அறிவுக்கு விருந்து 10.01.2020 (வெள்ளி )


வரலாற்றில் இன்று -  சனவரி 10 (January 10) கிரிகோரியன் ஆண்டின் 10 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 355 (நெட்டாண்டுகளில் 356) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

· 9மேற்கத்தைய ஆன் அரசமரபு முடிவுக்கு வந்தது.
·236அந்தேருசிற்குப் பின்னர் பேபியன் ரோமின் 20வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
·  1475மல்தோவாவின் மூன்றாம் ஸ்டீவன் மன்னர் உதுமானியப் பேரரசுப் படைகளைத் தோற்கடித்தார்.
·  1645முதலாம் சார்ல்சு மன்னருக்கு ஆதரவாக செயற்பட்டமைக்காக பேராயர் வில்லியம் லாவுட் இலண்டம் கோபுரத்தில் கழுத்துத் துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
·1806கேப் டவுனில் டச்சு குடியேறிகள் பிரித்தானியரிடம் சரணடைந்தனர்.
·1810நெப்போலியன் பொனபார்ட் 14 ஆண்டுகளாகப் பிள்ளைகள் இல்லாத நிலையில் ஜொசப்பின் என்ற தனது முதல் மனைவியை மணமுறிவு செய்தான்.
·1840ஐக்கிய இராச்சியத்தில் முன்கட்டணம் செலுத்தப்படக்கூடிய கடித உறையுடன், சீரான பென்னி தபால் சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டது.
·1863உலகின் மிகப் பழமையான சுரங்கத் தொடருந்துப் பாதை லண்டனில் திறக்கப்பட்டது.

பிறப்புகள்

·  1573சைமன் மாரியசு, செருமானிய வானியலாளர் (. 1624)
·  1775இரண்டாம் பாஜி ராவ், மராத்திய பேரரசின் கடைசித் தலைமை அமைச்சர் (. 1851)
·  1929பாலி சாம் நரிமன், இந்திய சட்ட அறிஞர்
·  1931ஆர். சூடாமணி, தமிழகப் பெண் எழுத்தாளர் (. 2010)
·  1931நிக் அப்துல் அசிஸ் நிக் மாட், மலேசிய மதகுரு, அரசியல்வாதி (. 2015)
·  1933கி. கஸ்தூரிரங்கன், தமிழக இதழாளர், எழுத்தாளர் (. 2011)
·  1933குர்தியால் சிங், பஞ்சாபி எழுத்தாளர் (. 2016)

இறப்புகள்

·  1761ஆனந்த ரங்கம் பிள்ளை, தமிழில் நாட்குறிப்பு எழுதியவர் (பி. 1709)
·  1775ஸ்ட்ரிங்கர் லாரன்சு, பிரித்தானிய இந்தியாவின் முதற் பெரும் படைத்தலைவர்
·  1778கரோலஸ் லின்னேயஸ், சுவீடிய தாவரவியலாளர், மருத்துவர் (பி. 1707)
·  1904ஜீன் லியோன் ஜேர்மி, பிரான்சிய ஓவியர், சிற்பக் கலைஞர் (பி. 1824)
·  1951சிங்ளேர் லுயிஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (பி. 1885)

சிறப்பு நாட்கள்

குறளறிவோம்-  138. ஒழுக்கமுடைமை
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும். தீயொழுக்கம், தீராத துன்பம் தரும்.
மு.வரதராசனார் உரை:நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.
Translation: 'Decorum true' observed a seed of good will be; 'Decorum's breach' will sorrow yield eternally.
Explanation:  Propriety of conduct is the seed of virtue; impropriety will ever cause sorrow.
சிந்தனைக்கு:
உன் முதுகுக்கு பின்னால் பேசுபவர்களை பற்றி கவலைப்படாதே
நீ அவர்களுக்கு இரண்டு அடி முன்னால் இருக்கிறாய் என்று பெருமைப்படு.
தமிழ் அறிவோம்: ஒத்தச் சொற்கள்
மெய்: உண்மை, உடம்பு.
உடுக்கை: ஆடை, இசைக்கருவி.
விடுகதை விடையுடன் 
தலையை வெட்ட வெட்ட கறுப்பு நாக்கை நீட்டுவது அது என்ன?   பென்சில்
பழமொழி-  போனதுபோல வந்தானாம் புது மாப்பிள்ளை.
பொருள்/Tamil Meaning பலனை எதிர்பார்த்து ஒரு காரியத்தைத் தொடங்கி ஏமாந்தது போல.
Transliteration  Ponatupola vanthaanam puthu mappillai.
தமிழ் விளக்கம்/Tamil Explanation  புது மாப்பிள்ளை பரிசுகளை எதிர்பார்த்து மாமியார் வீடு சென்று வெறுங்கையோடு திரும்பியது போல.
Enrich your   vocabulary
watch கூர்ந்து கவனி , பார்த்திரு
xerox நிழற்படி நகல் எடு

