*"கல்விசெல்வத்தை கிராமப்புற ஏழை தமிழ் மாணவர்களுக்கு சென்றடையச் செய்வதே ஒரே இலக்காக கொண்டு தொடங்கப்பட்ட திட்டம் தான் கல்வி40"*. தெய்வப்புலவர் திருவள்ளுவரின் கல்வி அதிகாரம் 40 அடையாளமாய் செயலிக்கு ‘கல்வி 40’ என்று பெயரிட்டுள்ளோம்.
*"எளிய வழியில் புதுமை கல்வி" - கல்வி40*
கிராமப்புறங்களில் பயிலும் 3ம் வகுப்பு முதல் 8வகுப்பு வரையுள்ள அரசுப்பள்ளி மாணவர்களை கல்வியினை நேசிக்க வைப்பதையே இலக்காகக் கொண்டு செயல்படுகிறது ‘கல்வி 40’ செயலி. மாணவர்களை மார்க் பின் ஓடச் சொல்லாமல் அவர்களை கல்வியை நேசிக்க வைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு ஆப்பினை உருவாக்கியுள்ளோம் என்கிறார் BumbleB Trust நிறுவனர் பிரேம் குமார்.
கிராமப்புறங்களில் இணையதள சேவை தடையில்லாமல் கிடைப்பதில் சிக்கல் இருந்து வருவதால், அதற்கு தீர்வு காண செயலில் உள்ள பாட வீடியோக்களை 5 மெகாபைட்டுக்கும் குறைவான சைசில் 3 நிமிடத்திற்குள் முடியும் வண்ணம் உருவாக்கியுள்ளனர்.
*செயலியின் அம்சங்கள்*
# 3 நிமிட விடியோக்கள்
# பயிற்சி தேர்வுகள்
# போட்டிதேர்வுகள்
# தினசரி விடுகதை
# தினசரி தார்மீக கதை
# பொது தலைப்பு விடியோக்கள்
https://youtu.be/HpqvT_d7QtU
*மாணவர்களை அடைய:*
1. மொபைல் ஆப் கூகிள் பிளேஸ்டோர் (36k+ நிறுவல்) மற்றும் 2800+ தனிப்பயனாக்கப்பட்ட வீடியோக்களில் கிடைக்கிறது. கல்வி40 இன் முதுகெலும்பு 12+ நாடுகளில் உள்ள எங்கள் 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட தன்னார்வ குழு; ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் நலம் விரும்பிகள்.
#https://youtu.be/HpqvT_d7QtU
#a. 7th Standard, Tamil, Chapter 2, அணிநிழல் காடு, அப்படியே நிற்கட்டும் அந்த மரம் பொருள் https://youtu.be/NU7OD50kCbQ
#b. 4th Standard பனைமரச் சிறப்பு பகுதி 1, தமிழ், , முதல் பருவம் https://youtu.be/iVp58vQ8CIQ
2. கல்வி40 தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் 45 பள்ளிகளில் - பள்ளி அடிப்படையிலான டிஜிட்டல் தீர்வை செயல்படுத்தியுள்ளது
#கல்வி40 டிஜிட்டல் கிராமங்களுக்கு எவ்வாறு எடுத்துச் செல்கிறது? https://youtu.be/IEwhIDj_Z9Q
#திருவண்ணாமலையில் கிராமப்புற ஒற்றை பள்ளி ஆசிரியர் பேசுகிறார் https://youtu.be/R7fseqwXUvU
#தன்னார்வத் தொண்டு மூலம் அமெரிக்காவில் 15 மாநிலங்களை அடைகிறது கல்வி40 - தன்னார்வலர்களின் அனுபவம் மற்றும் பயனாளிகள் மாணவர்கள் பேசுகிறார்கள் https://youtu.be/f7Lm_VP2Uso?start=1252
நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படும்போது மட்டும் தான், கிராமப்புற ஏழை மாணவர்களின் வாழ்கையில் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று கல்வி40 குழு உறுதியாக நம்புகிறது.
*"இந்த சவாலான பயணத்தில், கல்வி40 இந்த இடத்தை அடைய, தமிழ் நட்புகள் மட்டுமே காரணம். இணைந்து செயல்படுவோம் குழந்தைகளின் எதிர்கால நலத்திற்காக"*. நீங்கள் கல்வி40ஐ ஆதரிக்க விரும்பினால், மேலும் தகவலுக்கு info@bumbleb.org.in...நன்றி பிரேம் சார்...முத்தமிழ் சார்..
No comments:
Post a Comment