந்து சொன்னான்.
ஐயா. எவ்வளவோ தேடிவிட்டேன். இந்த உலகில் ஒரு நல்லவனும் எனக்கு கிடைக்கவில்லை. கெட்டவனை
தேடச்சென்றவன் திரும்பி வந்து சொன்னான். ஐயா. எவ்வளவோ தேடிவிட்டேன். இந்த உலகில் ஒரு
கெட்டவனும் எனக்கு கிடைக்கவில்லை. குரு சொன்னார். உலகில் இரண்டும் கலந்தே இருந்திருக்கிறது.
இருக்கிறது. இருக்கும்.
உங்கள் மனநிலையைப் பொறுத்தே மற்றவரை நல்லவரா கெட்டவரா என எடைபோடுகிறீர்கள்.
நீதி: கெட்டவன் எவரிடத்திலும் நல்லவரை காணமாட்டான். நல்லவன் எவரிடத்திலும் கெட்டதை காணமாட்டான்.
உங்கள் மனநிலையைப் பொறுத்தே மற்றவரை நல்லவரா கெட்டவரா என எடைபோடுகிறீர்கள்.
நீதி: கெட்டவன் எவரிடத்திலும் நல்லவரை காணமாட்டான். நல்லவன் எவரிடத்திலும் கெட்டதை காணமாட்டான்.
No comments:
Post a Comment