*I.I.S.E.R* , Pune (iiserpune.ac.in) உடன் இணைந்து *tickLinks* அறிவியல், கணிதம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான *YOUR BEST* போட்டியைப் பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகிறது. நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியின், ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழில் எந்தவொரு பாடத்தையும் கற்பிக்கும் ஆசிரியர்கள் இதில் பங்கேற்கலாம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான ஆதரவைக் காட்டும் பொருட்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 22 அன்று 193 நாடுகளில் பூமி தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வருடம் தம் சிறந்த கற்பித்தல் மற்றும் கற்றல் பொருளைப் பகிர்வதன் மூலம் (teaching and learning material) பூமி தினத்தை ஆதரிக்க, இந்தியா முழுவதும் உள்ள ஆசிரியர்களை நாங்கள் வரவேற்கிறோம். மாணவர்கள் வகுப்பறையில் மகிழ்ச்சிகரமான, சுறுசுறுப்பான கற்றல் அனுபவம் பெறுவதற்கான உங்கள் முறைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
வெற்றி பெறும் ஆசிரியர்கள் IISER புனேவிலிருந்து விருதுகள் மற்றும் பங்கேற்பு சான்றிதழ்களைப் பெறுவார்கள்.
பதிவுசெய்யக் கடைசி தேதி 20 ஏப்ரல் 2021.
மேலும் தெரிந்துகொள்ளவும், பதிவு செய்யவும்,
தொடர்பு கொள்க: http://bit.ly/ticklinks-shareyourbesttamil
No comments:
Post a Comment