காஞ்சி டிஜிட்டல் டீம் – 2021
காஞ்சிபுரம் மாவட்டம்
வணக்கம்.
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு அரசு பள்ளி ஆசிரியர்களிடம், கல்விதொழில்நுட்ப அறிவை கொண்டு செல்லவும், அரசு பள்ளி மாணவர்களின் தனித்திறமையை வெளிக்கொணரவதற்கும், மாணவர்களின் கற்றலை வலுப்படுத்தி கல்விதொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நோக்கில் அரசு பள்ளி ஆசிரியர்கள் 20 நபர்கள் இணைந்து துவங்கியதே காஞ்சி டிஜிட்டல் டீம் ஆகும்.
காஞ்சி டிஜிட்டல் டீம் ஆசிரியர்கள், ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் ஆசிரியர்களுக்கு தகவல் தொழிட்நுட்பத்தை எவ்வகையில் வகுப்பில் பயன்படுத்தலாம் என்பதை சுமார் 25க்கும் மேற்ப்பட்ட பயிற்சிகளை எவ்வித கட்டணமும் இன்றி 200 க்கும் மேற்ப்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதனால் இன்று பல பள்ளிகளில் மாணவர்களின் கற்றலுக்கு தொடுதிரை, கையடக்ககணினி, மற்றும் கணினியுடன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. 150 க்கும் மேற்ப்பட்ட ஆசிரியர்கள் இன்றளவும் இக்குழுவின் செயல்பாடுகளை பயன்படுத்தி வருகின்றனர்.
காஞ்சி டிஜிட்டல் டீமின் அடுத்த நோக்கமான மாணவர்களின் தனித்திறமையை வெளிக்கொணரும் வகையில் நடத்தப்படும் போட்டிகள்
1. குழந்தைகளைக் கொண்டாடுவோம் 2. மாணவ விஞ்ஞானிகளுக்கான தேடல் - என்ற நிகழ்வின் வாயிலாக மாணவர்களுக்கு போட்டிகள் வட்டாரந்தோறும் நட்த்தப்பட்டு அவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தப்பட்டு, பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டுவருகிறது. குழந்தைகளைக் கொண்டாடுவோம் நிகழ்வில் இதுவரை 1000 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்துக்கொண்டுள்ளனர் .
மாணவ விஞ்ஞானிகளுக்கான தேடல் நிகழ்வில் அறிவியல் மாதிரி படைப்புகள் 200 மேற்ப்பட்ட பரிசோதனைகள் மாணவர்களால் உருவாக்கப்பட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டது. சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் பாராட்டுச்சான்றிதழும் அரசுபள்ளி ஆசிரியர்களின் முயற்சியால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அடுத்து மாணவர்களின் சுற்றுக்சூழல் ஆர்வத்தில் பங்குக்கொள்ளும் வகையில் sriharikotta பயணமும், முதலைப்பண்ணை வாயிலாக பள்ளிகள்தோறும் வகுப்புகள் முலமாக ஊர்வன பற்றிய விழிப்புணர்வு நிகழ்வுகள் நட்த்தப்பட்டது.
கடந்த ஓராண்டு காலத்திலும் மாணவர்களின் கல்விநலனில் அக்கரைக்கொண்டு இணையவழி வாயிலாக கோடைக்காலத்தில் மாணவர்களுக்கான ஒரிகாமி பயிற்சி, ஒவியப்பயிற்சி, கதைக்கூறும் பயிற்சி போன்றவை மே மாத்த்தில் வழங்கப்பட்ட்து. ஜூன் மாதம் முதல் அரசு பள்ளி மாணவர்க்ளுக்கான வகுப்புகள் “ மாணவர்கள் புதுவாசல் “ என்ற தலைப்பில் சுமார் 200 மாணவர்கள் கொண்ட குழுவிற்கு தினமும் வகுப்புகள் எடுக்கப்பட்டு மாணவர்களின் கற்றலுக்கு பெரிதும் உதவிபுரிந்து வருகிறது.
மாணவர்களின் கல்விஉதவித்தொகை பெற வழிவகுக்கும் திறனறி தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து NMMS தேர்வுக்கு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் வகுப்புகள் எடுக்கப்பட்ட்து.
BUMBLbee Trust உதவியுடன் கல்வி -40 செயலியின் வாயிலாக மாணவர்களுக்கான பாடப்பகுதியுடன் தற்சமயம் எந்திரன் பயிற்சி ( Robotic Training) மாவட்ட்த்தின் 20 ஆசிரியர்களுக்கும் 30 மாணவர்களுக்கும் கடந்த மாதம் முதல் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.இதனால் இணையத்தில் தமிழ் வழியாக coding செய்வது எவ்வாறு என்பதை அரசுப்பள்ளி மாணவர்களே கூறும் பணி நடைப்பெற்றுவருகிறது. அதுமட்டுமன்றி ஏழை மாணவர்களுக்கு உதவிடும் வகையில் தொண்டுநிறுவனத்தின் உதவியால் படிப்புதவி செய்யும் பணியையும் செய்துவருகிறது.
காஞ்சி டிஜிட்டல் டீம் அரசுபள்ளி ஆசிரியர்களுக்கு கல்விதொழில்நுட்பத்தை கொண்டுசெல்ல துவங்கப்பட்டாலும், இன்று அரசு பள்ளி மாணவர்களின் கல்வி, தொழில்நுட்ப அறிவு, தனித்திறமை, அறிவியல் மனப்பான்மை வளர்க்கும் பண்புகளை வளர்க்கும்வீதம் அரசு பள்ளி மாணவர்களின் நலனே குழுவின் நோக்கமாக வளர்ந்து வருகிறது என்பதை இக்கணம் தெரிவித்துக்கொள்கிறோம்.
Heartly congraglations
ReplyDelete