Proverb Barking dogs seldom bite.

People who appear threatening rarely do harm.
Example: X: I’m really scared to report delay in the project to the boss. His temper is so over the top. Y: I don’t think you should worry too much about it. Barking dogs seldom bite.

Opposite Words 

Nasty X Nice
  • I went to school with him – he was nasty then and he’s nasty now.
  • You look nice in that suit.
Nasty X Pleasant
  • Drivers often have a nasty habit of driving too close to cyclists.
  • The restaurant was large and pleasant.
மொழிபெயர்ப்பு
பிசுக்கங்காய்/ பீர்க்கங்காய்
ஒரு வகை பெரிய இலைக்கீரை
கணினி ஷார்ட்கட் கீ
Shift+F3
Change   cases(UppseCase/LowerCase)
F7
Spelling Checker
இனிக்கும் கணிதம் 
பாதி நீரிலும், 1/12 பங்கு சேற்றிலும், 1/6 பங்கு மணலிலும் புதைந்திருக்கும் ஒரு கம்பம் 1 ½ முழம் வெளியே தெரிந்தால் அதன் நீளம் என்ன
கம்பத்தின் நீளம் x எனில், கணக்கின்படி x – (1/2 x + 1/12 x + 1/6 x ) = 1 ½ x – 9/12 x = 3/2 è 3x/12 = 3/2 è x = 6 
அறிவியல் அறிவோம்
வேலையின் அலகு - ஜூல்
* 1 குவிண்டால் என்பது - 1000 கி.கி
தினம் ஒரு மூலிகை கேழ்வரகு மருத்துவ பயன்கள்
·   ட்ரிப்டோஃபேன் (Tryptophan) என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைத்து, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும். சேதமடைந்த திசுக்களை சரி செய்வதிலும், உடலின் நைட்ரஜன் நிலையை சமன்படுத்தவும் உதவுகிறது.
·                        கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும்.
·                     தாவர வகை இரசாயன கலவைகள் (Phytochemical Compounds) சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
·         லெசித்தின் (Lecithin) மற்றும் மெத்தியோனைன் (Methionine) போன்ற அமினோ அமிலங்கள் (Amino acids), கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைக்கிறது.
·         இரும்புச்சத்து ரத்தசோகையை குணப்படுத்துகிறது.
·         உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும்.
·         குடலுக்கு வலிமை அளிக்கும்.
·         உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா மற்றும் புது தாய்மார்களுக்கு பால் சுரக்காமல் இருத்தல் போன்ற அனைத்து நோய்களும் குணமாகும்.
உணவு   தாதுஉப்புகளின் பொதுவான வேலைகள் கடின திசுவின் ஒரு பகுதியாக இருக்கிறது (.கா) கால்சியம் மற்றும் பாஸ்பரஸ். எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு
எளிய திசுவின் ஒரு பகுதியாக விளங்குகிறது (.கா) சல்பர் மற்றும் பாஸ்பரஸ் உடலின் கட்டுப்பாடான இயக்கத்திற்கு ஒரு பகுதியாக இருக்கிறது. (.கா) நரம்பு மற்றும் தசை இயக்கத்திற்கு.
வரலாற்றுச் சிந்தனை குடியரசு தினம் இந்தியக் குடியரசு தினம்
