2018-ம் ஆண்டு மருத்துவதுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
2018-ம் ஆண்டு மருத்துவதுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
புற்று நோய் சிகிச்சைக்கு 'இம்யூன் செக் பாயிண்ட் தெரபி'
(நோய் எதிர்ப்புச் சக்தி தடை உடைப்பு சிகிச்சை) என்ற புதுமையான சிகிச்சை முறையை உருவாக்கியதற்காக இரண்டு பேருக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது.
#அமெரிக்காவை சேர்ந்த பேராசிரியர், #ஜேம்ஸ் #பி #அலிசன் மற்றும் #ஜப்பானை சேர்ந்த #டசூகு #ஹோஞ்சோ இந்த நோபல் பரிசை பெறுகிறார்கள்.
இவர்கள் உருவாக்கிய இம்யூன் செக் பாயிண்ட் தெரபி ஒரு புரட்சிகர புற்றுநோய் சிகிச்சை என நோபல் பரிசை வழங்கும் சுவீடிஷ் அகாடெமி கூறி உள்ளது.
வியக்கத்தக்க பலன்களை இந்த சிகிச்சை முறை தருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
டெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் அலிசன் மற்றும் க்யோடோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் டசூகு ஹோஞ்சோ
1.01 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்த நோபல் பரிசு தொகையை பகிர்ந்து கொள்வார்கள்.
இது குறித்து கருத்து தெரிவித்த டசூகு ஹோஞ்சோ, "என் ஆய்வை நான் தொடர விரும்புகிறேன். அப்போதுதான் எப்போதும் இல்லாத அளவுக்கு பல புற்றுநோயாளிகளை இந்த இம்யூன் செக் பாயிண்ட் தெரபி காக்கும் என்கிறார்.
"இந்த முறை மூலம் சிகிச்சைப் பெற்ற புற்றுநோய் நோயாளிகளை பார்ப்பது நெகிழ்வான ஒரு கெளரவம்.
அறிவியலின் சக்திக்கு அவர்கள்தாம் வாழும் உதாரணம்" என்கிறார் பேராசிரியர் ஜேம்ஸ் பி அலிசன்.
என்ன சிகிச்சை முறை அது?
நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்புதான் நம்மை நோய் தாக்காமல் காக்கிறது. ஆனால் இந்த நோய் எதிர்ப்பு அமைப்பு நம் சொந்த திசுக்களைத் தாக்காமல் தடுக்க அதற்குள்ளேயே சில விதிவிலக்கான ஏற்பாடுகள் உள்ளன.
இந்த இடைவெளியை பயன்படுத்தி, நோய் எதிர்ப்பு அமைப்பை ஏமாற்றி சில வகை புற்றுநோய்கள் நம் உடலைத் தாக்குகின்றன.
நோய் எதிர்ப்பு அமைப்பில் உள்ள இந்த கட்டுப்பாட்டினை தளர்த்தி நோய் எதிர்ப்பு செல்களையே புற்றுநோய் செல்கள் மீது தாக்குதல் தொடுக்கும்படி செய்வதற்கான வழிவகையை அலிசனும் ஹோஞ்சோ-வும் உருவாக்கியுள்ளனர்.
'இம்யூன் செக் பாயிண்ட் தெரபி' முறையை பின்பற்றி பிரிட்டன் சுகாதாரத்துறை தோல் புற்று நோய்க்கு சிகிச்சை அளித்து வருகிறது.
வியத்தகு நல் விளைவுகளை இந்த சிகிச்சை முறை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இவர்களுடைய இந்தக் கண்டுபிடிப்பு புற்றுநோய் சிகிச்சையில் புதிய மைல்கல் என்றும் கருதப்படுகிறது.
2018ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
2018ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
மூன்று பேருக்கு பரிசு
மூன்று பேருக்கு இந்த நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பெண்மணிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 50 வருடத்தில் முதல்முறை ஒரு பெண் வேதியியல் துறையில் இந்த விருதை பெறுகிறார். பிரான்சஸ் எச்.அர்னால்ட், ஜார்ஜ் பி.ஸ்மித், சர் கிரகரி பி.வின்டர் ஆகியோருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது.
பிரான்சஸ் எச்.அர்னால்ட்:-
அமெரிக்காவை சேர்ந்த பிரான்சஸ் எச்.அர்னால்ட் என்ற பெண் இந்த விருதை பெறுகிறார். நொதிகள் எனப்படும் என்ஜைம் ஆய்வுக்காகவும், அது எப்படி பரிமாணம் அடைகிறது என்று ஆய்வு செய்ததற்காகவும் இந்த பரிசு அளிக்கப்படுகிறது. இவர் பரிசு தொகையான 6.5 கோடி ரூபாயில் 50 சதவிகிதத்தை பெறுவார்.
சர் கிரிகோரி பி.வின்டர்:
இங்கிலாந்தை சேர்ந்த வேதியியல் விஞ்ஞானி சர் கிரிகோரி பி.வின்டர் வைரஸ் குறித்து ஆய்வு செய்ததற்காக இந்த பரிசை பெறுகிறார். பேஜ் வைரஸ்களைப் பயன்படுத்தி புதிய மருந்துகள் தயாரிக்கும் நுட்பத்தைக் கண்டுபிடித்தமைக்காக நோபல் பெறுகிறார். இவர் பரிசு தொகையான 6.5 கோடி ரூபாயில் 25 சதவிகிதத்தை பெறுவார்.
ஜார்ஜ் பி.ஸ்மித்:-
வேதியியல் விஞ்ஞானியான ஜார்ஜ் பி.ஸ்மித் பரிசு தொகையான 6.5 கோடி ரூபாயில் 25 சதவிகிதத்தை பெறுவார். பேஜ் வைரஸ்களைப் பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம் என்ற ஆய்வில் வெற்றி கண்டவர் ஜார்ஜ் ஸ்மித். அதற்காக இவருக்கும் நோபல் வலங்கடிப்புகிறது. பேஜ் வைரஸ் (பாக்டீரியோபேஜ்) என்பது நோய்களை உருவாக்கும் பாக்டீரியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வைரஸ் ஆகும்.
Nmms online apply direct link Nmms
NMMS ONLINE LINK .... click here
கவனிக்கவும்
Middle School
User Name : U-Dise Number
Password. : 999999
கவனிக்கவும்
Middle School
User Name : U-Dise Number
Password. : 999999
SRM CYBER SECURITY TRAINING AND VIDEO CREATION
Kanchi Digital & SRM university இணைந்து வழஙகும் CYBER SECURITY AND video Creation பயிற்சி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் சுமார் 40 ஆசிரியர்கள் பங்கு பெற்றனர். Mobile phone and internetல் பாதுகாப்பாக எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி SRM கல்லூரி பேராசிரியர்கள் திரு.ஜோசப் மற்றும் செல்வி.மோனிகா அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார்கள். உணவு இடைவெளிக்கு பிறகு Power point and camtasia திரு.கெளதம் ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுத்தார். பிறகு திரு.அன்பழகன் Firefox உள்ள சில Tools சிறப்பாக விளக்கி கூறினார்கள். பயிற்சி கொடுத்த ஆசிரியர்கள் திருமதி.அமுதா, திரு. புனிதவேல் அவர்களை வாழ்த்திப்பேசினார்கள். பயிற்சி இறுதியில திரு.பிரபுதாஸ் நன்றி தொகுத்து வழங்கினார்.
Subscribe to:
Posts (Atom)