காஞ்சி டிஜிட்டல் டீம் மற்றும் கல்வி 40 இணைந்து நடத்திட்ட சுதந்திர இந்தியா75 ஓவியப்போட்டியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து பல்வேறு கலந்துகொண்டனர்.
இணையவழியில் நடைபெற்ற ஓவியப்போட்டியில் மாணவர்களின் ஓவியங்கள் மின்னஞ்சல் வாயிலாக பெறப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ் அவரவர் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டு வருகிறது.,
மூன்று பிரிவுகளாக நடைபெற்ற ஓவியப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ், பதக்கம், புத்தகம் அவர்களுக்கு வழங்கப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட ஓவியங்கள் பெறப்பட்டுள்ளன.பங்கெடுத்த அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள், அவர்களை உற்சாகப்படுத்திய பெற்றோர்களுக்கும் உறுதுணையாகவும், வழிகாட்டியாகவும் உள்ள தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு எங்கள் காஞ்சி டிஜிட்டல் டீம் மற்றும் கல்வி40 குழுவினர் சார்பாக நன்றியினையும் வணக்கத்தினையும் தெரிவித்துக்கொள்கிறோம்,.
மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்திடும் வகையில் பல்வேறு போட்டிகள் எங்கள் குழுவினரால் நடத்தப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
Sir l am Dharshini anaku certificate
ReplyDelete