1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா என்பவரை நியமித்தது. ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு,  இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசன் எழுதப்பட்டது. முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
தன்னம்பிக்கை கதை-  புதிய வனம் உருவானது
முன்னொரு காலத்தில் அடர்ந்த கானகத்தை ஒட்டி ஒரு குடியானவன் குடும்பம் வாழ்ந்து வந்தது. அந்த குடியானவனுக்கு குருவாயூரப்பன்,என்ற பையன் மற்றும் மனைவியும் இருந்தனர். தினமும் அந்த குடியானவன் அடர்ந்த கானகத்துக்குள் சென்று காய்ந்த மரங்களை வெட்டி விறகுகளாக்கி கொண்டு வந்து ஊருக்குள் விற்று வாழ்க்கையை நடத்தி வந்தான்.திடீரென்று குடியானவனுக்கு உடல் நிலை சரியில்லாமல் வீட்டிலேயே படுத்து விட்டான். நாலைந்து நாட்கள் எங்கும் செல்லாததால் வீட்டில் வறுமை வந்து விட்டது. அவன் மனைவி என்ன செய்வது என்று கண் கலங்கினாள்.
குருவாயூரப்பன் நான் காட்டுக்கு போகிறேன் என்று அம்மாவிடம் கேட்டான்.அம்மாவுக்கு மனசு கேட்கவில்லை. குருவாயூரப்பனுக்கு வயது பத்துதான் ஆகிறது. சிறுவனை எப்படி காட்டுக்கு அனுப்புவது. காட்டில் வசிக்கும் விலங்குகள் ஏதாவது செய்து விடுமே என்று பயந்தாள். அம்மா கவலைப்படாதே, அங்கு காய்ந்து கிடக்கும் விறகுகளை மட்டுமாவது பொறுக்கி எடுத்து வருகிறேன். அதை ஊருக்குள் சென்று விற்று வரலாம்.இப்படி அம்மாவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அந்த காட்டுக்குள் புகுந்தான். அடர்ந்த காடாயிருந்தது. குருவாயூரப்பன் அம்மாவிடம் சொல்லிவிட்டானே தவிர காட்டுக்குள் தனியாக நுழைவது அச்சத்தை கொடுத்தது. இதுவரை அப்பாவுடன் வந்திருக்கிறான், அப்பொழுதெல்லாம் அப்பா கூட இருந்ததால் பயமில்லாமல் இருந்தது. இப்பொழுது தனியாக இருந்ததால் பயம் வந்தது. பயந்து பயந்து நடுக்காட்டுக்குள் வந்து விட்டான். நல்ல காய்ந்த விறகுகளை பொறுக்க ஆரம்பித்தான். அவனால் எவ்வளவு தூக்க முடியும்.? சேர்த்து வைத்த விறகுகளை அங்கிருக்கும் ஒரு கொடியை பறித்து கட்டினான்.அதை தூக்குவதற்கு முயற்சி செய்த பொழுது அவனால் அசைக்கவே முடியவில்லை. அழுகை அழுகையாய் வந்தது. அந்த விறகு கட்டின் மேலேயே உட்கார்ந்து கொண்டான். அப்பொழுது வான் வழியாக ஒரு தேவதை பறந்து சென்று கொண்டிருந்தவள்
நடுக்காட்டில் ஒரு சிறுவன் விறகு கட்டின் மேல் அழுது கொண்டு உட்கார்ந்து இருப்பதை பார்த்தவுடன் மெல்ல இறங்கினாள்.
தம்பி ஏன் அழுகிறாய்? என்று கேட்டாள். திடீரென்று ஒரு அழகான பெண் தன்னிடம் வந்து பேசியதை கேட்டவுடன் குருவாயூரப்பனுக்கு அச்சம் வந்து விட்டது.
உடனே தேவதை பயப்படாதே, நான் ஒரு வன தேவதை. இந்த காட்டு வழியாக பறந்து சென்று கொண்டிருந்தேன். நீ அழுது கொண்டு உட்கார்ந்திருப்பதை பார்த்து இறங்கி வந்திருக்கிறேன். நீ எதற்காக அழுது கொண்டிருக்கிறாய்?
