அறிவியல் ஆய்வகம் அமைப்போம் பயிற்சி 15.12.2018

காஞ்சி டிஜிட்டல் டீம் (காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர்களின் குழு) ஆசிரியர்களுக்கான பல்வேறு பயிற்சியினை தொடர்ந்து நடத்திக் கொண்டுவருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு எளிய பொருட்களை கொண்டு அறிவியல் உபகரணங்களை செய்து தங்கள் பள்ளிகளில் எளிய அறிவியல் ஆய்வகத்தினை அமைப்போம் பயிற்சி அளிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 25 ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்து கொண்டு 15க்கும் மேற்பட்ட அறிவியல் மாதிரிகளை தயாரித்து தங்கள் வசம் கொண்டு சென்றுள்ளனர் பயிற்சிப் பட்டறையை காஞ்சிபுரம் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.மகேஸ்வரி அவர்கள் துவக்கிவைத்து ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினார்கள். தொடர்ச்சியாக அடுத்த மாதம் 40 அறிவியல் மாதிரிகளை தயாரிக்கும் பயிற்சியினை நடத்த காஞ்சி டிஜிட்டல் டீம் திட்டமிட்டுள்ளது. 


No comments:

Post a Comment