கொஞ்சம் பயம் தெளிந்த குருவாயூரப்பன், தேவதையிடம் தன் தகப்பன் உடல் நலம் இல்லாமல் வீட்டில் இருப்பதையும், அதனால் தான் விறகு பொறுக்க வந்ததையும் சொன்னான். ஆனால் விறகு கட்டை தூக்க முடியாமல் சிரமமாய் இருப்பதாக கூறினான்.
அவன் மேல் பரிதாபப்பட்ட தேவதை கவலைப்படாதே நீ வீட்டுக்கு போ, இந்த விறகு கட்டை உன் வீட்டிற்கு நான் கொண்டு வந்து தருகிறேன் என்றது. குருவாயூரப்பன் சிறுவனாய் இருந்தாலும் நல்ல உள்ளம் படைத்தவன், வேண்டாம் நீங்கள் ஏன் எங்களுக்காக சிரமப்பட்டு தூக்கி வரவேண்டும். என்றான்.
தேவதை சிரித்தாள். நான் தூக்க மாட்டேன், என் மந்திர சக்திதான் அந்த கட்டை தூக்கி வந்து உன் வீட்டில் போட்டு விடும். உன்னுடைய நல்ல உள்ளத்துக்காக நான் ஒன்று செய்கிறேன். தினமும் நல்ல விறகு கட்டை உன் வீட்டில் கொண்டு வந்து போட்டு விடுகிறேன். நீங்கள் அதை விற்று பிழைத்துக்கொள்ளுங்கள் என்றது. குருவாயூரப்பன் தேவதையிடம் அதெப்படி உழைக்காமல் நீ கொண்டு வரும் விறகை நாங்கள் விற்று அனுபவிப்பது. இந்த கேள்வியை கேட்டவுடன் தேவதைக்கு அவன் மேல் பாசம் ஏற்பட்டு விட்டது. உன்னுடைய எண்ணம் நல்லது. வேண்டுமென்றால் நான் செய்த உதவிக்கு பதிலாக நீ ஒன்று செய்ய வேண்டும். இது போல் இன்னும் புதிய வனங்களை உருவாக்க வேண்டும். அதற்காக வாரம் ஒரு விதை நட வேண்டும்.எங்கெங்கு காலி இடம் இருந்தாலும் அங்கெல்லாம் விதை நட்டு தண்ணீர் ஊற்றி பாதுகாக்க வேண்டும்.
குருவாயூரப்பன் வீட்டிற்கு வந்தான். எதுவும் கொண்டு வராமல் சும்மா வருவதை பார்த்த அவன் அம்மாவும், அப்பாவும் பையனுக்கு ஏதாவது ஆகி விட்டதோ என்று பயந்தனர். குருவாயூரப்பன் அம்மாவிடம் எல்லா விசயங்களை சொல்லி முடிக்கவும் அங்கு விறகுக்கட்டு வந்து சேரவும் சரியாக இருந்தது. அது மட்டுமல்ல அந்த கட்டுக்குள் புதிதாய் நிறைய விறகுகள் சேர்த்து கட்டப்பட்டு இருந்தது. அவன் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் மிகுந்த மகிழ்ச்சி. அவர்கள் கட்டை பிரித்து தூக்க முடிந்த அளவு அம்மாவும், மகனும் தூக்கிக்கொண்டு ஊருக்குள் கொண்டு சென்றனர். விறகு சீக்கிரம் விற்று தீர்ந்து விட்டது. மகிழ்ச்சியுடன் அங்கேயே வீட்டுக்கு தேவையான சாமான்கள் வாங்கி வந்தனர்.
தேவைதையிடம் சொல்லி இருந்தபடி குருவாயூரப்பனோ, இல்லை அவன் குடும்பத்தாரோ வாரம் ஒரு விதை நட்டு பராமரித்து வந்தனர். தேவதையும் தினம் அவர்கள் வீட்டில் ஒரு கட்டு விறகு கொண்டு வந்து போட்டது இதனால் அவர்கள்
ஊரிலேயே ஒரு விறகுக்கடையும் வைத்து அதன் மூலம் வாழ்க்கையை வளப்படுத்திக்கொண்டனர்.
வசதிகள் வந்தபோதும் மறக்காமல் இவர்கள் வாரம் ஒரு விதை நட்டு அதை பராமரித்து வந்ததால், புதிய வனங்கள் ஊரை சுற்றி உருவாகின
தமிழ் அறிவோம்
இணையம் அறிவோம்  https://thamaraithamil.blogspot.com/2015/05/2_4.html

தொகுப்பு   https://kanchidigitalteam.blogspot.com